Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
நாம் என்னவோ நெருக்கமாகத்தான் உள்ளோம். ஆனால் அவர்கள் எம்முடன் நெருக்கமாக இல்லை என்பதை பல சந்தர்ப்பங்களில், பல விசயங்களில் காட்டியிருக்கிறார்கள். எனினும் நாம் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் பின்னால்தான் போய்க்கொண்டிருக்கிறோம்.
.
Posts: 123
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
வேம்படி மூலையில் கடைவைத்திருக்கும் வேலுப்பிள்ளையரின் கீரைக்கடைக்கு போட்டியாக ஆலடிச் சந்தியில் ஆறுமுகத்தானின் கடைவேண்டும் என்ற பொருளில்தான் கீரைக் கடைக்கு எதிர்கடை வேண்டும் என்று எமது முன்னவர்கள் சொன்னார்கள். அவர்கள் மறந்தும் கலிபோனியாவிலுள்ள விவசாயப் பண்ணையின் செயற்கைகூடத்தில் உயிரணுதொழில்நுட்பமுறை மூலம் பயிரிடப்பட்ட கீரை தாய்லாந்தில் பொதிசெய்யப்பட்டு TESCO பல்பொருள் அங்காடியினரால் பிலாவடி மூலையில் சந்தைப்படுத்தப்படுவதை கற்பனை செய்தும் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் சிந்தித்திருப்பின் வேலுப்பிள்ளையரும் ஆறுமுகத்தானும் நேரத்துடன் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு பிலாவடிமூலையில் அமைந்திருந்திருக்கக்கூடிய TESCO வின் முன்னால் துண்டைவிரித்து அதில் விழும் செப்பு நாணயங்களுக்காக தவம் கிடக்கும் நிலைதான் இன்று ஏற்பட்டிருக்கும்.
போட்டிசந்தைக்கு சில முன்நிபந்தனைகள் உள்ளன என பொருளியலாளர்கள் சொல்வர். அவற்றை முறையாக கடைப்பிடிக்காது விட்டால் நலிந்தவரின் பொருளாதாரம் நட்டாற்றில்தான். மெக்சிக்கோ ஆர்யென்ரீனா தொடக்கம் நமக்கு கிழக்கேயுள்ள இந்தோனேசியா தாய்லாந்து வரை இந்த போட்டிச் சந்தைமுறைமையை சரிவர புரிய மறுத்த பயனை இன்றும் அனுபவிக்கின்றன. ஆயானபலவான் அமெரிக்காகூட அப்பப்ப சந்தைப்போட்டியில் சிலப்பல தடைகளை போடுவது வழமை. போட்டி என்ற பொய்யான மாயையின் வசப்பட்டு 'நாட்டை' முழுதாகத் திறந்து விட்டால் நமக்குத்தான் நட்டம்.
இந்திய பேரூடகங்களையும் நமது சிற்றூடகங்களையும் ஒரேமல்யுத்த மேடையில் ஒன்றாக மோதவிட்டால் நம்மால் ஒன்றிரண்டு சுற்றுக்களுக்குத்தானும் தாக்குப்பிடிக்க முடியுமோ என்பது சந்தேகம்தான். அவர்களிடம் அனுபவ பலம் ஆட்பலம் அரச பலம் பணபலம் இப்படி பல்பலங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்து களமாடுவது அவர்களுக்கு ஒன்றும் பெரிதல்ல. நம்மிடம்இருக்கும் ஓரேபலம் நம்மவர் மட்டும்தான். அந்தப்பலத்தை நமதுகையினுள் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று நம்மவர் எண்ணுவதில் எந்த தப்பும் இருப்பதாய் தெரியவில்லை.
