Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<b>இலங்கை- இந்திய உடன்பாடு முழுமையாக அமுல்படுத்தப்படும்</b>
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்கப்பட்டு அது முழுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மகிந்த ராஜபக்ஷ இணையத்தளமொன்றுக்கு சில நிமிட தொலைபேசிப் பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியிலேயே, 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய உடன்பாட்டிற்கு மீண்டும் புத்துயிரளிக்கப்போவதாக கூறியுள்ளார்.
இதுபற்றி ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
இந்தியாவுடன் இலங்கை தொடர்ந்தும் மிகவும் நெருங்கிய உறவுகளை கொண்டிருப்பதுடன் இனப்பிரச்சினைத் தீர்விலும் பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்விலும் இந்தியாவின் வழிகாட்டுதலை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ளும்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் என்னைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்ததுடன், சகல விடயங்களிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு தொடர்ந்தும் கிடைக்குமெனவும் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம், புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் ஆற்றிய உரையில், ஆசிய நாடுகளுக்கு முன்னுரிமையளித்து அந்த நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் நெருங்கிய உறவை வைத்திருக்கப் போவதாகக் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் புதிய ஜனாதிபதியை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் சந்திக்கவுள்ளார்.
இதற்கான விருப்பத்தை இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இந்தச் சந்திப்பு இன்று திங்கட்கிழமை அல்லது நாளை நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
இந்தியாவை நிம்மதியா இருக்க இவங்கள் விடாங்க, இலங்கையின்ர போர்செலவை இந்தியாவின்ர தலையில கட்டிப்போட்டு சும்மா இருக்க பாக்கிறாங்க, நோகாம நொங்கு சாப்பிர்றது எண்டுறது இதுதான்.
.
.
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
நொங்கு வெட்டப்போய் கையைவெட்டினவர்களுக்குத்தான் தெரியும் அதன் எரிச்சல்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
தொடரும் பெருளாதார முன்னேற்றம், அபிவிருத்தி, வெளிநாட்டு முதலீடு, ஆசியாவின் மற்றும் உலகின் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்று, அமெரிக்கா ஜரோப்பிய ஒன்றியம் போன்றோரின் முக்கிய வணிகப்பங்காளிகள் போன்ற அபிலாசைகளை குறிக்கோள்களை விலையாகக் கூடுக்க தயார் என்றால் ஒப்பந்தத்தை அமுல்படுத்த வாங்கோ ஓடோடி வாங்கோ.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
இலங்கை இந்திய ஒப்பந்தம் மீள நடைமுறைபடுத்தப்படும் என புதிதாகப் பதவியேற்ற மகிந்தா கூறியிருப்பது சில சந்தேகங்களை உண்டாக்குகிறது இதற்கு முக்கிய காரணம் அவருடன் கூட்டு வைத்திருக்கும் ஜே.வி;பி ஜே.வி.பியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று எந்த ஒரு வெளிநாட்டு சக்திகளின் துணையோ மத்தியஸ்தமோ இல்லாமல் எமது பிரச்சனைகள் தீர்க்கப்பட வேணும் எமது அண்டை நாடான இந்தியாவின் ஆலோசனைகள் பெறப்படலாம் ஆனால் அவர்களின் நேரடி தலையீடு இருக்கப்படாது என்பதே. . . இப்போதிருக்கும் நிலையில் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவதெண்றால் வடக்குகிழக்கில் அமைதி நிலவ வேண்டும் அதற்கு இந்திய அமைதிப்படையின் வருகையும் தேவைப்படலாம் ஒருமுறை வந்தடைந்த அவமானத்தை திரும்பவும் பெற இந்தியாவும் விரும்ப மாட்டாது ஆனபடியால் எமது ஜனாதிபதி வெற்றிக்களிப்பில் இந்தியாவுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்துவதற்காக இப்பிடிச் சொல்லியிருக்கலாம் ஆனால் இவரின் இந்த எழுந்த மாத்தமான பேச்சுகள் இவருக்கும் ஜே.வி.பி க்கும் இடையில் இருக்கும் புரிந்துணர்வை குழப்பவும் கூடும் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதுதான் ஜே.வி.பி இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை வாங்கப்பிடாது என தென்னிலங்கையில் பிரச்சாரம் செய்தவர்கள் மீறுபவர்கள் தண்டிக்கவும் பட்டவர்கள் போராட்ட காலத்தில் இருந்த ஜே.வி.பிக்கும் இப்ப இருக்கும் ஜே.வி.பிக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது ஆரம்பத்தில் புளோட் அமைப்புடன் அவர்களுக்கு இருந்த நெருக்கம் தமிழ் மக்களின் போராட்டம் சரி என கூறினவர் றோகன விஜயவீர ஆனால் இன்று விமல் வீரவம்ச என்ன சொல்கிறார் வட பகுதி மக்களை சிறைபிடித்து வைத்திருக்கிறது ஒரு ஆயதக்குழு அம்மக்களை காப்பாற்ற வேண்டுமாம்
போராடும் போது ஒரு கொள்கையும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போது ஒரு கொள்கையும் பேசும் இவர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்து வதற்கு உடன்பட்டாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை. . . . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
நோர்வே, யப்பான் அமொரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம் போன்றோரின் தற்போதைய தலையீட்டை முடிவுக்கு கொண்டு வர அல்லது ஓரங்கட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையை அமுல்படுத்தப்போறம் என்ற கோசம் இருக்கும். மாற்றுத் தீர்வென்றை முன்வைக்காது அவர்களை வெளியேற்ற முனைந்தால் இனப்பிரச்சனை என்று ஒண்டு இல்லை என்ற மிதாவாத நிலைப்பாட்டில் உள்ளார் என்ற குறைவரும் எண்டதால் இந்தியாவை பயன் படுத்தி தற்போதை தலையீடுகளை ஓரங்கட்ட முயற்சிக்கலாம். ஏற்கனவே உள்ள தீர்வு ஒன்றை முன்னுக்கு வைத்து இந்தியாவின்ரை நப்பாசையில குளிர்காய முயற்சிக்கலாம்.
இதுவரை காலமும் மகிந்த மற்றும் அவர்களது ஜேவிபி கெல உறுமைய போன்ற கூட்டுகள் உருவாக்கி வைத்திருந்த கடும்போக்காளர் நிலைப்பாட்டோடு ஒப்பிடும் போழுது இது ஒரு இளகிய நிலையாக ஆக்கபூர்வமான ஆரோக்கியமான நம்பிக்கையூட்டு நகர்வாகச்சித்தரித்து தற்போதைக்கு காலத்தை ஓட்ட உதவும்.
புலிகள் தயார் என்றால் தான் தயார், தலைவரை நேர சந்திச்சு கதைக்கவும் தயார் என்று கலம் கடத்த விடுற வெற்றுப் பேச்சுகள் மாதிரி ஒண்டு தான் இதுவும்.
நியாயமான தீர்வு, கொளரவமான தீர்வு, அனைவருக்கும் சுபீட்சமான எதிர்காலம் என்று பசப்பு வார்தைகளால் காலத்தை ஓட்ட முயற்சிக்கிறார். உந்தப்பசப்பு வார்த்தைகள் தேர்தல் பிரசாரத்தில எடுபடவில்லை எண்டதை கிடைத்த வெற்றியாலை உணரவில்லை போலகிடக்கு.
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
"சூடு கண்ட பூனை, அடுப்பங்கரை நாடுமா?" .... பூனை எட்ட நின்று தொடர்ந்து கொழுக்கி போட்டிழுக்கப் பார்க்கும், மற்றும்படி அடுப்பெப்படியென்று பூனை நன்கறியும்!!!!
" "