Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதி தேர்தல் 2005
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலைப் புலிகளின் பெயரில் மட்டக்களப்பில் துண்டுப் பிரசுரங்களை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழுவினரே விநியோகித்தது அம்பலமாகி உள்ளது.


தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாக மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடியில் கைது செய்யப்பட்ட மூவரும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.

பெரியகல்லாறு வாசியான ஜோன்சன் ஜெயகாந்தன், அக்கரைப்பற்று வாசியான இராமலிங்கம் யோகராஜா, கருவப்பன்கேணி வாசியான பிரகாசம் சகாயமணி ஆகியோர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள்.

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி எம்.எச்.எம். அஜ்மீர் முன்னிலையில் இந்த மூவரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வாக்களிக்கும் உரிமைகளை தடுக்கும் வகையில் தேர்தல் சட்டத்தை மீறியதாக நீதிமன்றில் காவல்துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.

தலா ரூபா 10 ஆயிரம் ஆட்பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நபர்களை விடுதலை செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது:

மட்டக்களப்பு நகரிலிருந்து கல்முனைக்கு இவர்கள் பயணம் செய்த வாகனம் களுவாஞ்சிக்குடியில் விசேட அதிரடிப்படையின் வீதித் தடையினால் சோதனையிடப்பட்டது.

அப்போது துண்டுப்பிரசுரங்கள் 1,600 கண்டெடுக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்டு அம்பாறை மாவட்ட மாவட்ட அரசியல்துறை என அந்த துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று கூறினர்.

ஜோன்சன் ஜெயகாந்தன் தன்னை விடுதலைப் புலி எனக் கூறி கழுத்தில் சயனைட் அணிந்திருந்ததகாவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிணையில் விடுதலையாகி உள்ள மூவரில் ஜோன்சன் ஜெயகாந்தன் என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் தம்பட்டையில் விடுதலைப் புலிகளின் மாவட்ட மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் குவேனி உட்பட 3 பெண் போராகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக காவல்துறையால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்.

இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள் கல்முனையில் இவரது நடமாட்டம் அவதானிக்கப்பட்டு விடுதலைப் புலிகளினால் பிடிக்க முற்பட்ட போது ஓடிச் சென்று கார்மேல் பற்றிமா கல்லூரி அகதி முகாமுக்குள் நுழைந்து கொண்டார். அங்கு இருந்த விசேட அதிரடிப்படையினரிடம் சில மாதங்களுக்கு முன்பு தான் தான் வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறி தஞ்சமடைந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.


Ò¾¢Éõ
" "
Reply
´Õ ¾ýÉ¢¸Ã¢øÄ¡ ¾¨ÄÅÉ¢ÕìÌõ§À¡Ð ¿Á즸ýÉ ÀÂõ?

Á¸¢ó¾Å¡ÅÐ Áñ½¡í¸ðÊ¡ÅÐ.
Reply
முன்பே நான் குறிப்பிட்டிருந்தாலும் மகிந்தாவிற்கே சந்தர்ப்பமுள்ளது. இருந்தாலும் மகிந்தாவிற்கும் ரணிலுக்குமிடையில் வாக்குகள் அடிப்படையில் பெரிய வித்தியாசமிருக்கவும் வாய்ப்பில்லை.
Reply
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->முன்பே நான் குறிப்பிட்டிருந்தாலும் மகிந்தாவிற்கே சந்தர்ப்பமுள்ளது. இருந்தாலும் மகிந்தாவிற்கும் ரணிலுக்குமிடையில் வாக்குகள் அடிப்படையில் பெரிய வித்தியாசமிருக்கவும் வாய்ப்பில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வித்தியாசம் ஒரு 5 லச்சம் வாக்குகள் வரை இருக்க வாய்ப்புண்டு.
Reply
<b>இலங்கைத் தீவில் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இந்தச் சமயத்தில் இத் தீவு தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறுகின்ற சில உண்மைகள் கவனிக்கத்தக்கனவாக இருக்கின்றன.
"" இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் தனி அரசாக இருந்தது. இந்த வரலாற்று உண்மையை தென்னிலங்கைச் சிங்களம் ஏற்க மறுக்குமானால் அங்கீகரிக்கத் தவறுமானால் அதற்கான விலையை அது ஒருநாள் கொடுக்க நேரிடும். அந்த விலை அதற்கு மிகக் கடுமையானதாக ஈடு செய்யப்பட முடியாத பேரழிவாக இருக்கும்.'' என்று எச்சரித்திருக்கின்றார் அவர். சர்வதேச ஆங்கில ஊடகமான "ரைம்ஸ்' சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
""தமிழர் தாயகம் என்பது வராலாற்று உண்மை. வரலாற்றை ஒருதடவை தென்னிலங்கை திரும்பிப் பார்க்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டுவரை இலங்கைத் தீவில் தமிழர்களுக்கென இறையாண்மையுள்ள ஒரு நாடு இருந்தது. அது வெளிப்படையான உண்மை. உயர்ந்த பண்பாட்டுடனும் கலாசாரத்துடனும், தமிழ் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழ்ந்தனர். இழந்துவிட்ட அந்த நாட்டை தமிழ் மக்கள் தற்போது மீட்டு எடுக்கிறார்கள். எமது தாயகத்தில் அறுபது முதல் எழுபது வீதமான எமது தாயகப் பகுதியை விடுதலை செய்துள் ளோம். இந்தச் செயற்பாடு அடுத்த கட்டத்துக்கு நகர்வதை எவ ராலும் தடுக்க முடியாது.'' என்று தெளிவுபடக் கூறியிருக்கின்றார் தமிழ்ச்செல்வன்.
அதுமட்டுமல்ல. இலங்கையின் அரசுக் கட்டமைப்புக் குறித் தும் அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்து முக்கியத்துவமானது.
""தென்னிலங்கைத் தரப்பினர் கூறுவது போல ஒற்றையாட்சிக் கோட்பாடு என்பது கற்பனையானது; அர்த்தமற்றது. இந்த உண்மையை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தால் அதற் கான உரிய விலையை கடுமையான, பேரழிவைத் தரக்கூடிய விலையை அவர்கள் கொடுக்க வேண்டியதாயிருக்கும்'' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் இலக்கு முழுமையான அரசியல் விடுதலைதான். அதைப் பேச்சுகளின் ஊடாக அமைதி முயற்சிகள் வாயிலாக அடைய முடியுமானால் அதற்கும் தாங்கள் தயார் என்றும், எனினும் இதில் முடிவெடுப்பது தென்னிலங்கை அரசைச் சார்ந்த விடயம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆக மொத்தத்தில், தமிழர் தாயகம், அவர்களின் தேசியம், சுயநிர்ணயம் ஆகிய விடயங்களை ஏற்பதற்கு தென்னிலங்கைத் தலைமைகள் இணங்காவிடின் விளைவு விபரீதமாகும் என்பதே தமிழ்ச்செல்வன் கூறியுள்ள கருத்துக்களின் சாரமாகும்.
தொன்மைவாய்ந்த புராதனமான இரு நாகரிகங்களின், தேசியங்களின் வரலாற்றுத் தாயகமாகவே இலங்கைத்தீவு விளங்கி வந்திருக்கிறது. பண்பாட்டில், பாரம்பரியத்தில், மொழி யில், கலாசார வேர்களில், வாழிட நிலப்பரப்புகளில், வெவ் வேறான வேறுபட்ட இரு தேசிய இனங்களின் சரித்திர பூர்வத்தயாக மாக களமாக இலங்கைத்தீவு இருந்து வந்திருக்கிறது.
1605 நவம்பர் 18 ஆம் திகதி அதாவது சரியாக நாளைய தினத்துக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைத் தீவில் போர்த்துக்கீசர்கள் காலடி எடுத்துவைத்தபோது இந்த நாட்டில் தமிழர், சிங்களவர் ஆகிய இரு தேசிய இனங்களும் தனித்தனி அரசுகளோடு தனித்தனி இராச்சியங்களோடு வெவ்வேறு நாடுகளாக வசித்துக் கொண்டிருந்ததைக் கண் டார்கள்.
போர்த்துக்கேயர்கள் 1619 இல் தமது அந்நியப்படை எடுப் பின்மூலம் வடக்கைக் கைப்பற்றும்வரை இந்தத் தீவில் தமிழர் தேசம் தனியாகக் கோலோச்சிக்கொண்டிருந்தது.
தமிழர் தாயகத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயரும் அøத் தொடர்ந்து ஒல்லாந்தரும் தமிழர் தாயகத்தை தமது ஆளுகையில் வைத்திருந்த போதும் அதனைத் தனி அரசாகவோ ஆண்டனர்.
ஆனால், அதன் பின்னர் தமிழர் தேசத்தையும் சிங்கள தேசத் தையும் ஒரே சமயத்தில் தமது ஆளுக்கைகுள் கொண்டு வந்த அடுத்த அந்நியரான ஆங்கிலேயர், 1833 இல் தமது வசதிக்காக இந்த இரண்டு தேசங்களையும் ஒன்றாக்கி ஒற்றையாட்சி முறையை நம்மீது திணித்தனர். இப்படித்தான் அந்தியக் குடியேற்ற வாதம் இந்தத் தீவில் ஒரு தேசிய இனத்தின்“ தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு அடித்தளமிட்டது.
அப்படி அந்நியக் குடியேற்றத்தினால் பறிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் வெளியேறும்போது இத்தீவில் எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தமிழர்களின் இறையாண்மை. அதை மீட்டெடுக்கவே தமிழர்கள் இப்போது போராடுகின்றார்கள் என்பதை விளக்குகிறார் தமிழ்ச்செல்வன்.
தமிழர் தரப்பின் இந்த நிலைப்பாட்டைத் தெளிவாகப் புரிந்துகொண்டு இன்றைய தேர்தல் குறித்துத் தென்னிலங்கை, தீர்மானம் எடுக்கவேண்டும்.
தென்னிலங்கையில் தெரிவு செய்யப்படப்போகும் தலைமையும், தமிழர் தரப்பின் யதார்த்த பூர்வமான இந்த நிலைப்பாட்டின் நியாயத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற முன்வரு மானால் எதிர்காலம் வளமாக அமையும். அப்படி இல்லாமல் அதுவும் பழைய மாதிரியே பௌத்தசிங்களப் பேரினவாதத்தில் ஊறித் திளைத்த நிலைப்பாட்டையே கைக்கொள்ளுமானால், தமிழ்ச் செல்வன் கூறியமை போன்று விபரீதவிளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கும்.


