Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்ச்செல்வன் - ஆறுமுகன் இவ்வாரம் சந்திப்பு
#1
<b>தமிழ்ச்செல்வன் - ஆறுமுகன் இவ்வாரம் சந்திப்பு</b>

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இவ்வாரம் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு. சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்துகலந்துரை யாடவுள்ளதாக தகலவ்கள் தெரிவிக்கின்றன
தமிழ்செல்வன் அவர்களைச் சந்தித்து பேசுவதற்கான விருப்பத்தினை ஆறுமுகன் தொண்டமான் விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினரிடம் தெரிவித்துள்ளதாகவும், இதற்கான நேரம் வழங்கப்பட்டதும் இச்சந்திப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மலையக தொழிற்சங்கங்களை பலமிழக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயன்று வருவதனால் இதனைத் தடுக்கும் வகையில் தமிழ்த் தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.

இவ்விடயம் குறித்து இலங்கை தொழிலானர் காங்கிரஸின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: சங்கதி

அப்போது கூப்பிட்ட போது சந்திக்க மறுத்தவர், இப்போது எல்லோரும் கை கழுவி விட்டபோது புலிகளிடம் வருகின்றார். ஆனால் எப்போதும் புலிகள் மலையக மக்களை கைவிட மாட்டார்கள்.
[size=14] ' '
Reply
#2
<b>காட்டிக்கொடுப்பவர்களுக்கு தகுந்தபாடம் புகட்டுவேன் - ஆறுமுகன் தொண்டமான் </b>

சிறுபான்மை சமூக கட்டமைப்பை உடைக்க ஆளும் தரப்பு முனையும் என்றால் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளுடனும் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கட்சி என்ற சமூகத்தினை பிரிக்கும் எண்ணப்பாட்டுடன் சுயநல நிந்தனையுடன் செயற்படுகின்றவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. தமிழழோசைக்கு அவர் நேற்றிரவு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்ட கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் இது குறித்த மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசு தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று இ.தொ.கா. எடுத்த முடிவு, மக்கள் சார்பாக சிந்தித்து எடுக்கப்பட்டது. அதே போன்று மலையக மக்களும் தங்களது சமூகக் கட்டமைப்பினை நிலைநிறுத்தியே வாக்களித்துள்ளனர்.

இதனால் தனிப்பட்ட நபர்களின் சலுகைக்களுக்காக சமுகத்தை காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்திற்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இ.தொ.கா.வைப் பிரிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது. சுகாதரார துணையமைச்சுப் பதவியை வடிவேல் சுரேஸ_க்கு வழங்கியிருப்பதன் மூலமே இது பகிரங்கமாக்கப் பட்டுள்ளது. எமது கட்சியினை பிரிக்கும் முயற்சிகள் ஆளும் தரப்பினரின் உதவிகளுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தக் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக இ.தொ.க. அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும். அடுத்த கட்ட பயணத்திற்கும் நாம் தயார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார

தகவல்: சங்கதி
[size=14] ' '
Reply
#3
இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் முழுமையாக மானத்தோடும் மரியாதையோடும் வாழ அனைத்துத் தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை அவசியம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வன் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு ஆறுமுகம் தொண்டமான் அளித்த நேர்காணல்:

கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: புதிய அரச தலைவர் பதவிக்கு வந்த சூழலில் தமிழ் மக்கள் இடையே காணப்படுகின்ற பிரச்சினைகள் பற்றியும் இன்றைய அரசியல் நிலவரம் பற்றியும் கலந்துரையாடினோம்.

கேள்வி: தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டுமென்று ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள். இக் காலகட்டத்தில் ஏன் நீங்கள் மேற்கொள்கிறீர்கள்?

பதில்: எப்போதோ ஒருநாள் இந்த முயற்சி நடைபெறவேண்டும். யாராவது ஒருவர் தொடங்கத்தான் வேண்டும. அதனடிப்படையில் நாம் தொடங்கியுள்ளோம்.
கேள்வி: என்ன தேவை தற்போது உள்ளது?

பதில்: சிறுபான்மையினராகிய தமிழ்க் கட்சிகள் ஒன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

கேள்வி: இந்த நேரத்தில் தொடங்கவேண்டிய தேவையென்ன?

பதில்: முன்னர் ஒருவரும் என்னிடத்தில் கேட்கவில்லை. நாங்கள் தான் கேட்கிறோம்.

கேள்வி: மலையகத்தில் இருந்து ஒரு கட்சிவந்து மற்ற இடங்களிலுமுள்ள தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டிய அரசியல் தேவையேதும் உள்ளதா?

பதில்: அரசியல் தேவையென்று எதுவும் இல்லை. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். சிங்கள மக்கள் ஒன்றிணைந்து செயற்படும் நிலையில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்படக்கூடாதா?.

கேள்வி: முன்னர் ஒரு முறை மலையகப் பிரச்சினை வேறு. வடக்கு-கிழக்கு பிரச்சினை என்று கூறியிருக்கிறீர்களே?

பதில்: மலையகப் பிரச்சினைகள் வேறு. வடக்கு-கிழக்குப் பிரச்சினைகள் வேறு. இப் பிரச்சினைகள் பற்றி பின்னர் பார்க்கலாம். தற்போது தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

சிங்கள இனவாத அரசாங்கத்தில் சிங்களவர்கள் ஒன்றாக இருக்கும் நிலையில் ஏன் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்படமுடியாது?. தமிழர்களுக்கு என ஒரு பொதுவான கட்சியிருக்கலாம்.

கேள்வி: இந்த ஒற்றுமையின் மூலம் எதனைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?

பதில்: மானத்தோடும்இ மரியாதையோடும் வாழலாம் என்பதால்தான்.

கேள்வி: இப்போது அப்படி வாழவில்லையா?

பதில்: அரைகுறையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். முழுமையாக வாழலாம் என்பதுதான்.

கேள்வி: ஏனைய கட்சிகளோடு எப்படி நீங்கள் கூட்டுச் சேரப்போகிறீர்கள்?

பதில்: யாரையும் பிரித்து வைத்துச் செயற்படப் போவதில்லை.

கேள்வி: இன்றைய சந்திப்பில் ஏதாவது தீர்மானங்கள் எடுக்கப்பட்டனவா?

பதில்: பொறுத்திருந்து பாருங்கள் என்றார் தொண்டமான்.


நன்றி: புதினம்
[size=14] ' '
Reply
#4
ம்ம் அமைச்சர் பதவிகள் இல்லை எண்டவுடன் வாற சுடலை ஞானம்.சரி வாங்கோ இதுக்குத்தானே அப்பவே சொன்னம் இந்த அமைச்சர் பதவி ஒண்டும் உங்களுக்கு தீர்வைத் தராது எண்டு.

இப்ப ஆவது மானம் சுய மரியாதை எண்டு பேசுறியள் ஆன இது நிலைச்சு நிக்குமோ அல்லாட்டி வேதாளம் பிறகும் மரம் ஏறுமோ...கிங் மேக்கர் எண்டு
Reply
#5
மீண்டும் முருங்கை மரத்தை தேடும் என்றுதான் நினைக்கின்றேன். பொறுத்திருந்து பார்ப்போம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Plan Your Work. Work Your Plan
Reply
#6
புலிகள் தரப்பு ஏமாற்றத்தை என்றுமே கொடுக்காது. ஆனால் அதற்காக ஏமாளிகளும் கிடையாது. தலைவனின் தாரக மந்திரமே நம்ப நட. நம்பி நடவாதே தானே
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)