Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<b>ஐஸ்வர்யா ராய்க்கு ஐரோப்பிய விருது</b>
லண்டன்:
<img src='http://thatstamil.indiainfo.com/images30/optimized/aishwaryaraiesquire-450.jpg' border='0' alt='user posted image'>
உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு ஐரோப்பிய யூனியன் 'வோர்ல்ட் டைவர்சிடி' விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.
லாட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இதே போல் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
ஐஸ்வர்யா ராய் ஆசிய பெண்களின் சாதனைக்கு சின்னமாகத் திகழ்கிறார் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
தகவலை இணைத்ததற்கு நன்றி வானம்பாடி.
ஐஸ்வர்யாவிற்கு எனது மன்ப்புூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஐஸ்க்கு எனது வாழ்த்துக்கள்...
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
இப்பவிளங்குது ஏன் எல்லோரும்விருது வழங்குகிறார்கள் என்று...
Posts: 157
Threads: 9
Joined: Aug 2005
Reputation:
0
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->இப்பவிளங்குது ஏன் எல்லோரும்விருது வழங்குகிறார்கள் என்று...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:wink: :?: :?
.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<img src='http://www.vikatan.com/av/2005/nov/27112005/p120.jpg' border='0' alt='user posted image'>
வாழ்த்துகள்........
தகவலுக்கு நன்றி வானம்பாடி
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
லண்டனில் ஐஸ்வர்யாராய்க்கு விருது வழங்கப்பட்டது
லண்டன், நவ. 26-
நடிகை ஐஸ்வர்யாராய்க்கு லண்டனில் ஐரோப்பிய ஒன்றிய விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து முன்னாள் மந்திரி கெய்த் வாஸ் இந்த விருதை வழங்கினார்.
ஒரு நாள் மாநாடு
ஐரோப்பிய ஒன்றியத்தின் பன்முகத் தன்மைகளை கொண்டாடும் வகையில் ஒரு நாள் மாநாடு லண்டனில் நடந்தது. இதில் நடிகை ஐஸ்வர்யாராய்க்கு உலகப் பன்முகத்தன்மைக்கான விருது வழங்கப்பட்டது.
மாநாட்டின் தலைவரும், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் மந்திரியுமான கெய்த்வாஸ் இந்த விருதை ஐஸ்வர்யாராய்க்கு வழங்கினார்.
விருதைப் பெற்றுக்கொண்டு ஐஸ்வர்யாராய் பேசியதாவது:-
பிரதிபலிக்கும் சினிமா
"இந்த விருதை உலகம் முழுவதும் உள்ள ஆசியப் பெண்கள் சார்பில் பெற்றுக்கொள்கிறேன். பெண்களின் பங்கை நீங்கள் எல்லோரும் அங்கீகரித்து இருப்பது சந்தோஷம் தருகிறது.
இந்திய கலாசாரமும், பன்முகத்தன்மை கொண்டது. இந்தியா பல கலாசாரங்கள், பல மொழிகள், பல மதங்கள், பல்வேறு இசைகளின் சங்கமம். இதை இந்திய சினிமா பிரதிபலிக்கிறது. நான் ஒரு நடிகையாக இருப்பதால், இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.
இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.
முன்னேறி வரும் இந்தியா
முன்னதாக கெய்த்வாஸ் கூறுகையில், இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் முகமும் மாறி வருகிறது என்று குறிப்பிட்டார்.
இந்த விழாவில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. அமர்சிங் மற்றும் பல இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஐஸ்வர்யாராய் விழாவுக்கு வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக பங்க்ரா நடனம் நடந்தது.
Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>