11-08-2005, 03:10 PM
back button problem :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
|
ஜனாதிபதி தேர்தல் 2005
|
|
11-08-2005, 03:10 PM
back button problem :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
11-08-2005, 03:13 PM
narathar Wrote:நாரத சுவாமி .....அவங்களுக்கு தெரியாத மாதிரி.. நீங்க நோட்டியாய் கதைக்கிறீங்க....அவங்க இப்ப தான் என்ன பிருந்தாவனத்தில் இருந்து பறந்து வந்த தூயவரம் மாதிரி கதைக்கீங்க... அவங்க தான் எல்லாமாய் அறிந்தவங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Thala Wrote:kurukaalapoovan Wrote:ஓம் ஓம் நீங்கள் வெளிநாடுகளில தப்பி இருந்து கொண்டு நல்லா எழுதுவியள். உங்களுக்கு சமாதானம் வேண்டாம் சண்டைதான் பிடிக்க வேணும் எண்டா ஏன் விட்டுட்டு வந்தனீங்கள். சனம் பென்ரோச் பற்றரி, பெற்றோல், பனடேல்க்கு எல்லாம் எவ்வளவு அவதிப்பட்டது தெரியுமே?
11-10-2005, 12:07 PM
<b>தேர்தலில் தமிழர்கள் அக்கறைகாட்ட வேண்டியதில்லை: சு.ப. தமிழ்ச்செல்வனுடனான சந்திப்புக்குபின் இரா. சம்பந்தன் அறிவிப்பு!!
[வியாழக்கிழமை, 10 நவம்பர் 2005, 16:24 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்கள் அக்கறை காட்ட வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். கிளிநொச்சியில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இரா.சம்பந்தன் இதை அறிவித்தார். ஊடகவியலாளர்களிடம் இரா.சம்பந்தன் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கி 3 மணிக்குத்தான் நிறைவடைந்தது. இந்தக் கூட்டம் 3 மணித்தியாலத்துக்கும் மேலாக நடைபெற்றது. எதிர்வரும் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் வடக்கு-கிழக்கில் வாழும் மக்கள் மேற்கொள்ள வேண்டியது பற்றி மிகவும் ஆழமாகவும் தெளிவாகவும் ஆராயப்பட்டது. இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் மாறி மாறி வந்த சிங்கள அரசியல் தலைமைகள் எதுவிதமாக தமிழ் மக்களை நடத்தினார்கள் என்பது பற்றியும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எப்படிச் செயற்பட்டார்கள் என்பது பற்றியும் தமிழ் மக்கள் இராணுவ ரீதியாக எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பது பற்றியும் இனப்படுகொலையை அரசுகள் எப்படியெல்லாம் நடத்தின என்பது பற்றியும் நீண்ட நேரமாக பேசப்பட்டன. கடந்த மூன்றரை வருடகாலமாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி அரசும் பொதுக் கூட்டமைப்பு அரசும் எப்படியாக செயல்பட்டன என்பது பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக தமிழ்ச்செல்வனும் தங்களது கருத்தைத் தெரிவித்தார். இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு, சிறிலங்கா அரச தலைவர் தேர்தலால் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு தமிழ் மக்கள் விரும்புகிற ஒரு தீர்வு ஏற்பட முடியாது. ஏற்படாது என்பதுதான். அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்ட, சமாதான காலம் ஆகியவற்றை மனதில் வைத்து தேர்தலை அணுகுகின்ற போது இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறைகாட்ட வேண்டியது இல்லை. இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறை காட்டுவதன் மூலமாக எதுவித நன்மையும் அடைய முடியாது என்பது எங்களது திடமான கருத்து. தற்போது போட்டியிடும் இரு கட்சிகளனது வேட்பாளர்களும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அந்தக் காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மனதில் கொண்டு ஆராய்ந்து சிந்திக்கிற போது இந்தக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது எம்மால் நம்பிக்கை வைக்க முடியாது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எமது மக்களும் இந்த நிலைமைகளை அனுபவித்திருக்கிறார்கள். அவதானித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நிலைமைகள் எல்லாம் தெரியும். வடக்கு-கிழக்கில் வாழ்கிற மக்கள் அனைவரும் நிலைமைகளை புரிந்தவர்கள். எமது மக்களும் இதே சிந்தனையில்தான் இருக்கிறார்கள். எமது மக்களும் இதேவிதமான முடிவைத்தான் எடுப்பார்கள் என்பதில் எதுவிதமான ஐயப்பாடும் இல்லை. எமது பழைய அனுபவங்களின் அடிப்படையில் விசேடமாக யுத்த நிறுத்தம் ஏற்பட்ட பிறகு- தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்த சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடத் தொடங்கிய பிறகு நடைபெற்ற நிகழ்வுகளை நாம் ஆராய்ந்து பார்க்கிறபோது இந்தத் தேர்தலில் எமது மக்கள் அக்கறை காட்ட வேண்டியதில்லை என்பது எமது முடிவு என்றார் இரா. சம்பந்தன். அப்படியானால் சிங்களத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறார்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த இரா. சம்பந்தன், இந்தத் தேர்தலில் எமது மக்கள் அக்கறைகாட்ட வேண்டியதில்லை என்பது எமது தெளிவான கருத்து என்றார் சம்பந்தன். தமிழ் மக்கள் வாக்களிக்க விரும்பினால் நீங்கள் தடுப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், நிச்சயமாக தடுக்கமாட்டோம். தமிழ் மக்களினது ஜனநாயக உரிமையை பறிக்கும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால் அனுபவங்களின் அடிப்படையில் நிச்சயம் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறைகாட்டமார்கள் எமது நம்பிக்கை என்றார் அவர். ஊடகவியலாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் கூறியதாவது: சிங்களத் தேசத்துக்கான தேர்தல் தொடர்பாக தமிழர்கள் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. 1972-77 ஆம் ஆண்டு காலகட்ட அரசியல் அமைப்புகளை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இதை எங்கள் அரசாக ஏற்கவில்லை நாம். இது எங்கள் தேசத்துக்கான தேர்தலும் அல்ல. சிங்கள தேசத்துக்கானத் தேர்தல் என்றார் அவர்.</b> நன்றி: புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
11-11-2005, 04:41 PM
தனது மாமனார் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினரென்கிறார் அமைச்சர் மங்கள
தனது குடும்பத்தில் சகல மதத்தவர்களும் இருப்பதாகவும் தெரிவிப்பு தனது குடும்பத்தில் பௌத்த,இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என சகல மதத்தவர்களும் இருப்பதாக கூறிய அமைச்சர் மங்கள சமரவீர, தனது மாமனார் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய உறவினரெனவும் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளர் பிரசார இணைப்பாளர் காரியாலயத்தினால் நேற்று வியாழக்கிழமை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மங்கள சமரவீர அங்கு மேலும் பேசுகையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் அவர்களின் தோல்வி உறுதியாகிவிட்டதால் இன்று மக்களிடம் தவறான பிரசாரங்களை செய்து இந் நாட்டில் மீண்டுமொரு இனவாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஐ.தே.க. மற்றும் அக் கட்சிக்கு ஆதரவான வர்த்தகர்களே இந் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதையிட்டு நாம் விசனமடைந்துள்ளோம். மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமொன்றில் மீண்டுமொரு இனவாத வன்முறைக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். ஐ.தே.க. சார்பான பிரபல வர்த்தகரான லலித் கொத்தலாவல ரணிலுக்காக பத்திரிகைகளில் வெளியிடும் விளம்பரங்கள் மூலம் இன மற்றும் மத பேதங்களை உருவாக்கப் பார்க்கிறார்.இலங்கையைப் போன்று வேறெங்கும் ஒரே இடத்தில் சர்வ மத ஸ்தலங்களும் இல்லை. எம்மிடம் தான் அந்த சிறப்பம்சம் இருக்கிறது. அதையிட்டு நாம் பெருமையடைகிறோம். எம்மிடையே எப்போதும் மத பேதங்கள் இருந்ததில்லை. உதாரணமாக, எனது குடும்பத்திற்குள்ளேயே பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என சகல மதத்தவர்களும் இருக்கின்றனர். குறிப்பாக, எனது மாமனார் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய உறவினராவார். அதாவது, அவர் எனது தந்தையின் சகோதரியின் கணவராவார். எனவே, ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆதரவாளர்களுமே இன மற்றும் மத பேதங்களை உருவாக்கப் பார்க்கின்றனர். பிரிவினைகள் இல்லாத நாம் அனைவரும் ஒரே மேடையில் இருக்கிறோம். தனியான ஈழ இராச்சியம் கேட்கும் பிரபாகரன் , தனி மலை நாடு கோரும் ஆறுமுகம் தொண்டமான், தனியான கிழக்குப் பிராந்தியம் கேட்கும் ரவூப் ஹக்கீம், தற்போது மத பேதங்களை உருவாக்க முயற்சிக்கும் லலித் கொத்தலாவல போன்றவர்கள் அனைவரும் ரணிலுடன் ஒரே மேடையில் இருக்கின்றனர். எனவே, ஒரே நாட்டில் அனைத்து இன சமூகங்களும் எந்த தலைமைத்துவத்தின் கீழ் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியுமென நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார். Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
11-11-2005, 05:19 PM
அடப்பாவிகளா கிளம்பீட்டாங்கையா.. கிளம்பீட்டாங்கை. :evil: :evil:
<b> .</b>
<b> .......!</b>
11-12-2005, 02:03 PM
அட பாவி மனிசா.................................................................
நாற்காலிக்காக இப்படி சொல்லுகிறானே..........................................
[size=18]<b> ..
.</b>
11-12-2005, 02:36 PM
தமிழர் வாக்குகளால் வெற்றியை உறுதிப்படுத்தலாம் எண்டு நம்பியிருந்த ஜதேகா புறக்கணிக்கப் போகிறார்கள் என்றதை உணர்ந்ததும் சிங்களத் தேசிவாதம் பேசி சிங்கள மக்களின் வாக்குகளால் தான் தமது வெற்றியை உறுதி செய்யலாம் என்று தொடர்கிறார்கள் பிரச்சாரங்களை. இந்த யுக்தி மகிந்தவின் வாக்குகளை ரணில் பக்கம் இழுத்துவிட்டது போலுள்ளது.
முற்று முழுதாக பெரும்பான்மையினரின் வாக்குகளை நம்பியிருந்த மகிந்த தரப்பு சிறுபான்மையினரின் வாக்குகளின் தேவையை உணர்ந்து தமது பிரச்சார உத்திகளையும் மாற்றியுள்ளார்கள் போலுள்ளது.
11-13-2005, 12:58 PM
thiru Wrote:நான் மிகவும் வேதனையுடன் இந்தப் பதிவினை மேற்கொள்ள முற்பட்டிருக்கிறேன். நன்றி திரு மிகவும் அவசியமான கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு. இதுபோன்ற கருத்துக்கள் அவ்வப்போது யாழ்க்களத்திற்கு தேவைப்படுகின்றது. சிரமங்கள் பாராது வாருங்கள் உங்கள் கருத்துக்களைத்தாருங்கள்.
11-14-2005, 08:41 AM
யாழ்ப்பாணத்தில் தேர்தல் முகவர்களாகச் செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு விடுதலைப் புலிகள அனுமதி யாழ்ப்பாணத்தில் தேர்தல் முகவர்களாகச் செயற்படுவதற்கு விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி வழங்கியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறைகொள்ளத் தேவையில்லையென விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பினைப் பயன்படுத்தி ஈ.பி.டி.பியினர் வாக்கு மோசடிகளில் ஈடுடத்திட்டமிட்டிருப்பதால் அதனைத் தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முகவர்களை நியமிப்பதற்கு விடுதலைப் புலிகள் அனுமதி வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோர் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இதற்கமைய யாழ் மாவட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முகவர்களை நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்மானித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
11-14-2005, 08:43 AM
ஈ.பி.டி.பியினருக்கு வச்சங்கள் ஆப்பு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
11-14-2005, 09:51 AM
ஈ.பி.டி.பி யினருக்கு இருந்த ஒரு வழியையும் அடைச்சுப்போட்டாங்கள் :oops: :oops: :oops: அவையள் எப்படி கள்ளஓட்டு போடுறது :oops: :oops: :oops:
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
11-14-2005, 01:09 PM
உந்த விடயத்தைத் தானே நான் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டினேன். அப்ப ஆ உ என்றவர்களெல்லாம் இப்போ மீண்டும் ஜால்ரா. <b>என்றுதான் எம்மினம் சுயமாகச் சிந்திக்கப் போகுதோ??????????</b>
11-14-2005, 11:48 PM
தேர்தலில் போட்டியிடும் 2 முன்னணி வேட்பாளர்களிலும் அவர்கள் சார்ந்த கட்சிகளிலும் தமிழருக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் தமிழர் தேசியம் பற்றி கதைப்பது தமிழர் வாக்குகளை பெற்றுக்கொள்ளவே. இது எமக்கு கடந்த கால அனுபவங்கள் தந்த பாடம்.
மகிந்த விடமிருந்து எதிர்பார்க்கக்கூடியது வெளிப்படையான ஆபத்து. ரணல் புரிந்துணர்வேடு நடப்பவராகக் வெளிப்பார்வைக்குக் காட்டிக் கொண்டாலும் தனது வாக்குறுதிகளை மதித்து அமுல்படுத்துவதில்லை. அமுல்படுத்தக்கூடி சூழ்நிலையிருந்தும் அதை தவிர்த்து இன்று தமிழரை விரக்தியின் உச்சத்திற்கும் பெறுமையின் விளிம்பிற்கும் கொண்டு வந்ததில் ரணில் பெரும்பங்கு வகிக்கிறார். அண்மைக் காலங்களில் நடந்துவரும் மக்களின் எழுச்சிகள், அவர்களின் விரக்திக்கு ஏமாற்றத்திற்னு எடுத்துக்காட்டுகள். மக்களே எமது போராட்டத்தின் அடுத்த நகர்வை தீர்மானிக்கும் நீதிபதிகள். இராணுவ ஆக்கிரமிப்புகள் தொடரும்பட்சத்தில் அவர்களின் வெகுஜன எழுச்சிகள் ஜநனாயகரீதியில் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடையும். <i>தென்னிலங்கையில் நடக்கும் தமிழரின் பிரிவினைவாதம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் காலம் கடந்தவை. அவர்கள் பேசிக்கொள்ளும் ஒற்றையாட்சியின் கீழான தீர்வு என்பது வெறும் கனவு. தமிழருக்கு என்று ஒரு தேசியம் இங்கு ஒருகாலத்தில் இருந்தது, அதை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை ஏற்க மறுத்தால் கொழும்பு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</i> http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3580&SID=526
11-15-2005, 12:11 PM
வவுனியா வரை வந்துவிட்டு மீண்டும் கிளிநொச்சிக்கு சென்றார் சந்திரசேகரன்கிளிநொச்சிக்கு நேற்று திங்கட்கிழமை அவசரப்பயணமொன்றை மேற்கொண்டு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனுடன் பேச்சுவார்த்தை நடத்திய மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெ.சந்திரசேகரன் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிய வருகிறது.
நேற்று திங்கட்கிழமை காலை கிளிநொச்சியிலுள்ள விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனைச் சந்தித்த சந்திரசேகரன் ஜனாதிபதித் தேர்தலில் எத்தகையதொரு நிலைப்பாட்டை நாடு பூராவுமுள்ள தமிழ் மக்கள் எடுக்க வேண்டுமென்பது தொடர்பாக கலந்துரையாடியதாக தெரிய வருகிறது. இரு பிரதான அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் இன நெருக்கடித் தீர்வு தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாகவோ எந்தவொரு உரிய தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கவில்லையெனவும் அதனாலேயே இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறை காட்டவில்லை என்றும் இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழ்ச்செல்வன் சந்திரசேகரனுக்கு நேற்றைய பேச்சுவார்த்தையில் தெரிவித்ததாகவும் அறிய வருகிறது. இதனையடுத்து நேற்று நண்பகல் கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு வந்த சந்திரசேகரன் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் கொழும்புக்கு வராமல் மீண்டும் கிளிநொச்சிக்கு திரும்பிச் சென்றுள்ளார். விசேட செய்தியொன்றுடன் அவர் திரும்பிச் சென்றதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையக மக்கள் முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்திலும் கொழும்பிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http://www.thinakural.com/New%20web%20site...er/15/index.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
11-15-2005, 04:50 PM
ஒரு கோடியை எட்டியிருக்கும் தேர்தல் 'பந்தயம்'
<b>சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் எனக் கூறி இரத்தினபுரியில் இரத்தினக்கல் வியாபாரியொருவர் ஒருகோடி ரூபாவிற்குப் பந்தயம் பிடித்துள்ளார்.</b> http://www.eelampage.com/?cn=21717 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
11-16-2005, 12:31 AM
[size=18][u]<b>சனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது யார்?</b>
தேர்தல் தொடர்பாக பல யூகங்கள் பலவாறு வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிலர் மகிந்த என்கிறார்கள் சிலர் ரணில் என்கிறார்கள். வேறுசிலர் "கடுமையான போட்டி" என்று சொல்லித்தப்பித்துக் கொள்கிறார்கள். இச்சமயத்தில் எனது யூகத்தையும் இங்கே பதிந்துவைக்க விரும்புகிறேன். எனது ஊகத்தின் படி ஸ்ரீ லங்காவின் அடுத்த சனாதிபதி மஹிந்த என்பதுதான். நான் இந்த முடிவுக்கு வரக்காரணம் யாதெனில்: 1) சிங்கள பௌத்த பேரினவாதிகளை திருப்திப்படுத்தாத எவரும் இதுவரை சனாதிபதியானதில்லை. இனி ஆகப்போவதுமில்லை. 2) ஸ்ரீ லங்காவிலே ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி என்பது தனித்தனியே உண்டு. முந்தைய தேர்தல்களின் புள்ளிவிபரங்களின் படி பார்த்தால், ரணில் சார்பான கட்சிகளின் வங்கிகளின் கூட்டுத்தொகையை விட, மகிந்த சார்பான வங்கிகளின் கூட்டுத்தொகைதான் அதிகம் (ஹெல உறுமயவுக்கு இப்படி ஒரு வங்கி இல்லாவிட்டாலும் அதற்கென ஓரளவு வாக்குகள் உண்டு என்பதே உண்மை) 3) தமிழ் மக்கள் இம்முறை பாரிய அளவில் தேர்தலை பகிஷ்கரிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரணிலுக்கு கிடைக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச வாக்கும் கிடைக்கப்போவதில்லை. மேற்குறித்த காரணிகளால் மகிந்தவின் வெற்றிவாய்ப்புக்களே அதிகமாக இருக்கிறது. ஒரேயொரு காரணத்தால் மட்டுமே ரணில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதுதான் பேரினவாதிகளின் மனமாற்றம். பெருமளவிலான மக்கள் மனம்மாறி பேரினவாதிகளுக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். பேரினவாதமா? கொக்கா? ஐம்பது ஆண்டுகளாக மாறாத மனமா இனி மாறப்போகிறது? இன்னுமொரு விடயம் ரணிலையும் மகிந்தவையும் தவிர்ந்த வேட்பாளர்களில் விக்டர் ஹெட்டிகொட ஒரளவு வாக்குகளைப் பெறக்கூடும் (சிலவேளை மொத்த வாக்குகளில் 5% வரை அவரது வாக்குகள் செல்லலாம்). இதற்குக்காரணம் இரண்டு கட்சிகளின் போக்கையும் விரும்பாத மக்கள் இந்தத் தொழிலதிபருக்கு வாக்களிக்கக்கூடும் என்பதனாலாகும். இன்னும் இரண்டு நாட்கள்தானே...எனது ஊகம் பலிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். எனது குடிலில் பார்வையிட: http://thamilmahan.blogspot.com
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
11-16-2005, 12:46 AM
மகிந்த என்றுதான் எனக்கும் தோன்றுகிறது..
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
11-16-2005, 06:43 AM
ஆமாம்... தமிழ் மக்களின் நிலையோவென்றால்.... இராவணன் ஆண்டால் என்ன.... இராமன் ஆண்டால் என்ன... கூடவந்த குரங்குக் கூட்டம் ஆண்டால் என்ன என்பது போன்ற நிலமை தான்........
இது தொடர்பான செய்தி.....http://news.bbc.co.uk/2/hi/south_asia/4438214.stm
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
11-16-2005, 06:58 AM
யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு வென்றபின் அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையாகத்தான் இருக்கும்.
enrum anpudan
|
|
« Next Oldest | Next Newest »
|