11-15-2005, 08:34 AM
3 வயது குழந்தையின் கொலையை மறைத்த குஷ்பு
நவம்பர் 15, 2005
சென்னை:
ஒரு குழந்தையின் கொலையை மறைத்ததாக குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் அமைப்பு புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
சென்னை எழும்பூர் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வி. சிறுத்தைகள் மாநில மாணவரணித் துணைச் செயலாளர் ரவிசந்திரன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அதில், கடந்த 2004ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் குஷ்பு கலந்து கொண்டிருக்கிறார். இந்த விருந்து நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர் ஒருவரின் 3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குளியறையில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவத்தை குழந்தையின் பெற்றோரும், ஓட்டல் நிர்வாகத்தினரும் மறைத்துவிட்டனர். போலீசில் புகார் ஏதும் கொடுக்கவில்லை. இந்த விவரம் தெரிந்த குஷ்புவும் கூட அதை போலீசுக்குச் சொல்லவில்லை.
இதைபற்றி கடந்த 2004ம் ஆண்டு பிரபல வாரப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்த குஷ்பு, குழந்தையின் கொலைச் சம்பவம் பற்றி குறிப்பிட்டு அந்த சம்பவம் மனதளவில் என்னை மிகவும் பாதித்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி அப்போதைய போலீஸ் கமிஷனரிடம் நிருபர்கள் கேட்டபோது, குழந்தை கொலை பற்றி பெற்றோரோ, ஓட்டல் நிர்வாகத்தினரோ புகார் ஏதும் கொடுக்கவில்லை. அதனால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறிவிட்டார்.
குழந்தை கொலை பற்றி குஷ்புவுக்கு தெரியும். இதனால் தான் அது பற்றி வாரப்பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஆனால் கொலை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்துள்ளார்.
குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 39ன் படி கொலையை நேரில் பார்த்தவர் அதுபற்றி உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காவிட்டால் அது இபிகோ 201,202,203 பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே இது தொடர்பாக நடிகை குஷ்புவிடம் விசாரணை நடத்தி, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கு ஆதாரமாக வாரப் பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியின் நகலும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இன்னொரு விவகாரத்தில் குஷ்பு மாட்டியுள்ளார்.
Thatstamil

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
hock: