Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்களத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி-தமிழ்/முஸ்லிம் உறவு மீது
#1
தமிழ்-முஸ்லிம் கலவரத்தைத் தூண்டும் சதி தொடருகிறது: மேலும் 2 முஸ்லிம் மீனவர்கள் சுட்டுக்கொலை!!
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 08:19 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் மருதமுனையில் நேற்று திங்கட்கிழமை இரவு 2 முஸ்லிம் மீனவர்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


மருதமுனைக் கடற்கரையில் வழமை போல் தூண்டில் போட்டு அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத போதிலும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே கலவரத்தை தூண்டும் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவினரே இதற்கு பொறுப்பு என்று தெரியவந்துள்ளது.

முஸ்லிம்கள் படுகொலைச் சம்பவத்தையடுத்து அந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வழமை நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மருதமுனை, பாண்டிருப்பு எல்லைப்புறத்திலுள்ள ஆழிப்பேரலை அகதி முகாம்களிலிருந்து தமிழ் குடும்பங்கள் அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளன.

சேனைக்குடியிருப்பில் நேற்றிரவு கடை ஒன்று அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

<b>தகவல்மூலம்; புதினம் </b>
"
"
Reply
#2
<b>சிங்களப் பேரினவாத சதிவலைகளில் வீழ்ந்து குழப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம். – தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டு.மாவட்ட அரசியல்துறை வேண்டுகோள்- </b>


காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பழீல் படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழைப் பேசுகின்றவர்களும் வடகிழக்கில் வாழ்பவர்களுமான சிறுபான்மையினரிடையே வேற்றுமைகளை உருவாக்குவதும் அச்சமூகங்களின் மத்தியிலே முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதும் பேரினவாதச் சக்திகளின் வழக்கமான சதிகளில் ஒன்றாகும். பெரும்பான்மையினரால் மறுக்கப்படுகின்ற உரிமைகளை மீட்டெடுப்பதற்காக வடகிழக்கிலே வாழ்கின்ற தமிழ் பேசுவோர் கொடுத்த விலையும் அனுபவித்த துன்பங்களும் அநேகம்.

அந்தத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தவும் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று திரிபுபடுத்தவும் பெருமுயற்சி செய்கின்ற பேரினவாதிகளும் அவர்தம் அடி வருடிகளும் பின்னுகின்ற சதிவலையில் இனியும் சிறுபான்மைச் சமூகங்களாகிய நாம் சிக்கி விடக்கூடாது. எமது போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்காக ஒரே மொழி பேசுகின்ற சகோதரரிடையே வேற்றுமையை விதைப்பது பேரினவாதச் சிந்தனையின் உத்திகளில் ஒன்று என்பதைக் கடந்த காலங்களில் நாம் நன்று அனுபவித்திருக்கிறோம். அதிலிருந்து கற்றுக்கொண்டும் இருக்கிறோம்.

முதிர்ச்சியடைந்த மனோநிலையில் சிந்தித்துத் செயலாற்றவேண்டிய இந்தக் கட்டத்தில் எவரும் உணர்ச்சிவசப்படுவதோ பின்னணிகளை ஆராயாமல் பதில் நடவடிக்கைகளில் இறங்குவதோ விவேகமல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். இளைஞர்களிடையே பதற்றத்தை உண்டாக்கக்கூடிய வதந்திகளையும் துண்டுப் பிரசுரங்களையும் உலவவிடுவதன் மூலம் கடந்து வந்த இருண்ட நாட்களை நோக்கி எமது சமூகங்களை மீண்டும் இட்டுச் செல்ல நினைக்கிறது பேரினவாதம். அவ்வாறான கொடிய விளைவுகளால் இலாபம் பெறுவது பேரினவாதமே தவிர வேறு யாரும் அல்ல என்பதை நாம் அனைவரும் உணரும் பக்குவம் பெறவேண்டும்.

ஒரே மொழியைப் பேசி ஒரே பிரதேசத்தில் வாழ்ந்து ஒரே விதமான தொழில்துறைகளுக்குள் அடையாளப்பட்டுக்கிடக்கும் நாம் பிரிந்து நிற்க வேண்டும் என்று காரணங்களைத் தேடுவதில் சில அரசியல் வாதிகள் இலாபமடையலாம். ஆனால் நமது எதிர்காலச் சந்ததிக்குச் நாம் பிணக்குகளை மட்டுமா விட்டுச்செல்லப்போகிறோம் என்பதை மூத்த தலைமுறையினர் சிந்தித்து ஆலோசனை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். சேர்த்து வைத்த உறவுகளைச் சிந்தவிடுவது எவருக்குமே நல்லதல்ல. நாம் அனைவரும் ஒன்றாகவே இருந்தாக வேண்டியவர்கள் என்பதை இளைய தலைமுறைக்கு விளக்க வேண்டும் எனவும் வேண்டி நிற்கிறோம்.

