12-05-2003, 12:05 AM
இது ஒரு உண்மைச் சம்பவம். இன்று மாலை எனது நண்பருக்கு நடந்தது. எனது நண்பர் இலண்டனில் உள்ள ஒரு பொதுச்சந்தை ஒன்றிற்கு சென்றிருக்கின்றார். அங்கு அவரை இரண்டு இளைஞர்கள்(வெள்ளை) அணுகி ஒரு கைப்பையினுள் இருந்த வீடியோ கமராவையும் ஒரு LAPTOP இனையும் காட்டி 1000 பவுண் தரும்படி கேட்டிருக்கின்றார்கள். அவர் வேண்டாம் என மறுக்க அவர்கள் விலையை குறைத்து சொல்லியிருக்கின்றார்கள். இவரும் அந்தப்பொருட்களின் மீது கொண்ட ஆவலினால் இன்னும் விலையை குறைத்துக் கேட்டிருக்கின்றார். இப்படி மாறிமாறி பேரம்பேசி 550 பவுணுக்கு இருவரும் உடன்பட்டிருக்கின்றனர். நண்பர் CASH MACHINE ஒன்றுக்கு அவர்களையும் அழைத்துச் சென்று 550 பவுணை அவர்களுக்கு கொடுத்து அந்தப்பொருட்கள் இருந்த கைப்பையை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். வீடு வந்து அந்தப் பையினைத் திறந்தபோது அதனுள் இரண்டு தண்ணீர் போத்தலும் சில கடதாசிகளும் இருந்தன.
நண்பருக்கு அப்போதுதான் விடயம் வெளித்தது. அதாவது அவர் CASH MACHINE பணம் எடுக்கும்போது அவர்கள் அவருக்குக் காட்டிய கைப்பையை மாற்றியுள்ளார்கள். இவரும் பணத்தைக் கொடுத்து அதனை வாங்கிய பின் அந்தப்பையினுள் பார்க்கவில்லை.
இதேமாதிரியான சம்பவம் எனது மேலும் இரு நண்பர்களுக்கு பல மாதங்களுக்கு முன்னர் இரண்டு வௌ;வேறு இடத்தில் நடந்தது. இப்படியாக தாங்கள் ஏமாந்ததை வெளியே சொல்ல வெட்கப்பட்டு அவர்கள் இதனை வெளியே சொல்ல வேண்டாம் என என்னைக் கேட்டு கொண்டனர். இப்போது இந்தக் கதையை பலரிடம் சொல்ல அவர்களும் தாங்கள் ஏமாந்த அல்லது அது பற்றிக் கேள்விப்பட்ட கதையை சொன்னார்கள். எல்லோரும் வெட்கத்தில் வெளியே சொல்லாது இரகசியமாக வைத்துள்ளதால் எம்மவர் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படும் சம்பவம் தொடர்கின்றது.
இது பற்றி யாழ் கள நண்பர்களை எச்சரிக்குமுகமாக இதனை இங்கு பிரசுரிக்கின்றேன். இது பற்றி நீங்களும் ஏதாவது அறிந்திருப்பின் அது பற்றி மற்றவருடன் பகிர்ந்து கொண்டால் தொடர்ந்து நம்மவர் ஏமாற்றுப்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
:| :mrgreen: