Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அது ஒரு கனாக்காலம்
#1
<b>அது ஒரு கனாக்காலம்</b>
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2005/athu-oru-kana-kalam.jpg' border='0' alt='user posted image'>
மின்னல் வேக ரயிலெல்லாம் வந்தாச்சு. ஆனாலும் கட்டை வண்டி பயணத்திலும் ஒரு சின்ன சுகம் இருக்கிறதல்லவா? காட்சிகள் நகர்வதிலிருந்து கேமிரா சுழல்வது வரை அத்தனையிலும் ஒரு நிதானம். ஆனாலும் இது பாலுமகேந்திராவின் படம் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிய வைக்கிற அழகு!

இளவயசு குறும்புகள் எல்லை மீறினால் என்னாகும்? இதை காதல் என்ற நூலில் கோர்த்து மாலையாக தொடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா.

அப்பாவும், அம்மாவும் ஊருக்கு போய்விடுகிறார்கள். தனிமையில் தனுஷ். காலிங்பெல் ஒலிக்க கதவை திறந்தால் சந்தனச்சிலையாக ப்ரியாமணி. "அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதான் வேலைக்கு என்னை அனுப்பிச்சாங்க..." டயலாக் முடிந்த அடுத்த வினாடியே என்ன நடக்க போகிறது என்பது புரிகிறது. இருவரின் உடலிலும் ஏற்படுகிற வேதியியல் இம்சைகள் இருக்கிறதே... அது பச்சை பசேல் பாலுமகேந்திரா ரகம்.

உங்கப்பா உன்னை அடிக்கிறத பார்த்துட்டு என் பாவாடையிலேயே ஒண்ணுக்கு போயிருக்கேன். -இது ப்ரியாமணி.

அதான் நீ என்னை கிராஸ் பண்ணி போகும்போதெல்லாம் மூத்திரவாடை அடிச்சுதா? -இது தனுஷ்

வசனங்களில் யதார்த்தம் இருக்க வேண்டியதுதான். அதற்காக....?

அங்கங்கே வழிகிற குறும்புகளையும் பாராட்டியே ஆக வேண்டும். சிறுசுகள் இரண்டும் கள்ளத்தனமாக காதலை தொடர்ந்து கொண்டிருக்க, "இந்த காப்பியை அண்ணன்கிட்ட கொடு" என்று அம்மா சொல்கிற போது தியேட்டரே கலகல!

ஒரே ஒருநாள் லாக்கப் வாசம். வாழ்க்கையையே பறி கொடுத்துவிட்டு தவிக்கிறார் தனுஷ். இயக்குனர் கையில் தன்னை களி மண்ணாக ஒப்படைத்துவிட்டு இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தமைக்காக பாராட்டலாம். அம்மாவின் மரணத்தை அழுத்தத்தோடு எதிர்கொண்டு சிறைக்குள் வந்த பின் கதறுகிறாரே... நெஞ்சை உலுக்குகிற வலி.

அந்த சிறைச்சாலைக்குள் நம்மை கவர்கிற இன்னொரு நபர் கருணாஸ். தன் கானா குரலில் அவர் பாடுகிற அந்த பாடல் உயிரை உருக்குகிறது.

மேக்கப்பே இல்லாவிட்டாலும் தேவதை போலிருக்கிறார் ப்ரியாமணி. கவர்ச்சியை காட்டி கவர்ந்தாலும், நடிப்பில் குன்றிமணி அளவுகூட குறை வைக்கவில்லை இந்த ப்ரியாமணி.

கடைசி சில நிமிடங்களில் தலை காட்டுகிற சண்முகராஜா, ஒரு கொலை குற்றவாளியை தப்பவிடுகிற காரணம் நம்பும்படியாக இல்லை. ஆனாலும் மிடுக்கான போலீஸ் ஆபிசர்.

சோக காட்சிகளில் வம்படியாக பாட ஆரம்பித்துவிடுகிறார் இளையராஜா. எத்தனை படங்களுக்கு இதையே கேட்பது? போர்... ஆனால் பின்னணி இசை மட்டும் வழக்கம்போலவே ஜோர்!

முதன் முறையாக அகல திரையில் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா.

பாலுமகேந்திராவின் படங்கள் மனசுக்குள் புகுந்து உணர்வுக்குள் கலகம் விளைவிக்கும். ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்!

-ஆர்.எஸ்.அந்தணன்
Reply
#2
ம்ம்...அழகான காலம்..அந்த கனாக்காலம்...ஆனால் என்ன கனாவாவே போயிடும்...அதுதான் விசயம்..
படத்தில் அழகான ஒரு பாடல்..அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.....வேற படத்தைப்பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை.
..
....
..!
Reply
#3
பாலுமகேந்திராவின் கமரா அழகை பார்க்கலாம்தானே.
.

.
Reply
#4
அஜீவன் அண்ணா பாலுமகேந்திராவுடன் உங்களுக்கு தனிப்பட்ட தொடர்புகள்ளுண்டா வேறொன்றும்மில்லை அவரைப்பற்றி மேலும் அறிய விருப்பம்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
விது Wrote:அஜீவன் அண்ணா பாலுமகேந்திராவுடன் உங்களுக்கு தனிப்பட்ட தொடர்புகள்ளுண்டா வேறொன்றும்மில்லை அவரைப்பற்றி மேலும் அறிய விருப்பம்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...3b7587df35826c2
Reply
#6
படம் பாத்தன் நல்லாதான் இருந்தது மற்றும் விது பாலுமகேந்திராக்கும் அஜீவனுக்கும் தொடர்பு இருக்கா எண்டு எனக்கு தொரியாது ஆனால் பாலுமகேந்திராக்கும் மொனிசாக்கும் தொடர்பு உண்டு இதை அவஐர சொல்லியிருக்கிறார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#7
எனக்கு 1989 களில் தொடர்பு இருந்தது.
பின்னர் இல்லாமல் போய் விட்டது.
<b>அவர் ஒரு நல்ல கலைஞர் என்பது மட்டுமே எனக்குள் இருக்கும் மரியாதை.
அவரது ஒளிப்பதிவோடு கலந்த இயக்கம் மெய் மறக்க வைக்கும்.</b>

<img src='http://img462.imageshack.us/img462/4605/andrew3yb.jpg' border='0' alt='user posted image'>
நடுவே இருப்பவர் <b>அன்றூ ஜயமான்ன</b> (மஞ்சல் தொப்பி)

அவர் எனது குருவும் சர்வதேச விருதுகள் பெற்ற ஒளிப்பதிவாளருமான <b>அன்றூ ஜயமான்னவுடன்</b> சேர்ந்து இலங்கையில் பணியாற்றியவர்.
இவர்கள் நண்பர்கள்.
இலங்கை தமிழ் ஒளிப்திவாளர் வாமதேவனின் மாணவர்களே இவர்கள்.

கேன்ஸ் திரைப்பட விருது பெற்ற இலக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களிடம் பாலு மகேந்திரா அவர்கள் பணியாற்றியிருக்கிறார்.

பின்னரே இலங்கையை விட்டு இந்தியா வந்தார்.
இலங்கையில் பாலு மிகவும் நேர்மையாக இருந்தார் என்று சொல்வது கேட்டு வியப்பு?

இறுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்
நான் பிரசாத் லேப்புக்குள் இருந்த போது
அது ஒரு கனாக்காலம் தொடர்பான வேலைக்கு போவதைப் பார்த்தேன்.
ஒல்லியாக மாறிப் போய் இருந்தார்.
Reply
#8
அஜீவன் அவர்களே...ஜேம்ஸ் பீரிசைப்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்...சர்வதேச சினிமா உலகம் அவரை போற்றுவதை அறிந்திருக்கிறேன்..அவரைப்பற்றி மேலும் சொல்லமுடியுமானால் சொல்லுங்களேன்....
Reply
#9
stalin Wrote:அஜீவன் அவர்களே...ஜேம்ஸ் பீரிசைப்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்...சர்வதேச சினிமா உலகம் அவரை போற்றுவதை அறிந்திருக்கிறேன்..அவரைப்பற்றி மேலும் சொல்லமுடியுமானால் சொல்லுங்களேன்....

<img src='http://a69.g.akamai.net/7/69/7515/v1/img5.allocine.fr/img_cis/images/festivaldecannes/img/photo/006053.jpg' border='0' alt='user posted image'>
<b>Lester James PERIES
Director
SRI LANKA</b>

age of 84, Sri Lanka's leading director Lester James Peries returns to the international stage after an absence of almost 20 years,

Peries, considered the father of Sri Lankan cinema, was born in 1919 in the then British colony of Ceylon, and began his film career in Britain while working as a journalist. When his country became independent in 1952, he returned home to help with the growth of the local film industry. His first big success came in 1963 with the film Changes in the Village and since then he has made about 20 feature films.

His latest feature Mansion by the Lake, presented out of competition. Member of the jury in 1982, this is Peries' fourth film presented in Cannes..........

The doyen of Sri Lankan Cinema, and internationally recognized as one of the world's great film directors.
His film classics include Gamperaliya (The Changing Village / 1963),
which won the Grand Prix (Golden Peacock) at the 3rd International Film Festival of India 1965,
Nidhanaya (The Treasure / 1970),
Kaliyugaya (The Age of Kali / 1983)
and Yuganthaya (The End of an Era / 1985).
He is a member of the Legion of Honour (Republic of France)
and received the Lifetime Achievement Award at the International Film Festival of India in January 2000.

