Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதய அஞ்சலி - பெரியார் சீலன்
#1
இதய அஞ்சலி - பெரியார் சீலன்

நேற்று அந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தே போய் விட்டேன். அது எனது நண்பனின் தந்தையின் மரணம் என் பெற்றோரை தவிர்த்து நான் அம்மா அப்பா என்று கூப்பிட்டது அவர்களைத்தான். கிட்டத்தட்ட அது எனது இரண்டாம் தாய் வீடு. அவர்கள் வீட்டின் 5 வது பிள்ளையாகவே நான் வலம் வந்தேன். அப்பாவும் சரி அம்மாவும் சரி. அவர்கள் 4 பேருக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் காட்டியது கிடையாது. பசித்தால் நானாகவே தட்டை எடுத்து சாதம் போட்டு சாப்பிட்டுக் கொள்வேன் கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து வரும் உறவு இது. அப்பா ஒரு வாரத்திற்கு முன் இறந்துவிட்டார்கள் என்று என் தம்பி சொன்னபோது மனம் அறுபட்டு துடித்தேன். என் மனம் மேலும் வேதனைப்படக் காரணம் 15 நாட்களுக்கு முன் நான் கண்ட கணவு. அதில் பெரியார்சீலன் அப்பா இறந்துவிடுவது போலவும் நான் பாலாஅம்மாவை கட்டிக் கொண்டு விம்மி அழுவதாகவும் அண்ணன்கள் என் தோளைப்பற்றி அழுவதுமான கனவு அது, கனவில் நான் மொத்தமாக அழுது தீர்த்துவிட்டேன். இப்போது செய்தியறிந்தும் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழ வாய்ப்பில்லாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறேன். பெரியார்சீலன் உண்மையிலே பெரியார் சீலனாக வாழ்ந்தவர். இறுதிவரை, கடவுள் மறுப்பு, சுயமரியாதை, ஒழுக்கம், குறிப்பாக அவர் தன் குழந்தைகளுக்கு கொடுத்த சுதந்திரம், அவர்களின் கடவுள் நம்பிக்கையில் தலையிடாது வாழ்ந்தவர். நான் பலமுறை அவர்கள் வீட்டிற்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டையுடன் பலமுறை சென்றிருக்கிறேன். ஒரு முறை கூட எனது நம்பிக்கையை கிண்டல் செய்ததில்லை. எப்போதும் என்னடா முத்து செய்ற என்று அன்புடன் விசாரிப்பார். இன்று நண்பனின் தொலைபேசி எண் தொலைந்து விட்டது. எல்லா வகையிலும் தேடிப்பார்த்துவிட்டேன். என்று அம்மாவிடம் பேசுகிறோனோ அன்றுதான் என் பாரம் குறையும். என் சோகத்தை என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன் நானறிந்த கவிதை மொழியில்.

<b>இதயம் அறுப்பட்டுக் கிடக்கிறது அப்பா..
கேட்ட நொடியிலிருந்து
இதயம் அறுபட்டுக்கிடக்கிறது அப்பா.
இனி என்றும் பேசமுடியாது அப்பா
இனி என்றுமே பேசமுடியாதே அப்பா
ஏனிந்த தண்டனை அப்பா

எனக்கெல்லாம் ஞாபகம் வருதே
பழையது எல்லாம்
உங்கள் பாசமெல்லாம்
அய்யோ
அதை தடுப்பது எப்படி அப்பா

தாய்க்கு தலைமகன்
தந்தைக்கு கடைமகன் தானே
கடை மகன் நானின்று
கண்களின் நீரில் உங்கள் முகம் நிறுத்தி
கடைசியாய் பார்க்க முடியாமலே
போய்விட்ட தூரத்தில் நின்றின்று
துடிக்கிறேன் அப்பா
துடிக்கிறேன்

எப்படி பார்ப்பேன் அம்மாவை
இனி நீங்களில்லாமல்
நீங்களில்லாத அம்மாவை
எப்படி பார்ப்பேன்

என்ன பேசுவேன் அம்மாவிடம்
உங்களை பார்க்க வராததற்கு
என்ன காரணம் சொல்வேன் அப்பா
என்ன காரணம் சொல்வேன் அப்பா

எப்படி கழித்தேன் மகிழ்ச்சியாய்
அந்த நாளை
நீங்கள் இல்லாது தெரியாமலே
எப்படிக் கழித்தேன்
அந்த நாளை

எதற்கு என் மீதத்தனை
பாசம் உங்களுக்கு
ஏன் ஏன்
எல்லோரும் என்னை நேசித்தீர்கள்
வேதனையில் நானிங்கு
துண்டு துண்டாகிக் கிடக்கிறேன்

இப்படித் தவிப்பேன் என்றா
என் கனவில் இறந்தீர்கள்
அம்மாவை நான் கட்டியழ
பாருடா அப்பாவை
பாருடா அப்பாவையென
அம்மா சொல்லியழ
வாய் பொத்தி
நானும் அண்ணன்களோடு கதறியழ
எல்லாக் கடமையும் செய்யத்தான்
என் கனவில் வந்தீர்களோ
அத்துணை பாசமா அப்பா உங்களுக்கு?

