Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் கொதிக்கின்றது
#1
யாழ் கொதிக்கின்றது

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மொத்தம் 7 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 4 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.


சாவகச்சேரியில் பிற்பகலிலும் மாலையிலும் முதலில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பின்னர் தம்புத்தோட்டம் சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த மீசாலை மற்றும் அல்லாரை பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வலிகாமம் குப்பிலான் சந்தியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு சிறிலங்கா இராணுவ வீரர் படுகாயமடைந்தார்.

யாழ்ப்பாணம் நகரத்தில் ப்ரவுன் சாலை-அரசடி சாலை சந்திப்பில் இந்து மகளில் கல்லுரிக்கு அண்மித்த பகுதியில் சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடிக்கு வெளியே நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஏறாலையைச் சேர்ந்த சண்முகநாதன் சிவனேசுவரன்(வயது 25) என்பவர் படுகாயமடைந்தார். அவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி மந்திகையில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகம் மீது வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலையடுத்து ஈ.பி.டி.பி. அலுவலகத்துக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்த சிறிலங்கா படைத் தரப்பினர் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

முன்னதாக சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ முகாம் மீது பிற்பகல் 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இதே முகாம் மீது மாலை 3.30 மணியளவில் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மேலும் ஒரு சிறிலங்கா இராணுவ வீரர் படுகாயமடைந்தார்.

சாவகச்சேரி பிரதேச சபைக்கு எதிர்ப்புறம் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் மீது மாலை 4.30 மணியளவில் மூன்றாவது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எவருக்கும் காயமேற்படவில்லை.

இந்தத் தொடர் தாக்குதல்களையடுத்து சாவகச்சேரியில் பதற்ற சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்.குடா முழுமைக்கும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வீடு வீடாக சோதனை நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

<img src='http://img526.imageshack.us/img526/4048/jaffhartal56wf.jpg' border='0' alt='user posted image'>
யாழ்ப்பாணம் நீர்வேலி அத்தியார் கல்லுரி அருகே இரு தமிழ் இளைஞர்கள் நேற்று வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமும் ஆயுதக் குழுக்களும் காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழ் இளைஞர்களின் படுகொலையைக் கண்டித்து இன்று யாழ்ப்பாணம் முழுமைக்கும் முழு அளவிலான கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

<img src='http://img526.imageshack.us/img526/1333/jaffhartal14kw.jpg' border='0' alt='user posted image'>


இதனிடையே உறுமும் மக்கள் படை என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் துண்டுப் பிரசுரங்களில், தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவத்தினரும் படையினரும் தொடர்ந்தால் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

<img src='http://img526.imageshack.us/img526/2088/jaffhartal43ov.jpg' border='0' alt='user posted image'>

நன்றி புதினம் மற்றும் சங்கதி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#2
செய்திகளுக்கு நன்றி இருவிழி உறுமம் மக்கள் படைதான் கொதிக்க வைக்கிதா..?? .
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
முன்பு ஒரு காலத்தில ஆமி முன்னால போகவே பயப்படுவோம். ஏன் எதற்கு என்றில்லாமல் அடிப்பார்கள். பிடித்து வெலிக்கடைக்கு அனுப்புவார்கள். இப்போது மக்கள் பயமின்றி எதிர்த்து நிற்பதைப்பார்க்க சந்தோசமாக இருக்கிறது.
Reply
#4
Quote:முன்பு ஒரு காலத்தில ஆமி முன்னால போகவே பயப்படுவோம். ஏன் எதற்கு என்றில்லாமல் அடிப்பார்கள். பிடித்து வெலிக்கடைக்கு அனுப்புவார்கள். இப்போது மக்கள் பயமின்றி எதிர்த்து நிற்பதைப்பார்க்க சந்தோசமாக இருக்கிறது.
உண்மை தான் வெளியில் செல்லும் இளவட்டத்தினர். தாயை அல்லது ஒரு வயசுபோனவர்களை துணைக்கு அழைத்துச்செல்லும் காலமும் ஒன்றிருந்தது. (இனியும் அப்படிவருதோ யார் கண்டது) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
ம்ம்..எனக்கும் தான்...டீவி ல் எல்லாம் இளைஞர்கள்...ஆமியோட நேராவெ நிண்டு சண்டை பிடிக்கிறாங்க...பார்க்க ஒரு பக்கம்..ஒரு மகிழ்ச்சியும்..மற்ற பக்கமும் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது..
..
....
..!
Reply
#6
குடாநாட்டில் படையினருக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழும் அபாயம்

