11-21-2005, 10:57 AM
போரிலும் கொடியது ஐரோப்பிய வாழ்வு வெளியே வரும் வெளிவராத உண்மைகள்
என்றால் அது எப்பொழுதுமே கொடியதுதான். இலங்கையில் இருக்கும் காலங்களில் ஒவ்வொரு பொழுதும் போரின் துயரமே நினைவிற்குள் சுழன்று கொண்டிருந்தன. அதுபோல் போர் எப்போது முடியும். நாம் எப்போது சுதந்திரமாக வாழலாம் என்ற எண்ணங்களே நம்மை வாட்டிக் கொண்டிருந்தன. ஐரோப்பாவிற்கு வந்த பின்னர்தான் போரிலும் கொடிய விவகாரங்கள் இங்குள்ள மனித வாழ்வைச் சிதைப்பதை நாம் நேரடியா கண்டு கொண்டோம். போர் கொடியது அதனிலும் கொடியது எது? இனிப் படிப்படியாகப் பார்ப்போம்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்கா உட்பட பல பெரிய நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகப் பனிப்போர் கடந்த சில வாரங்களாக இதுவரை வெளிவராத பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தபடி உள்ளன. போர் அச்சத்தைவிட இவை பேரச்சம் தரும் காரியங்கள் என்பதை இப்போது பலர் படிப்படியாக உணரத் தொடங்கியுள்ளனர். உணவுப் பொருட்கள் உட்பட மனிதன் பாவிக்கும் அன்றாட பாவனைப் பொருட்களால் இந்த மரண ஆபத்துகள் அருவமாகவே மனிதனை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
கொக்கோ கோலா இல்லாத சபைகளே இன்று இல்லை என்று சொல்லக் கூடியளவிற்கு அதன் தாக்கம் உலகம் முழுவதும் வியாபித்து நிற்கிறது. இதில் கோலா லைற்றும் அடக்கம். நீரிழிவு போன்ற வியாதியால் பாதிக்கப்பட்டவருக்காக விற்பனை செய்யப்படுவதுதான் கோலா லைற் என்ற சோடாவாகும். இந்த கோலா லைற்றில் கலந்துள்ள ஒரு தாதுப்பொருள் புற்றுநோயை உண்டு பண்ணும் என்று செய்தி வெளியாகியுள்ளது. தினசரி பல இலட்சம் லீற்றர்கள் மனித குலத்தால் குடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கோலா லைற்றில் புற்றுநோய் அபாயம் இருப்பதை இத்தாலிய ஆய்வுகள் வெளிக் கொணர்ந்துள்ளன.
இது குறித்து மற்றைய ஐரோப்பிய நாடுகள் எதுவுமே பேசாமல் மௌனம் காத்து வருகின்றன. இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் இருந்தது. இந்த உற்பத்திப் பொருளின் ஏகபோக உரிமையாளர் அமெரிக்கா. அந்த வல்லரசைப் பகைத்துக் கொண்டால் இன்றுள்ள நிலையில் எதையும் செய்ய இயலாது என்று அவை கருதின. அமெரிக்காவைப் பகைப்பதைவிட மக்கள் நஞ்சை குடித்து புற்றுநோயில் மடிவது பாரதூரமான விடயமல்ல என்று எண்ணுவதால் வந்த வினை இது.
கோலா லைற்றில் உள்ள சலரோகத்திற்கு பாதிப்பு தராத இரசாயனப் பொருளை உருவாக்கி விற்பனை செய்வது வேறு யாருமல்ல அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொனால்ட் ரம்ஸ்பீல்டின் நிறுவனம்தான். இப்போது இத்தாலிக்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள பிணக்குக் காரணமாக இத்தாலி இப்படி செய்திருக்கிறது என்று வேறு சில நாடுகள் கூறி ரம்ஸ்பீல்டின் அன்பைத் தேடிக் கொண்டன. இதற்கு ஒரு அரசியல் பின்னணி இருந்தது.
சில மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இத்தாலிப் பெண்மணியை ஈராக்கிய தீவிரவாதிகளிடமிருந்து இத்தாலிய உளவுப் பொலிஸ் மீட்டு வந்தது தெரிந்ததே. அத்தருணம் அமெரிக்கப் படைகள் காவலரணில் இருந்து சுட்டபோது அப்பெண்மணியைக் காக்க இத்தாலிய பொலிஸ் அதிகாரி ஒருவர் குண்டுகளை ஏந்தி மடிந்ததும் தெரிந்ததே. இந்தத் துப்பாக்கிச் சூடு தற்செயலானதல்ல, பின்னர் வந்த தகவல்கள் உண்மையைத் தோலுரித்துக் காட்டின. இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கம் காயம்பட்ட ஈராக்கிய தீவிரவாதிகள் சிலரை தமது வண்டியிலும், விமானத்திலும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல உதவி அதற்குப் பிரதியுபகாரமாக தமது நாட்டுப் பெண்மணியை மீட்டிருந்தனர். இது செஞ்சிலுவைச் சங்க விதிகளுக்கு முரணானது. இதிலிருந்து வளர்ந்த பகைதான் இப்போது கொக்கோகோலா லைற்வரை வந்துள்ளது.
அடுத்த விடயம் பற்பசைகள் தொடர்பானது. உமிக்கரியாலும், பற்பொடியாலும் பல்லுத் தீட்டுவது தவறானது என்ற நமது வைத்தியர்களின் ஆலோசனையை நாம் சரியென நம்பினோம். அவர்களுடைய வழிகாட்டலில் பல்வேறு பற்பசைகளை வாங்கி இரண்டு அல்லது மூன்று வேளைகள் பற்களைத் தீட்டி பற்பாதுகாப்பு செய்வதாகக் கருதினோம். ஆனால், இப்போதுதான் ஒரு இரகசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது. பாரதூரமான நோயை உருவாக்கக்கூடிய ரிறிகுளோசன் என்னும் இரசாயன மூலகத்தை பற்பசைகளில் கலக்கிறார்கள் என்று கூறியுள்ளது. பிரபலமான எல்லாப் பற்பசைகளும் இந்த மூலகத்தில் தான் தங்கியுள்ளன. பற்களிலேயே பாரதூரமான நஞ்சைத் தடவிக் கொண்டு ஏதும் அறியாத பேதைகளாக வாழ்ந்திருக்கிறோம். கொல்கேற் பற்பசை இந்த இரசாயனத்தில் தான் காலம் கொண்டு போகிறது.
அதற்கு அடுத்தபடியாக வாசனைத் திரவியங்கள், சம்பூ போன்றவற்றின் வண்டவாளங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த வாசனைத் திரவியங்களை வியர்வை நாற்றத்தைப் போக்க பாவிக்கிறோம். ஆனால் உரோமக் குழாய்கள் வழியாக உள்ளே செல்வதால் புற்றுநோய் உண்டு பண்ணும் இரசாயனம் உடலில் கலந்து விடுகிறது. ஐரோப்பாவில் உள்ள பதினொரு நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் டென்மார்க்கில் உள்ள இளைஞரின் உடலிலேயே அதிகமான இரசாயனத் தாக்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் உடலில் இந்த வாசனைத் திரவியங்களே. குழந்தைகளின் சம்பூவில் உள்ள வாசனைத்தி திரவியங்கள். இரசாயன நிறங்களில் எல்லாம் இந்த அபாய இரசாயனக் கலவைகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நமது தொலைக் காட்சிகளில் வரும் கூந்தல் விளம்பரங்கள் எத்தகைய ஆபத்துகளை சுமந்துள்ளன என்பதை இந்தச் செய்தி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதுதவிர மாடுகளுக்கு இறைச்சிகளை தீவனமாகக் கொடுத்து, அந்த இறைச்சியை உண்டு மூளைக் காய்ச்சல் வந்து மடிந்த கதைகளும் அனைவரும் அறிந்ததே. இது தவிர மேலும் ரெடிமேட் உணவுப் பொருட்கள், தானியங்களில் உள்ள இரசாயனக் கலவைகள் எல்லாம் இன்றுள்ள ஐரோப்பிய மனிதனை அதிக உயரமுள்ளவனாகவும், விரைவு வளர்ச்சி கொண்டதாகவும் ஆக்கி வருகிறது. அத்தோடு புதிய புதிய நோய்களையும் விரைவான முதுமை யையும் விரைவான முதுமையையும் கொடுத்து வருகிறது.
இவற்றுக்கு அடுத்ததாக வந்துள்ள பறவைக் காய்ச்சல் அபாயமாகும். ஆசியாவில் இருந்து ருமேனியாவுக்கு வந்துள்ள இக் காய்ச்சல் ஐரோப்பாவிற்குள் நுழைய இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒருவருக்குப் பரவினாலே போதும் விரைவாக பலரது உயிர்களை காவு கொண்டு விடும். பிரிட்டனில் பறவைக்காய்ச்சல் ஏற்பட்டால் 50,000 பேர் வரை விரைவாக மரணிக்க கூடிய அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர பருவத்திற்குப் பருவம் மலைப்பகுதிகளை தாண்டிவரும் பறவைகளும் இதை ஏந்தி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 வருடங்களின் முன்னர் இன்புளுயன்சா நோய் ஏற்பட்ட போது ஐரோப்பாவில் அது புதுவகைக் கிருமியாக இருந்தது. மனித உடல் அறியாத இந்தக் கிருமியால் பல இலட்சம் பேர் மடிந்தனர். அது போலத் தான் பறவைக் காய்ச்சலில் அடங்கியுள்ள கிருமியும். மனித உடல் அறியாத நுண் கிருமியாக இது உள்ளது. இந்தக் கிருமி தொற்றிவிட்டால் பிறகு தடுப்பு மருந்து கொடுத்து யாதொரு பயனும் இல்லை. இதனால் ஏற்பட்டுள் அச்சம் இப்போது ஐரோப்பாவை குலை நடுங்க வைத்துள்ளது.
இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் பல உண்மைகள் தெரியவரும். முதலாவது உலகத்தின் பல நாடுகள் உணவுப் பொருட்களில் கலந்துள்ள நச்சுத்தன்மையை அரசியல் பொருளாதார காரணிகளுக்காக வெளிடாமல் கமுக்கமாக இருந்துள்ளன. ஒரு நாடு ஓர் உண்மையை வெளியிட்டால் பாதிக்கப்பட்ட நாடு தனக்கு ஆப்பு வைத்த நாட்டின் வியாபார இரகசியங்களை வெளியிட்டுவிடும். இப்படி ஒருவருக்கு ஒருவர் அஞ்சி உண்மைகளை மறைத்து வாழ்ந்துள்ளனர். இப்படியாக தீமைகளுக்காக சமரசம் செய்துள்ளன நாடுகள் தான் போலியாக உலக நியாயம் பேசி வருவதையும் வெளிப்படையாக உணர்கிறோம்.
ஐ.நாவின் அங்கத்துவ நாடுகள் ஒன்றோடு ஒன்று செய்த தரகு வேலைகளால் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இரகசியமாகவே நச்சுமயப்படுத்தப்பட்டிருக்கிறான். வல்லாதிக்க சக்திகள் செய்த நச்சு வர்த்தகம் மனித குலத்தை நச்சுக் குழியில் தள்ளியிருக்கிறது. கடந்த 145 வருட காலத்தில் இந்த ஆண்டு இரண்டாவது அதிக வெப்பமுள்ள ஆண்டாக மாறியிருக்கிறது. கியோட்டோ ஒப்பந்தத்தில் பெரிய நாடுகள் கையொப்பமிட மறுக்கின்றன. கையொப்பமிட்டால் தொழிற்சாலைகளின் உற்பத்தி நேரத்தைக் குறைக்க வேண்டும் என்பது போன்ற காரணங்களால் மறுக்கின்றன. கைத் தொழில் நாடுகள் விடும் வெப்பம் காரணமாக துருவப்பனி வேகமாக உருகத் தொடங்கி விட்டது. மேலும் எண்பது வருடங்களில் டென்மார்க் மேலும் பல தீவுகளாக பிரிந்து, கடலால் நாடே ஊடறுக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதனால் இலங்கைத் தீவும் இன்று நாம் காணும் தோற்றத்தில் இருக்க வாய்ப்பில்லை.
இவைகளை எல்லாம் வரிசைப் படி தொகுத்துப் பார்த்தால் போர் ஆபத்தானதா இந்த இரகசியமான காரியங்கள் ஆபத்தானதா என்ற கேள்வி எழும். போரைவிட இவைகள் மிகவும் பயங்கரமானவை என்பதே உண்மையாகும். உணவு விடுதிகளின் இரசாயன உணவுகளும், இரசாயன வாச னைத் திரவியங்களும் குடிபானங்களுமாக நிறைந்துள்ள ஐரோப்பிய வாழ்வு போருள்ள நாடுகளைவிட மனிதனுக்கு பாதுகாப்பு குறை வானது என்பதே உண்மை யாகும்.
மேலும், நாம் போர் ஆபத்தானது என்கிறோம், அதைவிட சமாதானம் ஆபத்தானது என்பது இன்னொரு உண்மையாகும். கடல்கோளுக்காக மேலை நாடுகள் ஏராளம் பணத்தைச் சேர்த்தன. அதைக்கொண்டு ஏராளம் பொருட்களை இலங்கையில் கொண்டு போய் இறக்கின. இந்தப் பொருட்களில் பல பொருட்கள் இலங்கை மக்களின் பாவனைக்கே உதவாத பொருட்களாகும். இதை நேரடியாகப் பல இடங்களில் சென்று பார்த்தேன். ஒரு பாடசாலையில் மிகப் பெரிய தருப்பாள் சுருள் ஒன்றைக் கண்டேன். அதை என்ன செய்வதென்றே அந்தப் பாடசாலை அதிபருக்குத் தெரியவில்லை. ஏதோ தந்தார்கள் வாங்கிப் போட்டேன் என்று கூறினார். அதை கடல்கோள் நிவாரணமாக மேலை நாட்டு உதவித் தாபனம் ஒன்று தந்ததாகவும் கூறினார். இன்னொரு வைத்தியசாலையில் பெயர் தெரியாத மருந்துகளும், கட்டிலுக்குப் பொருந்தாத ஏராளமான மெத்தைகளும் பாவிக்க முடியாது குவிந்து கிடந்ததைக் கண்டேன். அவைகளும் ஏதோதருகிறார்கள் என்பதற்காக வாங்கப்பட்டவைதான்.
ஏன் இந்தப் பொருட்கள் வாங்கப்பட்டன இது முக்கிய கேள்வி. வெளிநாடுகள் கடல்கோளுக்காக தாம் சேகரித்த பணத்தை தமக்கு வேண்டிய நிறுவனங்களுக்குக் கொட்டிக் கொடுத்து அவர்களுடைய தேவையற்ற பொருட்களை வேண்டி இலங்கையில் கொட்டியிருக்கிறார்களா? இது பற்றி ஓர் ஆய்வு அவசியம். இவர்கள் இப்படிச் செய்தால் அதை அறிந்த அரசாங்கம் என்ன செய்யும் எண்ணிப்பாருங்கள். இது போலதான் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தில் பெரும் பங்கை மேலைநாடுகளின் ஊழியர்களே மறுபடியும் சாப்பிட்டு விடுவார்கள். ஏழை நாடுகளுக்குக் கிடைப்பது வெறும் கோம்பை தான். போரை விட மேலை நாடுகளில் சமாதானம் இப்படி பல கூத்துகளை கொண்டுள்ளது. ஆனால், உலக நாடுகள், உதவிகள், சர்வதேச சமுதாயம் என்று ஊடகங்களில் பாலும் தேனுமாக செய்திகள் வெளியாகும். இவையும் கொல்கேற் பற்பசை போலவே நச்சுக் கலவைதான்..
அகதி என்று பட்டம் கேட்டு, வெளிநாட்டவர் என்று தினசரி அரசியல் வாதிக ள் குறை கூறுவதைக் கேட்டு இந்த நாடுகளுக்கு உழைத்து வரி கட்டி, கடனாளியாக வாழும் ஒவ்வொரு வெளிநாட்டவரும் உண்மையாகச் சிந்தித்தால் போரை விட மேலைத்தேய வாழ்வு ஆபத்தானது என்பதை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
எனவேதான் இந்த ஏமாற்று உலகத்தை ஒவ்வொரு கணமும் அவதானித்து ஒவ்வொரு தமிழரும் அறிவுபூர்வமாக சிந்தித்து வாழ வேண்டும். மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது கிழவனின் பார்வை வேண்டும். குதிரையைத் தேர்ந்தெடுக்கும் போது இளைஞனின் பார்வை வேண்டும் என்பது ஒரு தமிழ் பழமொழி. இது போல எல்லாவற்றையும் தனித்தனி அறிவுடன் நோக்கி தெளிவு பெறாவிட்டால் உலகம் ஒரு நொடியில் உங்களை ஏமாற்றிவிடும். இதற்கு கோலாலைற்றை விட வேறென்ன உதாரணம் வேண்டும்.
http://www.thinakural.com/New%20web%20site...1/Article-1.htm