பொதுசன ஊடகம் என்பது தனியே ஒரு பொழுதுபோக்கு சாதனம் அல்ல. அப்படி 'நமது' அம்மையார் எண்ணியிருந்தால் பாதுகாப்புத்துறைக்கு சமனான துறையாக அதனைக்கருதி பறித்தெடுத்திருக்மாட்டார். எந்தவொருநாட்டிலும் ஒரு புரட்சி அல்லது மாற்றம் ஏற்படுகின்றது என்றால் யாவரும் முக்கியமாக குறிவைக்கும் இடத்தில் இந்த ஊடகத்துறையும் ஒன்று என்பதை நாம் மறந்து விடக்கூடாது. மக்களின் கண்களாயும் காதுகளாயும் இருக்கும் ஊடகங்களின் போக்கில் அந்த ஊடகம் இலக்கு வைக்கும் சமூகத்தில் அக்கறையுள்ளவர்கள் கவனம் செலுத்த வேண்டியது தவிர்க்கமுடியாததாகின்றது. இந்த இந்திய ஊடகங்கள் இலக்கு வைக்கும் இந்த சமூகம் மற்றைய சமூகங்களைப் போன்ற சாதாரண சமுதாய வாழ்வியல் நடைவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு குழுமம் அல்ல. இவை இனவிடுதலைக்காகப் போராடும் ஒரு இனத்தின் ஊற்றுக்கண்கள். அந்த ஊற்றுக்கண்களுக்கு ஆபத்து விளைவிற்கக்கூடிய எந்தவொரு காரணியையும் களைந்தெறிய வேண்டிய கடப்பாடு அந்த சமூகத்தைச் சாருகின்றது.
எம்மத்தியில் இன்று இருக்கும் எம்மவரின் சில ஊடகங்களின் தரம் போற்றிப் புகிழ்ந்திடக்கூடிய முறையில் இல்லைத்தான். அதற்கான காரணத்தை நாம் விளங்கிக்கொள்ள முயல்வது நன்று. அதற்கு நாம் வழங்கும் ஆதரவு பங்களிப்பு என்பன அவற்றின் தரத்தை முன்நோக்கி நகர்த்த உதவும். அதன் தரம் உயர்ந்தால்தான் நான் அதற்கு ஆதரவு கொடுப்பேன் என்று தர்க்கிப்பது இன்றைய காலத்திற்கு ஒவ்வாதது.
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
சொல்ல வந்ததை விட மக்களின் சிந்தனை எந்த மட்டம் என்பது எனக்கு நல்லா விளங்கீட்டுது. புலம் பெயர் தமிழினத்தை இனி யாரும் காப்பாற்ற முடியாது. புலம் பெயரில் ஒரு தமிழினம் இருந்தது எண்டு தாயகத்திலை மறக்காமல் கதைப்பினம். காரணம் அங்கை உந்த போலிகளுக்கு இடமில்லை. நான் ஒரு கேள்வியுடன் இதை முடிக்கிறேன். போட்டிக்காக எந்த குப்பைகளையும் உள்வாங்க தயாராக தமிழர்கள் இருந்தால் ஏன் நாம் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் உள்வாங்க கூடாது? நமது மொழியில் நு}ற்றுக்கணக்கான எழுத்து, கதைக்கேக்கை பாசை புரியாத ஒருவருக்கு களபுளசள, இப்படி பல குறைபாடு இருந்தூம் ஏன் தமிழை நாம் கட்டிப்பிடித்து அள வேண்டும். டொச் கதைக்கேக்கை உரமாக இருக்கு, இத்தாலி கதைக்கேக்கை கவிதை போல இருக்கு, ஆங்கிலம் கதைக்கேக்க ஸ்ரைலா இருக்கு, பிறகேன் நமது தமிழ் மொழி! எனது கூக்குரலில் நியாயமில்லை என்பவர்க்கு இந்த கேள்விகள் சமர்ப்பணம். நன்றி வணக்கம்!
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இந்திய ஊடகங்கள் சினிமா விபச்சாரம் இதனை ஒதுக்குவோம்.
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
மணிமாறன் என்றை இரத்த அழுத்தத்தை மட்டுமல்ல என்றை கேள்விக்கும் பதில் தந்துள்ளார். நன்றி மணிமாறன்!
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
இன்னுமொரு கேள்வி?
தென்னிந்திய தமிழ் சினிமா பற்றி வக்காலத்து வாங்குபவர்களுக்கு ஒரு கேள்வி?
உலகளாவிய ரீதியல் இந்த தமிழ் படம் ஏதாவது சிறந்த பரிசு பெற்றுள்ளதா? சிங்களப்படங்களுக்கு கிடைத்த பரிசில்களும் உலகளாவிய வரவேற்பும் தென்னிந்திய தமிழ் படத்திற்கு உலகளவில் வெற்றி பெற முடியாமல் போன ஏன்? இந்த சினிமவையே பின்னணியாக கொண்ட இந்த தொலைக்காட்சிகள் தரம் வாய்ந்தவையா? சிங்கள் தொலக்காட்சி தொடர்கள் சில கூட சர்வதேச விருதை தட்டிச்செல்கையில் தென் இந்திய தொடர்கள் என்ன செய்து கிழித்தன? தரம் என்று நீங்கள் குப்பைக்கள் நின்றபடி தேடினால் ஒரு பொதும் கிடைக்காது. குப்பைகளை வீட்டக்கள் கொண்டுவர நினைப்பவர்களை யாரும் தடுக்கவும் முடியாது! ஆனால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதை வரலாற்றை பார்த்தவது திருந்துவோம். அரசில் என்பது போராட்டம் தான். ஆதில் ஒரு தார்மீகமான சண்டை இல்லாது போனால் அதில் அழகிருக்காது. ஆனால் எந்த வித யதார்த்தமுமற்ற தொலைக்காட்சி தொடர்கள் கiலைக்கே கழங்கம். அவற்றை வேறு வழியின்றி பாரக்கும் ரசிகன் அவைக்கே கழங்கம்! ரசனை என்பது தரம் குறையும் போது அதை பார்ப்பவர் தம் தரமும் குறையும்!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எந்த மொழி என்றாலும் கதையுங்கோ ஐரோப்பிய கலாசாரத்துக்க நுழையுங்கோ யார் வேண்டாம் என்றார்....! ஆனால் உங்கள் பெளதீகத்தோற்றம் அவர்கள் உங்களைத் தனித்துக்காட்டாப் போதுமானது......!
இப்ப BBC போல அமெரிக்க CNN Discovery வரேல்லையோ...அதை பிரிட்டன் ஏன் தடுக்கேல்ல...அமெரிக்க கொலிவூட் பிரிட்டனுக்க வரேல்லையோ...அதை ஏன் பிரிட்டன் தடுக்கேல்ல.....?! பிரிட்டன் மக்கள் பழமை விரும்பிகள் அமெரிக்கர்கள் அப்படியல்ல...அப்படி இருந்தும் பிரிட்டிஷ்காரர்கள் அமெரிக்க சினிமாவை உள்வாங்கவில்லையோ.....தங்களையும் அவர்களுக்கு நிகராக வளர்க்க முயற்சிக்கவில்லையோ.....???!
தற்போதைய இந்தப் பிரச்சனைக்கு காரணம் இவர்களின் மனங்களின் பலவீனமே தவிர ஊடகங்கள் அல்ல...இவர்கள் போட்டி போடக் கூடிய சூழலில் இன்றி தனித்து மற்றவனை விரட்டி வாழப்பழகிவிட்டார்கள்.....அதுதான் உண்மை....! அதன் தொடர்ச்சிதான் இதுவும்.....!
தாயகத்தில் இந்திய சினிமா தடை செய்யப்பட்ட போது கண்டோமே உங்கள் விடுதலையின் வேட்கையை...சினிமாவுக்காக கொழும்புக்கு குடிபெயர்ந்தவர்களும் போராளிகளைத் திட்டித்தீர்த்தவர்களும் எண்ணிலடங்கா......! இவர்களிடம் இந்திய சினிமாவல்ல எந்தக் குப்பையும் எடுபடும்.... வேண்டும் என்றால் அதைவிடக் குப்பையா நீங்கள் கொண்டுவந்து கொட்டுங்கோ சனம் விழுந்தடிச்சுப் பாக்கும்....!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
கடைசியாக ஒரு உதாரணம். கடந்க 27ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவரின் உரை! உலகநாட்டு செய்தி ஊடகங்கள் மிக முக்கியம் கொடுத்து செய்து வெளியிட்டது. அதை நான் பட்டியல் கூட போட்டுக்காட்டினோன். இந்திய ஊடகங்கள் அனைத்துக்கும் விஜயம் செய்தேன். ஒரு மூச்சக் கூட காட்வில்லை. இதுக்குப் பிறகும் உங்களுக்கு விளங்காட்டி????
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
எங்கப்பா மணிமாறன் . . .
திறமான பதில் . . .
எனக்குத் தெரிஞ்சு ஈழத்தமிழன் கமராவை து}க்கினா . . ஏதோ கலியாண வீடு . .இல்லாட்டா பிறந்தநாள் கொண்டாடத்துக்காக தான் இருக்கும் . . . தீபமும் ரிரின்னும் வந்தபிறகு தான் . .ஏதோ . .பாட்டு எடுக்கிறன் . .படம் எடுக்கிறன் . .பேட்டி எடுக்கிறன் எண்டு திரியிறாங்கள் . . இப்பதானே தொடங்கியிருக்கிறாங்கள் . . யாதார்த்தத்தைப் விளங்கி கொண்டு . . பொறுத்திருப்போம் .. திறமான படைப்புக்களை தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது . . .
எங்களுக்கு என்று ஒரு தனித்துவம் பேண வேண்டும் என்றால் எம்மவரின் முயற்ச்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வளர்த்து விடுவம் . .
மிகக் கவலையான விடயம் என்னவென்றால் . .நாமெல்லாம் வெளிநாடுகளில் தானே இருக்கிறம் . . அந்தந்த நாடுகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளை தப்பித்தவறி எண்டாலும் பார்க்கிறம் தானே . . . தொலைக்காட்சி என்றால் என்ன என்று அதைப்பார்த்தாவது நாம் விளங்கியிருக்க வேண்டும் . .
தயவுசெய்து ஒப்பிடும்போது பிபிசி சிஎன்என் தரத்தை குறிப்பிடுங்கள் . .
எம்மவரின் தொலைக்காட்சிகளுக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் . .
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இஞ்ச பாருங்கோ முகமட் நாங்கள் திரையில வாரதத்தான் பாக்கிறம்...அது கண்ணுக்கு மனசுக்கு பிடிச்சிருந்தா கொஞ்சம் நேரமெடுத்து பாக்கிறம்...மனசுக்குப் பிடிக்கிற மாதிரிக்காட்டுறதும் அதற்கூடாக மக்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லுறதும் தொலைக்காட்சிக்காரற்ற கையில இருக்கு அதைவிட்டுட்டு...சனத்தை இதுதான் பார் எண்டு எவரும் கட்டளையிட்டுப் பார்கக் வைக்க ஏலாது.... இது நாம் யதார்தத்தில் கண்ட உண்மை....!அதுவும் தமிழ் சனத்தட்ட முடியவே முடியாது.....!
அத்தோட இதுவிடயத்தில சினிமா நிகழ்சியை பகிஸ்கரிக்கக் காட்டிய அளவு எதிர்ப்பு இளவட்டங்களட்ட இருந்து வரேல்ல...ஏன்....பல்கலைக்கழகங்களில அந்த 'டான்ஸ்'தானே போடினம்...போட வேணும்....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
குருவிகாள் நீங்கள் என்ன விசர்க்கதை கதைக்கிறீங்கள் . .
