Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோட்டபாய வழியில் சென்று கோட்டைவிடப் போகும் மஹிந்த
#1
கோட்டபாய வழியில் சென்று
கோட்டைவிடப் போகும் மஹிந்த

யுத்த நிறுத்த உடன்பாட்டை செம்மையாக நடைமுறைப் படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து அரச படைகள்
மற்றும் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் ஒன்று கூடிப் பேச வேண்டியதன் அவசரமும் அவசியமும்
வலியுறுத்தப்பட்டிருக் கின்றது.
""யுத்த நிறுத்தச் சூழல் தகர்ந்து போகும் ஆபத்து மிக நெருங் கிக் கொண்டிருக்கின்றது. அண்மைக் காலத்தில்
இராணுவ நெருக்கு வாரங்கள், பொதுமக்கள் கொல்லப்படுதல், பொதுமக்கள் இராணுவ முறுகல் போன்றவை
தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன.
"" இரு தரப்பினதும் (அரசு, புலிகள் ஆகிய தரப்புகளினதும்) உயர்மட்டக் குழுக்கள் நேரடியாகச் சந்தித்து
யுத்த நிறுத்த உடன் பாட்டைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கான பலப் படுத்துவதற்கான முயற்சிகளில்
விரைந்து உடனடியாக தீவி ரமாக இறங்க வேண்டியது அவசியமாகும். காலத்தின்
கட்டாயமாக அது இருக்கின்றது. யுத்த நிறுத்தச் சூழ்நிலையைத் தக்க வைப்பதாக இருந்தால் இது
அவசியமானதாகும்'' இவ்வாறு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.
தமிழ்ச் செல்வன் சுட்டிக்காட்டியிருக்கின்றார். நோர்வேத் தரப்பு ஊடாக இலங்கை அரசுத்
தரப்புக்குத் தற்போதைய நிலைமை குறித்து அவர் தெரி வித்திருக்கும் இந்தத் தகவலின் அர்த்தப்
பரிமாணம் ஆழம் இலங்கையில் புதிய அரசியல் தலைமைக்குப் புரிந்திருக்குமா என் பது
சந்தேகமே. கொழும்புத் தலைமையிடம் இருந்து வெளியாகும் பிரதிபலிப்புகள் நிலைமையின்
ஆழத்தை மோசத்தை அது இன் னும் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே
காட்டுகின்றன.
நிலைமையைச் சீர்குலைத்து, இழுத்தடித்து சிக்கலுக்குள்ளாக்குவதா என்பது இலங்கை அரசுத்
தலைமையையும் படைத்தரப்பையும்தான் பொறுத்தது என்றும் தமிழ்ச்செல்வன்
சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தீர்க்கமான முடிவு ஒன்றை அரசு விரைவாக எடுத்து, சந்தர்ப்பத்தைச் சரியாகப் பற்றிப் பிடித்து
பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் புலிகளினதும்
மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றும் தமிழ்ச்செல்வன் தமது பக்க
நிலையை தெளிவுபடுத்தியிருக்கின்றார். ஆனால், அப்படியான ஒரு முடிவை எடுக்க கொழும்புத்
தலைமை தயõரா என்பதுதான் கேள்வி.
இராணுவ ரீதியாகவும் களநிலைமை அடிப்படையிலும் உள்ள யதார்த்தப் புறச்சூழ்நிலைகளை
கருத்தில் எடுத்து அதனடிப் படையில் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டிய கொழும்பு
அரசியல் தலைமை, அதனை ஒதுக்கிவிட்டு தென்னிலங்கை அரசியல் அரங்குக்கு ஏற்ற வகையில் வடக்கு
கிழக்கு கள நிலைவரத் தைக் கையாள முனைகின்றது.
