Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ அபிவிருத்தியில் யாழ்ப்பாண கொலைகள்
#1
தமிழீழ அபிவிருத்தியில் அக்கறை கொண்ட பேராசிரியர்கள் சிலர், அண்மையில் சுனாமி அனர்த்தத்தின் போது, கனேடிய மருத்துவர்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களையும் தம்முடன் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு அழைத்து சென்று, தமிழீழம் பற்றிய அறிவை இவர்கள் மூலம் தாம் சார்ந்த கனேடிய பல்கலைக்கழக சமுதாயத்துக்கு வளர்த்தெடுத்தார்கள்.

இவர்களது பெரு முயற்சியின் பயனாக அரச மட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தில், அநர்த்த நிவாரண தீர்வுத்திட்டங்களை செயற்படுத்தி பார்க்கும் ஆய்வுகளுக்கும் பங்கு வழங்கப்பட்டு, குறிப்பாக சிறிலங்காவுக்கு என பெரும் தொகைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆய்வுகளின் பெயரால் நிவாரண திட்டங்களை தமிழீழத்தில் செயற்படுத்துவதும், ஒதுக்கபட்ட பணத்தில் பெறுமதிமிக்க இயந்திரங்களை தமிழீழத்துக்கு கொண்டு சென்று செயற்பட வைப்பதுமே இவர்களது திட்டமாகும்.

ஆய்வுகளுக்கு அரசு பகிரங்கமாக விண்ணப்பங்கள் கோரி, ஒரு குழுவை கொண்டு விண்ணப்பங்களை தெரிவு செய்வதுதான் அவர்களது முறையாகும். இவர்களும் திட்டமிட்டபடி விண்ணப்பங்கள் கோரப்பட்டவுடன் விண்ணப்பித்தார்கள். முதலாவது ஆய்வு மண்வள அபிவிருத்தி பற்றியது. அது பற்றிய அறிஞரான, அண்மையில் வன்னி சென்று ஒரு செயற்திட்டத்தை நிறைவேற்றிவிட்டு வந்த பேராசிரியர் ஒருவர், தனது விண்ணப்பத்தை சமர்ப்பிந்திருந்தார். அவருக்கு போட்டியாக, தென்பகுதியில் ஆய்வு செய்ய விரும்புவதாக வேறு ஒரு பேராசிரியரும் விண்ணப்பிந்திருந்தார். தென்பகுதி விண்ணப்பமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, பணம் இயந்திரங்கள் எல்லாம் சிறிலங்காவின் தென்பகுதிக்கு செல்ல இருக்கின்றன.

முற்றிலும் தமிழீழ ஆதரவாளரின் முயற்சியால் ஒதுக்கப்பட்ட பணம், சிறிலங்காவின் தென்பகுதிக்கு அனுப்படுகிறது. இவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டதற்கு காரணம், வட கிழக்கில் தொடரும் கொலைகளாகும். சிறிலங்காவினதோ அல்லது தமிழீழத்தினதோ, அல்லது இவர்களது கூட்டு நிர்வாகத்தினதோ பாதுகாப்பு, இந்த பிரதேசங்களில் போதுமானதாக இல்லை என்றும், கிளிநொச்சியில் பாதுகாப்பு இருந்தாலும், யாழ்ப்பாணத்தில் போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஆய்வு முயற்சியில் வடக்கில் பணத்தை செலவிட தயாராக இல்லை என்றும், இந்த கனேடிய அரசு அறிவித்து விட்டது.

அடுத்த சிறிலங்காவிற்கான ஒதுக்கீடு 5 மில்லியன் டொலர்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு நிவாரணம் வழங்கும் திட்டம். அது குறித்த துறையில் ஆய்வாளாராக இருக்கும் ஒருவரை விரைவாக கண்டுபிடித்து தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இதையும் மேற்படி காரணம் காட்டி தென்பகுதிக்கே அனுப்பி விடுவார்கள் போல தெரிகிறது.

