Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிரையே கொடுப்பேன்' என்று சொன்னதால் மணமகளை ரோட்டில் படுக்க வ
#1
உயிரையே கொடுப்பேன்' என்று சொன்னதால் மணமகளை ரோட்டில் படுக்க வைத்து காரை ஏற்றிய மணமகன்



குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ் பரேக். இவருக்கும் நேகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வரும் 5-ந்தேதி அவர்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக இரு வீட்டாரும் அழைப்பிதழ் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பிரகாஷ் நேற்று மணமகள் நேகா வீட்டுக்கு சென்றார். வெளியில் சென்று ஷாப்பிங் செய்து விட்டு வரலாம் வா என்றார். வருங்கால கணவர் அழைத்ததும் அவருடன் நேகா மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.

நேகாவை நீண்ட தொலைவுக்கு காரில் அழைத்து சென்ற பிரகாஷ் அன்ஜர் என்ற இடத்தில் காரை நிறுத்தினார். "என் மீது உனக்கு பாசம் இருக்கிறதா?'' என்று சந்தேகத்துடன் கேட்டார். உடனே நேகா, "உங்களுக்காக நான் என் உயிரையும் கொடுப்பேன்'' என்றார்.

இதை கேட்டதும் பயங்கரமாக சிரித்த பிரகாஷ் அப்படியானால் நடுரோட்டில் படு என்றார். உடனே நேகா ரோட்டின் மத்தியில்படுத்தார்.

அடுத்த நிமிடம் கண்ணை மூடி கொண்டு பிரகாஷ் காரை ஓட்டினார். நேகா மீதுகார் ஏறிஇறங்கியது. 3 தடவை அவர் முன்னும், பின்னுமாக நேகா மீது காரை ஏற்றினார்.

உடல் நசுங்கி குற்றுயிராக கிடந்த நேகா அலறினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவளை பார்த்ததும் இனி செத்து விடுவாள் என்ற பயத்தில் பிரகாஷ் காரை ஓட்டி சென்று விட்டார்.

அந்த வழியாக வந்த சிலர் நேகாவை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் கொடுத்த தகவலில் எல்லா விபரமும் தெரியவந்தது.

இது இரு வீட்டாருக்கும் பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அன்ஜர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணமகன் பிரகாசை கைது செய்தனர்.
Thanks:malaimaalr...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
மனவியாதிக்கு திருமணம் மருந்தா..?? ஒரு பெண்ணின் வாழ்வோட விளையாடிறார்கள். :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)