11-25-2005, 09:53 AM
தமிழர் தாயகம் நிராகரிப்பு-ஒற்றையாட்சி-புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தம்: நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!!
[வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2005, 14:17 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்காவைத் தாயகமாக ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான நடைமுறையில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கைவிட்டு புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்படும் என்றும் சிறிலங்காவின் புதிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது கொள்கைகளை வெளியிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை:
பயங்கரவாதச் செயல்களைச் சகித்துக் கொள்ளாத வகையிலான, சிறாரை படையில் சேர்க்க வகை செய்யாத புதிய அமைதி முயற்சிகளை முன்னெடுக்க உள்ளோம். முன்னைய அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிகளினால் எதுவித முன்னேற்றமும் இல்லை.
நான் வெளிப்படையான, திறந்த முறையிலான அமைதி முயற்சிகளை மேற்கொள்வேன். சிறாரை படையில் சேர்க்காத, மனித உரிமைகளை உள்ளடக்கியதாக அது இருக்கும்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் பயங்கரவாதச் செயல்களை அனுமதிக்காத வகையில் சரத்துகள் இணைக்கப்பட்டு திருத்தப்படும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வெளிப்படையான பேச்சுக்களை நடத்த நான் தயாராக உள்ளேன். ஆனால் சிறுபான்மைத் தமிழர்களுக்கான தனித் தாயகக் கோட்பாட்டை ஏற்கமுடியாது. சிறிலங்காதான் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலேயர்கள், பேர்கர்களின் தாயகம்.
பல தசாப்தங்களாக நீடித்து வரும் தமிழ் பிரிவினைவாத பிரச்சனைக்கு ஒற்றையாட்சி முறைக்குள்ளேயே தீர்வு காணப்படும்.
அமைதியான முறையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும். இந்த அமைதிப் பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். ஆனால் இப்பேச்சுக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயானதாக மட்டும் இருக்காது.
எமது செயற்திட்டம் திறந்ததாக, வெளிப்படையானதாக, பிரிவினைவாதத்தை நிராகரிக்கிற, இராணுவச் செயற்பாட்டை கைவிடுகிற, இறுதித் தீர்வை நோக்கியதாக, அந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தக் கூடியதான வகையில் இருக்கும். பேச்சுகள் எளிதில் நடந்துவிடாது. ஆனால் நாம் தேர்ந்தெடுத்துள்ள பாதை பேச்சுக்கள்தான் என்றார் மகிந்த ராஜபக்ச.
Puthinam

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->