Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
நக்கீரனின் புலம்பெயர் வாழ்வில் தமிழ் இனி தேவையா?இல்லை என்ற ஆக்கத்தை வாசித்தவுடன் இப்படி எழுதிவிட்டேன்.
தமிழின் தேவை சிறிதாக இருக்கலாம் ஆனால் தமிழ் ஒரு தொடர்பாடல் சாதனமாக மட்டுமன்றி எமது இனத்தின் அடையாளமாகவும் கணிக்கப்படுவது.
அரசியல் சமூக ஊடக சக்திகள் யாவும் தாய் மொழிக்கல்வியின் பயனைத்தான் கூறி நிற்கின்றனவே தவிர யாரும் எங்களைக் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை.
எம்மைப்போன்ற மாணவர்களுக்கு அதுவும் கனடா போன்ற பல்கலாச்சார நாடுகளில் படிப்பவர்களுக்கு தாய்மொழி கதைக்கவும் எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டியது முக்கியமாகிறது ஏனென்றால் எங்கள் பாடசாலைகளில் பல்கலாச்சார நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நடைபெறும்போது ஒவ்வொரு நாட்டவரும் தங்கள் பண்பாட்டை கலாச்சாரத்தை மொழயைப் பிரதிபலிக்கும் ஆக்கங்களைச் செய்ய வேண்டும்.அவ்வகையில் நாங்கள் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிளை செய்யும்போது ஆங்கிலப் பாடலுக்கா ஆடுவது??அவர்கள் பாடலுக்கோ நடனத்துக்கோ அர்த்தம் அதன் கருவைப் பற்றிக் கேட்டால் எங்களுக்குச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.அப்படித் தெரிந்திருக்க வேண்டுமானால் எங்களுக்கு அதை விளங்கிக் கொள்ளக்கூடிய போதியளவு தமிழறிவு இருந்தால்தான் அதை மற்ற நாட்டவருக்கு அவர்களுடைய மொழியில் எங்களால் விளக்கம் கொடுக்க முடியும்.இப்படி தங்கள் மொழியைத் தெரிந்து கொண்டிராத பல்லகழைக்கழக மாணவர்கள் மற்ற மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் புலமை உடையவராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முன் தலைகுனிய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
தமிழ் தங்கள் பிள்ளைகள் கற்க வேண்டும் என்ற ஆர்வமுடைய பெற்றோர் எல்லோருமே தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதில்லை..ஆங்கிலம் மூலம் தமிழ் கற்கக்கூடிய நூல்களையோ அல்லது குறுந்தட்டுக்களையோ வாங்கிக் கொடுக்கலாம்.பணம் செலவழிக்க முடியாதவர்கNளூ அல்லது விரும்பாதவர்களோ மூன்று டொலர்களுக்கு குறுவட்டுப் பிரதி எடுத்துக்கொள்ளலாம்.
தமிழ் தெரிந்தவர்களுடன் கதைப்பதற்குக்கூட வாசிப்பு அவசியம் என்பது எனது கருத்து.ஒரு மொழியைப்பற்றிய அடிப்படை தெரியாமல் கேள்விஞானம் மட்டுமே கொண்ட இருவரால் எவ்வளவு நேரம் ஒரு மொழியில் உரையாடலாம் என்பது எனக்குப் புரியவில்லை.
சங்கீதம் பரதநாட்டியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழில்தான் சொல்லித்தருவார்கள் தமிழில் எழுதத் தெரியாத மாணவர்கள்தான் தமிழை ஆங்கில எழுத்துக்களைப் பாவித்து எழுதுவார்கள்.உதாரணமாக கனடாவில் நடக்கும் ஒரு பரதநாட்டிய ஆரம்ப வகுப்பில் ஒரு ஆசிரியர் ஒற்றைக்கை முத்திரை சொல்லிக் கொடுக்கிறார் என்று வைப்போம்.மயூரம் என்பது ஒரு ஒற்றைக்கை முத்திரை அதை ஆசிரியர் மயூரம் என்றால் மயிலைக் குறிப்பது என்று தமிழில்தான் சொல்லுவார் எனக்குத் தெரிந்து மயிலுக்குத்தான் ஆங்கில வார்த்தை உண்டு மயூரத்துக்கு இல்லை.
மற்றது திரைப்படங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு திரையில் வருகிறது சரி ஆனால் இந்த உதாரணத்தைப் பாருங்கள் "திருக்கோயிலே ஓடிவா" என்றொரு தமிழப் பாடல் வரி அதற்கு ஆங்கில மொழபெயர்ப்பு பின்வருமாறு போடப்பட்டுள்ளது " "Temple is coming". நல்ல காலம் "Mr.Temple come to me" என்று போடாமல் விட்டார்கள்.
நான் சொல்ல விரும்பியதைத் தெளிவாகச் சொன்னேனா என்று தெரியவில்லை.தமிழ் என்பது ஒரு சிறந்த மொழி என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் அது எங்கள் இன அடையாளமாக இருக்கின்றது எனவே தமிழை தமிழர்கள் தெரிந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.
-சினேகிதி-
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:சங்கீதம் பரதநாட்டியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழில்தான் சொல்லித்தருவார்கள் தமிழில் எழுதத் தெரியாத மாணவர்கள்தான் தமிழை ஆங்கில எழுத்துக்களைப் பாவித்து எழுதுவார்கள்.உதாரணமாக கனடாவில் நடக்கும் ஒரு பரதநாட்டிய ஆரம்ப வகுப்பில் ஒரு ஆசிரியர் ஒற்றைக்கை முத்திரை சொல்லிக் கொடுக்கிறார் என்று வைப்போம்.மயூரம் என்பது ஒரு ஒற்றைக்கை முத்திரை அதை ஆசிரியர் மயூரம் என்றால் மயிலைக் குறிப்பது என்று தமிழில்தான் சொல்லுவார் எனக்குத் தெரிந்து மயிலுக்குத்தான் ஆங்கில வார்த்தை உண்டு மயூரத்துக்கு இல்லை.
ம் சிநேகிதி ஆக்கங்களை இணைக்கதொடங்கீட்டாங்க மகிழ்ச்சி. அது சரி சினேகிதி மயூரம் என்றது தமிழா சமஸ்கிருதமா?.
தமிழ் தெரியாமல் தமிழனா? எங்கோ கேட்ட நினைவு. " தாய் மொழி கண்போலவும் மற்றைய மொழிகள் கண்ணாடி போலவும் என்று". பலரை அம்மா என்று கூப்பிடலாம் அவை எல்லாரும் பெத்த தாயாக முடியுமா?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ஹி ஹி அக்கா நான் "மயூரம் என்றால் மயிலைக் குறிப்பது என்று தமிழில்தான் சொல்லுவார்" என்றுதானே சொன்னான்.மயூரம் தமிழ் என்று சொன்னானா?
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
யாழ்பாடி இங்க பாருங்க யாரு அரட்டையை துடங்குறது என்று.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம்ம் சிநேகிதி உங்கள் கட்டுரையின் ஆதங்கம் புரிகிறது
ஆமாம் மயூரம் என்பது சமஸ்கிருத சொல்.
அறிந்த கருத்துக்களையும், உணர்ந்த உணர்வுகளையும் அளந்து உரைப்பதற்கு பயன்படும் கருவியே மொழியாகும். தமிழ் மிகவும் பழமை வாய்ந்த மொழி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரலாறு படைத்த இனம் நம் தமிழினம். ஆரியர், போர்த்துக்கேயர் எனப் பலரது ஆதிக்கத்தையும் எதிர்த்து நிலை நின்று வளர்ந்து வரும் மொழி. திருக்குறள் பல மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டது. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" தான் அறிந்த மொழிகளில் தமிழ் இனிமையானது என்ற புரட்சிக்கவி பாரதியின் முழக்கம் அன்றே தமிழின் தனிச்சிறப்பு. இத்தகைய சிறப்பு பொருந்திய தமிழ்மொழியை, தமிழ் சிறார்களில் சிலர் மறந்தும், கல்லாதும் ஆங்கிலத்தையே தமது பேச்சு மொழியாக்கிக் கொண்டுள்மையும் பெரிதும் வருந்தத்தக்கது. இதற்கு அவர்களின் பெற்றோர்களும் துணைபுரிவது மிகவும் வேதனையான செயலாகும். அவர்கள் பாடசாலகளிலின்றி வீடுகளிலும் ஆங்கிலத்தையே உரையாடுகின்றனர். அதையே மரியாதையாகக் கருதி தமிழில் பேசத் தயங்குகிறார்கள். ஆனால் எமது இனத்தவர்கள்தான் சொந்த மொழி தவிர்த்து ஏனைய மோழியில் உரையாடுவார்கள். இவ்வாறு எமது புலம் பெயர்ந்த மக்கள் எமது பண்பாடுகள் , மொழி என்பவற்றை மறந்து அந்நிய பண்பாட்டை பின்பற்றினால் எதிர்காலத்தில் தமிழினம் என்ற தகுதியையே இழந்து விடுவர்.
<b> .. .. !!</b>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ரசிகா நல்லாச் சொன்னீங்கள்.என்ர தங்காவும் அப்பிடித்தான்.தமிழ் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான்.தமிழ்ல கதையெண்டால் "டிட் யு குளிக்கல் யெற்" என்று யெற் " "அம்மா தமிழ்க்கோப்பை எங்க" இப்பிடிக் கதைக்கும்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஹி ஹி அக்கா நான் "மயூரம் என்றால் மயிலைக் குறிப்பது என்று தமிழில்தான் சொல்லுவார்" என்றுதானே சொன்னான்.மயூரம் தமிழ் என்று சொன்னானா?
அது தான்க சிநேகிதி தமிழா சமஸ்கிரிதமா என்ற சந்தேகத்தைக்கேட்டேன் நீங்க தமிழ் என்டனீங்கங்க என்று சொன்னனா..?? (ஐயோ என்கூட கோவிக்காதீங்க <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )
மயூரத்திற்கு ஆங்கில வார்த்தை இல்லை என்றியளா அதால தான் கேட்டன். அப்ப மயூரம் தமிழ் இல்லை என்றியளா? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (சரி சரி கருத்து தலைப்பை நோக்கிப்போகட்டும் மயூரத்தை அப்புறம் பாப்பம்)
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
சிலபேர் ஆங்கிலம் சார்ந்த உரையாடல் தான் மரியாதை தரும் என்று நினைக்கின்றார்கள். அதற்கு இப்போது நடந்த சம்பவம் ஒன்று தெளிவான உதாரணம் என நினைக்கின்றேன்.
இங்கே களஉறவு ஒன்றுடன் எம்எஸ்என்னில் தமிழில் தகவலடித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது இன்னுமொரு நண்பர் வந்து தமிழிங்கிலிசில் பதில் அனுப்பவும், இவரும் அதற்கு மாறிவிட்டார். ஏன் என்று கேட்டேன் தமிழில் அடித்தால் தன்னை ஒரு மாதிரியாக நினைப்பாராம் என்றார். உண்மையில் அதற்கு அழுவதா சிரிப்பதா என்று எனக்கு புரியவில்லை.
[size=14] ' '
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
வணக்கம் தல.சின்னப்புள்ளங்க கொஞ்சம் விவரமாத்தான் இருக்குதுகள்.கனடாவிலயும் பிள்ளைகள் நல்லாத் தமிழ் கதைக்குதுகள்.நான் குறை சொல்ல மாட்டன்.உந்த சுவிஸ்ல இருக்கிற பிள்ளையள் போன் பண்ணினா வணக்கம் தான் சொல்லுங்கள் தெரியுமோ.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
தமிழினியக்கா தலைப்பையே மாத்த சொல்லிட்டாங்க தெரியுமொ நான் அழுதுகொண்டிருக்கிறனாக்கும்.
தூயவன் நான் இன்னம் ஈ.கலப்பை தரவிறக்கம் செய்யவில்லை.ஏன் அவரை வெக்கப்பட வேண்டாம் என்று சொல்லுங்கோ:-)அழகே அழகே தமிழழகேயென்று சொல்லுங்கோ.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அப்ப எவரில் பிழை எண்டு சொல்லவாறியள்?
_________________
பிள்ளையள் நல்லாத்தமிழ்கதைக்கத்தெரிஞ்சாலும் பெற்றார் விடவேணுமே கதைக்க?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
உங்க மூளையை கன நாளைக்கு பயன்படுத்தாம வச்சிருப்பீங்களோ தல....பயன்படுத்துவீங்க தானே..அத மாதிரி தான் இதுவும்.
தூயவன் சும்மா இருமையா இதோட எனக்கு இரண்டு மேலிடத்து உத்தரவுகள் வந்துவிட்டன.அரட்டைக் கச்சேரியைத் தூக்கியாச்சுப் போய்ப் பாரும்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
தல சரி சரி கவலப் படாதயுங்கோ.தமிழீழம் பகுதிக்கொருக்கா வாங்கோ.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
[quote="Thala"][quote=சினேகிதி]நான் சொல்ல விரும்பியதைத் தெளிவாகச் சொன்னேனா என்று தெரியவில்லை.தமிழ் என்பது ஒரு சிறந்த மொழி என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் அது எங்கள் இன அடையாளமாக இருக்கின்றது <b>எனவே தமிழை தமிழர்கள் தெரிந்திருக்க வேண்டும்</b>
தமிழர்கள் தமிழ்மொழியை மட்டும் தெரிந்து வைத்திருப்பது மட்டும் போதுமானது என்பது விமர்சனத்துக்குரியது. எங்கள் சமூகத்தில் உள்ள குறைபாடே அதுதான். எம் மொழியை வளப்படுத்துவதற்கு ஆவன செய்யாமல் ஜயோ.. தமிழ் எனி மெல்லச்சாகுமா அல்லது விரைவில் சாகுமா என்று புலம்பிக் கொண்டு திரிவது. சுத்தமாக மனதில் அதற்கு உயிரோட்டமான விடயங்களைப் புகுத்துதல் வேண்டும் என்று எண்ணுவதே கிடையாது.
இல்லாவிடின் தமிழ்மொழி பற்றி எவரும் இறுக்கி கதைத்தால் உடனே ஆங்கிலத்தை புறம்தள்ளி விட்டு தமிழை தான் படிக்கச்சொல்லுவதாக கூச்சலிடுவார்கள்.
[size=14] ' '