யாழ்ப்பாணத்தில் கொலைகள் தொடரும்வரை, தமிழீழ ஆர்வலர்கள் தமது நிறுவனங்களில் சிறிலங்காவுக்கு பணஉதவி கோரினால், அது தென்பகுதிக்கு போவதை தடுக்க முடியாது போலவே தெரிகிறது.
''
'' [.423]
Reply
#2
சிரிக்க வேண்டிய விடயம் இல்லை ஆனால் சிரிப்பைத்தவிர எதுவும் வரவில்லை..

கனடிய அரசு இயந்திரத்தையும் பணத்தையும் நேரடியாய் அனுப்பலாமா... வடபகுதியில் அதுவும் புலிகள் பகுதிக்கு அனுப்ப முடியும் எண்டது வேடிக்கைதான்... அனர்த்த நிதியும் பொருட்களும் அனுப்பிய இத்தாலிய இராஜாங்கச் செயலகத்தை எப்பிடி எல்லாம் விமர்சித்தார்கள்.....இந்தியா மேலும் கீழும் குதித்ததே (நிருபம்மா ராவ்) அதுவும் நோர்வே படுறபாட்டைப் பார்த்தபின் எந்த அரசும் நேரடி உதவிக்கு வருமா..??.. கனடிய அரசு கொடுக்கக் கூடாது எண்டு முடிவு எடுத்தபின் சொல்வதுக்காக காரணங்களா இல்லை.... ( கொழும்பு பாதுகாப்பானதா..?? வேறு இடங்களில் எங்கு பாதுகாப்பு இருக்கு)

தமிழீழ அரசு அமையட்டும் பின்பு வேண்டுமானால் இது சம்பந்தமான விமர்சனங்கள் எழுமா பாப்பம்..!
::
Reply
#3
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--> சிரிக்க வேண்டிய விடயம் இல்லை ஆனால் சிரிப்பைத்தவிர எதுவும் வரவில்லை..  
கனடிய அரசு இயந்திரத்தையும் பணத்தையும் நேரடியாய் அனுப்பலாமா... வடபகுதியில் அதுவும் புலிகள் பகுதிக்கு அனுப்ப முடியும் எண்டது வேடிக்கைதான்...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


கனேடிய அரசு, கனேடிய ஆய்வாளரான பேராசிரியருக்கு ஒதுக்கும் நிதி, சிறிலங்காவில், சுனாமி பாதித்த பிரதேசத்தில் மண்வள ஆய்வு செய்ய பயன்பட வேண்டும், என்ற கட்டுப்பாட்டை கொண்டதாக அமையுமாறு, தமிழீழ ஆதரவாளர்கள் அரசுக்கு நெருக்குதல் கொடுத்தார்கள். தமிழ் பேசும் கனேடிய பேராசிரியர் இதற்கு விண்ணப்பித்திருந்தார். அவர் சமர்ப்பித்த திட்டத்தின் படி, முல்லைத்தீவு பிரதேசத்தில் ஆய்வு செய்யப்பட இருந்தது. அதற்கான இயந்திரங்களை அவரே வாங்கி, முல்லைத்தீவில் பொருத்தி, செயற்பட செய்து, ஆய்வு முடிவில் அவற்றை தமிழீழ நிருவாகத்திடம் கையளிப்பதாக, அவர் திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாண கொலைகளை காரணம் காட்டி அவரது திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.


<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->   கனடிய அரசு கொடுக்கக் கூடாது எண்டு முடிவு எடுத்தபின் சொல்வதுக்காக காரணங்களா இல்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


கனேடிய அரசு, பல ஆபிரிக்க இனத்தவருக்கு பெருமளவு நிதி உதவிகளை, பல்வேறு விதங்களில் செய்கிறது. நீங்கள் சொல்வது உண்மையானால் இப்படி கனேடிய அரசு தமிழருக்கு மட்டும் நிதி உதவி செய்ய விரும்பாமைக்கு நீங்கள் காணும் காரணத்தை தெரிவியுங்கள்?

<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->  
தமிழீழ அரசு அமையட்டும் பின்பு வேண்டுமானால் இது சம்பந்தமான விமர்சனங்கள் எழுமா பாப்பம்..!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


உங்களது கருத்தை எனது நண்பரான பேராசிரியருக்கு தெரிவித்தேன். அவர் தான் கிளிநொச்சி சென்றபோது அவர்கள் கேட்டுக் கொண்டதாலேயே இப்படியாக முயற்சி செய்ததாகவும், இனிமேல் அவர்கள் கேட்டாலும் கூட, நீங்கள் சொல்வது போல, தமிழீழம் ஒரு அங்கிகரிக்கப்பட்ட தனி நாடாகும் வரை, தான் இவ்வாறான முயற்சியில் ஈடுபட போவதில்லை என்றும் கூறினார். உங்களது ஆலோசனைக்கு தனது நன்றியையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
''
'' [.423]
Reply
#4
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Thala+--><div class='quotetop'>QUOTE(Thala)<!--QuoteEBegin--> சிரிக்க வேண்டிய விடயம் இல்லை ஆனால் சிரிப்பைத்தவிர எதுவும் வரவில்லை..  
கனடிய அரசு இயந்திரத்தையும் பணத்தையும் நேரடியாய் அனுப்பலாமா... வடபகுதியில் அதுவும் புலிகள் பகுதிக்கு அனுப்ப முடியும் எண்டது வேடிக்கைதான்...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


கனேடிய அரசு, கனேடிய ஆய்வாளரான பேராசிரியருக்கு ஒதுக்கும் நிதி, சிறிலங்காவில், சுனாமி பாதித்த பிரதேசத்தில் மண்வள ஆய்வு செய்ய பயன்பட வேண்டும், என்ற கட்டுப்பாட்டை கொண்டதாக அமையுமாறு, தமிழீழ ஆதரவாளர்கள் அரசுக்கு நெருக்குதல் கொடுத்தார்கள். தமிழ் பேசும் கனேடிய பேராசிரியர் இதற்கு விண்ணப்பித்திருந்தார். அவர் சமர்ப்பித்த திட்டத்தின் படி, முல்லைத்தீவு பிரதேசத்தில் ஆய்வு செய்யப்பட இருந்தது. அதற்கான இயந்திரங்களை அவரே வாங்கி, முல்லைத்தீவில் பொருத்தி, செயற்பட செய்து, ஆய்வு முடிவில் அவற்றை தமிழீழ நிருவாகத்திடம் கையளிப்பதாக, அவர் திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாண கொலைகளை காரணம் காட்டி அவரது திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.


<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->   கனடிய அரசு கொடுக்கக் கூடாது எண்டு முடிவு எடுத்தபின் சொல்வதுக்காக காரணங்களா இல்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


கனேடிய அரசு, பல ஆபிரிக்க இனத்தவருக்கு பெருமளவு நிதி உதவிகளை, பல்வேறு விதங்களில் செய்கிறது. நீங்கள் சொல்வது உண்மையானால் இப்படி கனேடிய அரசு தமிழருக்கு மட்டும் நிதி உதவி செய்ய விரும்பாமைக்கு நீங்கள் காணும் காரணத்தை தெரிவியுங்கள்?

<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->  
தமிழீழ அரசு அமையட்டும் பின்பு வேண்டுமானால் இது சம்பந்தமான விமர்சனங்கள் எழுமா பாப்பம்..!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


உங்களது கருத்தை எனது நண்பரான பேராசிரியருக்கு தெரிவித்தேன். அவர் தான் கிளிநொச்சி சென்றபோது அவர்கள் கேட்டுக் கொண்டதாலேயே இப்படியாக முயற்சி செய்ததாகவும், இனிமேல் அவர்கள் கேட்டாலும் கூட, நீங்கள் சொல்வது போல, தமிழீழம் ஒரு அங்கிகரிக்கப்பட்ட தனி நாடாகும் வரை, தான் இவ்வாறான முயற்சியில் ஈடுபட போவதில்லை என்றும் கூறினார். உங்களது ஆலோசனைக்கு தனது நன்றியையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
தெற்கு பாதுகாப்பான பிரதேசம் என உலகநாடுகள் கருதினால், நாங்கள் என்ன செய்ய? குமார்பொன்னம்பலம் சிவராம் போன்றவர்கள் தெற்கில் வைத்துத்தானே கொல்லப்பட்டார்கள். தல சொல்வதுபோல மனம் இருந்தால் இடம் உண்டு பாருங்கோ.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#5
<!--QuoteBegin-ஜுட்+-->QUOTE(ஜுட்)<!--QuoteEBegin-->
<!--QuoteBegin-Thala+--><div class='quotetop'>QUOTE(Thala)<!--QuoteEBegin-->கனடிய அரசு கொடுக்கக் கூடாது எண்டு முடிவு எடுத்தபின் சொல்வதுக்காக காரணங்களா இல்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


கனேடிய அரசு, பல ஆபிரிக்க இனத்தவருக்கு பெருமளவு நிதி உதவிகளை, பல்வேறு விதங்களில் செய்கிறது. நீங்கள் சொல்வது உண்மையானால் இப்படி கனேடிய அரசு தமிழருக்கு மட்டும் நிதி உதவி செய்ய விரும்பாமைக்கு நீங்கள் காணும் காரணத்தை தெரிவியுங்கள்?
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்ன விளங்கதாதமாதிரிச் சொல்லுறீங்க... புலிகளை தடை செய்து இலங்கையில தங்களின் நிலைகளை திடமாக்கும் எண்ணம் உள்ள எந்த நாடும் செய்ய விரும்பும் செயல்தான்.. இலங்கை அரசின் அரசின் (விரும்பியோ விரும்பாமலோ) தென்னாசிய, ஆசிய, மத்தியகிழக்கின், மத்தியில் கடலில் உள்ள ஒரு நாட்டை அதை ஆட்ச்சி செய்பவரக் குளிர்விப்பதால் என்ன லாபமோ அதுதான்...

அதுக்காக விடுதலைப் புலிகளை ஒருநாள் ஆதரிக்கும் நிலையையும் அவர்கள் எடுப்பார்கள்.... கொங்கோ போராளிகளை ஆதரிப்பதுபோல்.... எரித்திரியாவை அங்கீகரிச்சதுபோல்...
::
Reply
#6
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ஜுட்+--><div class='quotetop'>QUOTE(ஜுட்)<!--QuoteEBegin-->
<!--QuoteBegin-Thala+--><div class='quotetop'>QUOTE(Thala)<!--QuoteEBegin-->கனடிய அரசு கொடுக்கக் கூடாது எண்டு முடிவு எடுத்தபின் சொல்வதுக்காக காரணங்களா இல்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


