Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி மறவோம் உன் நாமம் மறவோம்.
#1
நன்றி மறவோம் உன் நாமம் மறவோம்.
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

(ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் 24 வயது தமிழக இளைஞன் அப்துல் ரவூப் தீக்குழித்த 15.12.1995 நினைவின் எட்டாண்டு நிறைவில் இக்கவி அவனுக்காய்......)


அப்துல் ரவூப் !
எட்டாண்டின் முன் எங்களுக்காயெரிந்தவன்.
சந்தனங்களாய் புலிகள்
செந்தணலில் எரிந்து கொண்டிருந்த சமயம்
வெந்தணலால் தனைமூட்டி
எங்கள் விழயழுகை பொறுக்காமல்
வெந்தவன்.

இருபத்து நான்கு வயதில்
ஈழத்தவன் வாழ்வுக்கு
ஆதரவுக் கரம் நீட்டி
அணைந்த சுடர்.

மானத்தான் அவன்
மரணத்தையெழுதி வைத்து
அணுவணுவாய் அவன் சுவாசம்
அழித்த து}யவன்.
அன்றோடு அவன் கதை
அழிபட்டுப் போகவில்லை.
இன்றும் அவன் சாவின் பொருள்
எங்கள் நெஞ்சுகளில் எரிகிறது.

நன்றி மறவோம் ,
அவன் நாமம் மறவோம் - அவன்
நினைவெங்கள் நெஞ்செங்கும்
என்றும் நிறைந்திருக்கும்.
தமிழீழத் தாய்மடியில்
அவனுக்கும் ஒரு நினைவுக்கல்
நாட்டி வைப்போம்.

மாரியில் வந்து சேரும்
மாவீரர் நினைவு நாளில்
அவனுக்காயும் விளக்கெரியும்.
விழிகசிய அவனுக்கும் - எம்
வீரரின் கல்லறைகள்
விழாவெடுக்கும்.

இருவேறு தேசங்களின்
எல்லைகளை அலையின் கைகளால்
எல்லை நாட்டிய உப்பு நீரின்
உவர்ப்பில் கூட அப்துல் ரவூப் - உன்
உயிர் வாசம்.

'இன்னும் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்"
நீ சொல்லிப்போன வார்த்தைகள் இவை.

இன்று நீ இருந்திருந்தால்
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்
உங்கள் ஊர்ப்பேயின்
ஊழித்தாண்டவம் கண்டு
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்.
இது உண்மை.

பத்தாண்டின் முன் பேசிய வார்த்தைக்கே
புத்தாயிரம் தாண்டிய இவ்வாண்டில்
பொடாவெனும் பெயரில்
பொல்லெடுத்து ஆடுகிறது.
பேயொன்றின் கதை கேட்டு
உன் தேசம் பேசிய வாய்களையெல்லாம்
மூடிய சிறைகளுக்குள்
மறைத்து வைத்துள்ளது.
இதுதானாம் உங்கள் நாட்டுச் சனநாயகம்.

எது சொல்ல ?
எதைச் சொல்ல ?
எங்களுக்குள் நீங்கள்
இன்றும் இருக்கின்றீர்
தங்களுக்குள் பல நினைத்து
தள்ளியிருந்தாலும் பொறுத்திடலாம்
கொள்ளி எடுத்து வைத்துப்
பேய் கொடிய ஆட்டம்.

பறவாயில்லை நண்ப ,
பொறுத்திருக்கிறோம்
பேய் தன் சுயம் அறிந்து
பெண்ணாகி , எம் பொன்னு}ரைப் , புலிகளைப்
புரிந்திடும் வரை
பொறுத்திருப்போம்.

நன்றி மறவோம் - உன்
நாமம் மறவோம்.
உன் நினைவென்றும் - எம்
உயிர் மடியில் உறைந்திருக்கும்.

