Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கல்லறை கீதங்கள்
#1
கல்லறை கீதங்கள்
மாவீரர் நாள் பாடல்கள் இணையத்தில் பெற முடியுமாயின் அல்லது நண்பர்கள் யாரிடமாவது கிடைக்கப்பெறுமாயின் தந்து உதவுவீர்களா ?
நட்புடன் பரணீதரன்
[b] ?
Reply
#2
http://www.eelatamil.com/eelamsongs/Karump...ikal/index.html
http://www.eelatamil.com/eelamsongs/Maavee...uvom/index.html
http://www.eelatamil.com/
" "
Reply
#3
"தாயகக் கனவோடு சாவினைத் தழுவிய சந்தனப் பேளைகளே" எண்ற பாடலை எங்கு வாங்கலாம்... ஓளிப் பேளையின் பேர்விபரத்தை தருவீர்களா...???
::
Reply
#4
பாடல் வரிகள் முழுமையாக இப்பத்தான் கிடைத்துது..பகிர்ந்தேன் பாருங்கள்...

மேலும், www.eelasongs.com என்ற தளத்திலும் நிறைய இணைப்புக்கள் இருக்கின்றன....
"
"
Reply
#5
<b>நினைவின் வலிகள் </b>

புல்நுனி ஈரத் தொடுகையில்
புலர்ந்தும் புலராத வைகறையில்
அலையெறிக்கும் கடல்வெளியில்
அனல் தெறிக்கும் பகற் பயணிப்பில்
துளிர்க்கின்றது உங்கள் நினைவு.
பழையன வாய்க் காணும்
பாதை நெடுகிலும்
உங்களுடன் திரிந்த
நினைவுகளின் கொப்பளிப்பு

தூரங்கள் தாண்டிப்
பயணம் ஒன்றுக்காய்
அருகுவந்த சொந்தமானீர்.
உறவுகளின் பிரிவு வலியை
உயிர் நீவி ஆற்றிய விரல்களானீர்.

பதுங்ககழி விழித்திருக்கும் இரவுகளில்
எறிகணை மழை பொழியும் கோடைகளில்
நுளம்புகளின் சங்கீதம் சகிக்கமுடியாத
பொழுதுகளில்
நிலவின் நிழல் வருடிய
நிம்மதிக் கணங்களில்
உம் இதயங்களின் கதை படித்தோம்.
உம் கனவுகளின் ஆழத்தைக்
கணக்கிட்டோம்.
இன்று எல்லாம் மௌனமாய்ப் போயிற்று.

மொழி வழி தெறிக்கமுடியாது
அமுங்கிக் கனல்கிறது
நினைவுப் பிழம்பு.

முன்னெரியும் சுடரிலிருந்து பெரிதாகி
வானைத் தொட விரிகிறது
உங்களின் விம்பம்
உயிர் உருகும் துயில் நிலப்
பாடலுக்குள் கரைந்து
காணாமல் போகிறோம் இங்கெல்லாரும்.

உள்ளிருந்து வருவீர்களா?
உயிர் பெற்று உலவுவீர்களா?
புன்னகைப் பூச் சொரிந்து மறைவீர்களா?
மூடியவிழிகளுள் தேடுகின்றோம் - பின்
தீயெரிக்கும் நினைவுகளுடன் திரும்புகின்றோம்.

பற்றி நிற்கும் எம் கரத்திற்
துப்பாக்கிகளல்ல ? உம்
துடிப்புகளே உண்டு.
நீங்கள் பயணித்த
இடர்களை அடர்ந்த பாதைகளில்
உங்கள் கனவுகளைக்
கண்களுள் தேக்கிக் கொண்டு
நீங்கள் தொடமுயன்ற
தேசத்தின் விடியலை நோக்கி
இதோ நாம் புறப்பட்டு விட்டோம்.
என்றோ ஓரநாள்
விடியத்தான் வேண்டும்
எம்மிரவுகள்.

<i><b>அம்புலி (உதயலட்சுமி)</b></i>

நன்றி: www.eelasongs.com

<b>"சுதந்திரப் பறவைகள்"</b> ஏட்டில் "பன்முகப் பார்வை" கொண்ட காத்திரமான கவிதைகள் மூலம் பரவலான கவனிப்பைப் பெற்ற தமிழீழப் பெண் படைப்பாளர்/பெண் போராளி...

தமிழீழப் பெண்களின் கவிதைத் தொகுப்பான
<b>"எழுதாத கவிதை"</b> த் தொகுப்பிலும் <i>(கப்ட்டன் வானதி வெளியீட்டகம்)</i>இவரின் பன்முக ஆளுமையைத் தரிசிக்கலாம்...
"
"
Reply
#6
மேற்படி இணையத் தளத்தில் தேசியத் தலைவரின்
புகழ் பாடும் புதுப் பாடல்களையும் கேட்க முடிகிறது.....

மாவீரர் புகழ் பாடும் பாடல்களும் உண்டு.....
"
"
Reply
#7
தாயகக் கனவோடு சாவினைத் தழுவிய சந்தனப் பேளைகளே" எண்ற பாடலை எங்கு வாங்கலாம்... ஓளிப் பேளையின் பேர்விபரத்தை தருவீர்களா...???
_________________
[b] ?
Reply
#8
Paranee Wrote:தாயகக் கனவோடு சாவினைத் தழுவிய சந்தனப் பேளைகளே" எண்ற பாடலை எங்கு வாங்கலாம்... ஓளிப் பேளையின் பேர்விபரத்தை தருவீர்களா...???
_________________

இந்தப் பாடலை மாவீரர் கல்லறைகளில் மட்டுமே ஒலிக்கவிடப்படும். அதனால் எந்த ஒலி பேளையிலும் இந்த பாடலை வெளியிடவில்லை.
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)