கனேடிய அரசு, பல ஆபிரிக்க இனத்தவருக்கு பெருமளவு நிதி உதவிகளை, பல்வேறு விதங்களில் செய்கிறது. நீங்கள் சொல்வது உண்மையானால் இப்படி கனேடிய அரசு தமிழருக்கு மட்டும் நிதி உதவி செய்ய விரும்பாமைக்கு நீங்கள் காணும் காரணத்தை தெரிவியுங்கள்?
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்ன விளங்கதாதமாதிரிச் சொல்லுறீங்க... புலிகளை தடை செய்து இலங்கையில தங்களின் நிலைகளை திடமாக்கும் எண்ணம் உள்ள எந்த நாடும் செய்ய விரும்பும் செயல்தான்.. இலங்கை அரசின் அரசின் (விரும்பியோ விரும்பாமலோ) தென்னாசிய, ஆசிய, மத்தியகிழக்கின், மத்தியில் கடலில் உள்ள ஒரு நாட்டை அதை ஆட்ச்சி செய்பவரக் குளிர்விப்பதால் என்ன லாபமோ அதுதான்......<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
[size=20]
நீங்கள் விளக்கமாக சொல்லக் கூடாதா? கனடா விடுதலைப்புலிகளை தடை செய்யாத நாடுகளில் ஒன்று. 200 ஆயிரம் தமிழர்களில் பெரும்பாலானோர், வாக்குப்போடும் கனேடியர். வாக்கு போடுவதுடன் நிற்காது, பாராளுமன்ற பிரதிநிதிகள், அமைச்சர்களுக்கு கடிதம் எழுதுவதும், நேரில் கண்டால் கேள்வி கேட்பதும், கேட்ட கேள்விக்கு பதில் சரியாக கிடைக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் பண்ணுவதும், உதவி செய்தால் ஓடி ஓடி வாக்கு சேர்த்து கொடுப்பதும் என்று, கனேடிய தமிழர் இங்கே சில சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகளின் பதவியையே தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார்கள். இதனால்தான் விடுதலைப்புலிகள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டாலும், கனடாவில் தடை செய்யப்படவில்லை. இந்த செல்வாக்கால் தான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்திக்கும் பணம் ஒதுக்கப்பட்டது.
<img src='http://www.ftlcomm.com/ensign/editorials/LTE/fernandes/fernandeslist/fernandes008/cover.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://zone.artizans.com/images/previews/MAY1219.300.jpg' border='0' alt='user posted image'>
கனேடிய பிரதமரும் தமிழர் ஆதரவாளருமான போல் மார்ட்டின் பற்றிய நகைச்சுவை சித்திரங்கள் இவை.

நீங்கள் சொல்வது போல சிறிலங்கா அரசை மகிழ்விப்பதால், கனேடிய அரசுக்கு அல்லது அரசியல்வாதிகளுக்கு ஏதாவது இலாபம் இருந்தால், அது கனேடிய தமிழரை பகைப்பதால் வரும் இழப்பிலும் மேலாக இருக்குமானால், அதை நாம் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டாமா? அவை எவை என்று தெரிந்த நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டும்.
''
'' [.423]
Reply
#7
ஜூட் நீங்கள் எதை எதிர்பார்க்கின்றீர்கள்? எதிரி எழுதுகின்றானோ இல்லையோ. நீங்கள் எடுத்து கொடுப்பீர்கள் போல தோன்றுகின்றது. நடத்துங்கோ நடத்துங்கோ. இவற்றிற்கான பதில்களை அறிந்து நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்?
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#8
<!--QuoteBegin-iruvizhi+-->QUOTE(iruvizhi)<!--QuoteEBegin-->ஜூட் நீங்கள் எதை எதிர்பார்க்கின்றீர்கள்? எதிரி எழுதுகின்றானோ இல்லையோ. நீங்கள் எடுத்து கொடுப்பீர்கள் போல தோன்றுகின்றது. நடத்துங்கோ நடத்துங்கோ. இவற்றிற்கான பதில்களை அறிந்து நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏற்கனவே தமிழீழ பிரதேசத்துக்கு என்று அவரைப்பிடித்து இவரைப்பிடித்து கனடிய அரசை ஒதுக்க வைத்த பணத்தில் சில மில்லியன்கள் தென்னிலங்கைக்கு போகப்போகிறது. அடுத்த 5 மில்லியனையாவது தமிழீழ பிரதேசத்துக்கு அனுப்ப வைக்கலாம் என்ற நப்பாசைதான். வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். நன்றி.
''
'' [.423]
Reply
#9
வணக்கம் மேன்மைதங்கிய ஜூட்!

கனடிய அரசின் அதியுயர் ஆலோசகராக இருக்கும் தங்களின் ரோதனை தாங்கமுடியவில்லை! ஏதோ நீங்கள் தனி மனிதனாக நின்று கனடிய அரசின் உதவிகளை ஈழத்தை நோக்கித் திருப்புவதற்கு மேற்கொள்ளும் போராட்டாங்கள், இந்த உண்டியலானை புல்லரிக்க வைக்கிறது! .......ஓஓஓஓஒ.......

