Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமூகவிரோதிகளா? உசார் அடித்தே கொன்றிடுவோம்
#1
சமூக விரோதச் செயல்களில் hடுபட்டவர் மக்களால் அடித்துக்கொலை


யாழ். கொக்குவில் பகுதியில் பல்வேறு சமூகவிரோதச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இன்று காலை 8.30 மணியளவில் மக்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லு}ரிக்கு அண்மையில் உள்ள விளையாட்டரங்கில் வைத்தே இவர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

சுட்டது சங்கதியிலிருந்து
#2
<!--QuoteBegin-kakaivanniyan+-->QUOTE(kakaivanniyan)<!--QuoteEBegin-->சமூக விரோதச் செயல்களில் hடுபட்டவர் மக்களால் அடித்துக்கொலை      
 
 
யாழ். கொக்குவில் பகுதியில் பல்வேறு சமூகவிரோதச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இன்று காலை 8.30 மணியளவில் மக்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.  
கொக்குவில் இந்துக் கல்லு}ரிக்கு அண்மையில் உள்ள விளையாட்டரங்கில் வைத்தே இவர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
 
சுட்டது சங்கதியிலிருந்து<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இல்லை இது யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் தான் நடைபெற்றது. இவரது குறுப்பில் இன்னும் 8பேர் இருப்பதாகவும், தாமது குறுப் செய்த அனைத்து சமுகவிரோத செயலையும் தனது வாயால் ஒப்பிவித்துள்ளார். யாழ் மணிக்கூட்டு ஒழுங்கையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட போதே இவர் பொது மக்களிடம் பிடிபட்டார்.
" "
#3
இது பற்றி செய்தி இணையத்தளங்களில் வரும் முன்பே யாழ் களத்தில் பதிந்துள்ளேன்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7547
" "
#4
திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய நபருக்கு "பகிரங்க தண்டனை'
மரத்தில் கட்டிவைத்த இளைஞரை
பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்
யாழ்.நகர் அருகே நேற்றுச் சம்பவம்
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடை யவர் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கட்டி வைக்கப்பட்டபின் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
அரியாலையைச் சேர்ந்த மைக்னேசி தினேஷ் (வயது20) என்ற இளைஞரே இவ் வாறு அடித்துக் கொல்லப்பட்டார்.
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைப் பகுதி யில் நேற்றுக்காலை இச்சம்பவம் இடம்பெற் றது. பாடசாலை முன்பாக வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் இந்த இளைஞர் கட் டப்பட்டிருந்ததை அதிகாலையில் பொதுமக் கள் கண்டனர். அவர் அருகே வாசகங்கள் எழுதப்பட்ட அட்டை ஒன்று காணப்பட்டது.
கலாசாரம் பேணும் இளைஞர்கள், என்ற அடிக்குறிப்புடன் காணப்பட்ட அந்த அறிவித் தலில் ""யாழ். மக்களே! எமது போராளிகள் யாழ். மண்ணைவிட்டு வெளியேறிய பின்னர் திருட்டுச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதி கரித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதனைத்தடுக்க யார் இருக்கிறார்கள் என்ற நிலையில் பட்டப் பகலிலும் திருட்டுச்சம்ப வங்கள் நடைபெறுகின்றன.
""தற்போது நடைபெற்று வரும் திருட்டுச் சம்பவங்களின் முக்கிய சூத்திரதாரிகள் சிக் குண்டுள்ளனர். இவர்கள் போலித்துப்பாக்கி களைக் காட்டித் தொலைபேசி மற்றும் நகை களை அபகரித்துச் செல்கின்றனர். இவர்களில் முக்கியமானவர்கள் எம்மிடம் சிக்குண்டுள் ளனர். இவர்களுக்கான தண்டனையை நீங் களே முடிவு செய்யுங்கள் '' என்று எழுதப் பட்டிருந்தது.
குறித்த இளைஞர் திருடினார் எனத் தெரி விக்கப்படும் இடங்களின் விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. ""இவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனையில் இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது'' என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந் தது. இளைஞர் கட்டப்பட்டிருந்த இடத்தில் நேற்றுக்காலை முதல் கூடிய பொது மக்கள், இளைஞரை பொல்லுகளால் தாக்கினர். சுமார் 3மணி நேரம் இளைஞர் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் இறுதியில் மயக்கமடைந்தார். அதற்கு முன் னர் அவர் தன்னைத் தாக்கவேண்டாம் எனக் கெஞ்சினார்.
இந்து ஆரம்பப் பாடசாலை முன்பாக இருந்து காலை 9மணியளவில் பொது மக்க ளால் அகற்றப்பட்ட இளைஞர், குறுக்கே தடி யொன்று கொடுத்து கைகள் கட்டப்பட்ட நிலையில், அருகில் உள்ள யாழ். இந்துக் கல் லூரி மைதானத்தில் இருந்த கூடைப் பந்தாட் டக் கம்பத்தில் கயிற்றில் தொங்கவிடப் பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இளைஞர் உயிரிழந்து விட்டார் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித் தனர்.
காலையில், இளைஞர் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சமயம் அவரது தாயார் அங்கே வந்து தனது மகனை விட்டுவிடுமாறு கெஞ் சினார். எனினும் அவரை விரட்டி விட்ட பொது மக்கள் இளைஞரை மூர்க்கமாகத் தாக்கினர். உயிரிழந்த இளைஞனின் சதோதரியும் பின்னர் அங்கு வந்து தம்பியின் சடலத்தின் மீது வீழ்ந்து கதறியழுதார்.
காலை 10மணியளவில் இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
தனது மகன் நேற்றுமுன்தினம் பகல் மோட் டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் சிலரால் பிடித்துச் செல்லப்பட்டார் எனவும்
அதன் பின்னர் அவர் கட்டி வைத்துத் தாக்கப்படுகிறார் என காலையில் தனக்குத் தகவல் கிடைத்தது என்றும் இளைஞரது தாயார் தெரிவித்தார். இளைஞனின் உடலில் பல அடி காயங்கள் காணப்பட்டன என வைத் தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தலை மயிர் ஒழுங்கற்ற முறையில் ஒட்டவெட்டப் பட்டிருந்தது.
நேற்று பிற்பகல் யாழ்.மாவட்ட மேலதிக நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் சடலத் தைப் பார்வையிட்டு விசாரணைகளை மேற் கொண்டார். பின்னர் யாழ்.பொலீஸாரால் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
அடித்துக் கொல்லப்பட்டவரான தினேஷ், திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் முன்னர் யாழ். சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப் பட்டது.
இதேவேளை
அச்சுவேலி ஈ.பி.டி.பி. அலுவலகத்துக்கு அண்மையிலும் நேற்றிரவு 8.30 மணியள வில் குண்டொன்று வெடித்தது. இதில் பொது மகன் ஒருவர் காயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றார் என்று தெரிவிக்கப்பட்டது.
நெல்லியடியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகம் மீதும், பொலீஸ் நிலையத்தின் மீதும் நேற்றிரவு 10.50 மணியளவில் இனந் தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் செய் ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேசமயம் நேற்றிரவு 10.55 மணியள வில் மந்திகை, புலோலியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகம் மீது கைக்குண்டு வீசப்பட்டதாகவும், அது வெடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அல்வாய் நாவலடியில் உள்ள இராணுவ முகாம் மீதும் நேற்றிரவு 11.10 மணியளவில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது.

Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
#5
இந்தியாவில்த்தான் இப்படி நடக்க நான் பார்த்திருக்கிறேன். யாழ்மக்களும் இப்படி படிப்பறிவற்ற நாகரிகமற்றவர்களாக மாறிவிட்டது வேதனையைத்தருகிறது.
#6
புத்திசாலியாக காட்ட கோவில் கட்டலாம் என்கின்றீர்களா? ( jok) :wink:
உண்மையில் அவன் குற்றவாளியா, அல்லது தனிப்பட்ட குரோதத்தின் வெளிப்பாடா என்று தெரியவில்லை
[size=14] ' '
#7
சா 3 மணித்தியாலம் வாரவன் போறவன் எல்லாம் கொட்டனால அடிச்சு இருக்கிறாங்களப்பா.. காட்டுமிராண்டிகள் மாதிரி.. கடைசி நேரத்தில கெஞ்சி கூட இருக்கிறது அந்த 20 வயசு உயிர்....அந்த தாயின் கண்ணீருக்கு கூட கருனை காட்டாத மனம் இறுகிப்போன மக்களாகி விட்டார்களா எம் இனம்??அதுவும் 20 வயது இளைஞனை?? மற்றயவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்பதிற்காக இப்படி ஒரு தண்டனை ரொம்ப கொடுரம்,, போற போக்கை பார்த்தால் ஆப்கானிஸ்ரானை (தண்டனை செய்தால் கல்லால எறிஞ்சு சாக்கொள்ளூறது) போல மாறி நாளும் மாறிடும்,, இலங்கை... :evil: :evil: :evil:

கண்டிக்கப்பட வேண்டிய மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்.... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#8
டண்
இடைக்காட்டிலேயும் இப்படி நடந்ததாக யாழில் முன்பு போட்டிருந்தார்களே படிக்கவில்லையா?
[size=14] ' '
#9
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->டண்  
இடைக்காட்டிலேயும் இப்படி நடந்ததாக யாழில் முன்பு போட்டிருந்தார்களே படிக்கவில்லையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அது எங்க இருக்கப்பா அப்படி ஒரு காடு?? சா மொடர்ன் யாழ்ப்பாணத்தில இப்படி ஒரு ஊரா?? இடைக்காடு?? :evil:

ம்ம் பார்த்தேன்,,, அந்த கொலை சில காட்டுமிராண்டிகளால் (4,5 பேர்களால்) மேற்கொள்ளபட்டதாக அறிந்தேன்.. ஆனால் இந்த 20 வயது இளைஞனை 3 மணித்தியாலம், விக்கட் கொட்டனால், ஊரோ சேர்ந்து சாத்தி இருக்கு....
ஊரே அப்படி அடிச்சு இருக்கெண்டால் உண்மையில அந்த இளைஞன் ரொம்ப கொடுர வேலைகள் செய்திருக்கின்றான் எண்டது புலபடுகின்றது, அதற்கு வேற வழியை கையாண்டு இருக்கலாம்,,, கன வழிகள் இருக்கு... பார்ப்பமே இதை பார்த்தாவது மீதி திருந்துதா எண்டு??

அட அந்த இளைஞனின் இடத்தில் சங்கு, கறூஊனா, டக்கி, பரந்தன் கூமுட்டை போன்றவர்கள் இருந்து இருந்தால் நிச்சமாயாக 3 மணீத்தியாலம் அல்ல 30 மணித்தியாலம் போட்டு வெளுத்திருக்கலாம்,,,,,(ஒரு இனத்தை அழிக்க முற்படும் எங்களைபோன்ற வீர புருசர்களுக்கு இதுதான் சிறந்த நம்பர்1 பரிசு) :wink: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#10
எம்மக்கள் இப்படிக்கொடுமைக்காரர்களாக மாறிவிட்டர்களா Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:


[b][size=29]RIP
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
#11
<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->  
அது எங்க இருக்கப்பா அப்படி ஒரு காடு?? சா மொடர்ன் யாழ்ப்பாணத்தில இப்படி ஒரு ஊரா?? இடைக்காடு?? :evil:  

ம்ம் பார்த்தேன்,,, அந்த கொலை சில காட்டுமிராண்டிகளால் (4,5 பேர்களால்) மேற்கொள்ளபட்டதாக அறிந்தேன்.. ஆனால் இந்த 20 வயது இளைஞனை 3 மணித்தியாலம், விக்கட் கொட்டனால், ஊரோ சேர்ந்து சாத்தி இருக்கு....  
ஊரே அப்படி அடிச்சு இருக்கெண்டால் உண்மையில அந்த இளைஞன் ரொம்ப கொடுர வேலைகள் செய்திருக்கின்றான் எண்டது புலபடுகின்றது, அதற்கு வேற வழியை கையாண்டு இருக்கலாம்,,, கன வழிகள் இருக்கு... பார்ப்பமே இதை பார்த்தாவது மீதி திருந்துதா எண்டு??  

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன டண் சித்தம் கலங்கிப்போச்சா??? :twisted: மொடர்ன் யாழ்பாணம் எண்டு வேற சொல்லிக் கொண்டு கீழே ஊரே அடித்து கொல்வதை எழுதுகிறியள் எண்டால், அது தான் மொடர்ன் எண்டு நினைக்கிறியள் போல. :wink:
[size=14] ' '
#12
இறந்த இளைஞன் கல்வியங்காட்டில் வீடொன்றில் தனித்து இருந்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்தபின் அவரது நகைகளை பறித்துச்சென்றவர்.அந்தப் பெண் பின் தப்பிவிட்டார் இது நடைபெற்றது 3மாதங்களுக்கு முன். பெண்ணின் கழுத்தை அறுக்கும் போது இந்த இளைஞன் மனிதாபினம் பற்றி சற்றும் சிந்தித்து இருப்பாரா?.
" "
#13
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அட அந்த இளைஞனின் இடத்தில் சங்கு, கறூஊனா, டக்கி, பரந்தன் கூமுட்டை போன்றவர்கள் இருந்து இருந்தால் நிச்சமாயாக 3 மணீத்தியாலம் அல்ல 30 மணித்தியாலம் போட்டு வெளுத்திருக்கலாம்,,,,,(ஒரு இனத்தை அழிக்க முற்படும் எங்களைபோன்ற வீர புருசர்களுக்கு இதுதான் சிறந்த நம்பர்1 பரிசு)
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அவயை 5 நிமிசம் அடிச்சோன்ன மேலபோயிடுங்கள்........ பேசமாவிடுங்கப்பா வயசுபோய்ச் சாகட்டும்... இல்லாட்டா யாராவது போடுற எலும்புத்துண்டுகாய் வெற்றியைக் கொண்டாடி(தண்ணி அடிச்சே) போகட்டும்...

