Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை சுகாசினியை ஆதரிக்க முறைகேடான முயற்சி: பி.பி.சி., 'இநது
#1
[புதன்கிழமை, 23 நவம்பர் 2005, 18:54 ஈழம்] [புதினம் நிருபர்]
சென்னை ஊடகவியலாளர்கள் இயக்கங்களின் பெயர்களை முறைகேடாக பயன்படுத்தியமைக்காக சர்வதேச செய்தித்தாபனமான பி.பி.சி.யின் சென்னை செய்தியாளர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னணி ஆங்கில நாளேடான இந்து நாளேட்டின் செய்தி ஆசிரியர் ஜயந்த் ஆகியோர் ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினர்.


நடிகர் சாருஹாசன், கமலஹாசன் குடும்பத்தைச் சேர்ந்த சுகாசினி, தமிழர்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துப் பேசியதற்காக கடுமையான போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சுகாசினியின் கணவர் மணிரத்னம் அண்மையில் இந்து ராமைச் சந்தித்து ஆதரவு தரக் கோரினார். இந்து ராமின் நடவடிக்கையால் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிகள் சுகாசினிக்கும், குஸ்புவுக்கும் ஆதரவாக அறிக்கை வெளியிட்டன.

தொடர்ந்து பி.பி.சி. செய்தியாளர் டி.என்.கோபால், இந்து நிர்வாகம் ஆகியவை இணைந்து ஊடகவியலாளர்களின் இயக்கங்களை அனுமதி பெறாமல் முறைகேடாக பயன்படுத்தி சுகாசினிக்கும் குஸ்புவுக்கும் ஆதரவாக ஊடகவியலாளர்கள் இருப்பதான தோற்றத்தை உருவாக்க முனைந்தனர். அதற்கு அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களும் ஒட்டுமொத்த எதிர்ப்புத் தெரிவித்து இரு முன்னணி நிறுவனங்களை பகிரங்க மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர்.

சென்னையிலிருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் செய்தி:

சென்னை பத்திரிகையாளர் சங்கம், பெண் நிருபர்கள் கூட்டமைப்பு, பத்திரிகையாளர் மன்றம், நிருபர்கள் சங்கம் இணைந்து கருத்து சுதந்திரத்துக்கான பத்திரிகையாளர்கள் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதாக இந்து நாளேட்டில் இன்று புதன்கிழமை காலை செய்தி வெளியானது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மாலை 3 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று வெளியிடப்பட்ட அச்செய்தியில் இந்து முதன்மை ஆசிரியர் என். ராம், நடிகர் சாருஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தகவல் சென்னை ஊடகவியலாளர்களுக்கு தனித்தனியாக, தகவலை அனுப்பியவர் பெயரோ, கையெழுத்தோ இல்லாமல் அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பி.பி.சி. செய்தியாளர் டி.என். கோபாலன் முன்னின்று செய்துள்ளார்.

ஆனால் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட ஊடகவியலாளர்கள் அமைப்புகளிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் அவற்றின் பெயரை பி.பி.சி. செய்தியாளர் பதிவு செய்திருந்ததால் விசனமடைந்த ஊடகவியலாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், கூட்டம் நடைபெற இருந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஒன்று திரண்டனர்.

அப்போது அங்கு வந்த பி.பி.சி. செய்தியாளர் டி.என். கோபாலனிடம் இது பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஊடகவியலாளர்களின் கடும் விசனத்துக்கு முகம் கொடுத்த பி.பி.சி. செய்தியாளர் டி.என். கோபாலன், ஊடகவியலாளர்கள் இயக்கங்களின் அனுமதியைப் பெறாமல் போட்டது தவறுதான். இதற்கு ராம், சாருஹாசன் கூப்பிடுவதாக ஏற்பாடு. கூட்டத்துக்கான அழைப்பு அனுப்பிவிட்டதால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது கூட்டம் நடத்த விடுங்கள் என்று கேட்டார். ஊடகவியலார்களின் இயக்கங்களின் அனுமதி பெறாமல் அவற்றை பயன்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.

மேலும் இந்து நாளிதழில் 3 ஊடகவியலாளர்கள் இயக்கங்கள் இணைந்து கூட்டம் நடத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது தொடர்பாகவும் கேள்வி எழுப்பட்டது.

பின்னர் ஊடகவியலாளர்கள் இயக்கங்களின் நிர்வாகிகள் கலைந்து செல்ல முற்பட்ட போது காவல்துறையினர் துணையுடன் இந்து நாளேட்டினது முதன்மை செய்தி ஆசிரியர் ஜயந்த் தலைமையில் திரளான இந்து ஊழியர்கள் பத்திரிகையாளர் மன்றத்துக்குள் நுழைந்தனர்.

கூட்டம் இரத்து செய்யப்பட்ட நிலையில் இந்து ஊழியர்கள் திரண்டதை அறிந்து மேலும் விசனமடைந்த ஊடகவியலாளர்கள் இந்து முதன்மைச் செய்தியாளர் ஜயந்த் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தினர்.

"இயக்கங்களினது முன் அனுமதியின்றி பாரம்பரியமிக்க மிக்க ஊடகம் செய்தி போடலாமா? தவறுதானே" என்றும் அவர்கள் ஆவேசமடைந்தனர்.

அதற்கு ஜயந்த், "அனுமதியெல்லாம் கேட்டாகிவிட்டது, முறைப்படி கூட்டத்துக்கான பணத்தையும் செலுத்துவிடோம். இந்தக் கூட்டத்தை நடத்தியே தீருவோம்" என்று பதில் கூறினார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் எதிர்ப்பு கடுமையாகிய நிலையில் இந்து நாளேட்டின் முதன்மைச் செய்தியாளரான ஜயந்த்தும் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அங்கு நடைபெற இருந்த கூட்டத்தையும் இரத்து செய்துவிட்டு இந்து ஊழியர்கள் புறப்பட்டனர்.
நன்றி>புதினம்
.

.
Reply
#2
ஓ.....புதினத்தில் இப்ப தான் பார்த்தேன்.....

"இந்து" வின் சார்பு நிலையும் ஏனையோர் நிலைகளும் இப்படியேனும் வெளிவருகுதே.....

சாருகாசனின் கருதுக்கள் சில சிங்கை "தமிழ் முரசு" இல் பார்த்தேன்...
நீங்களும் வேறு ஊடகங்களிலும் பார்த்திருக்கக் கூடும்.....
சிந்திக்க வேண்டிய "தர்க்க" கருத்துக்கள்....

ஆனால் யாரும் இதுக்கும் "கண்டணம்" எழுப்பக் கூடும்...
"
"
Reply
#3
பிபிசி யின் நடுநிலைமையில் இருக்கும் நடுக்கத்தையும் இது காட்டுகிறதுதானே.
.

.
Reply
#4
<b>பிருந்தன் </b>

<b>உங்களால் குறிப்பிட்ட இச்செய்தியை நானும் புதினத்தில் சென்று தேடினேன். ஆனால் இதுபற்றிய செய்தியொன்றையும் என்னால் அங்கு காணமுடியவில்லை. எனவே தயவு செய்து இதுபற்றிய இணைப்பைத் தருவீர்களா???</b>
நீங்கள் பி பி சி யை குறை சொல்வதிலேயே முனைப்பாகவுள்ளீர்கள். டி.என்.கோபாலன் பி பி சிக்கு இந்நியாவிலிருந்து செய்தி வழங்குபவர்களில் ஒருவர். அதனால் அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பி பி சி சார்ந்ததாகவிருக்குமென எப்படிச் சொல்ல முடியும். அதே நேரம் பி பி சியின் நேரடிச் செய்தியாளர்களும் அப்பப்போ பல நாடுகளுக்குச் சென்று நேரடியாகச் செய்திகள் சேகரிப்பதுண்டு. அவர்கள் ஏதாவது இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அதற்கு நிச்சயம் பி பி சி பதில் சொல்ல வேண்டும்.

உதாரணமாக பி பி சிக்கு இலங்கையிலிருந்தும் பலர் செய்தி வழங்குகின்றார்கள். அப்படிச் செய்தி வழங்கும் ஒருவர் பெயரில் சிறுமாற்றத்துடன் பலகாலமாக ஐ பி சிக்கும் செய்திகள் வழங்கி வருகின்றார். அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை இப்போது எந்த வானொலியைச் சம்பந்தப்படுத்தி எழுதலாமெனச் சொல்வீர்களா???
Reply
#5
http://www.eelampage.com/?cn=21954

இனைப்பு இதோ வசம்பு, செய்தி பிபிசி, இந்து மன்னிப்பு என்றுதானே வந்திருக்கிறது.
.

.
Reply
#6
வசம்பு இங்கே அதன் இணைப்பு இருக்கின்றது பாருங்கள்.
http://www.eelampage.com/?cn=21954
[size=14] ' '
Reply
#7
<b>இணைப்பினைத் தந்த பிருந்தன் தூயவன் இருவருக்கும் நன்றிகள்</b>
புதினத்தின் அந்தச் செய்தியில் டி.என்.கோபாலன் பி பி சி செய்தியாளர் என்று அடையாளபடுத்தப் பட்டுள்ளாரே தவிர பி பி சி யில் அவர்கள் குறை சொல்லவில்லை. ஆனால் பிருந்தனின் <b>பிபிசி யின் நடுநிலைமையில் இருக்கும் நடுக்கத்தையும் இது காட்டுகிறதுதானே.</b> என்ற வரிகளின் நோக்கம் என்னவோ??? நீங்கள் டி.என்.கோபாலனின் தனிப்பட்ட நடவடிக்கைகளை எப்படி பி பி சியின் நடவடிக்கைகளாகச் சொல்ல முடியும்??? அப்படியாயின் எனது இந்தக் கேள்விக்கு உங்களது பதிலையும் தாருங்கள்.
<b>உதாரணமாக பி பி சிக்கு இலங்கையிலிருந்தும் பலர் செய்தி வழங்குகின்றார்கள். அப்படிச் செய்தி வழங்கும் ஒருவர் பெயரில் சிறுமாற்றத்துடன் பலகாலமாக ஐ பி சிக்கும் செய்திகள் வழங்கி வருகின்றார். அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை இப்போது எந்த வானொலியைச் சம்பந்தப்படுத்தி எழுதலாமெனச் சொல்வீர்களா???</b>
Reply
#8
இது டி என் கோபாலனின் தனிப்பட்ட நடவடிக்கைதான், ஆயினும் இது நடந்து முடிந்திருந்தால், இப்படி நடந்து இருக்கிறது என பிபிசிக்கு செய்தி கொடுத்திருப்பார், அப்படி நடக்காததால் அது செய்தியாகவில்லை, தடுக்கப்பட்டதால் உண்மை வெளிவந்திருக்கிறது, அதைத்தான் நான் கூறுகிறேன் செய்தியாளர்கள், தமது பக்கச்சார்பை தினிக்க முயற்ச்சிக்கிறார்கள். ஒரு செய்தியாளரே இப்படி முறைகேடாக நடக்கிறார் என்றால், தமிழ் சேவையை நடாத்துபவர்கள் எப்படி நடப்பார்கள்? இன்னமும் விளக்கம் தேவை என்றாள் திருமகள் எழுதிய பிபிசி பற்றிய நடுநிலைமை பற்றிய கட்டுரையை படித்துப்பாருங்கள்.
.

.
Reply
#9
ஒரு காலத்தில் பிபீசியில் ஒரு செய்தி தப்பாகச் சொன்னால் பிறகு மன்னிப்பு கேட்பார்கள். ஆனால் இப்போது தப்பை நியாயப்படுத்துவதிலேயே நிற்கின்றனர்.

சங்கர் அண்ணா, மகாதேவன், ஆனந்தி இருந்த காலங்களின் இருந்த நம்பகத் தன்மை இப்போது இல்லை.
[size=14] ' '
Reply
#10
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><b>இணைப்பினைத் தந்த பிருந்தன் தூயவன் இருவருக்கும் நன்றிகள்</b>  
புதினத்தின் அந்தச் செய்தியில் டி.என்.கோபாலன் பி பி சி செய்தியாளர் என்று அடையாளபடுத்தப் பட்டுள்ளாரே தவிர பி பி சி யில் அவர்கள் குறை சொல்லவில்லை. ஆனால் பிருந்தனின் <b>பிபிசி யின் நடுநிலைமையில் இருக்கும் நடுக்கத்தையும் இது காட்டுகிறதுதானே.</b> என்ற வரிகளின் நோக்கம் என்னவோ??? நீங்கள் டி.என்.கோபாலனின் தனிப்பட்ட நடவடிக்கைகளை எப்படி பி பி சியின் நடவடிக்கைகளாகச் சொல்ல முடியும்??? அப்படியாயின் எனது இந்தக் கேள்விக்கு உங்களது பதிலையும் தாருங்கள்.
<b>உதாரணமாக பி பி சிக்கு இலங்கையிலிருந்தும் பலர் செய்தி வழங்குகின்றார்கள். அப்படிச் செய்தி வழங்கும் ஒருவர் பெயரில் சிறுமாற்றத்துடன் பலகாலமாக ஐ பி சிக்கும் செய்திகள் வழங்கி வருகின்றார். அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை இப்போது எந்த வானொலியைச் சம்பந்தப்படுத்தி எழுதலாமெனச் சொல்வீர்களா???</b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

BBC ஒத்துக்கொண்டாலும், வசம்பு ஒத்துக்கொள்ள மாட்டார் போல் இருக்கிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . BBCற்கு வேலை செய்யும் பத்திரிகையாளர் தவறு செய்தால் BBCதான் மன்னிப்புகேட்டவேண்டும்.
Reply
#11
ஓமோம்....
வசம்பு,
இப்படிப் பட்டவையளை சந்திச்சிருக்கிறோம்...

இன்னும் (சட்ட பூர்வமான)கணவனும் மனைவியும் ஒரே சர்வதேச ஒலிபரப்பு சேவைக்கு வெவ்வேறு மொழிகளில் செய்தி வழங்கி இருக்கினம்....

மனைவியின் பெயரை "முதல் எழுத்தாக"க் கொண்டு தமிழ் ஊடகத் துறையில் "பிரபலமாக" "பிழைப்பு" நடத்தினவையும் நினைவிற்கு வந்து போயினம்...
"
"
Reply
#12
<b>பிருந்தன்:</b>

கொஞ்சம் மனச்சாட்சியிருப்பதாலேயோ என்னவோ சில உண்மைகளை ஒத்துக் கொண்டிருக்கின்றீர்கள். டி.என:கோபாலன் ஒரு பத்திரிகையாளனாகத்தான் அங்கு செயலாற்றியிருக்கின்றார். பி பி சியின் செய்தியாளராகவல்ல. இங்கே கும்பலிலே கோவிந்தா போடுபவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நீங்கள் இன்னமும் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. மேகநாதன் கூட விடயத்தைப் புரிந்து கொள்ளாமல் கருத்தெழுதியுள்ளார். மேலும் பிருந்தன் நீங்கள் சுட்டிக் காட்டிய திருவின் கருத்தை நான் ஏற்கனவே படித்து அதற்குப் பதில்க் கருத்தும் எழுதியுள்ளேன். அது போல் திரு அவர்கள் கூட உங்களின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். பி பி சி ஆனந்தி(அவர் சில மாதங்குளுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார்) அக்காவின் காலத்தைப் பற்றி சொல்பவர்கள் அவரின் காலத்தில் கூட பி பி சியைத் து}ற்றியதை மறந்துவிட்டு எழுதுகின்றார்கள்.
Reply
#13
Vasampu Wrote:<b>உதாரணமாக பி பி சிக்கு இலங்கையிலிருந்தும் பலர் செய்தி வழங்குகின்றார்கள். அப்படிச் செய்தி வழங்கும் ஒருவர் பெயரில் சிறுமாற்றத்துடன் பலகாலமாக ஐ பி சிக்கும் செய்திகள் வழங்கி வருகின்றார். அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை இப்போது எந்த வானொலியைச் சம்பந்தப்படுத்தி எழுதலாமெனச் சொல்வீர்களா???</b>

ஒரு திறமையான ஊடகவியலாளன் எங்கும் வேலை செய்யலாம்... அது அவர் பொருளாதார வசதிக்கேற்றமாதிரி அமைத்துக் கொள்ளலாம் தப்பில்லை... ஆனால் ஒரு ஊடகவியலாளராய் தன் வரைமுறையை மீறினால் அவர் அங்கு இருக்கத் தகுதி அற்றவராவார்..... எந்த ஊடக நிறுவன அனுமதி இல்லாமல் ஒரு கூட்டத்தைக் கூட்ட நினைத்த போதே அவரை வேலையில் இருந்து நிறுத்துவது உசிதம்...

சரி வசம்பு நீர் பிபிசி க்காக வக்காலத்து வாங்குகிறீர் என் கேள்விக்குப் பதில் சொல்லும்.... தமிழர் போராட்டங்கள் புலத்திலும் தாய்நிலத்திலும் நடந்துள்ளன... எப்பவாவது பிபிசி அதை செய்தியாக்கி இருக்கிண்றதா..??????..
ஜேவீபி புலிகள் எதிர்ப்பு எண்று நடத்துவன கோசங்கள் தட்டிகள் எல்லாம் படங்களோடு செய்தியாகிறதே அதன் மர்மம்தான் என்னவோ..??????
::
Reply
#14
தல சரியான நேரத்தில் உங்கள் கேழ்வியைத் தொடுத்துள்ளீர்கள். உங்கள் கேள்வி நடுநிலையாளன் எவரையும் சற்று சிந்திக்க வைக்கும். ஆனால் நித்திரை கொள்பவன் போல வேசம்போடுவோரை அது எதுவுமே செய்துவிடப்போவதில்லை. பி.பி.சி தமிழோசை என்று சொல்லி தமிழ் எதிர்ப்பு கோசங்கள் ஒலிபரப்பாகின்றன.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#15
முதலில் எனது கேள்வியையே புரிந்து கொண்டு பதிலளிக்கத் தெரியவில்லை. அதற்குள் ஜால்ராக்கள் வேறு. டி.என்.கோபாலன் பத்திரிகையாளராகத்தான் மேலுள்ள விடயத்தில் பங்கு பற்றியுள்ளார். பி பி சி வானொலியே தவிர பத்திரிகையல்ல. மேலும் குறிப்பிடப்பட்ட இவ்விடயம் ஒரு இணையத்தளத்தில் தான் வந்துள்ளது. இந்திய இணையத்தளங்களில் வராததன் மர்மம் என்னவோ??? அதற்காக மேன்மேலும் பொய்களைப் புகுத்த வேண்டாம். உண்மையில் இப்படி ஒரு எதிர்ப்பு நிகழ்ச்சி நடந்திருந்தால் எதிர்த்துக் குரல் கொடுத்த பத்திரிகைகள் தங்கள் தலைப்புச் செய்தியில் இதனைப் போட்டிருக்கும். சில இணையத்தளங்களுக்கு மட்டும்தான் குறுக்குத்தனமான செய்திகள் வரும். அதையும் இங்கே காவிவரச் சிலர். சந்திரிக்கா தனது பதவியை இராஜினாமாச் செய்ய மறுத்துப் பிடிவாதம் பிடிப்பதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட அதை விழுந்தடித்து ஒருவர் இங்கே கொண்டு வந்து போட்டார். இப்படி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என நினைப்பவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். பி பி சி செய்திச்சேவை 30 நிமிட நேரங்களே இடம் பெறுகின்றன. அதற்குள் அனைத்துச் செய்திகளையும் சேர்க்கவும் வேண்டும். முடிந்தவரை இலைங்கைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வருகின்றது. புலத்தில் நடை பெற்ற சில நிகழ்வுகளும் (ஜெனிவா ஊர்வலம் போன்றன) இடம் பெற்றுமுள்ளன.
<b>உண்மையாகத் து}ங்குவோரை எழுப்பலாம் ஆனால் து}ங்குவது போல் பாசாங்கு செய்வோரை ஒன்றுமே செய்ய முடியாது.</b>
Reply
#16
Vasampu Wrote:<b>பிருந்தன்:</b>

கொஞ்சம் மனச்சாட்சியிருப்பதாலேயோ என்னவோ சில உண்மைகளை ஒத்துக் கொண்டிருக்கின்றீர்கள். டி.என:கோபாலன் ஒரு பத்திரிகையாளனாகத்தான் அங்கு செயலாற்றியிருக்கின்றார். பி பி சியின் செய்தியாளராகவல்ல. இங்கே கும்பலிலே கோவிந்தா போடுபவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நீங்கள் இன்னமும் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. மேகநாதன் கூட விடயத்தைப் புரிந்து கொள்ளாமல் கருத்தெழுதியுள்ளார். மேலும் பிருந்தன் நீங்கள் சுட்டிக் காட்டிய திருவின் கருத்தை நான் ஏற்கனவே படித்து அதற்குப் பதில்க் கருத்தும் எழுதியுள்ளேன். அது போல் திரு அவர்கள் கூட உங்களின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். பி பி சி ஆனந்தி(அவர் சில மாதங்குளுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார்) அக்காவின் காலத்தைப் பற்றி சொல்பவர்கள் அவரின் காலத்தில் கூட பி பி சியைத் து}ற்றியதை மறந்துவிட்டு எழுதுகின்றார்கள்.

வசம்பு நடந்தவிடயங்களுக்கும், நடந்து கொண்டிருக்கும் விடயங்களுக்கும் என்னால் பதில் தரமுடியும், டிஎன் கோபாலன் சம்பந்தப்பட்ட, பிபிசி, இந்து மன்னிப்புகேட்டவிடயம், நடந்திருக்கிறது, அதனால் அதைபற்றி கதைக்கிறோம், நீங்கள் கேட்டகேள்வி ஊகத்தின் அடிப்படையில் பிபிசிக்கும் ஜபிசிக்கும் செய்திகள் கொடுப்பவர்பற்றி, இதுநடக்காதவிடயம், உங்கள் ஊகங்களுக்கு என்னால் பதில் அழிக்கமுடியாது, காரணம் ஊகங்கள் எப்போதும் வேண்டாத பிரச்சினையை உருவாக்கும். உதாரனமாக மகாத்மாவை பிடிக்காத ஒருவர் இப்படி கேள்வி கேட்கலாம், "மகாத்மா வெள்ளையர்களுக்கு இந்தியாவை காட்டிக்கொடுத்திருந்தால் அவருக்கு கோட்சே கொடுத்த மரணதண்டனை சரியா?" என இதற்கு பதில் எதுவாக இருக்கும், இது ஒரு ஊகத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்வியே, இக்கேள்வியும் அதன் பதிலும் வீண்பிரச்சினைகளை உருவாக்குமா? இல்லையா? அதனால் ஊகத்தின் அடிப்படையில் எழுதுவதையும், கேள்விகேட்பதையும் தவிர்ப்போம். நடந்ததை நடந்துகொண்டு இருப்பதைபற்றிக் கதைப்போம். அதுவே ஆரோக்கியமானதாகவும், பிரயோசனமாகவும் இருக்கும் என்பது எனது துனிபு.
.

.
Reply
#17
<b>பிருந்தன்</b>

உங்கள் பதிலிலிருந்தே தெரிகின்றது நீங்கள் எந்தளவில் வானொலிகளை கேட்கின்றீர்களென்று. இரத்தினா லிங்கம் என்று ஒரு வானொலியிலும் இரத்தினா காத்தலிங்கம் என்று இன்னொரு வானொலியிலும் செய்திகளைக் கொடுப்பது ஒருவரேயென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் எங்கே ஊகமுள்ளது. அது போல் நீங்கள் தான் பி பி சி மன்னிப்பு கேட்டது என்று செய்தியைத் திரித்து எழுதினீர்கள். அதைவிட இந்த செய்தியைப் பற்றிய உண்மைத் தன்மையே கேள்விக்குறி?? இதனை ஏற்கனவே நான் சுட்டிக் காட்டியுள்ளேன். எனவே தயவு செய்து உங்களுக்குத் தெரியாத விடயங்களை விட்டுவிடுங்கள். சமாளிக்க முயலாதீர்கள்.
Reply
#18
Vasampu Wrote:முதலில் எனது கேள்வியையே புரிந்து கொண்டு பதிலளிக்கத் தெரியவில்லை. அதற்குள் ஜால்ராக்கள் வேறு. டி.என்.கோபாலன் பத்திரிகையாளராகத்தான் மேலுள்ள விடயத்தில் பங்கு பற்றியுள்ளார். பி பி சி வானொலியே தவிர பத்திரிகையல்ல. மேலும் குறிப்பிடப்பட்ட இவ்விடயம் ஒரு இணையத்தளத்தில் தான் வந்துள்ளது. இந்திய இணையத்தளங்களில் வராததன் மர்மம் என்னவோ??? அதற்காக மேன்மேலும் பொய்களைப் புகுத்த வேண்டாம். உண்மையில் இப்படி ஒரு எதிர்ப்பு நிகழ்ச்சி நடந்திருந்தால் எதிர்த்துக் குரல் கொடுத்த பத்திரிகைகள் தங்கள் தலைப்புச் செய்தியில் இதனைப் போட்டிருக்கும். சில இணையத்தளங்களுக்கு மட்டும்தான் குறுக்குத்தனமான செய்திகள் வரும். அதையும் இங்கே காவிவரச் சிலர். சந்திரிக்கா தனது பதவியை இராஜினாமாச் செய்ய மறுத்துப் பிடிவாதம் பிடிப்பதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட அதை விழுந்தடித்து ஒருவர் இங்கே கொண்டு வந்து போட்டார். இப்படி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என நினைப்பவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். <b>பி பி சி செய்திச்சேவை 30 நிமிட நேரங்களே இடம் பெறுகின்றன.</b> அதற்குள் அனைத்துச் செய்திகளையும் சேர்க்கவும் வேண்டும். முடிந்தவரை இலைங்கைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வருகின்றது. புலத்தில் நடை பெற்ற சில நிகழ்வுகளும் (ஜெனிவா ஊர்வலம் போன்றன) இடம் பெற்றுமுள்ளன.
<b>உண்மையாகத் து}ங்குவோரை எழுப்பலாம் ஆனால் து}ங்குவது போல் பாசாங்கு செய்வோரை ஒன்றுமே செய்ய முடியாது.</b>