கனவிற்கே நொறுங்கிவிட்ட எனக்கு
எப்படித் தாங்க முடியும் இதை
எப்படித் தாங்க முடியும் இதை
என்னடா பண்ற முத்து
என்னடா பண்ற முத்து
நீங்கள் கேட்பதுதான்
என் காதுகளில் நிறைஞ்சிருக்கு அப்பா
காதுகளில் நிறைஞ்சிருக்கு அப்பா

அழுது கொண்டுதான் இருக்கிறேன் அப்பா
அழுது கொண்டுதான் இருக்கிறேன் அப்பா
உங்களுக்கு கேட்குதாப்பா
என் அழுகை
உங்களுக்கு கேட்குதாப்பா
என் அழுகை

கனவிலாவது வந்து சொல்லுங்கள் அப்பா
கனவிலாவது வந்து சொல்லுங்கள் அப்பா</b>

.
Reply
#2
முத்துக்குமரன் உங்கள் சோகத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
அன்னாரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அஞ்ஞலி.
பெரியார் சீலன் அவர்கள் திருச்சியா ,அல்லது மதுரயைச்
சேர்ந்தவரா?
Reply
#3
முத்துக்குமரன், உங்கள் நண்பரின் தந்தையை இழந்த சோகம் புரிகின்றது. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் ...
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
<b>முத்துக்குமரன்</b>
உங்களின் சோகம் புரிகின்றது. உங்களின் நண்பனின் குடும்பத்தாருக்கு நானும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Reply
#5
narathar Wrote:முத்துக்குமரன் உங்கள் சோகத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
அன்னாரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அஞ்ஞலி.
பெரியார் சீலன் அவர்கள் திருச்சியா ,அல்லது மதுரயைச்
சேர்ந்தவரா?

பெரியார் சீலன் திருச்சியைச் சேர்ந்தவர். துவாக்குடி ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் நீண்ட காலம் தலைமை ஆசிரயராக பணி புரிந்தவர், 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்

.
Reply
#6
தங்கள் ஆறுதல் சற்று நிம்மதியை தருகிறது மதன் வசம்பு. இந்த மரணம் என்னை கடுமையாக பாதித்துவிட்டது. கவிதை எழுதும் போது பீறிட்டெழுந்த கண்ணீரை என்னால் அடக்கவே முடியவில்லை. என்ன கொடுமை என்றால் அவர்கள் வீட்டு தொலைபேசி எண்ணும் தொலைந்துவிட்டது

.
Reply
#7
மு.குமரன் உங்கள் சோகத்தில் நாங்களும் பங்கு கொள்ளுகிறோம்
உங்கள் நண்பனின் குடும்பத்திற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
முத்துக்குமார் உங்கள் சோகத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். அண்ணாருக்கு எமது அஞ்சலிகள். நடக்க இருக்கும் சம்பவத்தை முன்கூட்டியே நீங்கள் கனவில் அறிந்தது அவருடனான உங்கள் பாசப்பிணைப்பின் வெளிப்பாடே.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
முத்துக்குமார், நெருக்கமானவர்கள் பிரியும்போது ஏற்படும் நெஞ்சத்து அழுத்தத்தை அனுபவித்தால்தான் தெரியும். யாருக்கும் இப்படி ஏற்படக்கூடாது என்று நாம் எண்ணினாலும் இயற்கையாக நடப்பதை யாராலும் தடுத்துவிட முடியாது. உங்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தைரியமாக இருங்கள்.

Reply
#10
என் சோகத்தை பகிர்ந்து கொண்ட முகத்தார், தமிழினி, செல்வமுத்து ஆகியோருக்கு நன்றி. உங்கள் ஆறுதல்கள் அந்த தாய்க்கே போய்ச் சேரட்டும்.....

.
Reply
#11
முத்துக்குமரன் உங்களின் இதயத்து சோகத்தில் உங்களுடன் பங்கு கொள்கிறோம்.
குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவியுங்கள்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
Reply
#12
முத்துக்குமரன் உங்கள் சோகத்தில் நாங்களும் பங்கு எடுத்து கொள்கின்றோம்.. உங்கள் 2ம் தாய் குடும்பத்தினாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்...
அவரின் ஆத்மா சாந்திடைய கடவுளை வேண்டுகின்றேன்.

Reply
#13
முத்துக்குமரன் உங்கள் சோகத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்....
Reply
#14
முத்துக்குமரன் உங்கள் சோகத்தில் நாமும் பங்கெடுத்துகொள்கின்றோம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#15
narathar Wrote:முத்துக்குமரன் உங்கள் சோகத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
அன்னாரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அஞ்ஞலி.
பெரியார் சீலன் அவர்கள் திருச்சியா ,அல்லது மதுரயைச்
சேர்ந்தவரா?

[b]ஒட்டுமொத்ததில் இந்தியர்கள் அனைவரையும் மிகவும் தாழ்வாக கதைக்கும் நாரதரே உமக்கென்ன கவலை பெரியார்சீலன் திருச்சியா அல்லது மதுரையா என்று....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)