<b>மேலதிகமாக கீழ் வரும் தளங்களுக்குச் சென்று பாருங்கள் ஸ்டாலின்.</b>

http://www.festival-cannes.fr/perso/index....002&personne=12

http://www.asiaarts.ucla.edu/article.asp?parentid=6754

http://www.festival-cannes.fr/films/fiche_...id_film=4083534

http://www.hinduonnet.com/thehindu/2000/02...es/09060222.htm
<img src='http://www.lanka.net/AsianFilm/images/sumitra.jpg' border='0' alt='user posted image'>
இவரது மனைவி <b>சுமித்ரா பீரிஸும்</b> ஆரம்பத்தில் திரைப்பட தொகுப்பாளராக இருந்து இயக்குனராக பல விருதுகளைப் பெற்ற
இலங்கையின் முதலாவது பெண் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reply
#10
AJeevan Wrote:

அஜீவன் அவர்கட்கு நன்றி...ஜேம்ஸ் பீரிஸ் பற்றிய இணைப்புக்களுக்கு......சிங்கள திரைப்படங்கள் தரம் வாய்ந்ததாக கருதப்படுமளவுக்கு தமிழ் திரைப்பட்ங்கள் ஏன் சர்வதேச தரம் வாய்ந்தவையாகவில்லையே....என்ன ஒரு ஆதங்கம் தான்.............
Reply
#11
பாலுமகேந்திராவின் சிறப்பு என்னவென்றால், அவரது கமரா வேகமாக அசைவதில்லை, எப்போதும் நிலையாகத்தான் இருக்கும், தேவையேற்படில் மெதுவாக அசையும், அதுவும் குறிப்பாக சூம்(குவித்தல்) பண்ணமாட்டார். அதற்கு அவர் கூறும் காரணம் ஒருகாட்சி அழகாக இருக்கிறது என நாம் கான்பிக்கும்போது அந்தகாட்சியில் கானப்படும் அனைத்தையுமே ரசிகன் பார்த்து ரசிக்க நாம் அனுமதிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்டதை மட்டும் சூம் பண்ணி இதைமட்டும் பார் எனக்கூற எமக்கு உரிமையில்லை. அனேகமாக அவர்வைக்கும் பிரேம்கள் ஒவ்வொன்றும் அற்புதமாய் இருக்கும், பார்த்துக்கொண்டே இருக்கலாம், அதுவும் அகண்ட திரையில் பார்க்கும்போது இன்னமும் அற்புதம். கமராவும் மிக மெதுவாகத்தான் அசையும், கலைஞன் என்ற முறையில் பாலுமகேந்திரா அற்புதமானவர்.
.

.
Reply
#12
<b>பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் மட்டுமே ஒரு கவிதைத் தன்மையை நான் பார்த்திருக்கின்றேன். அவரின் தனிப்பட்ட வாழ்க்கைகளை விட்டுவிட்டுப் பார்த்தால் உண்மையில் அற்புதமான கமெராக் கவிஞன்</b>

<b>அஜிவன்:</b>
நீங்கள் குறிப்பிடும் ஒளிப்பதிவாளர் வாமதேவன் எனது ஊரைச் சேர்ந்தவரே. எனது உறவினரும் ஆவார். இவரும் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிட வேண்டியவர். வி.பி.கணேசனின் திரைப்படங்களின் வெற்றிக்கு இவரின் ஒளிப்பதிவும் ஒரு காரணம். ஆரம்பத்தில் இவர் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கர்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியிருந்தார்.
Reply
#13
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><b>பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் மட்டுமே ஒரு கவிதைத் தன்மையை நான் பார்த்திருக்கின்றேன். அவரின் தனிப்பட்ட வாழ்க்கைகளை விட்டுவிட்டுப் பார்த்தால் உண்மையில் அற்புதமான கமெராக் கவிஞன்</b>

<b>அஜிவன்:</b>
நீங்கள் குறிப்பிடும் ஒளிப்பதிவாளர் வாமதேவன் எனது ஊரைச் சேர்ந்தவரே. எனது உறவினரும் ஆவார். இவரும் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிட வேண்டியவர். வி.பி.கணேசனின் திரைப்படங்களின் வெற்றிக்கு இவரின் ஒளிப்பதிவும் ஒரு காரணம். ஆரம்பத்தில் இவர் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கர்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியிருந்தார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒளிப்பதிவாளர் வாமதேவன் அவர்கள் உண்மையில் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிட வேண்டியவரே.
வி.பி.கணேசனின் திரைப்படங்களின் வெற்றிக்கு மட்டுமல்ல இலங்கையின் சிங்கள திரைப்படங்களின் வெற்றிக்கும் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

அவர் பற்றிய தகவல்களைத் தேட முடியவில்லை.
Reply
#14
<b>அஜிவன்</b>

திரு. வாமதேவன் அவர்கள் ஒரு இஸ்லாமியப் பெண்ணையே விரும்பித் திருமணம் செய்திருந்தார். பல வருடங்களுக்கு முன் அவரைச் சந்திந்த போது அவர் கொழும்பு கொல்பிட்டியில் இருந்தார். அப்போது அவர் கொழும்பிலுள்ள சில பிரபல ஹோட்டல்களின் நிகழ்ச்சிகளுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். இப்போது எங்கு இருக்கின்றார் என்பது எனக்கும் தெரியாது ஏதாவது விபரங்கள் கிடைத்தால் அறியத் தருகின்றேன்.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)