பிரிட்டனில் நீங்கள் கொலிவூட் தயாரிப்புகளும் பார்கலாம் இல்லையென்று சொல்லவில்லை . . ஆனால் . . பிரிட்டன் தயாரிப்புக்களுக்குதான் இங்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் . . அவர்கள் தங்களுக்கென்று தனித்துவம் பேணுகிறார்கள் . . உள்ளுர் தயாரிப்புகளுக்கு . .அரசாங்கம் தொடக்கம் தனியார் வரை பண உதவி செய்கிநார்கள் . . உள்ளுர் தாயாரிப்புகளை ஊக்குவிக்கிறார்கள் . . .
குருவிகாள் !!!!
எமது மக்களை மந்தைகளாக மாற்றும் உங்கள் யோசனைகளை திருப்பி ஒருதரம் வாசிக்கவும் . .
எம்மவரின் தொலைக்காட்சிகள் திறமாக வரவேண்டும் அதற்கான ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வையுங்கள் . . .
அவன் குப்பையை காட்டுறான் . .எண்டா . .நீங்க அதைவிட குப்பையா காட்டுங்கோ எண்டுறீங்கள் . . .
உது என்ன கதை ??? . .
நீங்கள் புலம்பெயர் தமிழரை பற்றி உன்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்கள் . .
மிக மிக மட்டமாக எடைபோடுகிறீகள் . .
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
யாரும் யாராயும் கட்டளையிடவில்லை. கஞ்சா நல்ல சமான் தான் அடிச்சா மணியா இருக்கும், பாதிப்பு கன நாளைக்கு பிறகு தெரியும். தாயகத்தில் சினிமாவை தடைசெய்த படியால் தான் இப்ப ஓரளவு நல்ல படங்களை எடுக்கினம். அதிலை ஏதும் நீங்கள் பார்தீங்களோ எண்டதும் எனக்கு சந்தேகம் தான். புலிகளின் கட்டுப்பாடு இல்லாத பகுதி மினிசினிமாவில் காட்டின படங்கள், அங்கு நடை பெற்ற கூத்து இப்பதான் கொஞ்சம் அடங்கியிருக்கு. சல விடயங்களில் தடை தேவைதான். இது நம்ம நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலும் இருந்தது. 70களில் 80கநிலும் பை இந்தியன் பீ இந்தியன் எண்ட தடை இருந்தது தெரியுமோ! அதாவது இந்திய பொருட்களேயே வாங்குங்கள், இந்தியனாக இருங்கள் எண்டு. இப்ப அவை முன்னேறீட்டினம் மற்றைவையை கெடுக்கினம். அவ்வளவுதான். இந்தியாவில் நம்மவர்களை முன்னுக்கு வர விடுவார்களா என்று அங்கு போய் முயற்சித்தவை சொன்ன கதைகளை கேட்ட பின்தான் தடையை நானும் நியாயப்படுத்துகிறேன். போய் ஒருக்கா முயற்சித்துட்டு வாங்கோ பிறகு புரியும்!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தம்பி ராசா கொஞ்சம் அவசரப்படாம வாசிங்கோ....இவ்வளவு காலமும் உங்கட தொலைக்காட்சிகள் இந்தியச் சினிமாப்படம் போட்டதோ போடேல்லையோ....சன் ரீவி செய்திகளை மறு ஒளிபரப்புச் செய்ததோ செய்யவில்லையோ....ஏன் ஒரு கொலிவூட் படத்தை டப்பிக் செய்து போட்டிருக்கலாம்...அல்லது சர்வதேச செய்தி நிறுவனங்களட்ட இருந்து செய்திகளைப் பெற்று சுடச்சுடப் போட்டிருக்கலாம்...ஏன் அப்படிச் செய்யாமல் அவங்களை நாடிப் போனனீங்கள்....?????!அப்ப அதுகள் குப்பையா இல்லாமல் பொன் முட்டை வாத்துக்களோ...இப்ப திடீரென குப்பையானது எப்படி.....????! நீங்கள் அவங்கட நாடகங்கள் போட சனம் அதை பதிவு செய்து வீடுவீடா கசற்றுங்கள் ஏறி இறங்கினத நாங்கள் கண்டனாங்கள்...அப்ப அந்தக் குப்பைகளைக் கொட்டினது யார்......?????!
இப்ப நீங்கள் காட்டிய பாதையில் அவங்கள் நேரா வந்து பயணிக்கிறாங்கள்....சனத்தை அவங்களுக்குக் காட்டினது யார்...?! சனத்துக்கு அவங்களைக்காட்டினது யார்...?! கொழும்பிலும் இதே கதிதான்.....! இப்ப யாழ்ப்பாணமும் இதே நிலையில்தான்...?!ஆனா வன்னி மட்டும் கொஞ்சம் திருத்தம்.....நிதர்சனம் எப்ப சர்வதே அளவில் வருமோ அன்றைக்குத்தான் ஈழத்தமிழனின் ஊடகத்தின் உண்மையான தோற்றம் தெரியும் அதுவரைக்கும் நிலமை இப்படித்தான் இருக்கும்...!
நன்றி வணக்கம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
உங்களை மாதிரி குப்பையை ரசிக்கிற ஆக்களை ஜனநாயகம் எண்ட பேரிலை திருப்பதி படுத்வேணும் எல்லே. புலம் பெயர் தொலைக்காட்சிக்கு உதவ யாரும் இல்லை. ரசிகர்களின் மட்டத்திலை இருந்து தான் அதவும் வளரவேணம். இருந்தாலம் அதிலை தரமான நம்மட படைப்பு ஒரு நாளைக்கு வரும். நிதர்சனம் கூட அங்கை அல்லல் படுவது தென் இந்திய குப்பையாலை தான். அத தனது தடைகளை தாண்டி வளரும் நாள் வெகுதெலைவில் இல்லை. அட நிதர்சனம் பற்றியெல்லாம் தெரிஞ்சுவைச்சிருக்கிறியள். பரவாயில்லை கொஞ்சமாவது கரிசனை இருக்கு அது போதும். தென் இந்தி தொடர் எல்லாம் குப்பையென்று நான் ஒதுக்க வில்லை. தென்னிந்திய தொiலைக்காடசிகள் தான் மொத்தக் குப்பை! நான் சொல்ல வாற விடயம். நமது தொலைக்காடசி வளர வேண்டுமயின் அதன் குப்பை கூட நமது தொலைக்காட்சியில் வரட்டும். நமது படைப்புகளும் வரட்டும். திறமையுள்ளவன் வெற்றி பெறுவான். ஆனால் முதலைகள் போல் நமது தொலைக்காட்சிகளை விழுங்கிட்டு அவர்கள் வருவதை தான் நான் எதிர்கிறோன்!
Posts: 14
Threads: 4
Joined: Nov 2003
Reputation:
0
[i]சில விசக் கிருமிகளுக்குப் பயந்து நீங்கள் எல்லோரும் ஏன் இந்திய ஊடகத்திற் எதிராக கருத்து தெருவிக்கிறிர்கள்???
Posts: 14
Threads: 4
Joined: Nov 2003
Reputation:
0
சில விசக் கிருமிகளுக்குப் பயந்து நீங்கள் எல்லோரும் ஏன் இந்திய ஊடகத்திற்கு எதிராக கருத்து தெருவிக்கிறிர்கள்???
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
காட்டிகொடுப்பவர்கள் நம்மவர்கள்தான்.
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
கருத்து சொந்தக் கருத்து! விசக்கிருமி தென் இந்திய ஊடகங்கள் தான்! நடப்பு உடுப்பை பாத்தால் ஏஜனட் போலை! ம் நல்லா வாங்குங்ககோ! நீங்கள் ராக்கோழியோ அல்லது <span style='font-size:30pt;line-height:100%'>ரோ</span>க்காழியோ?????