Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காட்டுமிராண்டிக் கலாச்சாரம்
#41
உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கும் மக்களுக்கும் தெரியும் எவர் எவர் தேசதுரோக சக்திகளோடு இயங்குகிறார்கள் என்று..! குறிப்பாக இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த போதும்...தேச துரோக சக்திகளே கள்வர்களாக யாழ் நகர் முழுதும் வீடுகளில் முகமூடி போட்டுக் கொள்ளை அடித்ததை பிள்ளை பிடித்ததை, மண்டையன் குழு என்று பாடசாலை மாணவர்கள் உள்ளடங்க துண்டுதுண்டாக்கி சந்தியில் போட்டதை எவரும் மறக்கமாட்டார்கள்...! அப்போது மக்கள் மெளனிகளாக இருந்து பட்ட துன்பம் ஏராளம்...அந்த நிலை மீண்டும் தேவையா...என்று சிந்திக்க வைப்பது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்ப்பாவர்களே..! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#42
Quote:தேசவிரோத சக்திகளும் சமூகவிரோத சக்திகளும் இராணுவம் மற்றும் அதனுடன் இயங்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களால் பாதுகாப்பளிக்கப்பட்டு வளர்க்கப்படுபவர்கள்..! அவர்களால் மக்கள் படும் இன்னல்கள் எண்ணிலடங்காதவை..! மக்கள் தமது கஸ்டங்களை எடுத்துச் சொல்லியும் அவர்களுக்கு தேசவிரோத சக்திகளும் சமூகவிரோத சக்திகளும் பாதுகாப்பு அளிக்கும் போது

இதனை நீங்கள் உறுதிப்படுத்தித் தான் கதைக்கிறீர்களா..? அந்த 20 வயது திருடனுக்கு தேசவிரோத கும்பல் பாதுகாப்பு கொடுத்தது குறித்து எங்கு அறிந்தீர்கள்.? இதற்கிடையில் அவனை தேசவிரோத கும்பலே கட்டிப் போட்டிருக்கலாம் அதன் மூலம் கலாசாரம் பேணும் குழுவிற்க அபகீர்த்தி உண்டாக்க முயற்சித்திருக்கலாம் என்று கதைகள் உலவுகின்றன.. அது உண்மையானால்.. அந்த திருடன் தியாகி தானே..

அதல்ல பிரச்சனை.. எவரோ அடையாளம் தெரியாத மாடுகள் கொண்டு வந்து கட்டிப்போட.. றோட்டாலை வாறவன் போறவன் எல்லாம் அடித்தப் போடுமளவிற்கு யாழ் மக்களில் அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உளவியலில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதற்கு யுத்தமும் ஒரு காரணம். விரைவில் யுத்தத்தை முடிவக்கு கொண்டு வந்து.. இந்த சமூக காட்டுமிராண்டிகளை சரியான பாதைக்கு திருப்ப வேண்டும்.
#43
இது புத்துசீவிக் கதையல்ல... ஐரோப்பிய உண்மைகள் தேவையா..என்றால்...அங்கு மக்கள் ஒரு கொள்ளையருக்கு தீர்ப்பளித்ததாக வைத்துக் கொண்டால் இங்கு ஒரு பெண்ணைக் காதலிக்கிறதுக்கே துண்டு துண்டாக வெட்டுறவர்கள் இருக்கிறார்கள்...இது காட்டுமிராண்டித்தனமில்லாம என்னது....! ஐரோப்பா பற்றி அபரிமித எண்ணங்களைப் பரப்புவதை விடுத்து அது காவிச்செல்லும் காட்டுமிராண்டித்தனங்களை தடுக்க வழி பண்ணுங்கோ....! Confusedhock: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#44
உள்ளூர் பத்திரிகையாளர்கள் தான் எழுதியிருந்தார்கள்.. அந்த இளைஞன்.. கட்டப்பட்டு அவன் அருகில் செய்த திருட்டு சம்பவங்கள் எழுதப் பட்டிருந்தன என்று.. ஆக.. பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் உடனடியாகவே அந்த இடத்திற்கு கூடி விட்டார்களா.. சும்மா உதார் விடாதீங்க.. இது றோட்டாலை போன வந்த.. வக்கிரம் பிடித்தவர்களின் காட்டு மிராண்டி வேலைதான்.. நானும் ஒண்டு குடுத்திட்டு போவம் எண்ட மனப்பிறழ்வு நோய் தான்..

புலிகள் இந்த சம்பவத்தில் பங்குபற்றியவர்களை கண்டு பிடித்து.. (அவர்களால் முடியாததல்ல..) கடுமையாக எச்சரிக்க வேணும்.

ஏனெனில் இவை புலியெதிர்ப்பாளர்களால் இனி புலிகிள்ன தலைகளிலேயே கட்டப்படும்..
#45
ஒரு பேச்சுக்கு உம்மோடு எனக்கு தனிப்பட்ட விரோதம் என்றால் இரவொடிரவாக உம்மைக் கட்டிவைத்து பக்கத்தில் சில திருட்டு சம்பவங்களையும் எழுதி வைத்து மக்களே நீங்களே தீர்ப்பளியுங்கள் என்றால்.. அடுத்த நாட் காலை வாறவன் போறவன் எல்லாம் உம்மை அடித்துக்...