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக படையினரின் கெடுபிடி அதிகரித்திருப்பதாக பல தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக வீதிச் சோதனைகள், வீதி ரோந்து அதிகரித்திருப்பதுடன் அசம்பாவிதம் நடக்கும் இடங்களில் படையினரின் பிரசன்னம் இருப்பதையும் காண முடிகின்றது. இதனால் படையினருக்கு எதிராக குடாநாட்டு இளைஞர்கள் கிளர்ந்தெழும் நிலையும் அங்கு ஏற்பட்டுவருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் பின்பே இத்தகைய கெடுபிடிகள் அதிகரித்திருப்பதாகவும் குடாநாட்டில் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதியும் கண்காணிப்புக் குழுவிடம் இது குறித்து அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இராணுவ கெடுபிடிகள், துப்பாக்கி பிரயோகம் என்பன தமிழ்த்தேச விடுதலைப்பற்றாளர்களை அழித்தொழிக்கும் நய வஞ்சகச் செயல்களாகவே உள்ளன என்று அவர் கண்காணிப்புக் குடாநாட்டில்...

குழுவிற்கு தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான சம்பவங்களைத் தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இப்படியான சம்பவங்கள் இடம்பெறும் போது குடாநாட்டில் நிலை கொண்டுள்ள படையினருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்பைக் காட்டுவதுடன் படையினருக்கு எதிராக கிளர்ந்தெழும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

இவற்றை பார்க்குமிடத்து குடாநாட்டில் பாரிய அசம்பாவிதங்கள் நிகழும்சாத்தியம் இருப்பதாகவும் குடாநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.virakesari.lk/VIRA/20051204/hea...dline_news2.htm
" "
Reply
#7
குடாநாட்டில் தேசிய உணர்வை பீறிட வைத்த பகிஷ்கரிப்பு நிகழ்வு

