Posts: 44
Threads: 4
Joined: Aug 2005
Reputation:
0
இது வெறுமனே
ஒரு வாரத்தின் ஆரம்பமன்று
புது விடியலுக்கான
ஒரு யுகத்தின் அறிகுறி
விண்ணதிரப் பகை முட்டி
விதையாகி வீழ்ந்த எம்
வீரர்களின் விழாக் காலம்.
களம் சென்று சமராடி
காவியமான எம் காவலரின் திருவிழாக் காலம்.
கருவறுக்க வந்த பகை தனை
கதி கலங்க வைத்துக்
கந்தகப் புகையுடன் கலந்து
காப்பரண்களாகிய எம்
கார்த்திகைத் தீபங்களின் ஒளிவிழாக் காலம்
கண்ணீர்த் துளியெடுத்து நெய்யாக்கி
காந்தள் மலரெடுத்துச் சரமாக்கி
கைதொழுவோம், இது அவர்களின்
பெருவிழாக் காலம்.
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
மாவீரர்களை நினைவுகூறும் வரிகள்....
"கொட்டுண்டு கருகி விழுந்த கொழுந்துகளே...
..............
...............
உங்களை நாங்கள் நினைவு கூறுகின்றோம்"
என்ற மாவீரர் அகவணக்கப் பாடல் வரிகளை யரேனும் தெரிந்தால் மீள நினைவூட்டி விடுங்களேன்...
மிகவும் பயனுடையதாக இருக்கும்.
யார் எழுதியது என்றும் தெரியவில்லை
அவ்வாறே புதுவை இரத்தினதுரை எழுதிய "துயிலும் இல்ல சுடெரேற்றும் பாடல்"
("தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகழே......")
வரிகளையும் முழுமையாகத் தந்தால் நன்றிகள்....
"
"
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
மாவீரர் நினைவுகூறும் கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
<!--QuoteBegin-inizhaytham+-->QUOTE(inizhaytham)<!--QuoteEBegin-->இது வெறுமனே
ஒரு வாரத்தின் ஆரம்பமன்று
புது விடியலுக்கான
ஒரு யுகத்தின் அறிகுறி
விண்ணதிரப் பகை முட்டி
விதையாகி வீழ்ந்த எம்
வீரர்களின் விழாக் காலம்.
களம் சென்று சமராடி
காவியமான எம் காவலரின் திருவிழாக் காலம்.
கருவறுக்க வந்த பகை தனை
கதி கலங்க வைத்துக்
கந்தகப் புகையுடன் கலந்து
காப்பரண்களாகிய எம்
கார்த்திகைத் தீபங்களின் ஒளிவிழாக் காலம்
கண்ணீர்த் துளியெடுத்து நெய்யாக்கி
காந்தள் மலரெடுத்துச் சரமாக்கி
கைதொழுவோம், இது அவர்களின்
பெருவிழாக் காலம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கவிதை மாவீரார் நாள் கவிதை நல்லாயிருக்கு... நன்றி இங்கு இனைத்தமைக்கு
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
யரும் எப்படியென்றாலும்,நான் முன்னம் குறிப்பிட்டிருக்கிற 2 பாடல் வரிகளையும் முழுமையாய் தாங்கோவன்...
பாடல் கேட்க இணைப்பு வழங்கினாலும் நன்றி....
மிகவும் பிரயோசனமாய் இருக்கும்...
"மாவீரர் வாரம்"(ஏழல்) இல்
அர்த்தம் உடையதாயுமிருக்கும்...
"
"
Posts: 44
Threads: 4
Joined: Aug 2005
Reputation:
0
"கொட்டுண்டு கருகி விழுந்த கொழுந்துகளே..."
பாடல் வரிகள் கேட்ட ஞாபகம். நினைவிலில்லை.
'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே..." என்ற பாடல் மாவீரர் நாளன்று கல்லறையில் விளக்கேற்றும் போது மட்டும் இசைக்கப்படும் புனிதப் பாடல். எனவே அதனை இசைத்தட்டு வடிவிலோ இணையத்தளத்திலோ பெற முடியாது என எண்ணுகிறேன்.
நினைவில் உள்ள வரிகளை மட்டும் தருகிறேன். முடிந்தால் பின்னர் மிகுதி.