........ஏதோ என்னை மாதிரி எங்கேயேனும் நக்கிச் சுத்திக் கொண்டு குப்புறப் படுக்கிறதுக்கு கதை வேறு! விட்டால் வானத்தைப் புட்டுப்போட்டு சந்திரனையும் கொண்டு வந்துடூவியள்! ரோகரா!!!!!!............
Reply
#10
<!--QuoteBegin-ஜெயதேவன்+-->QUOTE(ஜெயதேவன்)<!--QuoteEBegin-->வணக்கம் மேன்மைதங்கிய ஜூட்!

கனடிய அரசின் அதியுயர் ஆலோசகராக இருக்கும் தங்களின் ரோதனை தாங்கமுடியவில்லை! ஏதோ நீங்கள் தனி மனிதனாக நின்று கனடிய அரசின் உதவிகளை ஈழத்தை நோக்கித் திருப்புவதற்கு மேற்கொள்ளும் போராட்டாங்கள், இந்த உண்டியலானை புல்லரிக்க வைக்கிறது! .......ஓஓஓஓஒ.......

........ஏதோ என்னை மாதிரி எங்கேயேனும் நக்கிச் சுத்திக் கொண்டு குப்புறப் படுக்கிறதுக்கு கதை வேறு! விட்டால் வானத்தைப் புட்டுப்போட்டு சந்திரனையும் கொண்டு வந்துடூவியள்! ரோகரா!!!!!!............<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


கனேடிய அரசுக்கு நான் உட்பட பலர் பல ஆலோசனைகளை பல சந்தர்ப்பத்தில் வழங்கியிருக்கிறோம். குறிப்பாக எனது ஒரு குறிப்பிட்ட ஆலோசனை குடிவரவு சட்டத்தில் சட்டமாற்றமாகவும் வந்திருக்கிறது.

இப்படியாக அரசுக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு ஆற்றல் உள்ள தமிழர் இல்லை என்று கருதுவதும் அல்லது அவ்வாறான தமிழர் தமிழீழம் சம்பந்தமாக யாழ் களத்தில் எழுதும் போது அவர்களை அவமதிப்பதும் தமிழீழ ஆதரவாளர் செய்யும் செயலல்ல. அறிவும் பண்பும் குறைந்த சில தமிழர் தம்மிலும் பார்க்க அறிவும் பண்பும் சிறந்த தமிழர் இல்லை என்று நினைக்க கூடும். அவர்களால் யாழ் களம் பாழ்படக்கூடாது. இவர்களின் அவமதிப்புகளால் பயனுள்ள விடயங்களை கலந்துரையாட எவரும் யாழ் களத்துக்கு வரவிரும்பாத நிலை வரலாம்.

யாழ். களத்தில் பயனுள்ள விடயங்களுக்கும் இடம் இருக்கிறது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். பயனுள்ள விடயங்களை எழுதுபவர்களை அவமதிப்பதற்கு என்றே எழுதுபவர்கள் குறிப்பாக தமிழீழ அபிவிருத்தி பற்றிய பயனுள்ள விடயங்களை எழுதாமல் தடுப்பதற்காகவே அவற்றை எழுதுபவர்களை அவமதிப்பவர்கள் அதை சாதாரணமாக செய்கிறார்கள் என்று கொள்ள முடியாது. இது ஒரு திட்டமிட்ட செயலாகவே தெரிகிறது. சிறிலங்கா அரசின் பல கூலிகள் யாழ் களத்திலும் எழுதுகிறார்கள் என்பதற்கு இத்தகைய எழுத்துக்கள் ஆதாரம்.

முன்னர் ஒரு காலத்தில் இவ்வாறான கலந்துரையாடல்களுக்கு தனியான ஒரு வழி இருந்தது. அதில் ஒருவரின் பின்புலம் அறிந்தே அவர் இணைத்துக் கொள்ளப்பட்டார். மீண்டும் அவ்வாறான ஒரு தளத்தின் தேவையை இந்தகையோர் அவமதிப்புகள் ஏற்படுத்துகின்றன.
''
'' [.423]
Reply
#11
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->முன்னர் ஒரு காலத்தில் இவ்வாறான கலந்துரையாடல்களுக்கு தனியான ஒரு வழி இருந்தது. அதில் ஒருவரின் பின்புலம் அறிந்தே அவர் இணைத்துக் கொள்ளப்பட்டார். மீண்டும் அவ்வாறான ஒரு தளத்தின் தேவையை இந்தகையோர் அவமதிப்புகள் ஏற்படுத்துகின்றன.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓ.... ரோகரா!!!