நீர்வேலியில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக குடா நாட்டு மக்களின் ஒருமித்த எதிர்ப்பு நடவடிக்கை உணர்ச்சி கொப்பளிக்க வெளிப்பட்டிருக்கின்றது.
ஒன்றுபட்ட தேசமாக தேசியமாக எழுச்சி பெற்று நிற்கும் தமிழினம், கோபம் பீறிடும் தனது எதிர்ப் புணர்வைக் கூட ஆக்ரோஷத்தோடு ஒன்றுபட்டுத்தான் வெளிப்படுத்தியது. நேற்றுமுன்தினம் முழு யாழ். குடா நாட்டையுமே ஸ்தம்பிக்கச் செய்யும் விதத்தில் ஐக்கியப் பட்டு, தங்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத் திய யாழ். மக்களின் சீற்றம், இந்த அப்பாவிகளின் படு கொலைக்குக் காரணமான சூத்திரதாரிகளின் செவிப் பறையில் ஆழமான ஒரு செய்தியை ஓங்கி ஒலித்து உணர்த்தியிருக்கும் என நம்பலாம்.
தேசிய பிரக்ஞையுடன் கூடிய குடாநாட்டு மக்களின் பரந்துபட்ட ஐக்கிய உணர்வெழுச்சி அண்மைக் காலத் தில் இரண்டு நிகழ்வுகள் ஊடாக வெளிப்படுத்தப் பட்டன.
ஒன்று சிங்கள தேசத்தின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யும் தேர்தலில் தமிழர் தாயகத்துக்குச் சம்பந்த மேயில்லை என்பதை உலகுக்கு முரசறைந்து கூறுவது போல அத்தேர்தலை ஒட்டுமொத்தமாகப் பகிஷ்கரித்துத் தமது இனத்தின் ஐக்கிய நிலைப்பாட்டை நிரூபித்தமை.
மற்றது தமது தாயக தேசத்தின் விடுதலைக்கு வித்தான மாவீரர்களின் நினைவாக மாவீரர் தின நிகழ்வு களை உணர்வுடன் பேரெழுச்சியாக அனுஷ்டித்தமை.
இந்த நிகழ்வுகள், தமிழ்த் தேசியத்தின் ஊற்றுக் கண்ணாகவும் அதில் உறுதியாகவும் குடாநாட்டு மக் கள் மலைபோல் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தின.
குடாநாட்டு மக்களின் இந்த ஐக்கியத் திரள்வு தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளை கதிகலங்க வைத்து விட்டது.
வடக்கில் இறுகி, மேலும் மேலும் பலமடைந்து, வலு வடைந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வை அப்படியே வளரவிடுவது, சிங்களத் தேசியத்தின் மேலாண்மைப் போக்குக்குச் சாவுமணி அடித்துவிடும் என்ற உண் மையை உணர்ந்து கலவரமடைந்துள்ள ஆளும் வர்க் கம், தமிழ்த் தேசிய உணர்வைச் சிதறடித்து, சின்னா பின்னமாக்கி, மழுங்கடித்து, வலுவிழக்கவைக்கும் எண் ணத்தோடு பல சதிச்செயல்களை அரங்கேற்றி வரு கின்றது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதி ராகச் செயற்படும் சக்திகள், தென் தமிழீழத்தில் தம்மை யாரென அடையாளம் காட்டிக்கொள்ளாமல், விடுதலை உணர்வுமிக்க தமிழர்களுக்கு எதிராக மறைமுக சமரை இருள் யுத்தத்தை நிழல் சண்டையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.
தென்தமிழீழத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் மத்தியில் இத்தகைய அரூப கரங்களினால் ஒரு யுத்தத்தைத் தொடுத்து, அங்கு குழப்பத்தை ஏற்படுத்துவதில் வெற்றிகண்ட இச்சக்திகள் அதே தந்திரத்தை வட தமிழீழத்திலும் கட்டவிழ்த்துவிடப் பார்க்கின்றன. அதன் மூலம் மக்களை பீதிக்குள் ஆழ்த்தி, குழப்பத்தை ஏற்படுத்தி, தாம் நினைத்ததைச் சாதிக்கலாம் என்று அவை திட்டமிடுகின்றன; பகல் கனவு காண்கின்றன.
அரூப கரங்களினால் இச்சக்திகள் புரியும் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஒன்றாகவே நீர்வேலிப் படுகொலைகளை நாம் கருதவேண்டும். இத்தகைய அத்து மீறல் தாக்குதல்கள், அட்டூழிய நடவடிக்கைகள் தமிழ்த் தேசத்தைக் குழப்பத்துக்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் ஆழ்த்தி பெரும் களேபரத்தை உண்டுபண்னும் என்றும் தேசிய உணர்வுடைய எண்ணங்கள் மழுங்கடிக்கப்படும் என்றும் இந்தச் சக்திகள் எதிர்பார்த்தன.
ஆனால், நடந்ததோ நடப்பதோ வேறு. அச்சக்தி களுக்கு ஏமாற்றம் அழிக்கும் விதத்தில் இத்தகைய கோழைத்தனமான படுகொலைகள் கண்டு குடாநாட்டு மக்கள் துவளவில்லை. இத்தகைய இழப்புகள் தமக்கு மேலும் உறுதியையும் தேசியத்தின்பாலான தமது பற்றுதலையும் வலுவடையச் செய்யும் என்பதைச் சாத்வீக வழியில் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை உறுதியாகவும் கட்டுக்கோப்பாகவும் மேற்கொண்டு, நிரூபித்திருக்கின்றார்கள் குடாநாட்டு மக்கள்.
அமைதிக்காலத்தில் சமாதான வேளையில் உரிமைப் போராட்ட உந்தலும் விடுதலைப் போராட்ட உணர்வும், சுதந்திரத்திற்கான உறுத்தலும் தொய்ந்து, நைந்து போய்விடாமல் சமூகத்தில் போராட்ட உணர்வு "சிக்'கெனப் பற்றிப் பிடித்து நிற்பதற்கு நீர்வேலிப் படுகொலைகள் போன்ற சம்பவங்கள் வழிசெய்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
அந்த வகையில் இறப்பிலும் இழப்பிலும் கூட, உயிர்ப்பு உண்டு என்பது உறுதிசெய்யப்படுகின்றது.
குடாநாட்டில் தமிழ்த் தேசிய உணர்வை தட்டி எழுப்பும் வேள்வியில் ஆகுதியான உத்தமர்களாக நீர்வேலியில் தம் உயிர் ஈந்த இரு சகோதரர்களையும் நாம் கருதவேண்டும்.

