Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இங்கே ஏமாற்றப்படுவது யார்?
#1
தமிழர் தரப்பு ஊடகங்களில் இவை உதாரணங்கள்
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=14444
http://www.sangam.org/taraki/articles/2005...ndependence.php
http://www.battieezhanatham.com/2005/modul...ews&new_topic=1
http://www.yarl.com/eelam/article_932.shtml
http://www.yarl.com/eelam/article_928.shtml

ஆனால் கொழும்பு ஊடகங்கள் நிலமையை எப்படி சித்தரிக்கிறார்கள்?
http://www.tamillinks.net/archive/2005/new..._28112005_a.htm
http://www.tamillinks.net/archive/2005/new..._30112005_b.htm

வேறு சில...
http://www.thepeninsulaqatar.com/Display_n...05113032719.xml
http://www.hindustantimes.com/news/7752_15...04100180006.htm
http://www.hindustantimes.com/news/181_156...560204,0012.htm


ஒரே விடையம் (உரை) பற்றி, ஊடகங்கள் மக்களுக்கு சொல்லும் செய்தியிலும் நிவர்த்தி செய்ய முடியாத இடைவெளி?

இங்கே ஏமாற்றப்படுவது யார்?
Reply
#2
ஊடகங்கள் ஒவ்வொன்றும் தம்முடைய சார்ப்பு நிலைக்கு தக்கவாறு செய்திகளை வெளியிடுகிறார்கள்.

தற்போது புலிகள் விடுத்த சமாதான தீர்வுக்கான காலக்கெடுவை இலங்கை அரசு நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இணைப்பு http://news.yahoo.com/s/afp/20051201/wl_st...ri_051201080147
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
திருக்குறளுக்கு கன பேர் விளக்க உரை எழுதிற மாதிரி.அவர் அவர் தங்களுக்கு விருப்பமான மாதிரி எழுதுகினம்.
வாற வருசம் தெரியும் யார் சொன்னது சரி எண்டு.
Reply
#4
உண்மையில் மேலேயுள்ள ஊடகங்களில் எந்த ஊடகம் சரியாக எழுதுகின்றது. ஒவ்வொரு ஊடகமும் தமக்கேற்றவாறே எழுதுகின்றன. எமக்குச் சார்பாக எழுதினால் பாராட்டுவதும் எதிராக எழுதினால் து}ற்றுவதும் தானே இங்கே நடக்கின்றது.
Reply
#5
மறுமொழியாக உடன் விடும் பதில் அறிக்கையில் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் ஆக்கபூர்வமான பதில் போல தோற்றப்பாட்டை உருவாக்கும் வெற்றுப்பேச்சு, வாழ்த்தி, புகழ்ந்து, தானும் நேசக்கரம் நீட்டுவதாக பசப்பு வார்த்தைகள் நிறைந்திருக்கும்.

ஏதிர்பார்ப்பு அவதானிப்பு மாறிய பிறகு புதிய காரணங்களை காட்டி திசை திருப்புவார்கள். இப்படித்தானே P-TOMS உடன்பாட்டிற்கு வரமுதல் பல விதமான எதிர்ப்புக்களைக் காட்டி பின்னர் ஆரவாரங்களோடு அதை கைச்சாத்திட்டு பிறகு நடை முறைப்படுத்த வேண்டி நேரத்தில் நீதிமன்ற இடைக்கால தடை அது இது என்று முடக்கப்பட்டது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் விதிகள் பற்றிய சர்ச்சைகளும் முதல் அடியை நிப்பாட்டினா காணும் எண்டு ஓம் எண்டு கையெழுத்து வைச்சுப்போட்டு பிறகு அமுல்படுத்தலில் இழுபறி.

தலைவரின் பேச்சில் காலக்கெடு இருந்தது தெரிந்தும், அதைவிடுத்து ஒரு ஆரவாரமான அறிக்கைகள் மூலம் 2..3 நாட்களுக்கு ஓட்டிப்போட்டு, பிறகு ஒவ்வொரு நெண்டிச்சாட்டாக எடுத்து விடுறது.
Reply
#6
மகிந்தவும் அவருடைய அரசும் கடும் போக்குடையதாக மேற்குலகிலாலும் ஊடக துறையினராலும் பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் பிரபாகரனின் உரையை உடனடியாகவே எதிர்த்து கருத்து தெரிவித்தால் அது தமது கடும்போக்கு நிலையை மேலும் வெளிப்படுத்தும் என்பதால் ஆரம்பத்தில் வரவேற்றுவிட்டு இப்போது உண்மையான எண்ணங்களை வெளிப்படுத்துகின்றார்கள் போலும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)