காத்தான்குடியில் கடந்த 02ம் திகதி நடந்த சம்பவத்தில் காயமடைந்து பின்பு மருத்துவ மனையில் உயிரிழந்த சகோதரர் ஏ.எல்.எம் பழீல் அவர்களின் குடும்பத்தாருக்கு நாம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். பேரினவாதத்தின் சதிக்கொலைகளில் நாம் இழந்துவிட்ட பல்லாயிரம் சிறுபான்மை உயிர்களோடு இன்று பழீலின் இழப்பும் ஒன்றாகிறது.

மிகவும் அநாகரிகமான இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். போரா? சுமாதானமா? என்ற கேள்வி தமிழ்பேசும் மக்களின் மத்தியிலே உச்சம் பெற்றுநிற்கும் இந்தக் கட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற பெரும் சதிகளை பேரினவாதிகள் மென்மேலும் செய்யக்கூடும். அந்த வலைகளில் விழுந்து குழப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம் என அனைவரையும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

அரசியல்துறை, மட்டக்களப்பு.

<b>தகவல்மூலம்; மட்டக்களப்பு ஈழநாதம்</b>
"
"
Reply
#3
<b>மூதூரில் நேற்றும் இரு தமிழ் இளைஞர்களது சடலம் மீட்பு!</b>


மூதூர்ப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் அசம்பாவிதச் சம்பவத்தையடுத்து நேற்றும் இரு தமிழ் இளைஞர்களின் சடலம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது.

மூதூர்ப் பிரதேசத்தில் தொடர்ந்து ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதோடு மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைப்பட்டிருக்கின்றன. அத்தோடு பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் அரச வங்கிகள், அலுவலகங்கள் போன்றன இயங்காத நிலையில் இருக்கின்றன.

இந்நிலமை தொடர்ந்த வண்ணம் இருப்பதால் மக்கள் மத்தியில் பதற்றம் தொடர்ந்து நிலவுவதாகவும் தெரிய வருகின்றது.

<b>தகவல்மூலம்; மட்டக்களப்பு ஈழநாதம்</b>
"
"
Reply
#4
மூதூர் சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை: எழிலன் விளக்கம்

திருகோணமலை மூதூர் பிரதேசங்களில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சம்பவங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் விளக்கம் அளித்துள்ளார்.


இது தொடர்பில் எழிலன் கூறியுள்ளதாவது:

இந்த சம்பவங்கள் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் எங்களுக்கும் இந்த சம்பவங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

அமைதி முயற்சிகளைப் பாதிக்காத வகையில் அமைதியைக் கொண்டுவருவதில் நாம் பற்றுறுதியோடு இருக்கிறோம்.

அமைதி முயற்சிகளில் எமது தலைமைப்பீடம் உறுதியாக உள்ளது. சில சக்திகள் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு எமது மீது குற்றம்சாட்டுகின்றன என்றார் எழிலன்.

இதனிடையே எழிலனின் மறுப்பு குறித்து கருத்து தெரிவித்த கிழக்குப் பிரதேச காவல்துறை அதிகாரி றோகான் அபயவர்த்தனஇ எந்த ஒரு வடக்கு-கிழக்குச் சம்பவங்களையும் தாங்கள் மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டதில்லை என்று கூறினார்.

இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசிய பின்பு இப்பிரதேசங்களில் பதற்றம் குறைந்து அமைதி திரும்பி வருகிறது என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கட்டைபறிச்சான் சோதனைச் சாவடியில் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்னிலையில் எழிலனுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மூதூர் பிரதேசங்களைப் பார்வையிட்டார். காவல்துறைஇ இராணுவம்இ கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் அமைச்சர் சந்தித்தார்.

இச்சந்திப்புகளின் போது 3 புதிய பாதுகாப்புச் சோதனை சாவடிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதினம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
இதில் மறைமுகமாக சிங்களப் பேரினவாதத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளும் உள்ளார்கள் என்ற கசப்பான உண்மையை சொல்லித் தான் ஆகவேண்டும்.

முக்கியமாக வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் அதாவுல்லா, அன்வர் இஸ்மாயில், ஹாரீஸ் போன்றவர்களை குறிப்பிடலாம். இவர்கள் விடுதலைப்புலிகள் மீது கடுமையான வார்த்தை பிரயோகங்களை வைப்பவர்கள் என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.

2002 ஆண்டு காலப்பகுதியில் ஒரு முஸ்லீம் நபரை மறைமுகவாழ்க்கை வாழச் செய்து விட்டு, காணவில்லை என்று தமிழ்முஸ்லீம் கலவரத்தை து}ண்டச் செய்ததில் அதா... லா முக்கியமானவர். மேலும் இவரது தலைமையில் தான் ஜிகாத் இயங்குவதாக சிலரால் சொல்லப்படுகின்றது. அதுவே அக்கரைப்பற்றில் 2 புலிகள் கொல்லப்பட காரணம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
[size=14] ' '
Reply
#6
<i>ஆசிரியர் தலையங்கம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு (வார மலர்)</i>
<b>பேரினவாதிகள் சூழ்ச்சியில் முஸ்லிம்கள் சிக்கக் கூடாது</b>



தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையிலான உறவைப் பிளவுபடுத்தி சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களை பேரினவாதம் அரவணைத்துக் கொள்வதற்கான சதிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்ச்சி வலையில் சிக்குண்டு தமிழ்இ முஸ்லிம் சமூகத்தின் இரத்த உறவுகள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது. சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர் இந்தக் கொலை கலாசாரம் தலைதூக்கியுள்ளதை இங்கு அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

தமிழினம் தமது தாயக உரிமைப் போராட்டத்தின் உச்சத்தை அடைந்து விட்டது. விடிவிற்காக எஞ்சியிருக்கும் காலம் மிகச் சொற்பமானது. தனியான சுதந்திர தேசத்தை அடைந்து விடுவதற்கான இந்தச் சூழல் உருவாகியுள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தின் அமைதியான ஆதரவு அவசியமானது. ஏனெனில்இ தமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் சமூகத்தினர் பின்னிப் பிணைந்து வாழ்கின்றனர்.

மதத்தால்இ கலாசாரத்தால் வேறுபட்டு நின்றாலும் மொழியால் இரு இனங்களும் ஒன்றுபட்டு நிற்கின்றன. தமிழினம் தமது விடுதலையை அடைகின்ற போது முஸ்லிம் சமூகத்தினதும் அரசியல் அபிலாசைகள் பூர்த்தியாவது என்பது யதார்த்தம். இந்த வகையில் இரு சிறுபான்மையினங்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் தமது விடுதலை வேள்வியில் குதித்துவிடக் கூடாது என்பது சிங்களப் பேரினவாதத்தின் குறி.

இவை தமிழின விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் மேற்கொண்ட கபடத்தனங்களாகும். முஸ்லிம் மக்களின் அரசியல் இருப்பைஇ சலுகைகளைக் காட்டி தன் வயப்படுத்தி வைப்பது தமிழ்இ முஸ்லிம் உறவுகளுக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் குரோதங்களை ஏற்படுத்துவதுஇ முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி தமிழ் மக்களுக்கு எதிராக மோதவிடுவது போன்ற செயல்களை காலம் காலமாக சிங்களப் பேரினவாதம் மேற்கொண்டு வருகிறது. எவ்வாறு தமிழ்த் தேசியத்திற்கு எதிரான ஒட்டுப்படைகளை உருவாக்கி நிழல் யுத்தமொன்றை சிங்களம் நடத்திக் கொண்டிருக்கிறதோ அதேபோன்று முஸ்லிம் சமூகத்திடையேயும் ஒரு ஆயுதக் குழுவை இயங்கச் செய்து தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை ஏவி விடுவதற்கான சதிகள் தீட்டப்பட்டுள்ளன.

சில முஸ்லிம் அரசியல்வாதிகளில் ஒரு சிலர் துணையுடன் ஜிகாத் என்ற ஒரு முஸ்லிம் ஆயுதக் குழு நீண்ட காலமாக இயங்கி வருகின்றமை கவலைக்குரியது. காலத்துக்குக் காலம் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தக் குழுவினரது துப்பாக்கிகள் தமிழ் மக்களது உயிரைக் குடித்த சோக வரலாறுகள் உண்டு. இவ்வாறான ஆயுதக் குழுவின் செயற்பாடுகள் குறித்து இதுவரை எந்த ஒரு முஸ்லிம் அரசியல் சக்திகளும் ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வாறான ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் சில காலம் ஓய்ந்திருந்தாலும் சந்தர்ப்பம் வரும் போது தீவிரமடைகின்றது. இவ்வாறான குழுவினரது நடவடிக்கை சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்ற பிற்பாடு அதிகரித்துள்ளது. அதே சமயம் முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கொலைகளைப் புரிந்து விட்டு அதன் பழியை தமிழ் மக்கள் மீது போட்டு இனமோதலைஇ இனக்கலவரங்களை ஏற்படுத்தவும் இவர்கள் முனைகின்றனர்.

எனவேஇ முஸ்லிம் சமூகம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பகுதிகளில் நடைபெறுகின்ற சம்பவங்களுக்கு எல்லாம் விடுதலைப் புலிகள் மீது பழியைப் போட்டு தமிழ் மக்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பேரினவாதத்தின் கனவு நனவாகி விடும். திருமலைஇ மூதூர்இ தோப்பூர்இ மருதமுனை சம்பவங்கள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார செயலாளர் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கலாக தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமைஇ படுகொலை செய்யப்பட்டமை கவலைக்குரியது.

இதன் பின்னர் முஸ்லிம்களும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு தமிழ்இ முஸ்லிம் சமூகங்களிடையே பகைமை உணர்வையூட்டி கர்த்தால்இ கதவடைப்பு நாகரீகமற்ற வார்த்தைகளைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதால் ஒற்றுமை சீர்குலைந்து போகும் அபாயமே ஏற்படும்.

