Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
முகத்தார் அங்கில் கதை சூப்பர் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
KULAKADDAN Wrote:நீங்கள் அங்கம் 9 இல சொன்ன நிகழ்வு சாதாரணமானது, இதுக்கு போய் மருந்துகுடிச்சா என்ன சொல்லிறது.
முதலில் காதலில் தோல்வி என்றால் சாதல் என்பதை எங்கடை ஆக்கள் மறக்க வேணும்.
அதைத்தான் அப்பு பெடியனுக்கு அற்வைஸ் சொல்லுற மாதிரி சொல்லியிருக்கு இது உண்மையா நடந்ததொண்டு எல்லா பெண்களும் எங்கடை களத்திலை உள்ள (நல்ல) பிள்ளைகளாக இருக்கமாட்டீனம் தானே என்ன................(அப்பாடி ஒருமாதிரி ஜஸ் வைச்சாச்சு...)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
முகத்தார் உங்கள் ஆக்கம் நிகழ் காலத்தைப் பிரதிபலித்திருக்கிறது...! ஆணோ பெண்ணோ...எவரும் கொண்ட காதலில் மன உறுதியோடு இருந்தால் இப்படியான வேதனைகள் அவசியமில்லைத்தானே...! உறுதியில்லாதவைக்கு ஏன் காதலை...???! வாழ்க்கையை...! இது விடயத்தில் ஒருவர் இன்னொருவரை ஏமாற்றுகிறார் என்றால் நிச்சயம் அவரால் எவருடனும் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க முடியாது..! ஏமாற்றிய நினைவுகளை அவர்களை மெல்ல மெல்ல கொல்லும்..! கடந்த காலங்களில் இப்படி ஏமாற்றியவர்கள்..பின்னாட்களில் அதையிட்டு வருந்தியதைக் கண்டிருக்கிறோம்..!
காசும் பகட்டும் அல்ல வாழ்வு....அதை அவர்கள் அனுபவரீதியாக காணும் போது...யதார்த்த வாழ்வை உணரும் போது தொலைத்த காதலுக்காக கண்ணீர் விடுவார்கள்..! தாயகத்தில் அகதி வாழ்க்கை இவற்றை உணர்த்தி இருக்க வேண்டும்...உணராதவர்களும் பலர் இன்னும் இருக்கின்றனர்...! குறிப்பாக புலத்தில் வாழும் நிலை மறந்தோர்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>பெண்கள் விடுவது கண்ணீரென்று யாரையா சொன்னது. அது கண்ணீரல்ல பயங்கர ஆயுதம். அந்தக் காலத்தில் இறுதியாக அஸ்திரங்கள் பாவிப்பது போல் பெண்கள் இறுதியாகப் பாவிப்பது கண்ணீரென்ற அஸ்திரத்தைத் தான். இந்த ஆயுதத்திற்கு எவரும் தப்பியதாக இதுவரை இல்லை.</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
Vasampu Wrote:<b>பெண்கள் விடுவது கண்ணீரென்று யாரையா சொன்னது. அது கண்ணீரல்ல பயங்கர ஆயுதம். அந்தக் காலத்தில் இறுதியாக அஸ்திரங்கள் பாவிப்பது போல் பெண்கள் இறுதியாகப் பாவிப்பது கண்ணீரென்ற அஸ்திரத்தைத் தான். இந்த ஆயுதத்திற்கு எவரும் தப்பியதாக இதுவரை இல்லை.</b>
அடங்கொப்பரான,,, வசம்ஸ் ரொம்பத்தான் அடிபட்டுட்டார் போல... ஜோவ்வ் வசம்ஸ் உதுக்குத்தான் சொல்லுறது கட்ட பிரம்மச்சாரியா இருக்கிறது பெட்டர் எண்டு... :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 559
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
தாத்தா உங்கள் ஆக்கத்தை தவறாமல் படிக்கிறேன்
இம்முறை எழுதியது உண்மைச்சம்பவம் என்று கூறியிருக்கிறீர்கள்.
என்னைப் பொறுத்தமட்டில் காதலுக்காக மருந்து குடிப்பவர்கள் முட்டாள்கள். வாழ்க்கையில் எத்தனையோ பிரியோசனமான விடயங்கள் உள்ளன அதை விட்டுட்டு ............... :x
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
sabi Wrote:தாத்தா உங்கள் ஆக்கத்தை தவறாமல் படிக்கிறேன்
இம்முறை எழுதியது உண்மைச்சம்பவம் என்று கூறியிருக்கிறீர்கள்.
என்னைப் பொறுத்தமட்டில் காதலுக்காக மருந்து குடிப்பவர்கள் முட்டாள்கள். வாழ்க்கையில் எத்தனையோ பிரியோசனமான விடயங்கள் உள்ளன அதை விட்டுட்டு ............... :x
நிச்சயமா... வாழ்க்கை என்பதில் காதல் ஒரு சின்னப் பகுதி...ஆனால் வாழ்க்கை பூராவும் ஒருவருடன் மட்டும் வர வேண்டிய ஒன்று.. அவசியமானது..! ஏமாற்றத்தை தவிர்த்தால் வேண்டாத முடிவுகள் அவசியமில்லைத்தானே..! காதலர்கள் சிந்திக்க வேண்டும்..! வலியை தந்துவிட்டு உணராதே என்பது வேடிக்கையாக யாதார்த்ததுக்கு புறம்பானதாகவே இருக்கும்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'><b>முகத்தார் வீடு அங்கம் - 10</b></span>
(முகத்தார் காலில் அடிபட்டு வருத்தத்தில் படுத்திருக்கிறார்)
பொண்ணம்மா : உங்களுக்கு எத்தனை தரம் சொல்லியிருப்பன் இருட்டுக்கை போகாதைங்கோ எண்டு கேக்கிறீயளே
முகத்தார் : இல்லையடியப்பா அங்காலி வளவுக்கை விறகு கொஞ்சம் பொறுக்கி வந்தா மழை காலத்திலை உதவுமெண்டு நினைச்சன்
பொண்ணம்மா : என்ன இழவு விழுந்தது கடிச்சுதோ தெரியேலை இப்பிடி வீங்கிப் போய் கிடக்கு
முகத்தார் : சா....ஒண்டும் கடிக்கேலையப்பா பக்கத்தி வளவுக்கை பொட்டுக்காலை போகேக்கை கதியால் ஒண்டு இடிச்சுப் போட்டுது அவ்வளவுதான்
பொண்ணம்மா : வயசுபோண நேரத்திலை வீட்டிலை இருக்கிறதுகளை வைச்சுச் சமாளிப்பம் எண்டில்லாமல் களவெடுக்கப் போண இப்பிடித்தான்
முகத்தார் : காலிலை அடிபட்ட வருத்திலும் பாக்க உம்மடை வருத்தம் பெரிய பாடாக்கிடக்கு கொஞ்சம் மனுசரை நிம்மதியா படுக்கவிடுமன்
பொண்ணம்மா : அடிபட்டு படுத்திருந்தாலும் மனுசனுக்கு வாய் கொழுப்பு அடங்குதோ பார்
2நாள் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டா எல்லாம் சரி வரும்
முகத்தார் : காலிலை அடிபட்டதுக்கு ஏனப்பா வயித்திலை அடிக்கிறீர் அதுசரி நீர் சமைச்சா அது பத்தியச் சாப்பாடு மாதிரித் தானே இருக்கும்
(சாத்திரியார் படலையை திறந்து கொண்டு வாறார்)
சாத்திரி : என்ன முகத்தான் சாக்குக் கட்டிலிலை படுத்திருந்து கொண்டு மனுசியோடை றோமான்ஸ் போல கிடக்கு
பொண்ணம்மா : அதுதான் இப்ப இல்லாத குறை எங்கையோ புகுந்து காலை உடைச்சுப் போட்டு வந்திருக்கிறார் இப்பதான் எட்டிப் பாக்கிறீயள் என்ன. . .
சாத்திரி : என்னடாப்பா நடந்தது இஞ்சை பார் காலின்ரை கோலத்தை?
முகத்தார் : அது ஒண்டுமில்லையடா தடியெண்டு குத்திப் போட்டுது கொஞ்ச வீக்கம் எண்ணெய் போட்டனான்
சாத்திரி : (ரகசியமா) இதுதான் சாட்டு எண்டுட்டு நீயும் படுத்திடுவாய் சா. . எனக்கும் ஒரு வருத்தமும் வர மாட்டன் எண்ணுது
(யாரோ படலைத் திறந்து கொண்டு வாறது தெரியுது)
சாத்திரி : முகத்தான் யாரோ வருகினம் யார் எண்டு விளங்கேலை?
பொண்ணம்மா : அடடா. . . .வாங்கோ இஞ்சரப்பா எங்கடை செல்லத்துரை மாமான்ரை மகன் வாறார்;
முகத்தான் : வாங்கோ தம்பி இருங்கோ எனக்கும் கொஞ்சம் ஏலாமல் போட்டுது பிறகு எப்பிடி சுகங்கள் கனகாலத்துக்குப் பிறகு இஞ்சாலிப்பக்கம் என்ன தம்பி?
பொண்ணம்மா : சாத்திரியண்ணை உங்களுக்கும் தெரியும்தானே எங்கடை மாமான்ரை மகன் குடும்பத்தோடை கொழும்பிலை இருக்கிறார்;
முகத்தார் : தம்பி 90களிலை கொழும்புக்குப் போனபிறகு இப்பதான் வாறீயள் போல
ரவி : ஓம் அண்ணை எங்கை நேரம் 2பேரும் வேலைக்கும் போறதாலை லீவு கிடைக்கிறது செரியான கஷ்டம்
சாத்திரி : இல்லையப்பு வெளிநாட்டிலை இருக்கிற எங்கடை சனங்கள் இந்த யுத்த நிறுத்தத் தோடை எவ்வளவு காசைக் கொட்டி இஞ்சை வந்தவை நீங்கள் உதிலை இருந்து கொண்டு வரலேலாமல் போட்டுது.
முகத்தார் : அதுசரி தம்பி சாத்தியார் இப்பிடித்தான் பிறகு அப்பரும் அம்மாவும் இஞ்சை தனியத்தானே வயசு போன நேரத்திலை எங்களைப் போல முட்டு முட்டு எண்டு: பாவங்கள்
ரவி : அதுதான் எங்களோடை கூட்டிட்டுப் போவம் எண்டு வந்தனாங்கள்
முகத்தார் : இதைதான் முன்னமே செய்திருக்கலாமே தம்பி பிள்ளையளை பெத்து உள்ளுரிலையே வைச்சுக் கொண்டு பக்கத்திலை இல்லாட்டி
ரவி : முன்னமொருக்கா கூட்டிக் கொண்டு போய் வைச்சிருந்தனான் தானே அங்கத்தைய வாழ்க்கை இவைக்கு ஒத்து வராது அதுதான் பிடிச்சு அனுப்பி விட்டுட்டன்
சாத்திரி : ஏன் தம்பி என்ன வித்தியாசமான வாழ்க்கைiயா வாழினம் கொழும்பாக்கள்
ரவி : இல்லையண்ணை உங்களுக்குத் தெரியும் தானே இப்பத்தைய செலவுகள் கொழும்பிலை என்னத்துக்கும் காசு கரண்டு தண்ணி எண்டு இனி எங்கடையவை குளிக்கிதெண்டால் கிணத்தடிணிலை குளிக்கிற மாதிரி குளிப்பினம் விடிய விடிய மின்விசிறியை ஓட விடுறது எங்கடை வருமானத்துக்கு கட்டுபடியாகாது
முகத்தார் : ஏன்தம்பி இதுகள் ஒரு பிரச்சனையே அப்பா அம்மாக்கு அமைதியா எடுத்துச் சொன்னா கேக்கமாட்டினமே
ரவி : சரி அதைத்தான் விடுங்கோ இனி நாங்கள் சிங்களச் சனத்துக்கை இருக்கிறம் என்ரை மனுசியே பொட்டு வைக்காமத்தான் திரியிறவ இவர் அப்பர் காலேலை கோயிலுக்குப் போட்டு நல்லா சந்தனத்தை குழைச்சு நெத்திலை அப்பிக் கொண்டு வருவர் இதை பாக்கிற சனங்கள் எங்களை பிறகு வித்தியாசமாக வெல்லோ பாக்கிங்கள்
சாத்திரி : இப்பிடி ஒழிச்சு ஒழிச்சு வாழுற வாழ்க்கை என்னதுக்குத் தம்பி எதுக்கும் ஒரு விடிவு வரும் பாருங்கோவன்
ரவி : அப்ப அந்த விசயங்கலாலை எனக்கும் மனுசிக்கும் தான் அடிக்கடி சண்டை வருகுது என்ன செய்ய. .
முகத்தார் : அப்ப நீங்கள் சொல்லுறீயள் கொப்பர் கொம்மா அங்கை வந்து சிறை வாழ்க்கை ஒண்டை வாழ வேண்டும் எண்டு என்ன
ரவி : அப்பிடியில்லை ஜயா இஞ்சை மாதிரியில்லாமல் கொஞ்சம் நாங்கள் சொல்லுறதைக் கேட்டு அஜஸ் பண்ணிப் போறதுதானே. . .
சாத்திரி : வயசுபோண நேரத்திலை அப்பு நீங்களும் வாள். . .வாள் எண்டு அவையோடை பாயாமல் பக்குவமா சொன்னா கேப்பினம்தானே அவையும் ஒரு குழந்தை பிள்ளைகள் எண்டு ஏன் நினைக்கிறீயள் இல்லை
முகத்தார் : சரி இப்ப என்ன ஞானம் வந்த மாதிரி கூட்டிக் கொண்டு போக வந்தனீர்?
ரவி : நாங்கள் இரண்டு பேரும் வேலைக்குப் போறபடியாலை பிள்ளையைப் பாக்கிறதுக்கு வேலைகாரி யொண்டை வைச்சிருந்தனாங்கள் அது திடீரெண்டு ஊருக்குப் போட்டு வராமல் விட்டுட்டுது அதுதான் அம்மாவை கூட்டிக் கொண்டு போனால் உதவியா இருக்குமெண்டுதான். . .
முகத்தார் : அப்ப தம்பி அம்மாவிலை பாசம் வந்து கூட்டிக் கொண்டு போகேலை பிள்ளை பாக்க ஆளில்லை அப்பிடித்தானே
சாத்திரி : சரி முகத்தான் அந்த அளவிலையாவது சந்தோஷம் அதுகள் கடைசி நேரத்திலையாவது பிள்ளையோடை இருக்கட்டுமன்
ரவி : அம்மாவை மட்டும்தான் கூட்டிட்டுப் போறன் அப்பர் இஞ்சைதான் இருப்பர்
முகத்தார் : இதென்ன கொடுமையப்பு கொப்பரை யார் பாக்கிறது அவருக்கு சாப்பாடு எல்லாம் கஷ்டமே தம்பி
ரவி : அதுக்குத்தான் நல்ல அகதிக்குடும்பமா ஒண்டை பாத்து வீட்டிலை இருத்தினமெண்டால் அவையோடை அப்பற்ரை சாப்பாடு விசயத்தை செட் பண்ணலாம்
முகத்தார் : தம்பி ஒண்டு கேட்டா குறை நினைக்கப்பிடாது நீர் மனுசியை 1மாதம் கொழும்பிலை விட்டுட்டு இஞ்சை வந்து நிப்பீரோ?
ரவி :அதெப்பிடி நான் இல்லாட்டி அங்கை ஒண்டு:ம் நடவாதே. . மற்றது .நானும் அப்பரும் ஒண்டே நாங்கள் இளம் ஆட்கள் இவை வயசு போணவை எங்கையிருந்தா என்ன எண்டு கேக்கிறன்
முகத்தார் : தம்பி நீர் இல்லை கனபேர் விடுகிற பிழை இதுதான் அப்பா அம்மா வயசு போணா ஒண்டா இருக்கப்பிடாதோ. .வாழ்க்கேலை தாம்பத்திய சுகமென்பது வெறும் உடம்புகளாலை ஏற்படுகிறதில்லையப்பு கணவனுக்கு மனைவி செய்யும் பணிவிடைகள் . மனைவிக்கு கணவன் செய்யும் சிறுசிறு உதவிகள் . ஒண்டாச் சாப்பிடேக்கை ஏற்படுகிற சந்தோஷம் . மனம்விட்டு கதைக்கும் போது ஏற்படுகிற மன நிறைவு இவையெல்லாம் சாகும் மட்டும் இருக்கும் நீங்கள் தான் காசு காசு ண்டு இயந்திர வாழ்க்கை வாழுறீயள் எண்டால் சந்தோஷமாக இருக்கிற அதுகளை ஏன் பிரிக்கப் பாக்கிறீயள்
சாத்திரி : இப்பிடித்தான் சில வெளிநாட்டு ஆட்களும் பிள்ளைப் பெத்து பாக்கவெண்டு அம்மாமாரைதானே கூப்பிடுகினம் அப்பாவையும் சேர்த்துக் கூப்பிடுவம் எண்டு நினைக்கினமில்லை
முகத்தார் : சாத்திரி இப்ப உன்ரைமனுசி என்ரைமனுசியை எடுத்துக் கொள் பெடியள் கூப்பிட்டும் போகேலையே பிறகென்ன. .
சாத்திரி : அது வேறொண்டுமில்லை இஞ்சையிருந்தா காலாட்டிக் கொண்டு சாப்பிடலாம் அங்கைபோணா பெண்டு நிமிந்திடாது. . .
முகத்தார் : என்ன தம்பி யோசிக்கிறீர் சும்மா எங்களுக்குத் தெரிஞ்சதைச் சொன்னம் ஆனா ஒண்டு கொழும்புக்கு கூட்டிட்டு போறதெண்டால் இரண்டு பேரையும் கூட்டிட்டுப் போம் அவ்வளவுதான்
ரவி : நான் ஏதோ யோசிச்சிட்டு வந்தன் நீங்கள் எல்லாத்தையும் குழப்பி விட்டுட்டியள் சரி அப்ப நான் போட்டு வரட்டே அண்ணை. . .
சாத்திரி : முகத்தான் நீ சரியான ஆள் என்ன சும்மா வந்த பெடியனை குழப்பி விட்டுட்டாய் பெடி போய் இப்ப மனுசிட்டை வாங்கிக்கட்டப் போகுது. .
முகத்தார்: யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் சரியோ? . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் கதைக்கரு நல்லாய் இருக்குது முகம்ஸ். பாவம் எத்தனை பெற்றோர்கள் இப்படி படுகிறார்கள். நல்ல அழகாய் சொல்லியிருக்கிறியள்.
அது சரி பத்தியம் என்றா உங்க வீட்டிலை பட்டினி என்று அர்த்தமா..?? அப்ப கணவனை விட்டிட்டு வெளிநாடு வரமாட்டன் என்றவையிட கதை இப்ப தான் புரியுது. ம் ம் கொடுத்துவைச்சவை :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
ஆகா ... அட்வைஸ்சாலயே நெஞ்சத்தொடூறீங்கள் முகத்தார்.. சொன்னது ரவிக்கு எண்டாலும் எனக்குச் சொன்னமாதிரி இருக்கு..
::
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
நல்லாயிருக்கு முகத்தார். இப்போது இது தான் எங்கள் சமுதாயத்தில நடக்கின்ற முக்கியமான பிரச்சனைகளில ஒன்று.
[size=14] ' '
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
நல்லாயிருக்கு முகத்தார் அங்கிள் வயசானாலும் அம்மா அப்பாக்கு அவைக்கெண்டு மனசும் இருக்கும் தானே
இந்தப் பிரச்னைக்கு முடிவுதான் என்ன
. .
.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
உண்மையிலயே இது ஒரு பெரிய பிரச்சினைதான், இதுக்கு முடிவுதான் என்ன? இந்தபிரச்சினையை எடுத்த முகத்தாரண்ணக்கு நன்றிகள்.
.
.