http://www.uthayan.com/editor.html
" "
Reply
#8
<b>நேற்று புத்தூர், இன்று நீர்வேலி, நாளை எங்கே? கேள்வி எழுப்புகிறார் ஈழவேந்தன் எம்.பி.</b>
தமிழீழ மண்ணில் பலாத்காரமாக குடிகொண்டு எம்மைத் தாக்குகின்ற படையாகிய சிங்களப் படை இங்கு இருக்கும் வரை அவர்களுக்குப் பக்கதுணையாக ஆயுதக் குழுக்கள் இயங்கும் வரை எமக்கு விடிவும் இல்லை விமோசனமும் இல்லை. எம்மை எதிர்நோக்குகின்ற அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே மருந்து சிங்களப் படை எம்மண்ணிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். இதை நான் படைத்தளபதிக்கு பின்வரும் முறையில் ஆங்கிலத்தில் எடுத்துரைத்தேன். "The Panacea for all the Political ills we are facing, the only remedy is that the Singala army must Vacate immediately from our tamil Ealam Soil." இதற்கு அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த பதில் வஞ்சகம் நிறைந்த புன்னகைதான்....

http://www.thinakural.com/New%20web%20site...Important-5.htm
Reply
#9
யாழ். நீர்வேலியில் சிறிலங்கா இராணுவத்தினரின் மினிமுகாம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


இதையடுத்து சிறிலங்கா படையினரும் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இருதரப்புக்கும் இடையில் நீண்டநேரம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலின் சேத விவரங்கள் தெரியவில்லை
http://www.eelampage.com/index9.php?cn=22238
Reply
#10
யாழ். நீர்வேலி முகாம் மீது தாக்குதல் நீடிப்பு: 2 படையினர் பலி!!
யாழ். நீர்வேலியில் சிறிலங்கா இராணுவத்தினரின் மினி முகாம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய தாக்குதலில் 2 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.


இருதரப்புக்கும் இடையில் நீண்டநேரம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதையடுத்து அப்பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

http://www.eelampage.com/index9.php?cn=22238
Reply
#11
5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகிவிட்டதா? தாக்குதல் வேகத்தை பார்க்க ஆரம்பித்தமாதிரித்மதான் தெரிகிறது.
Reply
#12
தற்போது யாழில் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்கடுத்தப்பட்டுள்ளதாக புதினத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#13
kakaivanniyan Wrote:5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகிவிட்டதா? தாக்குதல் வேகத்தை பார்க்க ஆரம்பித்தமாதிரித்மதான் தெரிகிறது.

என்ன காக்ஸ் ளொள்ளா...!! :evil: ... யாரோ புலிகள் மீது பழிபோடத் தாக்குதல்களை நடாத்துகிறார்கள். போர் நிறுத்த காலத்தில் நிழல்யுத்தத்தின் ஒருபகுதிதான் இது... இல்லை தமிழர் அவலத்தைப் பொறுக்காமல் ஏதோ ஒரு ஆயுதக் குழு(சந்திரிக்கா தமிழர் போராளிகளை விமர்சிப்பது போல) தாக்குதல் நடாத்துகிறது.... !!

