12-18-2005, 06:46 AM
<b>இத்தாலிய பிரமுகர்கள் சென்ற ஹெலிகொப்டர் மீது துப்பாக்கித் தாக்குதல்: புலிகளே பொறுப்பு என்கிறது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு; அபாண்ட குற்றச்சாட்டு என்கிறார் தமிழ்செல்வன்</b>
இலங்கையின் அம்பாறைபகுதியில் இலங்கை ராணுவத்தின் ஹெலிகொப்டர் கடந்த புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவம், போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் இந்த சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக்குழு இன்று அறிவித்துள்ளது.
இலங்கை ராணுவ ஹெலிகொப்டர் மீது குண்டுகள் அடித்திருந்தன
"சிறிய ஆயுதம் ஒன்றிலிருந்து வந்த நான்கு குண்டுகள் ஹெலிகாப்டரில் அடித்திருக்கின்றன. இந்த குண்டுகள் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றிலிருந்துதான் வந்திருக்கின்றன. அப்படிப் பார்க்கும்போது இதற்கான முழுப் பொறுப்பையும் புலிகள்தான் ஏற்கவேண்டும். ஹெலிகாப்டரை செலுத்தியவர்களையும் அதிலிருந்த முக்கிய அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளையும் இச்சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரித்தோம். புலிகள் தங்கள் அதிகாரத்திற்குள் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து, இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களிடம் வலியுறுத்தியிருக்கின்றேன்." என்று தமிழோசையிடம் தெரிவித்தார் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹொக்ரூப் ஹக்லண்ட்.
ஆனால் விடுதலைப் புலிகளே பொறுப்பேற்க வேண்டும் என்பதை விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் அவர்கள் மறுத்திருக்கிறார். இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு என்று கூறியுள்ள அவர், இது தொடர்பாக தாம் ஏற்கெனவே நோர்வே தூதரகத்திற்கும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கும் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
ஹெலிகொப்டர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் முன்னதிமதியுடன் பலமுறை வந்துசென்றுள்ளதாகவும், ஆனால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த குறிப்பிட்ட ஹெலிகொப்டர் பற்றியோ, அதில் இத்தாலிய வெளிவிவகார அமைச்சர் பயணித்ததைப் பற்றியோ தமது அமைப்புக்கு எதுவித தகவல்களும் தரப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் இப்படியான ஒரு சம்பவம் நடைபடவில்லை என்றும், ஐரோப்பிய நாடுகளுடனான தமிழ்த் தரப்பின் உறவைத் துண்டிப்பதற்கான ஒரு முயற்சியாக இந்த குற்றச்சாடுகள் திட்டமிட்டு கூறப்படுவதாகவும் தமிழ்ச்செல்வன் கூறினார்.
BBC Thamiloosai

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>