11-27-2005, 06:56 AM
வீரகேசரியின் ஆசிரியர் தலையங்கம் 27.11.2005
<b>இருவரது கைகளில் இலங்கையின் எதிர்காலம்</b>
நாட்டின் எதிர்காலம் குறித்து அக்கறை செலுத்துபவர்களும் சமாதானம் குறித்து எதிர்பார்ப்புகளுடன் இருப்பவர்களும் உட்பட இலங்கையின் அனைத்து சமூகங்களும் சர்வதேச சமூகமும் இருவரது உரையினை எதிர்பார்த்து காத்திருந்தன. இவ் இருவரில் ஒருவர் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இரண்டாமவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்.
இவ்விருவரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை குறித்து எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தபோதும் இறுதி நேரத்தில் இனவிவகார தீர்வு குறித்து தனது கடும் போக்கிலிருந்து யதார்த்தத்திற்கு இறங்குவாரென்ற எதிர்பார்ப்பு சமாதானம், தேசிய நலன் குறித்து சிந்திப்பவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ தனது மஹிந்த சிந்தனையில் இருந்து இம்மியளவும் விலகாத நிலையில் நாடாளுமன்றத்தில் புதிய அரசின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்திச் சென்றுள்ளார்.
""ஐ.தே. முன்னணி அரசாங்கத்தின் சமாதான முயற்சி தோல்வி அடைவதற்கான காரணம் சமாதானப் பேச்சுவார்த்தையானது அரசாங்க கட்சிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையே ஆகும்.
இத்தகைய வெற்றியளிக்காத இருதரப்பு சமாதான முயற்சிக்குப் பதிலாக பிரச்சினையின் அனைத்து தரப்பினர்களாலும் திறந்த அடிப்படையில் பங்குபற்றக் கூடிய பேச்சுவார்த்தை செயற்பாடொன்று ஆரம்பிக்கப்படும்''என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
""இந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுக்குமாறு திறந்த அடிப்படையிலும், நேர்மையாகவும்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிக்குஅழைப்பு விடுக்கப்படும்.
""சமாதான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு சிறப்பு கவனம் செலுத்தப்படும். குறித்தவொரு காலகட்டத்திற்கு இணங்கியவாறு விரிவான உடன்பாடொன்றை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு சமாதõனப் பேச்சுவார்த்தையானது திறந்த அடிப்படையிலும் ஒளிவு மறைவு இன்றியும் நடத்தப்படும்.
""இலங்கையின் சமாதானத்திற்காக ஒத்துழைப்பு வழங்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் ஏனைய மக்கள் அமைப்புகளும் சர்வதேச சமூகத்தின் இலங்கையின் நட்பு நாடுகள் உட்பட சர்வதேச சமூகமும், அயல் நாடான இந்தியா உட்பட தெற்காசிய வலயத்திலுள்ள நாடுகளும் வழங்குகின்ற வசதிகள், இடையீடுகள் ஆகியவற்றை உரிய விதத்தில் ஒழுங்கு படுத்தி அந்த ஒத்துழைப்பின் பலத்தை சமாதான செயற்பாட்டிற்காக பெற்றுக் கொள்ளப்படும்.
""நாட்டின் அனைத்து இனங்களையும் பல்தரப்பு ஜனநாயகத்தின் சாதகமான பங்காளர்களாக அரசியல் அதிகாரத்தில் தொடர்புபடுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இலங்கையின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் ஒற்றையாட்சி கட்டமைப்பையும், மக்களின் தேசிய கூட்டமைப்பையும், மக்களின் தேசிய தனித்துவத்தையும் பேணுகின்ற விதத்திலான உயர்ந்த பட்ச அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் அமைப்பொன்று முன்மொழியப்படும்'' என நாடாளுமன்றில் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதுவரை சமாதான பேச்சுவார்த்தைகளில் இன விவகாரத்திற்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ஐக்கிய இலங்கைக்குள்ளான சமஷ்டி ஆட்சி முறைக்கு சாவு மணி அடிப்பதை "மஹிந்த சிந்தனை' மாத்திரமல்ல நாடாளுமன்ற உரையும் தெளிவாக சுட்டி நிற்கின்றது.
ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் சாத்தியமில்லை என்பதை இலங்கையின் வரலாறு திரும்ப திரும்ப உணர்த்தியுள்ளதுடன் அதற்காக இந்நாடு குருதியில் தோய்ந்த ஈரம் இன்றும் காயாமல் உள்ளதை யாவரும் அறிவர். அது மாத்திரமல்ல சொந்தங்களை பந்தங்களை இழந்தவர்களின் மரணவீட்டு சோகங்கள் இன்றும் முற்றாக மாறிவிட வில்லை. இந்நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல் வரலாற்று படிப்பினைகளை குழிதோண்டிப் புதைத்து விட்டு மீண்டும் ஒற்றையாட்சி யுக இரும்பு கவசத்திற்குள் ஸ்ரீலங்காவை இறுக்கமாக நுழைத்து விட முயல்வதையே ஜனாதிபதியின் உரை உணர்த்தி நிற்கின்றது.
இலங்கை தற்பொழுது இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது என்பது யதார்த்தமாகும். இதற்கு முடிவுகண்டு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் மூவினங்களையும் இணைப்பதற்காக இணைப்பு பாலமாகவே சமஷ்டி ஆட்சிமுறை முன்வைக்கப்பட்டது. சமஷ்டி ஆட்சி முறை கருத்தென்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்ந்த சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் மூளையில் உதித்ததாகும். இறுதியில் அதனையே அவர் பண்டாசெல்வா ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்ற முயன்று தோற்றுப் போனார். அந்த தோல்வியில் எழுந்ததே தமிழ் தேசியத்தின் அஹிம்சைப் போராட்டமும் அதற்குப் பின்னர் பீறிட்டுக் கிளம்பிய ஆயுதப் போராட்டமும் ஆகும்.
இத்தகைய ஒரு வரலாற்றை திசை திருப்பி ஒற்றையாட்சிக்குள் தீர்வைக்காண முயலும் செயற்பாடும் தமிழ் பேசும் மக்களின் தாயகக் கோட்பாட்டை மறுதலிப்பதும், சுயநிர்ணய உரிமையை கேள்விக் குறியாக்குவதும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையப் போவதுமில்லை. அதேவேளையில் இதுவரை நடைபெற்று இடை நடுவில் நின்று போன சமாதானப் பேச்சுவார்த்தைக்கு புத்துயிர் அளிக்காது சமாதானப் பேச்சுவார்த்தையை யதார்த்தத்திற்கு முரணான தளத்தில் இருந்து ஆரம்பிக்க நினைப்பதும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்திற்கும் சாவு மணி அடிப்பதையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களென எவரும் எதிர்பார்க்க முடியாது.
அந்த வகையில் மேற்படி கோஷங்களுடனான செயற்பாடுகள் தமிழ் பேசும் மக்களின் இனங்களை வென்றெடுக்கப் போவதுமில்லை என்பதை வரலாறு விரைவிலேயே உணர்த்தி நிற்கும்.
ஜனாதிபதியின் உரையும் செயற்பாடுகளும் இவ்வாறு அமைய நாடும் சர்வதேச சமூகமும் எதிர்பார்த்து காத்திருக்கும் இன்னொருவரது உரை இன்று இடம் பெறவுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்து அவர்களது உள்ளக்கிடக்கை, எதிர்பார்ப்பு ஆகியவற்றை வெளிப்படையாக வெளிக் கொணர்ந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடந்த வருட மாவீரர் தின உரை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
""இடைக்காலத் தீர்வு மின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைப்பட்டுக் கிடக்க முடியாது.அதேசமயம் பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங்கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி எதிர்கால சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்தும் வாழ முடியாது. பொறுமைக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் எல்லைக் கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.''
""எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை'' என கடந்தவருட மாவீரர் தின உரையில் குறிப்பிட்டிருந்தார் பிரபாகரன்.
இப்படி கூறி ஒருவருடம் கழிந்து விட்டது. ஆனால், தென்னிலங்கை அரசியல் வாதிகளின் மனப்போக்கில் தமிழ் பேசும் மக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், அபிலõஷைகள் குறித்து கிஞ்சித்தும் கவனமெடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
தென்னிலங்கை அரசியல் சக்திகள் தொடர்ந்தும் தமக்குள் பிரிந்து நின்று மாறி மாறி ஆட்சிப் பீடமேறி தமிழ் மக்கள் மீது சவாரி செய்யவே விரும்புகின்றன. இது எத்தனை நாட்களுக்கு தொடரப் போகின்றது?
இதற்கான பதிலையும் தென்னிலங்கை அரசியல் சக்திகளே தீர்மானிக்க வேண்டும். அந்த தீர்மானத்திலேயே சுபிட்சம் நிறைந்த சமாதானம், அமைதி கொண்ட இலங்கையை எதிர்காலத்தில் காண முடியும்.மொத்தத்தில் இருவரது கைகளில் இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.
வீரகேசரி

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>