12-09-2005, 06:02 PM
<b>அதிகரித்த குளிர் - வடக்கு கிழக்கு மாவட்டங்களில் தீடிரென ஏற்பட்ட மாற்றம் </b>
Written by Pandara Vanniyan Friday, 09 December 2005
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு அடங்கலாக பரவலான வடக்கு கிழக்கு பகுதிகளில் தற்போது கடுமையான குளிர் நிலவுகின்றது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை நோக்கி நகரும் வானூஸ் சூறாவளி இன்று நள்ளிரவுக்கும் நாளை காலைக்கும் இடையில் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கடக்கக்கூடும் என எதி;ர்பார்க்கப்படும் இந்த நிலையில் இன்று மாலையில் இருந்து திடீர் என இப்பிரதேசங்களில் கடுமையான குளிர் நிலவுகின்றது.
இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இது பற்றி வளிமண்டல அவதானிப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தற்போது நிலவுகின்ற காற்றழுத்தம் காரணமாக ஈரலிப்பு அதிகமாகவே வளிமண்டலத்தில் மாற்றமைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். இருந்த போதிலும் பாரிய அளவில் காற்று எதுவும் இது வரை வீசவில்லை எனவும் ஆனால் இலேசான மிக குளிரான காற்று வீசிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
1978 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற சூறாவளிக்கு முன்னர் கூட இதே போல குளிரானதொரு காலநிலையே நிலவியது என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
[சங்கதி]

:::::::::::::: :::::::::::::::