உறுதிமொழி
விருத்தம்
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி
பல்லவி
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா குழியினுள் வாழ்பவரே
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் (2)
சரணம்
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்
அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம்
எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை...
வெண்ணிலா வேளையில் நெய்விளக்கேற்றியே உங்களை வணங்குகின்றோம்
உங்கள் கல்லறை மீதினில் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்
................................. .....தடைவரும் போதிலும் சந்ததி து}ங்காது
..................................... .............................
அடுத்த சரணம் முழுமையாக ஞாபகமில்லை. முடிந்தால் யாராவது உதவி செய்யுங்கள். இல்லையெனில் பின்னர் தருகின்றேன்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நல்ல பாடல்... முழுமையாக இல்லாவிடினும் இங்கு இனைத்தமைக்கு நன்றிகள்.
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
மிக்க நன்றிகள்...
உணர்வு பூர்வமான வரிகளைத் தந்தமை அறிவார்த்தமான "மாவீரர் வாரம்"
எழுச்சியுடன் சிறப்பிக்க உதவும்....
"கொட்டுண்டு கருகி விழுந்த கொழுந்துகளே..."
பாடல் "அகவணக்கம் "ஆக எமது பல்கலைக்கழக வாழ்வில் "பொங்குதமிழ்"களில் கேட்டு இருக்கிறோம்...
கடைசியில்
"உங்களை நாங்கள் நினைவு கூறுகின்றோம்
உயிர் கலந்து உணர்வு சேர்கிறோம்"
என்று வரும் என்று நினைவு...
முழுதும் உருக்கும் வரிகள்....
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
இன்று மின் அஞ்சலில்
இணைப்பாகப் இப்பாடல் வரிகள்
முழுமையாக வந்தன....
(நன்றி- அன்புமணி)
<b>மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை
முடிசூடும் தமிழ் மீது உறுதி.
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி.
விழிமூடி, இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி.
இழிவாக வாழோம், தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி.
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர், உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
வல்லமை தாருமென்றெண்ணி
உம்வாசலில் வந்து உமை வணங்குகின்றோம்.
உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்.
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது - எங்கள்
தாயகம் வரும்வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.
எங்கே எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரைநிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்துள்ளோம்.
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிர்வோம், உங்கள்
நினைவுடன் வென்றிடுவோம்.
எங்கே! எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.</b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
நாளை தமிழீழத் தேசிய மாவீரர் நாள்!
[சனிக்கிழமை, 26 நவம்பர் 2005, 22:21 ஈழம்] [ம.சேரமான்]
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிர் ஈந்த மாவீரார்களின் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழீழத் தாயகங்கள் எங்கும், உலகத் தமிழர் வாழுமிடங்களிலும் பேரெழுச்சியுடன் நாளை நடைபெற உள்ளன.
<b><i>தமிழீழ விடுதலைப் புலிகள் இந் நாளை 1990ம் ஆண்டு முதல் மாவீரர் நாளாகப் பிரகடணப்படுத்தி வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்</i></b>
இப்படி <b>"புதினத்தில்</b>" கிடக்குது...இது சரியே....
<b>1989 ஆம் ஆண்டு முதல் "மாவீரர்" நாள் </b>அனுட்டிக்கப் பட்டதாகவே நாம் அறிந்துள்ளோம்.....
தயக வரலாற்றைச் "சரியாக" எடுத்துச் செல்லும் காத்திரமான பொறுப்பு "தமிழ்" ஊடகங்களுக்கு உண்டு அல்லவா..?
"
"
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
வானம் இருளில் மூழ்கி
உங்களுக்காய் கண்ணீர்
சொரிகின்றது.
காலங்கள் கடந்தாலும்
உங்கள் தாகம்
தமிழீழம்
அந்த ஈழம் வரைவதில்
பங்கெடுத்து தூங்கும்
ஈழத்தின் சொத்துக்களே
இன்று உங்களை வணங்குகின்றோம்
குமுறாது இருக்க முடியவில்லை.
மாவீரர் தெய்வங்களே
ஆழ்ந்து உறங்குங்கள்.
தமிழ் ஈழம் விரைவில் விடியும்
அன்று எல்லோரும் மகிழ்ந்திடுவோம்.
அதுவரை உங்களை வணங்கும்
துயிலும் இல்லங்களில்
உங்களை தொழுகின்றோம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI