Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய ஊடகங்கள்...!
#1
புலம்பெயர்ந்த மண்ணில் இந்திய ஊடகங்களின் வருகை சரியா தவறா?
Reply
#2
சற்று விளக்கமாக தாருங்களேன்

அவர்களும் புலம்பெயர்ந்தவர்கள் என்னும்போது சரிதான்
[b] ?
Reply
#3
எமது ஊடகங்கள் விழிப்பு நிலையில் இருக்க இது போன்ற வரவுகள் அவசியமானவை.
Reply
#4
வணக்கம் யாழ்! நல்லதொரு விடயம். தென்னிந்திய தொலைக்காட்சிகள் (குப்பைகள் என் பார்வையில்) வருகை நமது தொலைக்கட்சிகளின் இருப்பை நிச்சயம் கேழ்விக்குள்ளாக்கும். காலை முதல் மாலை வரை வெறுமனே தென்னிந்திய சினிமா சார்பாபன நிகழ்ச்சிகளையும் எந்தவித ரசனையுமற்ற மாறாக சென்டிமென்டல் பேத்தல்களான சீரியல்களை மட்டுமே ம்பியிருக்கும் இந்த தொலைக்காட்சிகள் தேவைதானா? நமது நாட்டு நிகழ்வுகளில் நல்ல விடயங்களை மறைத்து சினிமாதனமான நிகழ்வுகளை மட்டுமே நமக்கு தருகிறது. நம்மவர்களை மயக்க இருNவுளைகளில் புலம்பெயர்ந்த தமிழருக்கு தொலைபேசி எடுத்து வேறு ஆசைகாட்டுகிறார்கள். நம்மடை ஆக்களும் வேலைமினக்கெட்டு அவங்களுக்கு எழுதிப்போடுறாங்கள். அது அவையின்றை சுதந்திரம்இ ஆனால் இது நம்மை மயக்க அவர்கள் காட்டும் மாயையே. சினமாக்காரர்கள் நம்மை சிலோன் ஆட்கள் என்று இன்னமும் ஒரு 3ம்தர மக்களாகவே பார்ககிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் நளதமயந்தி! நமது விடுதலை பற்றியோ நமது கலாச்சாரம் பற்றியோ எந்தவித அறிவோ அல்லது ஆராட்சியோ இல்லாது தமது வாய்க்கு வந்த படி எல்லாம் நிகழ்ச்சி நடத்துவார்கள். புலம் பெயர் மண்ணில் நம்மிடம் இருக்கும் பணத்தை கறப்பதே அவர்கள் குறி. இரவிலை தொலைக்காட்சியில் நம்மவர்கள் வீட்டுக்கு அளைக்கும் தொலைபேசியெல்லாம் சந்தா அட்டை வாங்கும் வரைதான். கோடிக்கணக்கான தென்னிந்திய தமிழ் மக்கள் படும் அவலங்கள் அல்லல்களை கூட வெளிக்கொணராத இந்த தொலைக்காட்சிகள் நம்மையா தiலையில் து}க்கி வைத்து ஆடப் போகிறது? நம்ம பணமே அவர்களின் குறி. இலவசமாக வந்தால் பார்கலாம்இ சந்தா என்றால் தயவு செய்து புறக்கணியுங்கள். நம் பெயர் சொல்ல இரண்டு தொலைக்காட்சிகள் உண்டு அதை வழர்க்க உதவுவோம். அண்மையில் இந்த தென்னிந்திய தொலைக்காட்சியில் தொழில்பார்ககும் நம்ம ஊர் பிரபல அறிவிப்பாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னது இது தான் - அட அவங்கள் தான் எனக்கு தீனி போடுறாங்கள் - ஆனால் புலம்பெயர் மண்ணில் நமக்கு என இரு தொலைக்காட்சியிருக்கு அதை வளர்க்க உதவுங்கள். அவையின்றை தொலக்காட்சியை வழர்க்க தென்னிந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்இ ஆனால் நமக்கு சில லட்சங்களே இருக்கு. இந்த தென்னிந்திய ஊடகங்களின் ஆக்கிரமிப்பு நம் தொலக்காட்சிகளை அழிக்கவே இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பிரபலமான தொலைக்காட்சி தொடர்களை அவர்கள் முதலில் நமது தொலைக்காட்சிகளுக்கு கொடுக்க மறுத்ததும் பின்னர் மெதுவாக இங்கு இலவசமாக தமது சேவைகளை தொடங்கியதும். நமது தொலைக்காடசிகள் நிலைக்கவேண்டுமாயின் அவர்கள் தொலைக்காட்சிகளை நாம் பகிஸ்கரித்தே ஆகவேண்டும். குறிப்பாக சந்தா விடயத்தில்! இப்போ விழித்தெழாது போனால் தொடரந்தும் நாம் அடிமைகள் தான்!
Reply
#5
இவர்கள் அக்கிரமிப்பு பெரிதாக வெற்றி பெறப்போவதில்லை. ஜெயா ரீவியை காணவில்லை. இன்று முதல் சண்ரீவிக்கு சந்தா பாரப்போம் இது எவ்வளவு நாள் துண்டு போடும் என்று!
Reply
#6
எதிராளியின் பலத்தை ஒருபோதும் தவறாக எடைபோடக்கூடாது.
Reply
#7
நாம எப்போதும் கோலியாத்தாக இருக்க கற்றுக்கொள்ளவேன்டும்.
Reply
#8
தென் இந்திய தொலைக்காட்சிகள் நமக்கு எதிரிகள் அல்ல, ஆனால் அழையா விருந்தாளிகள், அல்லது ஆக்கிரமிப்பாளர்கள். சினிமாவில் இன்று ஆக்கிரமித்திருக்கும் அவர்கள் தொலைக்காட்சியையும் ஆக்கிரமிப்ப நினைப்பதற்கு நாம் ஒத்துப்போக கூடாது. இன்று முதல் சந்தா அறிமுகமாக்கும் சன்ரீவிக்க் எதிரான பிரச்சாரத்தை நாம் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும். தொடர்களை பார்க்கத்தானே நம்மவர்கள் விழுந்தடித்து சந்தா செலுத்த தயாராகிறார்கள். அந்த தொடர்களை வீடீயோக்கள் மூலம் கொஞ்சம் தாமதமாக குறைந்த விலையில் பாரக்கலாம் தானே! இந்திய தொலைக்காட்சி சந்தா வேண்டாம் என்ற சுலோகத்துடன் வரத்தகர்களும் இந்த தொலைக்காட்சிக்கு விளம்பரம் கொடுப்பதை (ஐரோப்பிய வர்த்தகர்கள்) நினைத்தும் பாரக்க கூடாது. அண்மையில் ஒரு வர்த்தகர் இவர்களை அணுகியதாகவும் பல இலட்சங்கள் கேட்கவே ஆள் மூச்சுக்காட்டவே இல்லலையாம். எனவே சந்தா வரவில்லை எண்டதும் புதிய தொழிலி நுட்பத்துடன் ஐரோப்பாவிற்கு மட்டுமான வரத்தக விளம்பரம் செய்யும் திட்டம் இந்த தொலைக்காடசிக்கு உண்டு எனவே அதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். நமது இரண்டு தொலைக்காடசியும் ஒரு ஒப்பந்ததத்தற்கு வந்து சந்தா தொகையை இருவரும் குறைத்தால் அதிக சந்தாக்களை பெறலாம். நாம் இப்போ ஒன்று பட்டு வேலை செய்யாது போனால் இந்த எமன்கள் நம்மை அப்பி விடுவார்கள்.
Reply
#9
இந்திய தமிழ் ஊடகங்களுக்கு எதிராக நாம் இன்றே தொழிபட ஆரம்பிப்போம்.
Reply
#10
இந்திய தொலைக்காட்சிகளின் வருகை பணம் சம்பாதிப்பது என்ற நோக்கத்திற்கு மேலாக மேலோங்கி நிற்பது அரசியலே எமது போராட்டத்தை மளுங்கடிக்க இருபெரும் நாட்டு அரசியலே காரணம் இதில் மிகவேதனை என்னவெனில் இதற்கு துணைபோகும் ஈழத்தமிழ் நலன்விரும்பிகள் எனதெரிவித்து பிழைப்பு நடத்துவோரை எண்ணுகையில் வேதனையாகவுள்ளது...................
Reply
#11
தென்இந்திய ஊடகங்கள் புலம் பெயர் தமிழ் ஊடகங்களை ஆக்கிரமிப்பதை நிறுத்து!
புலம் பெயர் ஊடக்களை சுயாதீனமாக இயங்க விடு.
புலம் பெயர் ஊடகங்களிற்கு தென் இந்திய படைப்புகளை சுயாதீனமான முறையில் வாங்குவதை தடுப்பதை நிறுத்து!
தென் இந்திய ஊடகற்கள் புலம் பெயர் மக்களின் வாழ்வை அங்கிருந்த படி பிரதிபலிக்க முடியாது, எனவே புலம் பெயர் நாட்டில் சுயாதீனமாக உள்ள உடகங்களை அழிக்கும் மறைமக முயற்சியை நிறுத்து!
இது போன்ற கோசங்களுடன் சன்ரீவி, ஜெயாரீவி, ராஜ்ரீவி போன்ற ஆக்கிரமிப்பு ஊடகங்களுக்கு ஈமெயயில் அனுப்புவதுட்ன மக்களிற்கும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் பத்திரிகையாளர்ள், ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களை பொது ஊடகங்களில் தெரிவிக்க வேண்டும்.
Reply
#12
ஐரோப்பவை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்களே கறிப்பாக தொலைக்கட்சிகளே நமக்கு வேண்டும். இதற்கு மாறக இந்த தொலைக்காட்சிகளுக்கு முகவர்களாக இருப்பவர்களுக்கு நாம் தொலை பேசி மூலம் நமது அதிர்ப்தியை ஜனநாயக முறையில் தெரியப்படுத்துவதுடன். ஒவ்வரு நாடடிலும் உள்ளவர்கள் புலம் பெயர் ஊடக நச்த வாங்காதவர்களுக்கு மலிவு விலையில் இந்த சந்தா அட்டைகளை பெற நமது புலம் பெயர் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மாதம் 10 பேர் 100 பவுண் கட்டுவதை விட 50 போர் 50 பவுண் கட்டினால் அதிக வருமானம் வரும் தானே! இதை அவர்கள் புரிந்து செயற்பட புலம் பெயர் ஊடகங்களுக்கு அனைவரும் எழுத வேண்டும்.
Reply
#13
<img src='http://www.suntvuk.com/images/sunlogo.gif' border='0' alt='user posted image'><img src='http://www.suntvuk.com/images/Suryag.gif' border='0' alt='user posted image'><img src='http://www.suntvuk.com/images/Ktvg.gif' border='0' alt='user posted image'>
Sun TV UK Ltd,
Kingston House,
Portsmouth Road,
Surbiton
Surrey KT6 5QL
UnitedKingdom
Phone: +44 (0) 208 33 56780
Fax: +44 (0) 208 33 56790
suntv@suntvuk.com


team@dishasia.net <team@dishasia.net>
Reply
#14
என்னைப் பொறுத்தவரை வியாபாரத்தில் போட்டிகள் வேண்டும்...கீரைக்கடைக்கு எதிர்க்கடை இருந்தால்தான் மக்களுக்கு நல்ல கீரை நியாயமான விலையில் கிடைக்கும்...

எம்மவரின் படைப்புக்களை மேலும் மெருகேற்றவும்...தென்னிந்தியப் படைப்புகளுடன் போட்டிபோடுமளவுக்கு தயாரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இப்பொழுது ஏற்பட்டுள்ளது...இதையுணர்ந்து கலைஞர்கள் செயலாற்ற வேண்டியது அவசியம்...அதை விடுத்து அவர்களை வெளியேறுங்கள் என கூச்சலிடவோ அல்லது அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவோ எமக்கு உரிமையில்லை...அது இயலாமையின் வெளிப்பாடு...ஆனால் உண்மை நிலையை எம்மவருக்கு தெளிவு படுத்தும் உரிமை எமக்கு நிச்சயமாக இருக்கிறது!
Reply
#15
உங்கள் கருத்துக்கு நன்றி. தொலைக்காட்சிகளில் போட்டி இருக்கலாம். ஆனால் புலம்பெயர் தொலைக்காட்சிளை விழுங்கும் விதத்தில் இந்த தொலைக்கட்சிகள் நடந்தமை உங்களுக்கு தெரியுமா? நீங்கள் இந்த தொலைக்காட்சிகளுக்கு அடிமையாக இருக்கலாம். ஆனால் இந்த தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே சில தொடர்களை நமது தொடருக்கு முதலில் விற்று விட்டு பின்னர் அரை நடுவில் நட்டாற்றில் விட்டது தெரியுமா? போட்ட வேணும் தான் அது ஆக்கிரமிப்பாக மாறுவதையே நம் கண்டிக்கிறோம். கூச்சல் இடுகிறோம். இந்த தொலைக் காட்சிகள் மூலம் நமது குழந்தைகள் ஆங்கிலிஸ் தமிழ் கதைப்பது உங்களுக்கு பிரச்சனையில்லாமல் இருக்கலாம். ஆனால் நமது தொலைக்காட்சிகளை அது அழிப்பதை நாம் பார்த்து சும்மாயருக்க முடியாது. பிரித்தானியாவல் தொலைக்காட்சியை கட்டுப்படுத்தும் நிறுவனம் செய்மதி அல்லாத தொலைக்காட்சிக்கு 5 அலைவரிசையை மட்டும் வைத்திருக்கிறது. தனது கலாச்சார நிகழ்ச்சிகளையும் தனது தனித்துவதை;தையும் தக்க வைக்க அதுவே இப்படி கட்டுபாடு விதிக்கையில் தென்னிந்திய குப்பைகளை இங்கே கொட்டாதீர்;கள் என குரைக்க நமக்கு உரிமையுண்டு. நீங்கள் வேண்டுமென்றால் இந்த குப்பைக்கள் கிடந்து நாறுங்கள், நாம் கூச்சலிட்டாவது நமது எதிர்ப்பை தெரிவிப்போம். அது நமது உரிமை! இது வியாபாரமல்ல நமது கலாச்சாரத்தை அழித்தொழிக்க ஏவப்படும் ஏவகணைகள். கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள் தற்போது மலர்மாலையாக இருக்கலாம். அது ஒரு நாள் உங்களை சுடும் போது நிச்சயம் உணர்வீர்கள்.
Reply
#16
கலாசாரமா...லண்டனிலா...ஐரோப்பாவிலா...கனடாவிலா...எம்மவரிடத்திலா...கலாசாரம் என்றால் என்ன....பள்ளி சுற்றுலாச் செல்லும் 12 வயது மகளுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு உபகரணங்கள் கொடுத்துவிடும் அளவிற்கு இருக்கிறது கலாசாரம்....இதைவிட இந்தியக் குப்பை எவ்வளவோ மேல்....!

வாழ்க கலாசாரம் இப்போதாவது எமக்கென்று கலாசாரம் இருக்கென்று நினைக்கிறியள்....அதன் பெயரில் வாழ்க இந்திய தொலைக்காட்சிகள்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
Raakkooli இன் வேண்டுகோளுக்கிணங்க அவருடைய பதிப்பு இங்கு இடப்பட்டுள்ளது:

Raakkooli Wrote:தரமான பல்சுவை அம்சங்களை தாங்கி வருகின்ற இந்திய ஊடகங்களின் வருகையை பொறுக்கமுடியாத சிலர் புசத்துகிறார்கள். கடந்த சில வருடங்களாக ஈழத்தமிழர் தொலைகாட்சிகள் என்று கூறிக்கொண்டு வானவீதியில் உலாவரும் தொலைகாட்சிகள் புலம் பெயர் எம்மவரின் அறிவுப்பசிக்கும் கலைப்பசிக்கும் சரியான தீனி போடவில்லை என்பது மறைக்கமுடியாத உண்மை. அதனால் தரமானஇந்திய ஊடக வருகையை பினாமிகள் மூலம் வன்மையாக எதிற்கிறார்கள். என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இருந்தபோதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழர் உணர்வோடு இருந்த தொலைகாட்சியை மண்ணோடு மண்ணக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைவிட்டது. தற்போது துலிர்விடுவதை பொறுக்க முடியாத வசமிகளின் வசமித்தன போக்கு மகவும் கண்டனத்திற்கு உரியது.

அறிவுசார் தமிழ் உனர் வாளர்கள் நிச்சையம் புரிந்துகொள்வார்கள்.

[b]


Reply
#18
கலாச்சாரம் பற்றி கூறுவதானாலட அது பெரிய விடயம். நீங்கள் கலாச்hசிறீசாரம் என்று எதைக் கருதுகிறிர்களோ தெரியாது. குடும்பக்கட்டுப்பாடு, ஆண் பெண் உறவுமுறை இது தான் கலாச்சாரமா? கலாச்சாத்தின் மூலம் நமக்கு முதலில் மொழி, அதன் பண்புகள். தனிமனித நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் கலாச்சாரம் என்று நீங்கள் குழம்பினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். சரி உங்கள் கலாச்சாரத்திறகே வந்தாலும் போயஸ் படம் பாத்தனீங்களோ? இதுக்குமேலை வேயை என்ன வேணும்? அங்கை ஒளிச்சு செய்யினம், இஞ்சை பப்பிளிக்கா நடத்தினம். அங்கை டேற்றிங், எல்லாம் பழசு, தயவுசெய்து ஒரு குப்பையை மறைக்க இன்னுமொரு குப்பையை கொண்டுவராதேங்Nகு. லண்டனிலை இரவு 10 மணிக்கு பிறகுதான் வன்முறை, மற்றும் வயது முதிந்தவைக்கான படங்கள் வருது. தென்னிந்திய ஊடகங்கள் பகலிலேயே போடுதுகள். நேற்று குருதிப்புனல் போட்டினம், பகல் 12.30. அது இங்கை 18 வயதினருக்கான படம். படத்தில் கமலும் கவுதமியிம் பகல் 12.30 பப்பிளிக்கா இங்கிலிஸ் கிஸ் குடுக்கினம். நீங்கள் வேணுமெண்டா இருந்த உங்கடை பிள்ளையுளுக்கு வன்முறையையும், இங்கிலீஸ் கிஸ்ஸையும் தமிழ் கலாச்சார முறைப்படி பகலிலை சொல்லிக்குடங்கோ. முதலலை நடைமுறை என்ன எண்டு பாருங்கோ. தமிழ் தொலைக்கட்சியே அல்லது அதன் தொடர்களோ வேண்டாம் எண்டு செல்லேல்லை. அது கட்டுப்படுத்தப்பட்டு நமது ஊடகம் மூலம் வரட்டும். கட்டுப்பாடு இல்லாது யாழ் குடா நாட்டில் எத்தினை அழி வந்தது பார்தனிPங்கள் தானே. சந்திக்கொரு மினி சினமா அதிலை பாலியல் படம். சந்திக்கு சந்தி விபச்சார விடுதி! நைட்கிளப்பெல்லாம் கூட தொடங்க இருந்தது.

இஞ்சை கலாச்சாரம் எண்டால் அதை முதலிலை மொழியிலை கொண்டுவாங்கோ! வெறுமனே கலாச்சார அடையாளங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆளை ஆள் விழுங்குறதை விட்டுவிட்டு இளைஞர் சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்ட பாருங்கோ! அதை நம்மடை தொலைக்கட்சிகள் கொஞ்சமாவது செய்ய வெளிக்கிட்டுது. அதையும் நிர்மூலமாக்க நினைத்தால் செய்து முடியுங்கோ! அனால் ஒரு காலத்தில் உணர்வீர்கள். புலம் பெயர்ந்து வந்து வெற்றிகரமாக இருக்கும் அடுத்த சமூக அமைப்பை பார்த்து இனியாவது திருந்த கொஞ்சம் முயற்சிப்பம்.
Reply
#19
ஊடகங்குளக்கு ஈமெயில் அனுப்புவதைவிட எமது தமிழ் மக்களுக்கு அனுப்புங்கள் எங்களின் ஆதரவு இருக்கும் வரை
அவர்களை குறைகூறி ஒன்றும்
செய்ய முடியாது நான் சில ஊண்மைகளைச் சொல்லுகிறேன்
ரிரிஎன் காட்வாங்கியவர்கள் பலர்
அதனை வாங்குவதை நிறுத்திவிட்டு இந்தியாவில் இருந்து
ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிக்கான காட்டை வாங்கியுள்ளார்கள் இப்படியானவர்கள் இருக்கும் பொழுது இவர்களை
நாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று
கூறமுடியாது அவர்களின் ஆக்கிரமிப்பு வருவதற்கு நமது தமிழர்களே முக்கியகாரணம் மற்றும்படி தரமான நிகழ்ச்சிகளை
ஒளிபரப்பு எமது ஊடகங்கள் முன் வரவேண்டும் இதற்கு அதிக பணம்
வேண்டும் ஆனால் புற்று ஈசல் போல் இவ் ஊடகங்கள் ஒவ்வொன்றாக வந்தவண்ணமுள்ளன வருவது நல்லதுதான் ஆனால் பொருளாதாரச்சுமை இருக்கக்கூடாது எங்களுக்குள் முதலில் ஒற்றுமையை ஏற்படுத்துங்கள் ஒன்று அல்லது இரண்டு தொலைக்காட்சிகள் போதுமானது
தரமான நிகழ்ச்சியை வழங்கி எம்
மக்களை கவருங்கள் தானாகவே
மற்றய தொலைக்காட்சிகள் மறையும் இதைசெய்வதையிட்டு
மற்றவர்கள் மீது குறை சுமத்தாதீர்கள்
Reply
#20
Quote:வலைஞன்

உப பொறுப்பாளர்


Gender:



Age: 28
Posted: Mon Dec 01, 2003 5:05 pm


Raakkooli இன் வேண்டுகோளுக்கிணங்க அவருடைய பதிப்பு இங்கு இடப்பட்டுள்ளது:

Raakkooli wrote:
தரமான பல்சுவை அம்சங்களை தாங்கி வருகின்ற இந்திய ஊடகங்களின் வருகையை பொறுக்கமுடியாத சிலர் புசத்துகிறார்கள். கடந்த சில வருடங்களாக ஈழத்தமிழர் தொலைகாட்சிகள் என்று கூறிக்கொண்டு வானவீதியில் உலாவரும் தொலைகாட்சிகள் புலம் பெயர் எம்மவரின் அறிவுப்பசிக்கும் கலைப்பசிக்கும் சரியான தீனி போடவில்லை என்பது மறைக்கமுடியாத உண்மை. அதனால் தரமானஇந்திய ஊடக வருகையை பினாமிகள் மூலம் வன்மையாக எதிற்கிறார்கள். என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இருந்தபோதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழர் உணர்வோடு இருந்த தொலைகாட்சியை மண்ணோடு மண்ணக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைவிட்டது. தற்போது துலிர்விடுவதை பொறுக்க முடியாத வசமிகளின் வசமித்தன போக்கு மகவும் கண்டனத்திற்கு உரியது.

அறிவுசார் தமிழ் உனர் வாளர்கள் நிச்சையம் புரிந்துகொள்வார்கள்.

தரம்????? அட கடவுளே கண்மை மூடிக்கொண்டு உலகம் இருண்டுட்டுதாம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)