</b>

http://www.uthayan.com/editor.html
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
அடடா வடகிழக்கில் (யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை திருகோனமலை, வவுனியா மன்னார், கிளி நொச்சி) ஆகிய பிரதேசங்களில் மந்த கதியிலும் அதிலும் குறிப்பாக விடுதலைபுலிகளின் பிரதேசத்தில் இருந்து எந்த வித வாக்களர்களும் வாக்குகளை இடவில்லை என தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன....

தகவல் சக்தி.எவ்.எம்..

அடடா தமிழர்கள் மட்டுமில்லாமல் பெரும்பாலனா தமிழ் முஸ்லீம்களும் தேர்தலை புறக்கணித்து வருவதாகவும் மூதூர், அம்பாறை பகுதிகளில் தேர்தல் பணிகளில் இருக்கும் உத்தியோகத்தர்கள் நித்திரை கொள்ளுகின்றார்கள் எனவும் செய்திகள் சொல்லுதே... ஒட்டுமொத்ததில மகிந்த மாத்தையாவின் காதில் பூவையும், ரணில் மாத்தியாவின் நெத்தில பட்டையையும் அடிக்கபோறாங்க வடகிழக்குமக்கள்.. ஓய் சங்கு,கறூஉனா, பரந்தன் கூமுட்டை எல்லாம் இந்தியாவுக்கு எஸ்கேப் ஆவமா?? தேர்தல் வாக்கு பதிவுகளே வரும் கால நிலமைகளை கோடிட்டு காட்டுதே, எனியும் ஏன் தாமதம் எண்டு யோசிக்கிறன்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
ஜெவிபியின் சோமவன்சா தப்பி லண்டன் ஓடிவிட்டார். இவர்களும் ஓடிவிடுவார்கள்.
" "
Reply
இதில தான் உங்கள் புத்தியைப் பாவிக்கவேண்டும். வெல்லப்போற கட்சியிடம் தமிழரை விலை பேசுகிறது தானே. பிறகு வழமை மாதிரி காட்டிக் கொடுப்புக்களை திறம்படச் செய்யலாமே.
இதுக்கெல்லாம் மூட்டை கட்டலாமா? Idea
[size=14] ' '
Reply
சோமவன்ஸ அமரசிங்க நேற்று அவசரமாக லண்டன் பயணம்.


ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க நேற்றுப் பிற்பகல் 1-45 மணியளவில் அவசரமாக லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றள்ளதாக கட்டுநாயக்க வானுர்ர்தி நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறீ லங்கன் ஏயார் லைன்ஸ் யுூ.எல்.503 என்ற வானு}ர்தியில் சோமவன்ஸ லண்டனுக்கு சென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசு தலைவர் தேர்தலில் தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக தீவிர பரப்புரைகளிலும், இராணுவத்தைக ;கலைக்க வேண்டும் என்ற சர்ச்சையையும் கிளப்பி விட்ட அவர், அரசு தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு முதல் நாளே நாட்டை விட்டு அவசரமாக வெளியேறியமை குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன

சுட்டது சங்கதியிலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
முகமாலையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் வாக்குச் சீட்டுக்கள் மக்களால் எரிப்பு
<b>தமிழர் தாயகப் பகுதிகளில் ஸ்ரீலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்களிப்பு முற்றாகப் புறக்கணிகப்பட்டுள்ள நிலையில் முகமாலை சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கொத்தணி வாக்களிப்பு நிலையங்களிற்குச் சென்ற மக்கள் தமது வாக்குச் சீட்டுக்களை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் எரியூட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். </b>
<img src='http://img467.imageshack.us/img467/6568/s18pg.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img467.imageshack.us/img467/9213/ss31ks.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img467.imageshack.us/img467/9312/121hl.jpg' border='0' alt='user posted image'>


http://www.sankathi.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
தமிழர் தாயகத்தில் சிங்கள அரச தலைவர் தேர்தல் முற்றாக புறக்கணிப்பு: 'ரொய்ட்டர்ஸ்'
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 13:51 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரச தலைவர் தேர்தலானது தமிழர் தாயகத்தில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


ரொய்ட்டர்ஸ் செய்தி விவரம்:

சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பாக நாம் எதுவித அக்கறையும் கொள்ளவில்லை என்று விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் வாக்களிப்பு நிலைமைகளானது தமிழர் தாயாகத்தில் உத்தியோகப்பூர்வமற்ற முழு புறக்கணிப்பு என்பதையே வெளிப்படுத்துவதாக இருப்பதாக கண்காணிப்பாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் தெரிவித்தனர்.

வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளின் பிரதேச வாக்காளர்களுக்காக சிறிலங்கா அரசாங்கமானது வாக்களிப்பு நிலையங்களை அமைத்துள்ளது. வாக்களிப்போரை அழைத்து வருவதற்காக பேரூந்துகளையும் உழவு இயந்திரங்களையும் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து எந்த ஒரு வாக்காளரும் வாக்களிக்கச் செல்லவில்லை என்று ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்களும் சிறிலங்கா அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியில் சோதனைச் சாவடி அருகே காத்திருந்த மீனவர் ஒருவர், எந்த ஒரு மக்களைம் வாக்களிக்கச் செல்லவிடமாட்டோம். நாங்கள் இந்தத் தேர்தலை வெறுக்கிறோம் என்றார்.

வாக்களிப்பைப் புறக்கணிக்கக் கோரும் துண்டுப்பிரசுரங்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணிலின் ஆதரவாளர்கள், கடைசி நிமிடத்தில் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையோடு உள்ளனர்.

யாழ்ப்பாண நகரமும் வெறிச்சோடி உள்ளது. வாக்களிப்பு நிலையங்கள் ஆளின்றி உள்ளன என்று ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவிக்கிறார்

http://www.eelampage.com/?cn=21775
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
கிழக்கு மாகாணத்தில் முழு அளவிலான தேர்தல் புறக்கணிப்பு!!
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 13:46 ஈழம்] [தாயக செய்தியாளர்]
கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வாக்களிப்பு தமிழ்ப் பிரதேசங்களில் மிகவும் மந்த நிலையில் இருப்பதாக இன்று வியாழக்கிழமை நண்பகல் வரை வெளியாகியுள்ள தேர்தல் திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து எந்தவொரு வாக்காளரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கொத்தணி வாக்குச் சாவடிகளுக்கு செல்லாத காரணத்தினால் அந்த வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் அதிகாரிகள் மட்டுமே காணப்படுகின்றார்கள்.

சில வாக்களிப்பு நிலையங்களில் ஒரு சில வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சில நிலையங்களில் ஒரு வாக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ள இந்த வாக்காளர்கள் ஏற்கனவே இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைப் பொறுத்த வரை சிங்கள மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் வாக்களிப்பு வழமை போல் நடைபெற்று வருகின்றன.

இராணுவ ஆக்கிரமிப்புக்குட்பட்ட தமிழர் பகுதிகளில் வாக்களிப்பு மந்த நிலையில் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டததைப் பொறுத்த வரை முஸ்லிம் பகுதிகளில் சுறுசுறுப்பாக வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை தமிழ்ப் பகுதிகளில் வாக்களிப்பில் தேக்க நிலை காணப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கும் இடையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் எவரும் வாக்களிக்க வரவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

http://www.eelampage.com/?cn=21774
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
சிறிலங்கா அரச தலைவரைப் புறக்கணித்தனர் தமிழர்கள்! யாழ். வெறிச்சோடியது!!
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 14:07 ஈழம்] [யாழ். நிருபர்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்த யாழ். குடா தமிழர்கள் இன்று வியாழக்கிழமை காலை வீடுகளை விட்டு வெளியேறவில்லை. வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.


வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியும் முற்பகல் 11 மணிவரை 516 பேர்தான் வாக்களித்துள்ளனர்.

இதனிடையே யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து ஒன்று அடையாம் தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.


http://www.eelampage.com/?cn=21776
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
அடங்கொக்காமக்கா,,,, ஓய்ய் ஐயோ ஐயோ... வாக்குகளின்ர அருமை தெரியாமல் எரிக்கிறாங்களப்பா...எங்கிட்ட கேட்டிருந்தால் உந்த எரிக்கிற வாக்குகளுக்கு தலா 5000 ரூபா போட்டு தந்திருப்பனே?? நீங்க இப்படி செய்தால் வாரப்போகும் 6 வருடத்துக்கு எப்படி நான் அமைச்சரா இருக்குறது? காசுகளை அடிக்கிறது ஆ??சா புரிஞ்சுகொள்ள மாட்டீங்க என்றீங்களே.... அட முந்த நாள்தானேப்பா ஒரு அறிக்கை விட்டனான்?? மகிந்த மாத்தையா, சோ.வி.பி, மொட்டை மண்டைகளின் கூட்டு தமிழர்களுக்கு எதிரான இனவிரோத கும்பல் இல்லை எண்டு... நிங்க இப்படி செய்தால் பிறகு எவன் என்னை மதிப்பான் ஆஅ?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
டண் அத்தூவோடை சேர்ந்து உங்களுக்கும் ஒன்றும் புரியவில்லைப்போல . அதுதான் தோல்விவருகுதென்று தெரிஞ்சுகொண்டு உங்கடை சோ.வி.பி கேடி சோமவன்ச இலண்டனுக்கு தப்பி ஓடியிட்டாராம். நீங்கள் எங்கை ஓடுறதா உத்தேசம் ஓடிப்போய் ரணிலின்ரையை பிடிக்கலாம்தானே? சீ சீ நக்கலாம்தானே
நான் காலைத்தான் சொன்னேன்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
சிறிலங்கா அரச தலைவர் தேர்தல்: யாழில் 99 வீதம் புறக்கணிப்பு!!
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 15:58 ஈழம்] [யாழ். நிருபர்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் யாழ்ப்பாணத்தில் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.


மொத்தம் 800 பேர் வாக்களித்திருப்பதாக தெரிகிறது. கடைசி நிமிட கள்ள வாக்குகளையும் சேர்த்தால் கூட மிக அதிகபட்சமாக 2,000 வாக்குகள்தான் பதிவாகி இருக்கக் கூடும் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் கள்ள வாக்குகளையும் சேர்த்தாலும் கூட 1 வீதத்துக்கும் குறைவான வாக்குப் பதிவு இது.