எனவே தமிழர் தாயகத்தில் இரு சிறுபான்மை இனங்களும் தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்ற உரிமைகளை வென்றெடுப்பதற்கு கைகோர்த்து செயற்பட வேண்டும். பேரினவாதத்தின் பொறியில் சிக்கிஇ இனவாதத் தூண்டலில் சிக்கி தமிழினத்தின் விடுதலையின் பெறுமானத்தை சிறுமைப்படுத்திப் பார்க்க முயலக்கூடாது. எதிர்காலத்தில் இரு இனங்களும் ஒன்றிணைந்து சிங்கள தேசத்தின் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்து தாயக விடுதலையைஇ உரிமையை வென்றெடுக்க வேண்டும்.

எனவேஇ சமூகங்களுக்கிடையிலான ஐக்கியம்இ ஒற்றுமைஇ உறுதிப்பாடு அவசியமானது என்பதை வலியுறுத்துவதுடன் சிங்களப் பேரினவாதம் தமது இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் முஸ்லிம் சமூகத்தை வைத்துக் கொள்ளவே விரும்புகின்றது. இந்த இக்கட்டிலிருந்து விடுவித்து தமிழ் தேசியத்தைப் பலப்படுத்த முனைய வேண்டும்
"
"
Reply
#7
<b>ஏறாவூரில் முஸ்லிம் தொழிலாளி சுட்டுக்கொலை</b>
[வெள்ளிக்கிழமை, 9 டிசெம்பர் 2005, 06:59 ஈழம்] [ஏறாவூர் நிருபர்]
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மர ஆலையொன்றில் உட்புகுந்த ஆயுதக் குழுவொன்றினால் முஸ்லிம் தொழிலாளியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொரு தொழிலாளி காயமடைந்துள்ளார்.

தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையே இன வன்முறைகைள தூண்டும் வகையில் அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் தீய சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகளின் தொடராகவே இந்த சம்பவமும் நடந்துள்ளது.

ஏறாவூர் புன்னைக்குடா வீதியிலுள்ள மர ஆலையொன்றில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் காயத்து மொகமது சேது லெப்பை (வயது 52), காயமடைந்தவர் அப்துல் அசனார் (வயது 55) என சிறிலங்கா காவல்துறை தரப்பு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து ஏறாவூர் பிரதேசத்தில் பதட்ட நிலை தோன்றியுள்ளது.


<i><b>தகவல் மூலம்-புதினம்</b></i>
"
"
Reply
#8
<b>கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளையும் மீளாய்வு செய்ய ஜப்பான் தூதுவரிடம் ஹக்கீம் வலியுறுத்தல் </b>
[வெள்ளிக்கிழமை, 9 டிசெம்பர் 2005, 06:46 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரது செயற்பாடுகளையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசு தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.


இலங்கை வருகை தந்துள்ள ஜப்பானிய சிறப்பு தூதுவர் யசூகி அக்காசியை நேற்று வியாழக்பிழமை சந்தித்த ஹக்கீம் இதை வலியுறுத்தினார்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டிய அதே நேரத்தில் கண்காணிப்புக் குழுவினரது செயற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதால் அதனையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்று அகாசியிடம் ஹக்கீம் கூறினார்.

<i>இந்தியாவின் முயற்சியால் சிறிலங்கா அரசாங்கம் நோர்வே அரசாங்கத்தை மீண்டும் அழைத்துள்ளது பாராட்டுக்குரியது</i> என்றும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
<i>
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அனைத்து நிலைப் பேச்சுக்களிலும் முஸ்லிம்களை தனித்தரப்பாக அங்கீரித்து பேச்சுகளில் பங்கேற்க அழைக்க வேண்டும் என்றும் அகாசியிடம் ஹக்கீம் வலியுறுத்தினார்</i>
.

தகவல் மூலம்-புதினம்
"
"
Reply
#9
<b>தமிழ் முஸ்லிம் கிராமங்களுக்கு இராணுவ பாதுகாப்பாம் - உத்தரவிடுகிறார் மகிந்த </b>


தமிழ் முஸ்லிம் கிராமங்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச சிறிலங்கா படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் பேரியல் அஸ்ரப் நேற்று மகிந்தவை சந்தித்து கிழக்கு மாகாண பாதுகாப்பு நிலை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அரசுத் தலைவர் தேர்தலின் பின்னர் கிழக்கில் இடம்பெற்று வரும் கொலைகள் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

<b><i>தகவல் மூலம்- சங்கதி </i></b>
"
"
Reply
#10
<b>மூதூரில் துப்பாக்கிச் சூடு: 1 முஸ்லிம் விவசாயி பலி; 2 பேர் காயம்!! </b>

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முஸ்லிம் விவசாயிகள் மீது இனந் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.


இந்த சம்பவம் பாலத்தோப்பூர் கிராமத்திலுள்ள வயல்வெளியொன்றில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகள் மூவரும் தமது வயல் செய்கைக்காக அங்கு சென்றிருந்த சமயம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து மூதூர் பிரதேசத்தில் பதட்ட நிலை உருவாகியுள்ளது. தோப்பூரிலுள்ள்ள பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கூடியுள்ளனர்.