இது தான் மக்களின் கோபமா.. யாரும் விசாரிக்க மாட்டார்களா..?
#46
ஒரு குற்றத்தை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் குறைசொல்வது..ஒரு வன்முறையை வைத்து பயங்கரவாதிகள் என்பதுக்கு நிகர்..! யுத்தம் நடக்காத உலக்கின் பகுதிகளில் காட்டுமிராண்டித்தனம் இல்லையோ..! வன்முறைகளை காட்சிகளாக்கி மகிழும் மேற்குலக சமூகத்திடம் வராது வன்முறைவாதமா ஈழமக்களிடம் வரப்போகிறது..! அமெரிக்கர்களும் ஐரோப்பிய மேலாதிக்க சக்திகளும் விதைக்காத யுத்த வெறியா ஈழத்தில் விதைக்கப்படுகிறது..! அல்ல..! மக்கள் ஒரு செயலைத் தட்டிகேட்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அதுக்கு...மக்களைப் பாதுகாப்பவர்கள் தீர்வு எட்ட முடியாமையும்..குறித்த சம்பவங்களால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதுவுமே காரணம்..! அவற்றைக் களையச் சொல்வதே மக்கள் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை (அப்படி நடந்திருந்தால்) தவிர்க்கலாம்...! அடிப்படையில் இது மனிதாபிமானம் அற்ற செயல்..! மக்களுக்கு வேறு வழி இல்லாமல் செய்வதும் மனிதாபிமானமற்ற செயல்தன்..! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#47
ஏனெனில் மக்களுக்கு திருட்டுச் சம்பவங்கள் தெரியும்.. ஆனால் திருடியவனை தெரியாது. அது நீர் தான் என நான் கட்டிவைத்து எழுதி வைத்தால்.. பாதிக்கப் பட்ட மக்கள் தானே.. போட்டுச் சாத்தி விடுவார்கள்.. அவர்களின் அந்த நியாயமான கோபத்தை...நீர் அங்கீகரிப்பீர்..
#48
சம்பவம் நடந்த இடம் சிறீலங்கா அரச சிவில் நிர்வாகப்பகுதி..! அங்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆட்கள் இருக்கினம்..! அவர்கள் சம்பவத்திற்கு பின்னரான செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்ந்து அறிக்கை விட்டிருக்கலாமே..! ஊடகங்களின் தகவல் பொய் என்று நிரூபித்து இருக்கலாமே...???! ஏன் இன்னும் செய்யவில்லை...????! அவர்கள் அப்படி செய்யாதது எதைக்குறிக்கிறது என்ர கேள்வியும் எழுகிறதே...???! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#49
இதுக்கு காரணம் இயக்குனர் ஷங்கர் தான்...
Confusedhock: Confusedhock: Confusedhock:
#50
எனது எழுத்துக்களில் அந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய காட்டுமிராண்டிகளை தான் குறித்திருக்கின்றேன். எடுத்ததுக்கு தேசவிரோத கும்பலக்ள் என்று விடாதீர்கள். உண்மையில் இந்த மிருகச்செயலைச் செய்து அவர்களின் வாய்க்கு தான் அவல் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த இளைஞனை தேசவிரோத கும்பலே கட்டி வந்து போட்டிருந்தால்.. அதை என்ன ஏதென்று விசாரித்து அவர்கள் முகத்தில் கரியை பூசியிருக்கலாம். அல்லது யாழ்ப்பாணத்தில் கிளம்பி விட்ட அடிதடிக்குழுக்கிளின் செயலாயிருந்தால் தகுந்த இடத்தில் முறையிட்டிருக்கலாம்..

இது முழுக்க முழுக்க எல்லாரும் அடிக்கிறார்கள் நானும் அடிப்போம் என்ற மன நோய் பிடித்த மர மண்டைகளின் செயல் தான்.
#51
வீணான சச்சரவுகளைத் தவிரக்கும் நோக்கில் இக் கருத்து இத்துடன் மூடப்படுகின்றது.

மோகன்
#52
இராணுவத்துடன் சேர்ந்து திருடி வந்தவர் பொதுமக்களால் நையப்புடைப்பு பின்னர் உயிரிழந்தார்; யாழ்ப்பாணத்தில் சம்பவம்
(யாழ். அலுவலக நிருபர்)

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இராணுவத்துடன் சேர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

யாழ் நகரப்பகுதியிலுள்ள ஐந்து சந்தியில் தேநீர் கடையொன்றில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது குறித்த நபரை இளைஞர்கள் சிலர் அடையாளம் கண்டுள்ளனர். உடனடியாக அந்த நபரை பிடித்த இளைஞர்கள் அவரை தாக்கினர்.

அப்போது நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் இராணுவத்துடன் சேர்ந்து பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதை அந்த நபர் ஒப்புக்கொண்டõர்.

அந்தவேளை பொதுமக்கள் சிலரும் அந்த இடத்திற்கு வந்து குறித்த நபர் இராணுவத்துடன் சேர்ந்து பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறித் தாக்கினர்.

பலமாக தாக்கப்பட்ட நிலையில் மேற்படி திருடனை யாழ்.இந்துக் கல்லூரி மைதானத்திற்கு கொண்டு வந்து அங்கு கைவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

வீரகேசரி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
#53
இதுபோன்ற விசயங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. சிங்களவன் கொண்டாலும் தமிழன் கொண்டாலும் கொலை கொலைதான். திருடனுக்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என எந்தச் சட்டமும் கூறவில்லை (தமிழீழச் சட்டம் உட்பட)


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)