12-17-2005, 10:33 AM
ஆசிய நாடுகளில் பேச்சு என்பது ஒரு சதி முயற்சி: - நோர்வே நாட்டில் முதல் கட்டப் பேச்சுகளைத் தொடங்கலாம் என்று விடுதலைப் புலிகள் அறிவிப்பு!!
சனிக்கிழமை 17 டிசெம்பர் 2005 ஜோசெப்
இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண ஆசிய நாடுகளில் பேச்சு நடத்தலாம் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் யோசனையை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் பேசியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை. எங்களுடைய தலைமைப்பீடத்தின் நிலைப்பாடு பற்றி நாங்கள் ஏற்கனவே நோர்வே அனுசரணையாளர் ஊடாகத் தெரிவித்திருக்கிறோம். நாங்கள் பேச்சுக்கு ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை. அனைத்துக்கும் அடிப்படையாக உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீர்குலைந்து போகும் நிலையில் உள்ளது. ஆகவே யுத்த நிறுத்த உடன்பாட்டை அமலாக்குவதற்கான பேச்சுகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளோம். இந்தப் பேச்சுகள் ஐரோப்பிய நாடு ஒன்றில் குறிப்பாக அனுசரணையாளராக உள்ள நோர்வே நாட்டில் முதல் கட்டப் பேச்சுகளைத் தொடங்கலாம் என்பது எங்களுடைய கடந்த கால நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆசிய நாடுகள் ஒன்றில்தான் பேச்சுகள் நடைபெற வேண்டும் என்றும் விடுதலைப் புலிகளை ஐரோப்பிய நாடுகள் தடை செய்ய வேண்டும் என்றும் கடுமையான நிலையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறி வருவது ஒரு சதி முயற்சிதான். அனுசரணையாளராக நோர்வேயும் கண்காணிப்புக் குழுவில் நோர்டிக் நாடுகளும் அங்கத்துவர்களாக இருக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாட்டோடும் பங்களிப்போடும்தான் இந்த சமாதான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ஐரோப்பிய நாடுகளைப் புறந்தள்ளிவிட்டு ஆசிய நாடுகளில் பேச்சுகள் நடாத்த வேண்டும் என்றும் கண்காணிப்பாளர்களாக அனுசரணையாளர்களாக ஐரோப்பிய நாடுகள் பங்கேற்க வேண்டும் என்ற குழப்பான நிலைப்பாட்டை நாம் ஏற்க முடியாது.
நாம் நோர்வே அனுசரணையாளர்களுடன்தான் பேச்சுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக இரு தரப்பு உயர்நிலைக் குழுக்கள் உடனடியாகச் சந்தித்து பேச்சுகள் நடத்த வேண்டும். செயலிழந்து போகிற சீர்குலைந்து போகிற இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டை வலுப்படுத்துகிற பேச்சுகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தை மட்டுமல்ல... ஆக்கப்ப+ர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முழு அளவில் நம்பிக்கை இழந்து போயிருக்கிற மக்களுக்கு ஓரளவேனும் நம்பிக்கை ஏற்படுத்துகிற வகையில் செயற்பாடுகளில் உடனடியாக இறங்குவதன் மூலம்தான் இன்றைய நிலையை ஓரளவேனும் சீர்செய்ய முடியும்.
இந்த அடிப்படையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக நோர்வே நாட்டில் முதல் கட்டப் பேச்சுகளைத் தொடங்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம்.
ஏற்கனவே எங்களுடைய நிலைப்பாட்டை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம். இந்த நிலையில் இப்படியான அறிவிப்புகளை சிறிலங்கா அரசாங்கம் விடுத்துக் கொண்டிருப்பது இதயசுத்தியோடுதான் அவர்கள் அறிவிப்புகளை வெளியிடுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திடம் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிவருவதாக செய்திகள் கசிந்து உள்ளன. எனவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஆசிய நாடுகளில் பேச்சுவார்த்தை என்பது ஒரு சதி முயற்சி. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்களது மக்கள் கணிசமான அளவில் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச சமூகத்துக்கும் எமக்குமான உறவைத் துண்டித்து எம்மைத் தனிமைப்படுத்துகிற ஒரு சதி முயற்சிதான் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு.
பேச்சுவார்த்தையில் உண்மையான, இதயப்ப+ர்வமான அக்கறை இருந்தால் இப்படியான நிலைப்பாட்டை இவர்கள் அறிவிக்க வேண்டிய தேவையில்லை. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இந்தப் பேச்சுகள் நடைபெற்று இருக்கிற நிலையில் ஆசிய நாடுகளில் பேச்சு என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருப்பது பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கிற சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்கிற தந்திரோபாயமோ என்ற கேள்வி எமக்கு எழுகிறது.
ஜப்பானிய தூதர் யசூகி அகாசியை கிளிநொச்சிக்கு வரவிடமால் சிறிலங்கா அரசாங்கம் தடுத்தமை ஒரு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறோம்.
சர்வதேச சமூக ராஜதந்திரிகளை, பிரதிநிதிகளை எமது தாயகப் பிரதேசத்துக்கு வருவதைத் தடை செய்வது என்பது கடந்த காலங்களைத்தான் நினைவ+ட்டுகிறது. எமது தாயகப் பிரதேசத்தின் உண்மை நிலைகளை, நெருக்கடிகளை சர்வதேச சமூகம் அறிய விடாமல் தடுத்து இங்கே ஒரு பாரிய இன அழிப்புப் போரை முன்னெடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இப்படியான சிறிலங்கா அரசாங்கத்தின் சதிகளுக்கு அவர்கள் பலியாகி விடக் கூடாது என்பது தமிழ் மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.
Nitharsanam.com

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>