Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எட்டாப்பழம் புளிக்கும்
#1
<span style='font-size:20pt;line-height:100%'>எட்டாப்பழம் புளிக்கும் என்று இதைத்தான் சொல்வார்களோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </span>

சிறிலங்கா பிரதமர் பதவி பயனற்றது: சுற்றுலா அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க

சிறிலங்காவின் பிரதமர் பதவி பயனற்றது அது எனக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க கூறியுள்ளார்.

இது தொடர்பாக அனுரா பண்டாரநாயக்க கூறியுள்ளதாவது:

சிறிலங்கா பிரதமர் பதவியை எனக்கு மகிந்த ராஜபக்ச அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் நடைமுறையை உணர்ந்தவன். முட்டாள் அல்ல.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எனது பெயர்தான் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறிலங்காவின் வரலாற்றிலேயே முதல் முறையாக கட்சியின் மத்தியக் குழு பரிந்துரைத்த நபர் அல்லாத வேறு நபருக்கு பிரதமர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீண்டும் மத்தியக் குழுவில்தான் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை.

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக நியமித்ததில் எனக்கு வருத்தம் இல்லை. யாராக இருந்தாலும் பிரதமர் என்பவர் பயனற்றவர். வாகன வசதிகளோடு ஆடம்பரமாகச் சென்று திறப்பு விழாக்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்லத்தான் அந்தப் பதவி பயன்படும். அந்த வகையான பதவியை நான் விரும்பவில்லை. அதிகாரத்துடன் இயங்கக் கூடிய பதவிதான் நான் விரும்புவது.

எனக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நான் செயற்படவில்லை. கம்பஹாவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த வெற்றி பெறுவார் என்று அவரிடம் உறுதியளித்திருந்தேன். அதுதான் நடந்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயஇ ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளும் சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுக்களும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதுதான் மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தில் என்னை முழுமையாக ஈடுபட விடாமல் தடுத்தது.

ஒருகாலத்தில் ஜே.வி.பி.யை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைத்தது நான் தான். ஆனால் அவர்கள் எப்போதே ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலக முடிவெடுத்தார்களோ அப்போதே தனக்கும் ஜே.வி.பிக்குமான உறவு முறிந்துபோய்விட்டது.

சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு சந்திரிகா மீண்டும் வருவாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அது தொடர்பில் முன்பு என்னோடு கதைத்திருக்கிறார். பின்னர் அது குறித்து கதைப்பதில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் வரைதான அவருடன் தொடர்பில் இருந்தேன். அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ளவில்லை. சாதாரணமாக தொலைபேசியில் பேசுவதை சந்திரிகா தவிர்ப்பார். அது பாதுகாப்பற்றது என்றும் கருதுபவர் அவர். அதனால் அவரை நேரில்தான் சந்திக்க வேண்டும். அவரைச் சந்திப்பதற்கு காத்திருக்க வேண்டும்.

தென்னிலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை இனப்பிரச்சனை தொடர்பாக பெறுவதை விட அரசாங்கம் முதலில் தனது கொள்கையை வெளிப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். தென்னிலங்கையின் லங்கா சம சமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இனப்பிரச்சனை தொடர்பான கொள்கைகள் நல்ல முற்போக்கானவை என்றார் அனுரா பண்டாரநாயக்க.

<b>நன்றி - புதினம்</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
இப்போதாவது அவருக்கு பிறந்த ஞானம் உண்மையானதாகவிருந்தால் நல்லது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Reply
#3
அனுராவிற்கு ஞானம் பிறந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவரால் ஏதும் செய்யமுடியவில்லை அதனால் பொறுமை காக்கிறார். சுதந்திரகட்சியில் இனி ஏதும் வாய்ப்புக்கள் சந்தர்ப்பங்கள் வருமா என்று காத்திருப்பார். ஐக்கிய தேசிய கட்சி மூலம் ஏதும் கிடைக்கும் என்றால் முன்பு தாவியது போல அந்தப்பக்கம் தாவவும் தயங்கமாட்டார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
என்ன வசம்பு உண்மையா ஞானம் பிறந்தால் புத்தர் மாதிரி அரச பதவியை விட்டுப் போகவேணுமே இது நல்ல காசடிக்கிற இடத்திலைதானே இருக்கிறார் சரி இன்னெண்டும் சொல்லியிருக்கிறார் ஜே.வி.பி .மொட்டைகளின் உறவு முறிஞ்சு போட்டுதாம் இது எத்தினை நாளுக்கு?ஃ??
அரசியலிலை இதெல்லாம் சகஜமப்பா........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
மகிந்த ஜனாதிபதியாக இருக்கும் மட்டும் பண்டாரநாயக்கா குடும்பத்தை தலையெடுக்க விடமாட்டார். இதைவிட எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சித் தலைவராக வருவதற்கும் மகிந்தவிற்கு சந்தர்ப்பமுள்ளது. அப்படி வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அத்துடன் ஐ.தே.கட்சியும் எனி அநுராவைக் கணக்கிலெடுக்கும் என்று சொல்ல முடியாது. ஆதலால் இப்படி இடைக்கிடை அறிக்கைகள் மூலமாகவே தனது இருப்பை காட்டிக் கொள்ள வேண்டியது தான்.ஜே.வி.பி பற்றிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே பொதுவாகவே அரசியல்வாதிகளின் கருத்துக்கள் காலநிலை போன்றதே. எப்ப என்ன நடக்கும் என்று கூறமுடியாது.
Reply
#6
அநுராவைப் பார்க்கும்போது அவர் பெரிய புத்திசாலிபோலத் தெரிவதில்லை. அதேபோல்தான் பேசும்போதும் இருக்கின்றது.
சகோதரி ஏதாவது இரகசியத் திட்டங்கள்போட்டு நிறைவேற்றினால் இவர் ஒருநாள் அதிபராகவும் வருவார்.

Reply
#7
செல்வமுத்து அண்ணா நீங்களொன்று. தம்பி அதிபராக வருவதை அக்காவே சதி செய்து தடுத்து விடுவா. அதைவிட அநுராவை பொது அத்தியட்சராக தெரிவு செய்வதற்கு சுதந்திரக்கட்சிப் பொதுக்குழு கூடச் சம்மதிக்காது. இந்நிலையில் அவரால் எப்போதும் ஒரு உயர்ந்த நிலைக்கு வர முடியாது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)