Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூட நம்பிக்கைகளை புகுத்தும் ரஜினி
#1
<b>மூட நம்பிக்கைகளை புகுத்தும் ரஜினி: கி.வீரமணி கடும் தாக்கு</b>

நவம்பர் 24, 2005

சென்னை:

ரஜினி தனது திரைப்படங்களில் ஆன்மீகத்தை புகுத்துகிறார் என்று வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


திராவிட கழகத் தலைவர் வீரமணி இது பற்றி கூறியதாவது:

பக்தி வந்தால் புத்தி போகும் என்பது பெரியார் கூற்று. அமெரிக்க அதிபர் புஷ் கூட, கடவுள் தான் ஈராக் போரை தொடங்கச் சொன்னார் என்று கூறினார். அதுவும் எனக்கு வியப்பை அளித்தது.

ரஜினிகாந்த் தனது படங்களில் ஆன்மீகம், ஜோதிடம், பேய், பிசாசு, போன்ற மூட நம்பிக்கைகளை புகுத்துகிறார். (சமீபத்தில் வெளியான சந்திரமுகி மற்றும் பாபா திரைப்படம்) அவர் போன்ற குழப்பவாதிகள் தான் பாபாக்கள் பல்லாயிரம் ஆண்டு உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.

இதை பக்திக்காக சொல்கிறார்கள் என்பதைவிட வசூல் யுக்திக்காக சொல்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. இந்த மூட நம்பிக்கையின் முடை நாற்றம் ஒழிந்தாக வேண்டும்.

தற்போது நாட்டில் கற்பு பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. கற்பு என்பது பெண்ணடிமைக்கு ஒரு அருமையான கருவி. கற்பு இரு பாலருக்கும் பொதுவானது என்று வரவேற்றவர் பெரியார். ஆனால் தற்போது கிளம்பியுள்ள சர்ச்சை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு.

தேர்தலில் நாங்கள் மாறி மாறி ஆதரவு அளிப்பதாக கூறுகிறார்கள். மதவெறி, மதவாதத்தை அடிப்படையாக கொண்ட ஆர்எஸ்எசின் ஏவுகணையான பாஜகவுடன் திராவிடக் கட்சிகள் மாறி மாறி கூட்டு சேரும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது.

எனவே கொள்கை அடிப்படையில் பாஜகவை எதிர்க்கும் நாங்கள் மாறி மாறித்தான் ஆதரவு காட்ட முடியும். ஏனென்றால் பாஜகவை ஆதரிப்பவர்கள் எங்கள் எதிரிகள் என்றார் வீரமணி.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)