பிபிசி 30 நிமிட வானொலி எண்ற அரிய தகவலைத்தந்ததுக்கு நண்றிகள்....

அப்ப இது என்ன....????... http://www.bbc.co.uk/tamil/

( வெற்றுச் சுளியம் )
::
Reply
#19
வசம்பு ரத்தினாகாத்தலிங்கம் செய்திவழங்குகிறார் என்று தெரியும் உங்கள் கேள்வியைத்தான் ஊகம் என்று சொன்னேன். இதுதானே உங்கள் கேள்வி,

"உதாரணமாக பி பி சிக்கு இலங்கையிலிருந்தும் பலர் செய்தி வழங்குகின்றார்கள். அப்படிச் செய்தி வழங்கும் ஒருவர் பெயரில் சிறுமாற்றத்துடன் பலகாலமாக ஐ பி சிக்கும் செய்திகள் வழங்கி வருகின்றார். அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை இப்போது எந்த வானொலியைச் சம்பந்தப்படுத்தி எழுதலாமெனச் சொல்வீர்களா???"

இது செய்தியா? ஊகமா? தைலை கூறியது இதற்கும் பொருந்தும்.
நான் எங்கே அப்பு செய்தியை திரித்தேன்? வந்த செய்தியையும் அப்படியே போட்டு இனைப்பையும் தந்திருக்கிறேன், இதில் திரிப்பு எங்கே இருக்கிறது, உங்கள் வர்த்தைகளை திருத்திக்கொள்ளுங்கள். 8)
.

.
Reply
#20
<b>தலா:</b>

நான் பி பி சி செய்தி 30 நிமிடங்கள் என்று சொன்னதற்கும் நீங்கள் தந்த இணைப்பிற்கும் என்ன சம்பந்தம். அதில் என்ன செய்தி 1 மணி நேரமா போகின்றது.

<b>பிருந்தன்:</b>

யாழ் களத்தில் நீங்கள் இட்ட தலைப்பிற்கும் நீங்கள் தந்த இணைப்பிலுள்ள தலைப்பிற்கும் உள்ள திட்டமிட்ட உங்கள் திரிபுபடுத்திய நிலைமை எவருக்கும் புரியாது என நீங்கள் நினைத்தால் ???

<b>செய்தியின் நம்பகத்தன்மையை செய்தியை இணைத்தவரால் கூட இதுவரை நிரூபிக்க முடியவில்லை. ஊகங்களுக்கும் செய்திகளுக்கும் வித்தியாசம் தெரியாமலிருப்போர்களுடன் தொடர்ந்து வாதிடுவதில் எந்தவித பயனுமில்லை.</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)