வணக்கம் மேன்மை தங்கிய ஜூட்!

<b>என் தகமைகள்:</b> காட்டிக்கொடுப்பு, மொட்டைக்கடிதங்கள், உண்டியல் உருபல், ...

<b>பின் புலங்கள்:</b> அடித்த உண்டியல்களீலிருந்து எனது சகலன்களுக்கு கடைகள் போட்டுக் கொடுத்துள்ளேன், சில கடைகளும், சில வீடுகளும் எனது மனைவியின் பெயரில் வாங்கி வைத்துள்ளேன்!!

மற்றது! நானும் உம்மை மாதிரி பெரிய புள்ளிதான்!! இங்கத்தையான் லேபர் பாட்டி அங்கத்தவர்! மற்றும் லேபர் N.E.C மெம்பர்!! ஒரு கொஞ்ச லேபர் பா.ம.உ உடன் நெருங்கிய தொடர்பு! அதன் மூலம்தான் இங்கை பல காரியங்களை சாதிக்கிறேன்!! ... இன்னும் சொல்லலாம்!! தகுதி உங்களைவிட கூடிப் போய்விடுமென்பதால் விடுகிறேன்!! ரோகரா!!........
Reply
#12
<b>விவாதத்திற்காக எழுதவில்லை..</b>

ஜூட் மேலே நீங்கள் சொல்வதின் சாரம் நண்றாக இல்லை... அவமதிக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம்... அதுக்காக வருந்துகிறேன் (என் வருத்தம் உபயோகம் அற்றதுதான்) ஆனால் தமிழ்மக்கள், நம் தாய்நாடு எண்டு வரும்போது, அது உங்களை அவமதிப்பவர்களோடு நிண்றுவிடுவதில்லை... அதையும் தாண்டி இன்னும் பரந்து உள்ளது அரசியல் சாராது இருந்து நீங்கள் சேவை செய்திருந்தால் ஒரு தமிழனாய் தலைவணங்குகிறன்...

வெளியில் இருந்து (அரசியல் சாராது) சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு தமிழனுக்கும் எவ்வளவு கடமை இருக்கிறது என்பது விளங்கும்..... தனிப்பட்ட கோபதாபக் காரணங்களுக்காக ஒருவர் ஒரு இனத்தின் செயற்பாட்டையோ அல்லது அவர்களின் உன்னதத்தை விமர்சிப்பது எந்தவகையில் அவர்களை போற்றுவதாய் அமையும் (உங்களைச் சொல்லவில்லை) அப்படியானவர்களின் வரவுகள் தான் உங்களைக் கூட அவமதிப்பதாய் தோற்றப்படுகிறது... அது மக்களின் உணர்வின் வெளிப்பாடு..

உங்களுக்கு தாயகத்தில் தூய்மையான் பாசம் இருப்பின் உங்களின் கடமைகளைச் செய்யவேண்டும் என்பதுதான் என் வேண்டுதல்....
::
Reply
#13
சரி ஜுட் உங்களுடன் தமிழ் பெயர் பற்றிய விவாதம் ஒன்றில் கலந்துரையாடியுள்ளேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குமென எண்ணுகின்றேன். உங்களிடம் நல்ல பயனுள்ள தகவல்கள் இருக்குமெனில்இ அவை தமிழீழத்திற்கு பயனளிக்குமெனில்இ அவற்றினை நீங்கள் வசிக்கின்ற நாடுகளில் உள்ள தமிழீழ இல்லங்களில் சென்று அவர்களோடு ஆலோசிக்கலாமே. பயனுள்ள தகவல் என நீங்கள் கருதுவதால் சொன்னேன். நீங்கள் விடயத்தை சொன்ன முறையில் உங்களை நான் சந்தேகிப்பதற்கு ஏதுவாக அமைந்துவிடுகின்றது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#14
கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே
இவர் நாளில் (மாத்தையாவையும் கருணாவையும்) மறப்பாரடி