இப்போ ஒரு பழமொழிதான் ஞாபகத்தில் வருகிறது... "பல்வலிவந்தால் உடல் நலம் கெடும்" அது இராணுவத்தினருக்கும் கூட..

இத்தகைய தாக்குதல்கள் ஒருவகையில் தமிழர் தரப்புக்கு சாதகங்களை ஏற்படுத்தும்... தமிழருடன் போருக்கு எண்று ஜனாதிபதியாகிய ராஜபக்ஷவுக்கு தலைவலியை கொடுக்கும்.. அத்தோடு அகலக்கால் வைத்திருக்கும் எதிரி வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள முடியாது அவனது படையணிகள் அவனது கட்டுப்பாட்டு பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்த அனுப்பப்பட வேண்டிய தேவையை உண்டுபண்ணும்... அவனால் அவனது படையணிகளை ஒருங்கிணைக்க முடியாத இன்னலுக்கு ஆளாவான்... அத்தோடு எப்போதுமே சிறிய படையணிகள் அவனது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடமாடத்துணிய மாட்டான்.. பெரும் எடுப்பில்தான் அவனால் முகாம்களுக்கான வினியோகங்கள் நடைபெறவேண்டும்...... அதோடு எதிரி முகாம்களுக்குள் முடங்க வேண்டிய காலமும் வரலாம்......

அதைவிட முக்கியமாய் இராக்கில் அமெரிக்கர்களை படுத்தும் இன்னலைப் போண்ற இத்தாக்குதல்கள் வேறு நாடுகளில் இருந்து வரவிரும்பும் படைக்கு விடுக்கப் படும் எச்சரிக்கை போலும் உள்ளது...!
::
Reply
#14
Quote:என்ன காக்ஸ் ளொள்ளா...!! ... யாரோ புலிகள் மீது பழிபோடத் தாக்குதல்களை நடாத்துகிறார்கள். போர் நிறுத்த காலத்தில் நிழல்யுத்தத்தின் ஒருபகுதிதான் இது... இல்லை தமிழர் அவலத்தைப் பொறுக்காமல் ஏதோ ஒரு ஆயுதக் குழு(சந்திரிக்கா தமிழர் போராளிகளை விமர்சிப்பது போல) தாக்குதல் நடாத்துகிறது.... !!


தளபதிக்குத்தான் போர்வியுகங்கள் தெரியும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
இதில் சொல்லவேண்டிய முக்கிய விடயம் என்னவேன்றால் படைகளை மூகாமுக்குள் முடக்கி அவனின் செயற்பாடுகளுக்கு அச்சத்தை தோற்றுவித்தலே மூலம். மேலும் எம் மக்களின் மீது ஏதும் தாக்குதல் நடந்தால் பதில் இப்படித் தான் இருக்கும் என்ற எதிரிக்கு புரியவைத்தலும் ஆகும்.
[size=14] ' '
Reply
#16
kakaivanniyan Wrote:5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகிவிட்டதா? தாக்குதல் வேகத்தை பார்க்க ஆரம்பித்தமாதிரித்மதான் தெரிகிறது.

ஜோவ்........ யாரப்பா அது? ஆமா எப்ப 4ம் கட்ட ஈழப்போர் நடந்து முடிஞ்ச? அட எனக்கே தெரியாமல்?