12.12.03.
Reply
#2
24 வயது தமிழக இளைஞன் அப்துல் ரவூப் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்
Reply
#3
தமிழிற்காய் தனையழித்த தமிழக மைந்தனின் ஆத்ம சாந்திக்காய் ஒர் நிமிடம் மௌனம்.


சுட்ட வரிகள் நெஞ்சைத்தொட்ட வரிகள் உணர்வுகள் கொந்தளிக்கும்போது வார்த்தைகள் அதை உருவமாக்கிவிடும்


Quote:நன்றி மறவோம் ,
அவன் நாமம் மறவோம் - அவன்
நினைவெங்கள் நெஞ்செங்கும்
என்றும் நிறைந்திருக்கும்.
தமிழீழத் தாய்மடியில்
அவனுக்கும் ஒரு நினைவுக்கல்
நாட்டி வைப்போம்
Quote:இன்று நீ இருந்திருந்தால்
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்
உங்கள் ஊர்ப்பேயின்
ஊழித்தாண்டவம் கண்டு
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்.
இது உண்மை
[b] ?
Reply
#4
'இன்னும் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்"
என்றும் உங்கள் (மாவீரர்) நினைவுகளுடன் தொடர்வோம்....
Reply
#5
சண்முகி signature ரைஎடுத்திருக்கலாமே... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#6
ஒ.....
நன்றி அன்பகம்.
Reply
#7
Quote:நன்றி மறவோம் உன் நாமம் மறவோம்.
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

(ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் 24 வயது தமிழக இளைஞன் அப்துல் ரவூப் தீக்குழித்த 15.12.1995 நினைவின் எட்டாண்டு நிறைவில் இக்கவி அவனுக்காய்......)


அப்துல் ரவூப் !
எட்டாண்டின் முன் எங்களுக்காயெரிந்தவன்.
சந்தனங்களாய் புலிகள்
செந்தணலில் எரிந்து கொண்டிருந்த சமயம்
வெந்தணலால் தனைமூட்டி
எங்கள் விழயழுகை பொறுக்காமல்
வெந்தவன்.

இருபத்து நான்கு வயதில்
ஈழத்தவன் வாழ்வுக்கு
ஆதரவுக் கரம் நீட்டி
அணைந்த சுடர்.

மானத்தான் அவன்
மரணத்தையெழுதி வைத்து
அணுவணுவாய் அவன் சுவாசம்
அழித்த து}யவன்.
அன்றோடு அவன் கதை
அழிபட்டுப் போகவில்லை.
இன்றும் அவன் சாவின் பொருள்
எங்கள் நெஞ்சுகளில் எரிகிறது.

நன்றி மறவோம் ,
அவன் நாமம் மறவோம் - அவன்
நினைவெங்கள் நெஞ்செங்கும்
என்றும் நிறைந்திருக்கும்.
தமிழீழத் தாய்மடியில்
அவனுக்கும் ஒரு நினைவுக்கல்
நாட்டி வைப்போம்.

மாரியில் வந்து சேரும்
மாவீரர் நினைவு நாளில்
அவனுக்காயும் விளக்கெரியும்.
விழிகசிய அவனுக்கும் - எம்
வீரரின் கல்லறைகள்
விழாவெடுக்கும்.

இருவேறு தேசங்களின்
எல்லைகளை அலையின் கைகளால்
எல்லை நாட்டிய உப்பு நீரின்
உவர்ப்பில் கூட அப்துல் ரவூப் - உன்
உயிர் வாசம்.

'இன்னும் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்"
நீ சொல்லிப்போன வார்த்தைகள் இவை.

இன்று நீ இருந்திருந்தால்
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்
உங்கள் ஊர்ப்பேயின்
ஊழித்தாண்டவம் கண்டு
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்.
இது உண்மை.

பத்தாண்டின் முன் பேசிய வார்த்தைக்கே
புத்தாயிரம் தாண்டிய இவ்வாண்டில்
பொடாவெனும் பெயரில்
பொல்லெடுத்து ஆடுகிறது.
பேயொன்றின் கதை கேட்டு
உன் தேசம் பேசிய வாய்களையெல்லாம்
மூடிய சிறைகளுக்குள்
மறைத்து வைத்துள்ளது.
இதுதானாம் உங்கள் நாட்டுச் சனநாயகம்.

எது சொல்ல ?
எதைச் சொல்ல ?
எங்களுக்குள் நீங்கள்
இன்றும் இருக்கின்றீர்
தங்களுக்குள் பல நினைத்து
தள்ளியிருந்தாலும் பொறுத்திடலாம்
கொள்ளி எடுத்து வைத்துப்
பேய் கொடிய ஆட்டம்.

பறவாயில்லை நண்ப ,
பொறுத்திருக்கிறோம்
பேய் தன் சுயம் அறிந்து
பெண்ணாகி , எம் பொன்னு}ரைப் , புலிகளைப்
புரிந்திடும் வரை
பொறுத்திருப்போம்.

நன்றி மறவோம் - உன்
நாமம் மறவோம்.
உன் நினைவென்றும் - எம்
உயிர் மடியில் உறைந்திருக்கும்.

12.12.03.
இன்று (15.12) இவரின் நினைவுதினம்.

எமக்காக தனையழித்த இவரை நினைவில் கொள்வோம்.
<b>
?

?</b>-
Reply
#8
அப்துல் ரவுப்பை நினைவில் கொள்கின்றோம். அவருக்கு இதய அஞ்சலிகள்.

ஆனால் அவரைப்பற்றி பெரிதாக தெரியாது. எங்கு அவரின் விபரங்கள் எடுங்களலாம்?

Reply
#9
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->அப்துல் ரவுப்பை நினைவில் கொள்கின்றோம். அவருக்கு இதய அஞ்சலிகள்.

ஆனால் அவரைப்பற்றி பெரிதாக தெரியாது. எங்கு அவரின் விபரங்கள் எடுங்களலாம்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

1995ம் ஆண்டு யாழ்மாவட்டத்திலிருந்து 5 இலட்சம் மக்கள் வெளியேறியபோது தமிழ்நாட்டு அரசிடம் அவர்களிற்கு ஆதரவுக்குரல் கேட்டுத் தன் உடலிற்கு தானே தீமூட்டித் தமிழிற்காய் உயிர் ஈந்த அயல்நாட்டு உறவுதான் அப்துல் ரவூப்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#10
<!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->'இன்னும் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்\"  
என்றும் உங்கள் (மாவீரர்) நினைவுகளுடன் தொடர்வோம்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏனண்ணா ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் தீக்குளிக்கிறதுக்கோ?????? எனக்கு இங்க ஈழத்தமிழருக்காக தீக்குளிச்ச அப்துல் ரவூப் பற்றிக் கதைக்கிறவை வெளிநாடுகளில ஈழத்தமிழனுக்கா தீக்குளிக்கவேண்டியது தானே?????? எதுக்கு பாவப்பட்ட ஏழை அப்துல் ரவூப்பை மறுபடியும் எதிர்பார்ப்பான்....??????? இங்க உயிருக்கு ஆசைப்பட்டு வசதியா வாழ்ந்துகொண்டு ஆயிரம் ஆயிரம் அப்துல் ரவூப்கள் எழவேணுமெண்டு மனிதாபிமானமில்லாம கதைக்கிறது எந்த வகையில ஞாயம்???????????????

அப்துல் ரவூப்பின்ர உணர்வ மதிக்கிறம்.......ஆனா அதுக்காண்டி தீக்குளிச்சு பிரியோனமில்லாம சாகிறத முட்டாள்தனமெண்டுதான் சொல்ல முடியும்......... Cry

அப்துல் ரவூப் அண்ணான்ர தமிழின உணர்வ மதிச்சு அவர நினைவுகூறுறன். Cry
Reply
#11
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->'இன்னும் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது அப்துல் ரவூப் அவர்களால் தீக்குளிக்கும் முன் கூறப்பட்ட வசனம் ஆகும். Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)