செய்து கொண்டுள்ள யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி தான் நிறைவுசெய்ய வேண்டிய
கடப்பாடுகளை மேற்கொள்ளாமல், அவற்றைப் புறமொதுக்கிச் செயற்படுவதும்
யுத்த நிறுத்த உடன்பாட்டில் கூறப்பட்டுள்ள தனது பொறுப்புகளை நிறைவேற்றாமல் இருக்கும்
அதேசமயம் அந்த யுத்த நிறுத்த உடன்பாட்டையே மாற்றியமைக்கப் போவதாக
ஒருதலைப்பட்சமாக அறிவிப்பதும்
அனுசரணைப் பணிவகிக்கும் நோர்வேத் தரப்புடன் முரண்டு பிடிப்பதும்
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைமைப் பொறுப்பை நோர்வேயிடமிருந்து பிடுங்கி
"சார்க்' நாடு ஒன்றிடம் அதைக் கைய ளிக்க ஒரு தலைப்பட்சமாக முயற்சிப்பதும்
புலிகளைவிட படைபலத்திலும், ஆயுத பலத்திலும், மனோபலத்திலும் அரச படைகள் விஞ்சி
நிற்பதாகவும் யுத்தம் மீள மூண் டால் விடுதலைப் புலிகளை ஒரேயடியாக ஓரம் கட்டி
தோற்கடித்து விடுவோம் எனவும், படை உயர் அதிகாரிகளைக் கொண்டு அறிவிக்கவைப்பதும்
கள யதார்த்த நிலைமையைப் புரியாமல் புதிய அரசு மேற்கொள் ளும் பயணிக்கும்
"தப்பான பாதையை' எமக்கு உணர்த்துகின்றன.
இப்படித்தான் சுமார் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் அமைதித் தீர்வு காண்பதற்கான
அருமையான சந்தர்ப்பம் ஒன்று அப்போது புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்கா விற்கு வழங்கப்பட்டது. ஆனால், அவர் புதிதாக அதிகாரத்தை ஏற்றதும் அவரைச்
சூழ்ந்துகொண்ட அதிகார வர்க்கம் அவரை பிழையாக வழிநடத்தி, குழப்பியதால் அமைதி முயற்சிகள்
மூலம் இனப்பிரச்சினைக்குச் சமாதான தீர்வுகாணும் பொன்னான வாய்ப்பை அவர் கோட்டை
விடவேண்டியதாயிற்று. நிலைமையப் புரிந்துகொண்டு தனது பாதையை அவர் நேர்சீர்செய்ய
முயன்றபோது விவகாரம் அவரது கையை மீறி, கைக்கு மேல் போய்விட்டது.
காலச் சக்கரம் உருண்டு மீண்டும் அதே நிலைமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும்
வந்திருக்கின்றது.
லெப்டினன்ட் கேணல் தரத்தில் இராணுவத்தை விட்டு வெளி யேறி, சுமார் ஒன்றை தசாப்தகாலம்
வெளிநாட்டில் வசித்த கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
சகோதரர் இப்போது திடீரென நாட்டுக்குள் வந்து குதித்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
பதவியைப் பிடித்திருக்கின்றார். வெளிநாட்டுத் தூதர்களை எல்லாம் பாதுகாப்பு அமைச்சுக்கு
அழைத்து தொடர் மந்திராலோசனைகளை நடத்துகின்றார். உள்நாட்டு யுத்தம் ஒன்றை ஒட்டி,
வெளிநாட்டின் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் அவர்
முழுமூச்சில் ஈடுபட்டிருக்கின்றார் என்று கேள்வி.
முன்னர் இராணுவத் தொண்டர் படையில் லெப்டினன்ட் கேணல் தரத்தில் இருந்த அனுருரத்த ரத்வத்தை
இராணுவ சேவையின் பணி யில் தொடராமலேயே ஜெனரல் தர நிலை உயர்வைப் பெற்றதோடு
பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகி, ஜனாதிபதி குமாரதுங்க தலைமையிலான அரசை
பிழையாக வழிநடத்தி, முழு நாட்டையுமே கொடூர யுத்தத்தில் மூழ்கடிக்க வைத்தார்.
அதுபோன்று, இப்போதும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசையும் இராணுவ விடயங்களில்
""கயிற்றைக் கொடுத்து'' நாட்டைப் பெரும் யுத்தத்தில் வீழ்த்தச் செய்வதற்கு, பதினைந்து வருடங்கள்
வெளிநாட்டில் இருந்துவிட்டு வந்து குதித்திருக்கின்றார் ஒரு லெப்டினன்ட் கேணல். படையில்
பணியைத் தொடராமலேயே அவருக்கும் ஜெனரல் தர நிலை உயர்வு விரைவில் என்கிறார்கள்.
இராணுவத் தீர்வில் நாட்டம் காட்டி தென்னிலங்கைக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கைத்
தீவுக்குமே கேடு விளைவிக்கும் முயற்சிகள் கொழும்பில் ஏற்கனவே முழு வீச்சில் ஆரம்பமாகிவிட்டன
என்றும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் இவை நல்லதற்கல்ல என்பது மட்டும் திண்ணம்.

Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)