அது இருக்கட்டும், இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில, புலிகளின் முக்கியஸ்தர்கள், தளபதிகள், போராளிகள், ஆதரவாளர்கள் கொல்லப்பட்ட போதும் தொடங்காத யுத்தம், ஜூயுபி 10 இராணுவம் கொல்லப்பட்ட உடனயா தொடங்கப்போகுது? ரொம்ப சின்னபுள்ளத்தனமா இருக்கு.. :evil:

அந்த ஜேர்மனில இருந்து றீபிசி அரசியல் ஆய்வில புலம்புற, புசத்திற லூ** ஜெய நாதண்ட கருத்து மாதிரி இருக்கப்பா..... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
சரி நீங்கள் கவனமா இருங்கோ டன் அண்ணா... Cry Cry
Reply
#18
vasisutha Wrote:சரி நீங்கள் கவனமா இருங்கோ டன் அண்ணா... Cry Cry

அவர் எங்க வெளியால வாறது. இப்பவும் பங்கருக்குள்ள இருந்து தானே அறிக்கை விடுகின்றார்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#19
<b>தாக்குதலுக்கு உள்ளாகும் ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் - நூற்றுக்கணக்கில் வீசப்படும் கண்ணீர் புகைக்குண்டுகள். </b>

Written by Pandara Vanniyan Monday, 05 December 2005

கடந்த மாவீரர் நாளன்று ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டதினை அடுத்து இன்று அதனை கண்டித்தும் கல்லூரியை சூழவுள்ள இராணுவக்காவலரண்களை அகற்றக் கோரியும், புதிதாக காவலரண் அமைக்கும் வேலைகளை நிறுத்தும் படியும் கோரி போராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தியவண்ணம் உள்ளனர்.

இது வரைக்கும் நூற்றுக்கு மேற்பட்ட கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் மாணவர்களை சூழ்ந்து வருவதாகவும் எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(சங்கதி)
::
Reply
#20
<b>இராணுவத்தையும் குழுக்களையும் வெளியேற்ற நடவடிக்கை தொடங்குகிறோம்: பொங்கியெழும் மக்கள் படை அறிவிப்பு!</b>

தமிழ் மக்கள் மீது நெருக்குவாரங்களை ஏற்படுத்துகிற சிறிலங்கா இராணுவத்தையும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களையும் எமது மண்ணிலிருந்து வெளியேற்ற எமது நடவடிக்கைகளைத் தொடங்குகிறோம் என்று யாழ். பொங்கியெழும் மக்கள் படை அறிவித்துள்ளது.


பொங்கியெழும் மக்கள் படையின் அறிக்கை:

தமிழ் மக்களது இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதை அடிநாதமாகக் கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்காகன பேச்சுவார்த்தைகள் சர்வதேச அனுசரணையுடன் ஜெனிவாவில் நடைபெற உள்ளதன் மூலம் படைத்தரப்பினர்களது நெருக்குவாரங்களை நிறுத்தும் என தமிழ்மக்கள் எதிர்பார்த்தனர்.

இந்த எதிர்ப்பார்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே சிறிலங்காப் படையினருக்கு எதிரான எமது தாக்குதல்களை நிறுத்தியிருந்தோம்.

சிங்களப் பேரினமானது எவ்வகையிலும் இதயசுத்தியுடன் பேச்சுவர்ர்த்தைக்கான சுமுகமான பின்புலனை உருவாக்குமா? அல்லது தமிழ்மக்கள் மீதான நெருக்குவாரங்களை அதிகரிக்கும் என்ற ஐயம் எழவே செய்தது என்றாலும், எமது நல்லெண்ண வெளிப்பாட்டிற்கு சிறிலங்கா படைத்தரப்போ அல்லது ஈ.பி.டி.பி உட்பட்ட துணை இராணுவக் குழுக்களோ எவ்வித நல்லெண்ணப் பிரதிபலிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை.

சிங்கள பேரினவாத அரசியலாளர் இராணுவ நிலைப்பட்ட தங்கள் சிங்கள மேலாதிக்க வாதத்தில் இருந்து விடுபட்டு ஆக்கப+ர்வமான முற்போக்கான போர்நிறுத்தச் செயற்பாடுகளை எடுப்பதற்கு சிறிளவு கூட முயலவில்லை.

மாறாக கால இழுத்தடிப்புக்கள் கபடத்தனமான சொற்சிலம்பாட்டம் கொண்ட நம்பகத் தன்மையற்ற அறிக்கைகளை அள்ளித்தெளித்துக்கொண்டு இராணுவ நெருக்குவாரங்களை மிக இறுக்கமாக அதிகரித்துவருகின்றன.