அந்த பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


<b><i>தகவல் மூலம்- புதினம்</i></b>
"
"
Reply
#11
<b>பேரினவாதிகளின் உட்பிரிவின் சதியே அண்மைக் காலச் சம்பவங்களாகும்: <i>மட். அரசியல்துறை </i></b>


இனவாதச் சக்திகளால் வழி நடத்தப்படும் ஆட்சியாளர்களின் புறக்கணிப்புக்களையும், எம்மைப் பிரித்தாள்வதற்காக அவர்கள் மேற்கொண்டுவரும் சூழ்ச்சிகளையும் மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளதால் பேரினவாதிகளின் உட்பிரிவினைச் சதி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அண்மைக் காலமாக நடைபெற்று வரும் சம்பவங்கள் இந்தச் சதி நாடகத்தின் அம்சங்களாகும். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:-

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரு அன்பான அவசர வேண்டுகோள்.

அடக்குமுறையாலும் இயற்கையின் அனர்த்தங்களாலும் மிகவும் நலிந்துநிற்கும் நமது மாவட்டங்களின் அடிப்படைத் தலையாய பிரச்சினைகள் அநேகம் உள்ளன. போர் ஓய்ந்து நான்கு வருடங்களாகியும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை. எம்மை இரக்கமின்றித் தாக்கிய சுனாமிக்கான நிவாரண நிதிகளைப் பெறுவதிலும் பல முட்டுக்கட்டைகள். நிதியை கொடையாளிகள் வழங்கினாலும் அதைப் பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ள இனவாத சக்திகள் தடையாக இருக்கின்றார்கள்.

இனவாத சக்திகளால் வழி நடத்தப்படும் ஆட்சியாளர்களின் புறக்கணிப்புக்களையும் எம்மைப் பிரித்தாள்வதற்காக அவர்கள் மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகளையும் மக்கள் உணரத் தலைப்பட்டு அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒன்றுபட்டு தங்கள் பொதுவான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சித்தபொழுதில், அபிவிருத்தி மற்றும் அரசியல் காலனித்துவம் சார்ந்த தன் சூழ்ச்சிகள் வெளிப்பட்டு குற்றச்சாட்டுக்கள் தம்மைநோக்கித் திரும்பவிருப்பதை ஊகித்துவிட்ட பேரினவாதிகள் உட்பிரிவினைச் சதியொன்றைச் செய்திருக்கிறார்கள்.

சமூக ரீதியான சங்கடங்களை ஏற்படுத்தும் வகையிலான வதந்திகளைப் பரப்புதல், ஒருதரப்பினர்மீது பழிபோடத்தக்கதான படுகொலைகளைப் புரிதல், இளைஞர்களைத் தூண்டிவிடத்தக்கதான துண்டுப்பிரசுரங்களை வெளியிடுதல், பாதுகாப்புத் தருகிறோம் என்ற போர்வையில் வதந்திகளைப் பரப்புதல் என்பன அவர்களின் சதி நாடகத்தின் அம்சங்களாகும்.

மருதமுனையில் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம்களால் கடத்தப்பட்டதாகவும் அதனால் அந்த வழியாகப் போகவேண்டாம் என்றும் சிறப்பு அதிரடிப்படையினர் வதந்திகளைப் பரப்பியதால் பெரும் பதட்டமும் கொந்தளிப்பும் ஏற்படவிருந்தது. ஆனால், தீர விசாரித்த போது அது திட்டமிட்டுப் பரப்பப்பட்ட வதந்தி என்பது தெரியவந்திருக்கிறது. இவ்வாறான வதந்திகளை இருதரப்பிலும் உலவவிட்டு அனுதாபம் தெரிவிப்பதுபோல ஆத்திரத்தைத் தூண்டிவிடும் படைப்புனாய்வு நடவடிக்கை அம்பலமாகியதிலிருந்து இத்தனை பிரச்சனைகளுக்குமான பின்னணிகளை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

ஒன்றாக வாழ்ந்தவர்களும் இனிமேலும் ஒன்றாகவே வாழப்;போகின்றவர்களுமான எமது தலைமுறைகளைச் சந்தேகத்தின் பிடியில் விழவிடாது பாதுகாக்கவேண்டியது அனைத்து மதத் தலைவர்களினதும், சமூகத்தின் முன்னோடிகளினதும் கடமையாகும். கடந்து வந்துவிட்ட இருண்டநாட்களை நோக்கி எமது சமூகங்களை இட்டுச்செல்ல விரும்புபவர்கள் யாரென்றால், முந்தைய கலவரங்களின் போது தங்களின் கைப்பைகளை நிரப்பிக் கொண்டவர்களே. குறுகிய அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்களுக்காக தலைமுறை தலைமுறையாகப் பாதிப்பைத் தரக்கூடிய கசப்புணர்வுகளுக்குள் நமது பிள்ளைகளை யாரும் இட்டுச்செல்வதை, அது யாராக இருந்தாலும், அவர்களைத் தார்மீக சக்திகள் இணைந்து முறியடிக்கவேண்டும்.

வரலாற்றையும், தரைத்தோற்ற மற்றும் குடிப்பரம்பல் யதார்த்தங்களையும், பொருளாதார மற்றும் மொழி சார்ந்த பின்னணிகளையும் கருத்தில் கொள்ளாது சாத்திய அசாத்தியங்களையும் ஆராயாது பொறுப்புணர்ச்சியற்ற விதத்தில் வேற்றுமைக் கருத்துக்களை முன்வைப்போரின் பின்புலங்களை நாம் இனங்காணவேண்டும்.

அந்நிய சக்திகளின் தூண்டுதல்களுக்கு மத்தியிலும் மோசமான விளைவுகளை ஏற்பட்டுவிடாது தடுத்துநின்ற தார்மீக சக்திகள் அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். இது வரைக்கும் தெளிவான முடிவுகளிலும் நிலைப்பாட்டிலும் உறுதிகாட்டிய பள்ளிவாசல் சம்மேளனத்தின் உறுதியைப் பாராட்டுகின்றோம். வடகிழக்கிலுள்ள தமிழ்பேசுகின்ற அனைவருக்குமான பன்முகப்பட்ட விடுதலைக்கான போராட்டமொன்றையே எமது தேசியத் தலைவர் முன்னெடுத்து வருகிறார்.

தீர்விற்கான எமது அனைத்து முயல்வுகளும் இங்கு வாழும் அனைவரினதும் அபிலாசைகளையும் தனித்துவங்களையும் ஆதங்கங்கங்களையும் அடியொற்றியதாகவே இருக்கும் என்பதை அவர் தெட்டத்தெளிவாகத் தெரிவித்துமிருக்கிறார். ஒருமித்த முயல்விற்கான இந்தப் பொழுதில் சந்தேகங்களைக் களையும் விதமான மனம் திறந்த தொடர்பாடல்களே தேவை. ஒற்றுமைக்கெதிரான சக்திகளின் சதிகளைச் சத்திய சோதனையென எதிர்கொள்வோம். சுதந்திரமான முன்னேற்றம் பெற நாம் அனைவரும் கை கோர்த்து அணிதிரள்வோம்.
<b><i>அரசியல்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்
மட்டக்களப்பு மாவட்டம். </i></b>

<b>தகவல்மூலம்; மட்டக்களப்பு ஈழநாதம்</b>
"
"
Reply
#12
<b>திருமலையில் முஸ்லிம் வர்த்தகர் சுட்டுக் கொலை</b>
[திங்கட்கிழமை, 12 டிசெம்பர் 2005, 09:21 ஈழம்]

திருகோணமலை மாவட்டம் கோபாலபுரத்தில் முஸ்லிம் வர்த்தகரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந் தெரியாத நபர்களினால் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


திருகோணமலை - புல்மோட்டை வீதி கோபாலபுரம் 10 ஆம் கட்டையில் நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் வர்த்தகரான எம்.ரபாய்டின் (வயது 52) என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே மூதூர் பாலைநகரில் நடந்த மற்றுமொரு சம்பவத்தில் கத்தி வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

கொல்லப்பட்ட நபர் பிறிதொரு இடத்தில் கொல்லப்பட்டு அந்த இடத்தில் போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம் இனங்களிடையே வன்முறைகளை தூண்டும் குழுவினரின் பின்னணியில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

நேற்று மட்டும் வன்முறைக் கும்பல்களினால் 3 பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.

<i><b>தகவல் மூலம் - புதினம்</b></i>
"
"
Reply
#13
<span style='font-size:25pt;line-height:100%'><b>விடுலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இருவர் அக்கரைப்பற்றில் சுட்டுக்கொலை!! </b><span style='font-size:16pt;line-height:100%'>[திங்கட்கிழமை, 16 சனவரி 2006, 16:16 ஈழம்] [அம்பாறை நிருபர்]
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று முஸ்லிம் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நண்பகல் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான அப்புஹாமி எனப்படும் சந்திரநாதன் சசிக்குமார் (வயது 23) மற்றும் கோபாலகிருஸ்ணன் சுரேஸ் (வயது 16) ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கட்டடத் தொழிலாளிகளான இருவரும் ஓட்டோ ஒன்று வாங்குவது தொடர்பான கொடுக்கல் வாங்கல் ஒன்றின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபர்கள், வழிமறித்து ரி - 56 ரக துப்பாக்கி மூலம் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் சடலத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் எவரும் இல்லாத காரணத்தினால் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்பு அடையாளம் காட்டும் உறவினர்களிடம் கையளிக்குமாறு சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்ட அவர், மரண விசாரனையை நாளை வரை ஒத்தி வைத்தார்.

இச்சம்பவம் இடம்பெற்ற பகுதி முஸ்லிம் பிரதேசம் என்பதால் சம்பவத்தின் எதிரொலியாக உருவான பதட்ட நிலையையடுத்து அக்கரைப்பற்றில் வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

மேலதிக சிறிலங்கா காவல்துறையினரும், விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னரும் இதேபோன்று விடுதலைப் புலிப் போராளிகள் இருவர் அக்கரைப்பற்று முஸ்லிம் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டமை தெரிந்ததே.</span></span>

<b><i>தகவல் மூலம் - புதினம்</i></b>
"
"
Reply
#14
<b>முஸ்லிம் இளைஞர்களை ஊர்காவல் படையில் இணைத்தது தமிழ் முஸ்லிம் உறவினை பாதிக்கும் செயலாகும்</b>

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுதபயிர்ச்சி வழங்கி ஊர்காவல் படையில் சேர்த்துக்கொண்டது தமிழ்முஸ்ஸிம் உறவினை பாதிக்கும் செயல்லாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்விடுத்துள்ள செய்தி குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முஸ்ஸிம் உறவைகெடுப்பதற்காக சிறிலங்காக அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டு 600க்கு மேற்பட்ட முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுத பயிர்ச்சி வழங்கப்பட்டு தமிழ் மக்களுக்குகெதிராக செயல்பட ஈடுபடுத்தியுள்ளார்கள்.

கடந்த காலங்களில் இவ்வாறு சிறிலங்கா இராணுவம் மற்றும் புலனாய்வு துறையினர்களினால் சமாதான உடன்படிக்கை சீர்;குழைப்பு செய்யும் வேளையில் இவ்வாறு முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுதபயிர்ச்சி வழங்கியுள்ளது தமிழ் மக்கள் மத்தில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றநிலையில் இவ்வாறான முஸ்ஸிம் இளைஞர்களுக்கு ஆயுத பயிர்ச்சி வழங்க நாட்டின் ஜனாதிபதி அவர்கள் இந்;த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதனையே விரும்பியுள்ளார் என்பதனை நன்கு புலப்படுத்தியுள்ளது என்றே நான் கருதுகின்றேன்.

சமாதான உடன்படிக்கை நடமுறையில் உள்ள நிலையில் இவ்வாறான செயல் நாட்டினை எதிர்காலத்தில் படுமோசமான நிலைக்கு ஈட்டுச்செல்லும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் கல்வி மான்கள் புத்திஜீவிகள் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். அத்துடன் அடுத்த மாவட்டங்களில் பரவாது தடுப்பதற்கு விரைவாக செயல்பட வேண்டும் எனவும். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

<i><b>தகவல் மூலம் - பதிவு</b></i>
"
"
Reply
#15
அக்கரைப்பற்றில் மேசன் தொழிலாளிகள் இருவர் தேசவிரோதிகளால் சுட்டுக்கொலை!

அக்கரைப்பற்று 1ம் குறிச்சிடிம்சி வீதியில் நேற்று நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேசன் தொழிலாளிகள் இருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். அக்கரைப்பற்று குருக்கள் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சந்திரநாதன் சசிக்குமார் (23) மற்றும் அக்கரைப்பற்று ஆர்.கே.எம்.வீதியைச் சேர்ந்த கோபாலகிரு;ணன் சுரேஸ் (16) ஆகிய இருவரும் மோட்டர் சைக்கிள் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது அவர்களைப் பின் தொடர்ந்த சென்று இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சடலங்களை உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இச்சம்பவத்தையடுத்து தொடர்ந்து அப்பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது

<b><i>தகவல்மூலம்; மட்டக்களப்பு ஈழநாதம்</i></b>
"
"
Reply
#16
<b>அம்பாறை தமிழ்ப்பகுதிகளில் வழமை மறுப்புப்போராட்டம் - இயல்புநிலை முற்றாகப் பாதிப்பு


நேற்று திங்கட்கிழமை உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் சிங்களப் படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் பரவலான முறையில் வழமை மறுப்புப் போராட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

திருக்கோவில், அக்கரைப்பற்று, கோமாரி, அலையடிவேம்பு, தம்புலுவில் போன்ற பிரதேசங்களில் தற்போது இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளதாகவும், வணிக நிலையங்கள், நிறுவனங்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு, வீதிகளில் டயர் போட்டு எரியூட்டியும், வீதித்தடைகளைப்போட்டும் மக்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கலகம் அடக்கும் ஸ்ரீ லங்கா காவற்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து இந்த தடைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

[b]<i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Reply
#17
<b>அக்கரைப்பற்றில் முஸ்லிம்கள் இருவர் தாக்கப்பட்டதில் ஒருவர் மரணம்! நகரில் பெரும் பதட்டம்! </b>


அக்கரைப்பற்றில் இன்று வழமை மறுப்புப்போராட்டம் கடைப்பிடிக்கப்படும் வேளையில் ஆலையடி வேம்பு பிரதேசத்திற்கு உந்துருளியில் வந்த இரண்டு முஸ்லிம்கள் இனந் தெரியாத கும்பலொன்றின் தாக்குதலுக்கு உள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றயவர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் பெரிய பள்ளிவாசல்நகர் அட்டாளைச்சேனையினைச் சேர்ந்த அஹமட் லெப்பை அப்துல் வாஹிட் (அகவை 35), என்பவரும், அவருடன் வந்த நாகூர்தம்பி ஆதம்பா லெப்பை (அகவை 25) என்பவருமே பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த இனந்தெரியாத குழுவினரின் தாக்குதல் காரணமாக் அப்துல் வாஹிட் (அகவை 35) என்பவர் இறந்துள்ளதாகவும், ஆதம்பாவா லெப்பை அவசர சிகிச்சைக்காக அம்பாறை அதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இச்சம்பவத்தினால் இப்பிரதேசங்களில் பெரும் பதட்ட நிலை தோன்றியுள்ளதுடன் எல்லைப்புற தமிழ்க் கிராமங்களில் உள்ள மக்கள் தற்போது பாரிய அளவில் இடம்பெயர்ந்து தமிழ் கிராமங்களில் உள்ள தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு வந்தவண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#18
<b>ஆலையடிவேம்பு படுகொலை: அம்பாறையில் பதற்றம்</b>

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அகமது லெப்பை அப்துல் வாஹித் (வயது 35) என்பவர் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இச்சம்பவத்தையடுத்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலை காணப்படுகின்றது.

அப்துல் வாஹித்துடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நாகூர் தம்பி ஆதம்லெப் (வயது 25), தாக்குதலிருந்து தப்பி காவல்துறை உதவியுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்களை அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட குழுவினர் வாகனத்தில் கடத்திச் சென்று தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவரின் சடலம் தமிழ்ப் பிரதேசமான ஆலையடிவேம்பிலுள்ள வயல் வெளியில் கண்டெடுக்கபடப்பட்டுள்ளது.

இதையடுத்து முஸ்லிம் பிரதேசங்கள் ஊடாக சென்ற சில தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

எல்லைப் புறங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன. முஸ்லிம் பிரதேசங்களில் வியாபார நிலையங்கள், அலுவலகங்கள் அனைத்தும் இன்று பிற்பகலுடன் மூடப்பட்டுள்ளன.

சிறிலங்கா காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று முஸ்லிம் பகுதியில் தமிழர்களான சந்திரநாதன் சசிக்குமார் (வயது 23), கோபாலகிருஸ்னன் சுரேஸ் (வயது 16) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாகவே இன்றைய சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இன்று முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இதனால் அப் பிரதேசங்களின் வழமை நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply
#19
<b>அக்கரைப்பற்றில் 2வது நாளாகத் தொடரும் வழமை மறுப்புப் போராட்டம் </b>


நேற்று முந்நாள் அக்கரைப்பற்றில் இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து இன்றும் இரண்டாவது நாளாக பாரிய அளவில் வழமை மறுப்பு நடவடிக்கைகள் அக்கரைப்பற்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக வீதிகள் எங்கும் தடைகளை எற்படுத்துவதற்காக பெரியளவில் டயர்கள், தார் பீப்பாய்கள் என்பவை இளைஞர்களால் எரியூட்டப்பட்டுள்ளன. இதனால் வீதிகள் யாவும் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
இன்றைய இரண்டாம் நாள் வழமை மறுப்புப் போராட்டம் காரணமாக முற்றாய இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#20
<b>அக்கரைப்பற்றில் பதட்ட நிலை- ஆலையடிவேம்பில் சடலம் மீட்பு! தமிழ் மக்கள் அச்சம் காரணமாக வெளியேற்றம் </b>

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் நேற்றுப் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. அக்கரைப்பற்றில் படுகொலை செய்யப்பட்ட இரண்டு மேசன் தொழிலாளர்களின் படுகொலையைக் கண்டித்தே இக்கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களைப் போட்டு எரித்து போக்குவரத்தினைத் தடைசெய்ததால் அக்கரைப்பற்று - அம்பாறை, அக்கரைப்பற்று - பொத்துவில் போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்துத் தடைப்பட்டதுடன், வங்கிகள், அரச நிறுவனங்களின் அலுவலகங்கள் என்பன மூடப்பட்டதுடன் நகரம் வெறிச் சோடிக் காணப்பட்டது.

இதேவேளை அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அகமது லெப்பை அப்துல் வாஹித் (35) என்பவர் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலை காணப்படுகின்றது. அப்துல் வாஹித்துடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நாகூர் தம்பி ஆதம்லெப்பை (25), தாக்குதலிருந்து தப்பி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்களை அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட குழுவினர் வாகனத்தில் கடத்திச் சென்று தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவரின் சடலம் தமிழ்ப் பிரதேசமான ஆலையடி வேம்பிலுள்ள வயல் வெளியில் கண்டெடுக்கபடப்பட்டுள்ளது.

இதனையடுத்;து தமிழ் குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இதையடுத்து முஸ்லிம் பிரதேசங்கள் ஊடாக சென்ற சில தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

எல்லைப் புறங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன. முஸ்லிம் பிரதேசங்களில் வியாபார நிலையங்கள், அலுவலகங்கள் அனைத்தும் நேற்று பிற்பகலுடன் மூடப்பட்டுள்ளன.

<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)