எண்டாலும் அடிச்சுக் கொல்லுறது கொடுமை.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
::
#14
<img src='http://img371.imageshack.us/img371/715/thines7xu.jpg' border='0' alt='user posted image'>
யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர் தினேஷ்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
#15
டண்,
3 மணிநேரம் ஊரே திரண்டு அடிச்சதால அந்நபர் பெரிய குற்றவாளியாக இருக்க வேணுமெண்டு நீங்கள் சொல்லிறியள். ஆனா சனம் இடிஞ்சது விடிஞ்சது தெரியாமத்தான் சும்மா அடிச்சிருக்கு எண்டு செய்திகள் சொல்லுது. அதில எழுதி வைக்கப்பட்ட துண்டுக் காகிதத்தை வைத்துத்தான் சனம் அடிச்சிருக்கெண்டு செய்தி சொல்லுது. இதை வைச்சு எப்பிடி அந்த இளைஞனைப் பயங்கரமானவாக இனங்காட்ட முடியும்?

அதுசரி, அந்த அறிவிப்பில் சொல்லப்பட்ட திருட்டுப் பட்டியல்களை யார் விசாரித்து எடுத்தது? என்ன விதமான விசாரணை?
போகிற போக்கில ஆரும் தனக்கு வேண்டாதவனை இப்படியொரு பட்டியலோட கட்டி "கலாச்சாரம் பேணும் குழு" எண்டு எழுதி கட்டி வைச்சா ஊரே அவனை அடிச்சுக் கொல்லும் போல.

இவர்கள் கலாச்சாரத்தைப் பேணுகிறார்களா?
நல்ல தமாசுதான். இதுல என்ன பிரச்சினையெண்டா, இதுவும் புலிகளின்ர தலையிலதான் பொறிய்போகுது. அந்த அறிவிப்பில புலிகளைப்பற்றியும் ஏதோ சொல்லியிருக்கினம். உள்ள பிரச்சினைக்க புலிகளை இன்னும் காட்டுமிராண்டிகளாகக் காட்டுறதுக்கு இது நல்லா உதவக்கூடும்.
#16
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட இளைஞன் யாழ்ப்பாணத்தில் அடித்துக் கொலை

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட இளைஞனொருவன் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் வைத்து நேற்று புதன்கிழமை காலை 8 மணியளவில் கும்பலொன்றால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அரியாலையைச் சேர்ந்த எம்.தினேஸ் (வயது - 20) என்ற இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

திருட்டுச் சம்பவம் ஒன்றில் தொடர்புடையவரெனக் கூறி இந்த இளைஞனைப் பிடித்து வந்த கும்பல் யாழ். இந்துக்கல்லூரியின் மைதானத்துக்கு அண்மையில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியதாகத் தெரிய வருகிறது.

இத்தாக்குதலால் படுமோசமாக காயமடைந்த இளைஞன் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கு நின்றிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். இந்த இளைஞன் யாழ்ப்பாணத்திலிடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரெனவும் அண்மையிலேயே சிறையிலிருந்து பிணையில் வெளிவந்தவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.மாவட்ட மேலதிக நீதிவான் ஷ்ரீநிதிநந்தசேகரன் சடலத்தை பார்வையிட்டதுடன், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சடலத்தை யாழ். வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

தினக்குரல்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
#17
உண்மை தான் இவோன்ன்,,, இது ஒரு நாடகமாக கூட இருக்கலாம்.. கட்டி வைச்சினமாம், பக்கத்த வாசகங்கள் இருந்திச்சாம், உடன வந்தவை போனவை எல்லாம் அடிச்சதும் பத்தாமல் அந்த இளைஞனின் தாய் கத்தி கதறியவேளை அங்கால கொண்டு போய் துரத்திவிட்டு காட்டுமிராண்டி செயலை செய்தவையாம்,, :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#18
வீணான சச்சரவுகளைத் தவிரக்கும் நோக்கில் இக் கருத்து இத்துடன் மூடப்படுகின்றது.

மோகன்


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)