மேற்குறித்த சுலோகத்துடன் திரியும் இந்த ஜூட்தான் தமிழீழத்துக்கு சேவை செய்யப் போகிறாராம்!! அப்பு, நீங்கள் சொல்வதெல்லாம், இங்கு ஐரோப்பாவில் தூள் மன்னனும், கோளிக்கள்ளனும், உண்டியலானும் சொல்வதைப் போலல்லவா இருக்கின்றது!!!

"நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி
கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி!!"
Reply
#15
வேறொரு பகுதியில் இணைப்பதற்கு பதிலாக மாறி அத்தகவலை இங்கு இணைத்துவிட்டேன். ஆதலால் இணைத்த இத் தகவலை மீளப்பெறுகின்றேன்.

மன்னிக்கவும்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#16
யூட் நீங்கள் கூறுவது போல் நிதி ஒதுக்கீட்டிற்கு உழைத்த தமிழர்கள் தாயகத்திலுள்ள சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவத்தின் ஒத்துளைப்பை பெற முயற்சித்தார்களா? எனக்குத் தெரிந்த ஒருவருக்கு நீங்கள் கூறவது போன்ற முயற்சிக்கு யாழ்பல்கலைக்கழத்தின் ஆதரவை பெறுவதில் சிரமங்களை எதிர் கொண்டார். அவர் ஒரு மேற்குல தொண்டர் நிறுவனத்தின் உதவியாக 50000 டொலர் பெற்று சில பாடவிதானங்களை யாழ்பல்கலைக்கழகத்திற்கு கொண்டுவருவதற்கு பல வழிகளில் முயற்சித்தவர்.
மில்லியன் டொலர் நிதிகளை இலகுவில் ஒதுக்கீடு செய்யமாட்டார்கள், சரியாகப்பயன் படுத்தப்படும் என்பதற்கு என்ன பாதுகாப்பு, உத்தரவாதம், அது போன்ற நடவடிக்கைகளை கையாண்டா முகாமைத்துவ அனுபவங்கள் உண்டா, மேற்பார்வை எவ்வாறு இருக்க முடியும், உதவி பெறும் நாட்டின் எந்த அமைச்சின் கீழ் இது கண்காணிக்கப்படலாம் என்று பல சட்டங்கள் சம்பிரதாயங்கள் சார்ந்த சிக்கல்கள் உண்டு. இது போன்ற சந்தர்பங்களில் பல்கலைக்கழகம் பாராளமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களின் உதவிகள் மூலம் உதவிவழங்கும் அரசுகள் நிறுவனங்களின் நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டுவரலாம். வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனங்களை பங்காளிகளாக எடுத்து கூட்டு முயற்சியக்கலாம்.

யாழ்பாணத்திலோ, தமிழர் தாயகப்பகுதிகளிலோ இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளிலோ நடக்கும் கொலைகளிற்கு புலிச்சாயம் பூசுவது வழமையான ஒன்று. இந்தப் பொய்பிரச்சாரங்கள் ஊடாகத்தான் வெளிநாடுகளில் பலரும் இலங்கை பற்றி தெரிந்து கொள்கிறார்கள். காரணம் போட்டியாக ஒப்பிடக் கூடிய தரத்தில் தமிழர் தரப்புச் செய்திகளை வழங்கப்படுவதில்லை. இந்த நிலையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும், மேற்குலகத்திலுள்ள அரசியல் சார்பற்ற சாதாரணமானவர்களுக்கு எமது நிலைப்பாட்டை எடுத்துக் கூற கூடிய ஊடக அணுகு முறைகள், நாகாரிகமான நிபுணத்துவங்கள் வழர்த்தெடுக்கப்பட வேண்டும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)