இதனிடையே வாக்களிக்கச் செல்லும் மக்களை ஏற்றிச் செல்லவதற்கென புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பணிமனை முன்பாகவும் முல்லை அரச செலயகம் முன்பாகவும் பேரூந்துகள் நிறுத்தப்பட்டிருந்த போதும் மக்கள் எவரும் வாக்களிக்க செல்லாததால் பேரூந்துகள் சாரதிகளுடனும் நடத்துனருடனும் திரும்பிச் சென்றுள்ளனர்.


http://www.eelampage.com/?cn=21783

<img src='http://img456.imageshack.us/img456/6803/ul5yj.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img456.imageshack.us/img456/918/ul20wh.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
சிறிலங்கா தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தது தமிழீழம்!! யாழில் மொத்தம் 1,012 வாக்குகளே பதிவு!!
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 17:00 ஈழம்] [தாயக செய்தியாளர்]
சிறிலங்கா அரச தலைவருக்கான தேர்தலை தமிழர் தாயகம் இன்று ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து சிங்களத் தலைமைகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கனத்த செய்தியை விடுத்துள்ளது.


சிறிலங்காவின் 5 ஆவது அரச தலைவர் தேர்தல் இன்று சிறிலங்காவிலும் தமிழீழத்தின் சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் நடைபெற்றது.

தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாணத்தில் 1 வீதத்துக்கும் குறைவாகவும் மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை, மன்னார் பகுதிகளில் சராசரியாக 5 வீதம் முதல் 8 வீதம் வரையிலான வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாக முதல்நிலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ். குடா நாட்டில் 1 வீதத்துக்கும் குறைவாக மொத்தமே 1,012 வாக்குகளே போடப்பட்ட வாக்குகளாக பதிவாகி உள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறை 137, வட்டுக்கோட்டை 117, காங்கேசன்துறை 132, மானிப்பாய் 73, கோப்பாய் 109, உடுப்பிட்டி 7, பருத்தித்துறை 8, சாவகச்சேரி 25, நல்லுர் 143, யாழ்ப்பாண நகர் 270, திருநெல்வேலி 43 என மொத்தமாக 1,012 வாக்குகள் பதிவாகி உள்ளன.

கிளிநொச்சியில் எவருமே வாக்களிக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் இன்று துக்க நாள் கடைபிடிக்கப்பட்டதால் வழமையான பணிகள் போக்குவரத்துச் சேவைகள் எதுவுமே நடைபெறவில்லை. வீதிகள் வெறிச்சோடின. வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை.

கடைசி நிமிட கள்ள வாக்குகளையும் சேர்த்தால் கூட 2 ஆயிரம் வாக்குகள் தான் பதிவாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. யாழ் மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 7 இலட்சம் பேர் என்று சிறிலங்கா அரச தரப்பு கூறுவது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் தமிழர் பிரதேசங்களில் 5 வீதமான வாக்குப் பதிவும் முஸ்லிம் பகுதிகளில் 40 வீதமான வாக்குப் பதிவும் நடந்துள்ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்துள்ளதால் இந்த வாக்கு வீதம் பதிவாகி உள்ளது.

மண்முனைத்துறை கொத்தணி வாக்களிப்பு நிலையத்தில் 10 வாக்குகளும், கறுத்தப்பாலம் கொத்தணி வாக்களிப்பு நிலையத்தில் 336 வாக்குகளும் மட்டும் பதிவாகியுள்ளன.

அம்பாறையில் திருக்கோவில் பிரதேசத்தில் 5 வீதம், ஆலையடிவேம்பில் 5 வீதம், கல்முனையில் 20 வீதம், பாண்டிருப்பில் 20 வீதம், காரைதீவில் 20 வீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அம்பாறையில் சிங்களவர், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அங்கு வாக்கு வீதம் 50 வீதமாக உள்ளது.

மட்டக்களப்பின் தமிழீழ நிருவாகப் பகுதியில் 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள போதும் எவருமே கொத்தணி வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கவில்லை. இதனால் 89 கொத்தணி வாக்களிப்பு நிலையங்களிலும் வெறிச்சோடின.

சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பிரதேச தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட 265 வாக்களிப்பு நிலையங்களிலும் கூட 5 வீதமான மக்களே வாக்களித்துள்ளனர்.

மன்னாரில் மொத்தம் 6,000 பேர் வரையில் வாக்களித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 8 வீதமாகும். மன்னாரில் முஸ்லிம்களும் வசிப்பதால் இந்த வாக்குவீதம் இருப்பதாக தெரிகிறது.

மன்னாரில் மடு, உயிலங்குளம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படிருந்தும் ஒருவர் கூட வாக்களிக்கச் செல்லவில்லை.

கடந்த காலங்களில் மன்னாரில் வாக்களிப்பு வீதம் 30-35 வீதமாக இருந்ததாகவும் எமது செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.

வவுனியாவில் 10 வீதமானோரே வாக்களித்தனர் என்று மாவட்ட அரச தேர்தல் அதிகாரி சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழீழ நிருவாகப் பிரதேச மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஓமந்தை கொத்தணி வாக்களிப்பு நிலையம் கேட்பாரற்று தேர்தல் அதிகாரிகளை மட்டுமே கொண்டிருந்தது.

ஓமந்தை சோதனைச் சாவடி வழமை போல் திறக்கப்பட்டிருந்தது. தமிழீழ நிருவாகப் பிரதேசங்களிலிருந்து வரும் வாக்காளர்களை அழைத்துச் பேரூந்துகள் காத்திருந்தன. ஆனால் மக்கள் எவரும் வாக்களிக்கச் செல்லவில்லை.

மாறாக வழமையான பயணிகள் போக்குவரத்து நடைபெற்றது. கண்காணிப்பாளர்களும் குவிந்திருந்து நிலைமையை அவதானித்து வந்தனர்.

திருமலையின் மொத்தம் 30 வீதம் 40 வீதமான வாக்குகள் பதிவாகி இருக்கக் கூடும் என்று தெரிகிறது. இதில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதமானது 5 முதல் 10 வீதமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

சிங்களவர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையினராக வசிப்பதால் 40 வீதமான வாக்களிப்பு பதிவாகி இருக்கிறது.

இதனிடையே தம்மை வாக்காளர்களாகக் கூட கருதாமல் தம்மீது இராணுவப் பொருளாதரத் தடை விதித்திருப்பதைக் கண்டித்து இன்று திருமலை மூதூரில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

கட்டைபறிச்சான், ஈச்சிலம்பற்று சோதனைச் சாவடிகள் முன்பாக இந்த மூதூர் கிழக்குப் பிரதேச மக்கள் இந்த மறியல் போராட்டத்தை நடத்தினர். எம்மிடம் வாக்குகளை எதிர்பார்க்கிற சிங்கள அரசு, எமது வாழ்வாதார பொருள்களைக் கூட எடுத்துச் செல்லத் தடை விதிப்பதால் அவர்களுக்கு ஏன் நாம் வாக்களிக்க வேண்டும் என்றும் இந்த மறியல் போராட்டத்தில் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டத்தின் முடிவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

http://www.eelampage.com/?cn=21785
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
அதுசரி தம்பி வினீத்,
நீர் வாகை எண்ட பேரோட போட்டிருக்கிற படத்தில என்ன மரம் நிக்குது?
வாகை மரத்தைத் தேசிய மரமாகவெல்லோ அறிவிச்சிருக்கினம்?
Reply
சோமவன்ச அமரசிங்க சிறிலங்காவை விட்டு வெளியேறவில்லை: ஜே.வி.பி.
(வியாழக்கிழமை 17 நவம்பர் 2005 17:37 ஈழம் கொழும்பு நிருபர்)

ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க நாட்டைவிட்டு வெளியேறியாக தனியார் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் வெளியிட்டுள்ள செய்திகளை அக்கட்சி மறுத்துள்ளது.


ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையில்இ இத்தகைய பொய்ச் செய்திகளை மக்கள் நம்பவேண்டாம். மக்கள் வாக்களிப்பதை திசை திருப்பவே இது போன்ற செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வெற்றிச் செய்திக்காக ஜே.வி.பி. காத்துக் கொண்டு உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவிலிருந்து வெளியேறிய சோமவன்ச அமரசிங்க லண்டனுக்குச் சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

புதினம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
அண்ணா என்னக்கு வகை எண்டா என்ன மரம் எண்டு தெரியா ச்ங்கதில இருந்தது எடுத்து போட்டன் தப்பா :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)