Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் தேசம் உணர்த்திய பாடம்
#1
இப்பத்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இலங்கை யின் ஐந்தாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலின் வாக்களிப்பு இலங்கைத் தீவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், இப்பத்தியை நீங்கள் வாசிக்கும் போது இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது பெரும்பாலும் உறுதியாகி இருக்கும்.
தென்னிலங்கையில் சுறுசுறுப்பான வாக்களிப்பு. தமிழர் தாயகத்திலோ தேர்தல் ஒரேயடியாகப் புறக்கணிப்பு.
இதுவிடயத்தில், கடந்த பொதுத்தேர்தல் குறித்து கடந்த வருடம் தமது மாவீரர் தின உரையில், தலைவர் பிரபாகரன் குறிப்பிட்ட கருத்துகள் இன்றும் இன்னும் பொருத்தமாக இருப்பது நோக்கற்பாலது.
அந்தத் தேர்தல் சிங்கள, தமிழ்த் தேசங்கள் மத்தியிலான இன முரண்பாட்டை மேலும் கூர்மையடையச்செய்தது. சமாதானத்திற்கும், இணக்கப்பாட்டிற்கும் விரோதமான சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகள் என்றுமில்லாதவாறு தென்னிலங்கை அரசியல் அரங்கில் மேலாண்மை வகிக்க அந்தப் பொதுத் தேர்தல் வழிவகுத்தது என்பதை தமது செய்தி யில் சுட்டிக்காட்டியிருந்தார் பிரபாகரன்.
பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக தென்னிலங்கை அரசி யல் அரங்கில் சிங்கள, பௌத்த மேலாண்மை வாதம் வலுப் பெற்ற அதேசமயம், தமிழரின் தாயகமான வடக்கு கிழக் கில் ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்தேசி யம் எழுச்சிபெற்றது. தமிழ் மக்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் இலட்சி யத்துக்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது.
அத்தோடு, அந்தப்பொதுத் தேர்தல் ஆனது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவு படுத்தியது. கருத்தாலும், உணர்வா லும், இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு. முரண் பட்டு நிற்கும் இரு மக்கள் சமூகங்களைப் பிரிவுறச் செய்தது என்று தலைவர் பிரபாகரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இவ்வாறு இரு தேசிய இனங்களின் தேசியங்களுக்கு இடையில் தேசத்துக்கு இடையில் நிலவும் முரண்பாட்டு நிலை மேலும் தீவிரமாகிக் கூர்மையடைந்து வருவதை இந்த ஜனாதிபதித் தேர்தலும், அது தொடர்பாக தமிழ், சிங் கள தேசங்கள் நடந்துகொண்ட முறைமையும் நமக்குத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் இரண்டு வெவ்வேறு இனக் குழுமங்களுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழர் தேசம், சிங் கள தேசம் என்ற பிரிவு தெளிவுபடுத்தப்பட்டது என்றால், இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தரப்பு மும்முரமாகப் பங்குபற்ற மற்றத் தரப்பு அதனை முற்றாகப் புறக்கணித்த தன் மூலம் இந்த வேறுபாடு மேலும் முனைப்புற வெளிப் பட்டிருக்கின்றது.
சிங்கள தேசத்தின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி யைத் தெரிவு செய்யும் தேர்தலில் தமிழ் தேசத்துக்கு எந்தச் சம்பந்தமுமில்லை. அது அந்த (சிங்கள) தேசத்தின் உள் வீட்டு விவகாரம் என்பது போல தமிழர் தாயகம் தனது நடத்தை மூலம் சர்வதேச சமூகத்துக்கு எடுத்து இயம்பி இருக்கின்றது.
இந்தத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த தமிழர் தாயகத்தின் நிலைப்பாடு அதன் சுயாதீன இறை யாண்மை ஆதிக்கம் சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெட்டத்தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கின்றது.
இந்தத் தேர்தலும் அதில் அக்கறை காட்டாமல் அதை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த தமிழர்தேசத்தின் நிலைப் பாடும் இரண்டு பெறுபேறுகளைத் தந்திருக்கின்றன.
ஒன்று இத் தேர்தலில் தெரிவுசெய்யப்படும் ஜனாதி பதி தாம் தமிழர் தாயகத்தினதும் ஜனாதிபதி என்று கருதிக் கொள்வதற்கு இடமேயில்லை என்பது மீண்டும் தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கின்றது.
அடுத்தது சிங்கள தேசம் தனது தலைமையைத் தானே, சுயாதீனமாக, தமிழர் தாயகத்தின் தலையீடின்றித் தெரிவு செய்து, அதன் அதிகாரத்தை அந்தத் தலைமையிடம் ஒப் படைக்கவும் இத்தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது.
இத்தேர்தலின் பின் பதவியேற்கப் போகின்ற ஜனாதி பதியே எதிர்காலத்தில் இத்தீவின் நிலைமை குறித்து முக் கிய முடிவுகளை தீர்மானங்களை எடுக்கப்போகின்றார்.
இலங்கைத் தீவில் தமிழர், சிங்களவர் ஆகிய இரு தேசிய இனங்களும் ஒத்திசைவுடன், ஒன்றுபட்டு, சமரசமாக, சமாதானமாக, அமைதியாக, அதிகாரங்களைத் தங்களுக் குள் பகிர்ந்துகொண்டு வாழ்வதா? அல்லது யுத்தம் மூலம், இராணுவத் தீர்வுகண்டு, தனித்தனியாகப் பிரிந்து இரண்டு தேசங்களாவதா? என்பது குறித்தும் இவற்றில் ஒன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் சிங்களப் பக்கத்தில் தீர்மானிக்கவேண்டியவர் தென்னிலங்கைத் தேர்தலில் வெற்றிபெறும் ஜனாதிபதிதான்.
அந்த முடிவுகளுக்குப் பொறுப்பேற்கவேண்டியவர் அவர் தான். அத்தகையவரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு தனித் துத் தென்னிலங்கையிடமே ஒப்படைக்கப்பட்டிருப்பதால், எதிர்கால விளைவுகளுக்கும் தென்னிலங்கையே பதில் கூறவேண்டியிருக்கும்.
ஆக, இத் தேர்தலின் மூலம் இத்தீவில் தமிழ்த் தேசம், சிங்கள தேசம் என்ற இருவேறு இறையாண்மைகள் இருப் பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சிங்கள தேசம் தனது தலை மையைத் தனித்துத் தேர்ந்தெடுக்க வசதியளிக்கப்பட்டிருக் கின்றது.
பௌத்த சிங்கள பேரினவாதத்தில் மூழ்கி, மேலாண் மைப்போக்குடன் செயற்படுகின்ற வழியில், அல்லது
தமிழர்களுக்குரியவற்றை அவர்களுக்குள் பகிர்ந்தளித்து, அவர்களுடன் ஒத்திசைவாக வாழ்கின்ற முறையில்
சிங்கள தேசத்தை வழிப்படுத்துகின்ற ஒருவரை சுயா தீனமாகத் தெரிவுசெய்ய வாய்ப்புக்கிடைத்திருக்கிறது.
அதன் முடிவு என்னவென்பது காலையில் இப்பத்தியை நீங்கள் வாசிக்கும்போது பெரும்பாலும் ஊர்ஜிதமாகியிருக் கும்.

http://www.uthayan.com/editor.html
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)