உக்கிரமடைந்து வரும் நெருக்குவாரங்களால் தமிழ் மக்களது எதிர்ப்பாப்புக்கள் கானல் நீராகிவிட்டது.

சுற்றிவளைப்புக்கள், தேடுதல்கள், அப்பாவிமக்கள், தொண்டர்சேவை நிறுவன உறுப்பினர்கள் கடத்தல்கள், காணாமல் போகுதல்கள், அப்பாவிகள் மீதான தாக்குதல்கள், பெண்களை அவமானப்படுத்துதல் என அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் தடையற்ற அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

மானிப்பாய், ஊரெழு படைமுகாம்களில் பெண்களது அவலக் கதறல்கள் இரவுகளில் கேட்கின்றன. கைது செய்யப்படுவோர் சித்திரைவதைக் கூடங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு உள்ளமும் உடலும் தெறிபட வதைபடுகின்றனர்.

மனித உரிமைகள் சித்திரவதைக் கூட சுவர்களில் மோதப்பட்டு உதிரம் கக்கி பலியாகின்றது. மனித உரிமைகள் முற்றாக மறுக்கப்பட்டு அரசியல் அபிலாசைகள், வாழ்வுரிமைகள் காலில் மிதிபடும் பொழுது அமைதியும், நிம்மதியும் தூரத்தே விலகிப்போய்விடுகின்றன.

இனியும், கைகட்டி மௌனித்து நாம் போவதில்லை தமிழர்களுக்கு முன்னால் இப்போது ஒரேயொரு தெரிவுதான உள்ளது. அது தற்காத்துக்கொள்ளுதல் எனும் மறுக்கமுடியாத மனித உரிமைகள்பாற்பட்ட தெரிவேயாகும்.

சிறிலங்காப் பேரினவாத்த்தின் முன்கூட்டிய நயவஞ்சகத் திட்டமிடலுடன், சிறிலங்காப் படைத்தரப்பினது பாதுகாப்புக் குடைக்குள் பதுங்கியிருந்து கோழைத்தனமான தமிழ்மக்கள் விரோத கொடுரங்களை இழைக்கும் ஈ.பி.டி.பி உட்பட்ட துணை இராணுவக் குழுக்களை எமது மண்ணிலிருந்து உடனடியாக அகற்றுதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.

மனிதத்தின்மீது கொண்டுள்ள அக்கறையின் பேரால், இலங்கைத்தீவில் சமாதானத்தை விதைத்துவிட ஆர்வமுடன் முயலும் சர்வதேச சமூகத்தின் எண்ணங்களைத் தூக்கியெறிந்தும் விடுதலைப் புலிகளின் பேச்சுக்கான சமிக்கைகளை அவகௌரவப்படுத்தி நிற்கும் சிறிலங்காப்படைகளும் அவர்களின் பாதுகாப்புடன் மனிதத்துக்கு எதிரான தமது நடவடிக்கை நிகழ்ச்சி நிரலாகக்கொண்டுள்ள ஈ.பி.டி.பி உட்பட்ட துணை இராணுவக்குழுக்களையும் எமது மண்ணில் இருந்து வெளியேற்றியே தீருவோம்.

நாளாந்தம் எமது மக்கள் கொல்லப்படுவதையும் பாதிக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

ஆகவே நாம் தொடர்ந்தும் பொறுமைகாப்பது சாத்தியமற்றது. எனவே சர்வதேச சமூகத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் எம்மை மன்னிக்க வேண்டுகின்றோம்.

எமது அன்புக்குரிய யாழ் குடாநாட்டு உறவுகளே! தொடரும் இராணுவத்தினரதும், துணைக்குழுக்களுக்கும் எதிராக நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு ப+ரண பங்களிப்பு வழங்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம் என்று யாழ். பொங்கியெழும் படை எச்சரித்துள்ளது.

<b>நன்றி: புதினம்</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)