Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குஷ்பு மீண்டும் வம்பு: துணைக்கு சுகாசினி
#1
குஷ்பு மீண்டும் வம்பு: துணைக்கு சுகாசினி
நவம்பர் 09, 2005



தமிழகப் பெண்களின் கற்பு குறித்து தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அது குறித்து தான் வெட்கப்படவும் இல்லை என்றும் குஷ்பு மீண்டும் 'திருவாய்' மலர்ந்துள்ளார்.

திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும், அப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது பால்வினை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் குஷ்பு கூறினார். மேலும் தமிழகத்தில் பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது அதிகரித்து வருவதாகவும் பேசினார்.

இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்ட நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.



இந்த நிலையில் தான் சொன்ன கருத்துக்காக வெட்கப்படவில்லை என்று குஷ்பு திமிர்த்தனமாகக் கூறியுள்ளார்.

செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் நடத்தும் சர்வதேச பட விழாவின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை பிலிம் சேம்பர் தியேட்டரில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்குகொண்ட குஷ்பு பேசியதாவது:

நான் யோசித்து பேசியிருந்தால் எனக்கு பிரச்சினை வந்திருக்காது. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.

இங்கு என்னை பற்றி பேசும் போது சோதனைகளை சாதனையாக மாற்றி காட்டுபவர் குஷ்பு என்று சொன்னார்கள். நான் ஒவ்வொரு தடை கற்களைகளையும் வெற்றி படிக்கட்டுகளாக நினைப்பவள். அது தான் என் வெற்றிக்கு காரணம்.

நான் முன்பு சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை. அதற்காக நான் வெட்கப்படவும் இல்லை என்றார்.

நிகழ்ச்சியில் நடிகையும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுகாசினி பேசுகையில்,

குஷ்புவுக்கு பிரச்சினை ஏற்பட்ட போது நான் அமெரிக்காவில் இருந்தேன். யாரும் என்னிடம் அது பற்றி கருத்து கேட்கவில்லை. பிரச்சனையை வெற்றிகரமாக சந்தியுங்கள் என்று குஷ்புவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன்.

1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அது ஆண்களுக்கு மட்டும் தானா? பெண்களுக்கு இல்லையா? நான் இப்படி பேசினால் என்னை பரமக்குடிக்கு அனுப்பி விடுவீர்களா?


தமிழ்நாட்டில் பிறந்தால் இரண்டு கொம்பா முளைத்து இருக்கிறது?.
வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வாழ வந்த ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதற்காக ஒட்டு மொத்த தமிழர்கள் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும்.

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ஒரு கருத்தை சொன்னார். அதை புரிந்து கொள்ளாமல் அவரை அவமானப்படுத்தி விட்டீர்கள். இதற்காக தமிழர்கள் சார்பில் நான் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

இதை தொடர்ந்து சுகாசினியை நோக்கி ஓடி வந்த குஷ்பு அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், சினிமாவில் இருப்பவர்கள் எது பேசினாலும் பிரச்சனையாகிவிடுகிறது. இதனால் நாம் பேசும்போது ஒன்றுக்கு பல தடவை யோசித்துப் பேச வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபனும் கலந்து கொண்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு:

இதற்கிடையே சங்கரன் கோவில் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு இந்த மாதம் 21ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.



தமிழக பெண்களின் கற்பு குறித்து குஷ்பு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கரன் கோவில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகர குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி சரவணக்குமார், நடிகை குஷ்பு, இந்தியா டுடே பத்திரிகை ஆசிரியர் பிரபு சாவ்லா ஆகியோர் நவம்பர் 8ம் தேதி சங்கரன் கோவில் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

இடைக்காலத் தடை:

இந் நிலையில் அரியலூர் மற்றும் திருவண்ணாமலை நீதிமன்றங்களில் குஷ்புவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க 4 வார கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என இந்த நீதிமன்றங்கள் விதிக்க உத்தரவுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி பானுமதி இடைக்காலத் தடை விதித்தார்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
மொத்தத்தில் ஒரு நடிகை கூறும் கருத்தை கேட்கும் நிலையில் தானா இவர்கள் இருக்கிறார்கள்?? ஆச்சர்யம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#3
<b>சுகாசினிக்கு எதிர்ப்பு வெடிக்கிறது</b>



தமிழ்ப் பெண்களின் கற்பை களங்கப்படுத்தும் விதத்தில் பேசி கண்டனத்துக்குள்ளான குஷ்புவிடம் தமிழக மக்கள் அனைவரின் சார்பாகவும் மன்னிப்பு கேட்பதாக உளறிய மாஜி நடிகையும் மணிரத்னத்தின் மனைவியுமான சுகாசினிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குஷ்புவையும் மேடையில் வைத்துக் கொண்டு பேசிய சுகாசினி,

தமிழ்நாட்டில் பிறந்தால் இரண்டு கொம்பா முளைத்து இருக்கிறது?. வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வாழ வந்த ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதற்காக ஒட்டு மொத்த தமிழர்கள் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும். அவரை அவமானப்படுத்தியதற்காக தமிழர்கள் சார்பில் நான் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் இப்படி பேசினால் என்னை பரமக்குடிக்கு அனுப்பி விடுவீர்களா? என்று பேசினார்.

இதையடுத்து சுகாசினியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் குஷ்பு.



இதைத் தொடர்ந்து சுகாசினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திருமாவளவன்:

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக குஷ்பு மாதிரியான ஒரு நடிகையிடம் மன்னிப்பு கேட்க இவர் யார்? குஷ்புவை கண்டித்தற்காக தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று குஷ்பு பேசியிருக்கிறார். எந்தச் செயலுக்கும் வெட்கப்படாதவர்கள் இப்படிச் சொல்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை தான்.

குஷ்புவின் சாதனைகளுக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைக்கச் செய்ய சுகாசினி போன்றவர்கள் வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம்.

தமிழ்ப் பெண்களை இழிவாக பேசுவதை சுகாசினி ஆதரித்தால் குஷ்புவுக்கு ஏற்பட்ட நிலை தான் அவருக்கும் ஏற்படும். தனது பேச்சுக்காக சுகாசினி தான் முதலில் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

கொம்பை காட்டினால்...

கவிஞர் மு.மேத்தா கூறுகையில், குஷ்பு விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி கூரையின் மேல் விழுந்து கொழுந்து விட்டு எரிகிறது... அதை அணைக்கப் பார்ப்பது தான் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக் கூடாது என்றார்.

இயக்குனர் கே.ஆர் கூறுகையில், குஷ்புவும் சுகாசினியும் பேசுவது துணிச்சலான செயல் மாதிரி அவர்களுக்கு வேண்டுமானால் படலாம். ஆனால், இதையெல்லாம் ஏற்க முடியாது. காரணம் இது கண்ணகி பிறந்த நாடு. எதையாவது தவறாகப் பேசினால் தங்களுக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்றார்.



திமுக பேச்சாளரான வெற்றி கொண்டான் கூறுகையில், கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்புவும் சுகாசினியும் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. இவர்களை எல்லாம் திருத்த முடியாது. ஆனால், தமிழர்களுக்கு கொம்பு இருப்பதைக் காட்டினால் அதை இவர்களால் தாங்க முடியாது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.

இயக்குனர் சீமான் கூறுகையில், தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது என்று பேசியுள்ள சுகாசினி, தமிழர்கள் சார்பாக குஷ்புவிடம் போய் மன்னிப்பு கேட்பதாக சொல்வதை சகிக்க முடியவில்லை. இதற்காக சுகாசினி முதலில் மன்னிப்பு கேட்கட்டும் என்றார்.

பாஜக தேசியச் செயலாளர் இல.கணேசன் கூறுகையில், தமிழ்களைப் பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாகப் பேசுவதா என்று ஆவேசப்படுகிற தமிழக மக்களுக்கு சவால் விட்டுள்ளார் சுகாசினி என்றார்.

நடிகை மனோரமா கூறுகையில், முதல்வர் அம்மாவே ஒரு நடிகை தான். அவரே குஷ்பு பேசியது தவறு என்று சொல்லிவிட்ட பிறகு இந்தப் பிரச்சனையில் மீண்டும் பெரிதாக்குவது நல்லதல்ல. எனக்கு எய்ட்ஸ் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. படித்தவர்கள் என்பதால் அவர்கள் (சுகாசினி, குஷ்பு) இப்படி பேசுகிறார்கள். இவர்களது பேச்சு சரியல்ல. அதற்காக மன்னிப்பு கேட்பது தான் சரி என்றார்.

எப்படியோ குஷ்பு புண்ணியத்தில் சுகாசினிக்கும் இலவசமாய் கொஞ்சம் விளம்பரம்..

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
இந்தியாவில காசு செலவழிக்காமல் தங்களைபற்றி விளம்பரம் பன்னுறதுக்கெண்டே சில ஜென்மங்கள் அலையுதுகள்,, திருந்தாத ஜென்மங்கள்,, இப்படியே போனால் நாளைக்கு நிதர்ச**.நெட்டும் குஸ்பு செய்தது சரி எண்டு சொல்லிட்டு ஒரு அறிக்கை விடும்,,, அப்பதான் தங்கட ஆகாச புழுகுகளை எல்லாரும் வாசிப்பினம் எண்டு... :evil: :evil: :evil: திருந்தாத ஜென்மங்கள்.. :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
தூயா Wrote:மொத்தத்தில் ஒரு நடிகை கூறும் கருத்தை கேட்கும் நிலையில் தானா இவர்கள் இருக்கிறார்கள்?? ஆச்சர்யம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்படிப்கேளுங்க... கோவில் கட்டினவையாச்சே.. அந்த உயரத்திற்கு வைச்சவை கேக்காமல் விடுவினமோ..?? :evil: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
ஏதோ தற்கொலைக்கு எல்லாம் முயற்சி செய்து... ம்... பிறகும் விளம்பரம் தேடும் முயற்சி ஆரம்பமாகிவிட்டது.
Reply
#7
சுகாசினி எனும் "பார்ப்பணத்தி" இப்படிப் பேசியதில் ஆச்சரியப்படுவற்கொன்றுமில்லை. தமிழ் விரோதமென்பது சாக்கடைப் பார்ப்பனர்களின் இரத்தத்தில் ஊறியது. தமிழ்நாட்டில் இந்த சாக்கடைகள், பொருளாதர காரணங்களுக்காக தமிழர்கள் போல வாழும் இவர்கள், படிப்பறிவற்ற, உணர்வற்ற தமிழர்களாக வாழாத தமிழர்களை காலங்காலமாக ஏமாற்றி அடக்கி ஆண்டும், பொருளாதாரத்தை சுரண்டியும் வருகிறார்கள்.
" "
Reply
#8
<span style='color:red'>என்னிடம் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்': குஷ்புக்கு ஆதரவாக சுகாசினி ஆவேசம்

சென்னை: ""குஷ்புக்கு பிரச்னை ஏற்பட்ட போது அவருக்கு எதிரானவர்களிடம் மட்டுமே பத்திரிகைகள், "டிவி'கள் கருத்து கேட்டு அதனை பரபரப்பாக வெளியிட்டன. குஷ்புக்கு ஆதரவாளர்களிடம் கருத்து ஏதும் கேட்கவில்லை. என்னிடம் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்,'' என்று நடிகை சுகாசினி ஆத்திரத்துடன் கூறினார்.

உலக சினிமா அகடமி மற்றும் செவன்த் சேனல் நிறுவனத்தின் சார்பில் "தமிழ்நாடு உலகத் திரைப்பட விழா 2005' நேற்று சென்னையில் பிலிம் சேம்பர் தியேட்டரில் துவங்கியது. இவ்விழாவினை திரைப்பட இயக்குனர் பாரதிராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துப் பேசியதாவது:

திரைப்படத் துறையினர் எது பேசினாலும் அவைகள் பத்திரிகைள் மூலமாகவும், "டிவி'க்கள் மூலமாகவும் பரபரப்பாக வெளிவந்து விடுகிறது. இதைப் பார்க்கும் போது ஏதும் பேசாமல் இருந்து விடலாம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. விழா வேண்டாம், பேட்டி வேண்டாம், அறிக்கை வேண்டாம் என்று இருந்து விடலாம் என்று தான் தோன்றுகிறது. இருந்தாலும் விழாக்களுக்கு வரும் போது ஏதாவது பேச வேண்டியதாகி விடுகிறது. கலைஞர்கள் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். உண்மையை பேசுபவர்கள். இதனால் மனதில் பட்டதை பேசி விடுகின்றனர். கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு. ஆனால், மற்றவர்கள் பேசுவதை விட, திரையுலகத்தினரின் பேச்சு தான் அதிகமாக கண்காணிக்கப்பட்டு செய்தியாக பரபரப்பாக வந்து விடுகிறது. இதனால் ஏதும் பேச வேண்டாம் என்று தவிர்க்க நினைத்தாலும் விழாக்களில் ஏதாவது பேச வேண்டியதாகி விடுகிறது.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

குஷ்பு பேசும் போது, ""நான் பேசியது புரிந்திருக்க வேண்டியவர்களுக்கு புரிந்திருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. நான் ஒவ்வொரு தடைக் கல்லையும் வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்கிறேன். வாழ்க்கையில் பல தடைகள் எதிர்ப்பட்ட போதும் வெற்றியடைய இதுதான் காரணம்,'' என்றார்.

நடிகை சுகாசினி பேசியதாவது:

குஷ்புக்கு பிரச்னை ஏற்பட்ட போது அவருக்கு எதிரானவர்களிடம் மட்டுமே பத்திரிகைகள், "டிவி'கள் கருத்து கேட்டு அதனை பரபரப்பாக வெளியிட்டன.

குஷ்புக்கு ஆதரவாளர்களிடம் கருத்து ஏதும் கேட்கவில்லை. என்னிடம் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்.

நான் அப்போது வெளிநாட்டிலிருந்ததால் இந்த விவகாரத்தை கேள்விப்பட்டு சங்கடப்பட்டேன். "போராட்டத்தை வெற்றிகரமாக சந்தியுங்கள்' என்று குஷ்புக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியிருந்தேன்.

இந்தியாவிற்கு 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. இந்த சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும் தானா, பெண்களுக்கு இல்லையா? பெண்கள் கருத்து சொல்ல சுதந்திரம் கிடையாதா? குஷ்பு வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர் தமிழ்நாட்டிற்கு வாழ வந்தவர். அவர் பேசியதை பிரச்னையாக்கியவர்கள் அவரை மாநிலத்தை விட்டு ஓடு, நாட்டை விட்டு ஓடு என்றெல்லாம் சொல்கின்றனர்.

நான் தமிழ்நாட்டு பெண். நான் ஏதும் பேசியிருந்தால் என்னை பரமக்குடிக்கு ஓடிவிடு என்று சொல்லி விடுவார்களா? குஷ்பு பேட்டியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பதில் சொல்லியிருந்தார். இதனை புரிந்துகொள்ளாமல் யார், யாரோ எத்தனையோ அவமானங்களை அவருக்கு ஏற்படுத்தி விட்டனர். தமிழ்நாட்டிற்கு வாழ வந்த குஷ்பு நிறைய வேதனைபட்டு விட்டார். இதற்காக நான் தமிழர்களின் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சுகாசினி பேசினார்.

இத்திரைப்பட விழா வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் தயாரிக்கப்பட்ட 20 பிரபல திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் ஜனரஞ்சக படம் ஆகிய பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.

விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி.தியாகராஜன், செயலர் ஏ.எல்.அழகப்பன், தயாரிப்பாளர்கள் கேயார், ஏ.எம்.ரத்னம் ஆகியார் கலந்து கொண்டனர். முன்னதாக மாலாமணியன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் உலகத் தமிழ் சினிமா அகடமியின் தலைவர் "செவன்த் சேனல்' மாணிக்கம் நன்றி கூறினார்.

குஷ்பு முத்தம்: குஷ்புவிற்கு ஆதரவாக சுகாசினி மேடையில் உருக்கமாகவும், ஆவேசமாகவும் பேசிக் கொண்டிருந்தை குஷ்பு புன்

முறுவல் பூத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.

சுகாசினி பேசி முடித்ததும் உடனே குஷ்பு எழுந்து சென்று சுகாசினியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
[size=9]நன்றி>தமிழ்மண்றம்</span>
.

.
Reply
#9
தமிழ் சமுதாயம் சார்பில், குஷ்புவிடம் மன்னிப்பு கேட்க சுகாசினிக்கு அதிகாரம் கொடுத்தது யார்? தமிழறிஞர்கள் கடும் கண்டனம்
விளம்பரம்


சென்னை, நவ.12- தமிழ் சமுதாயம் சார்பில் நடிகை குஷ்புவிடம் மன்னிப்பு கேட்பதாக கூறிய நடிகை சுகாசினிக்கு தமிழறிஞர்கள் கடும் கண்டனம் தொpவித்துள்ளனர்.

ஒளவை நடராஜன் (முன்னாள் துணைவேந்தர்)„ - தமிழுக்கு எந்த வகையிலேனும் எதிர்ப்பு தொpவிக்க வேண்டும் என்பது சிலாpன் உள்ளத்தில் ஊறிக் கிடக்கிறது. சில நேரங்களில் அந்த எதிர்ப்பு ஏதேனும் ஒரு வகையில் வெளிப்பட்டு விடுகிறது. அதுதான் தமிழ்ச் சமூகத்தின் மிகப் பொpய அவலம்.

அறவாணன் (முன்னாள் துணைவேந்தர்)„ - தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ் பண்பாடு ஆகியன பற்றி உhpயவர்கள் பேசுவதுதான் முறைƒ இந்த மூன்றையும் கெடுத்தவர்கள் திரைத் துறையினர். இவர்கள் இவ்வாறு பேசுவது கொடுமையிலும் கொடுமை.

தமிழண்ணல்„ - சுகாசினி அம்மையாhpன் கருத்துக்கள் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தையும் புண்படுத்துகின்றது. தமிழர்களுக்கு நீண்டகால தொடர்ச்சியான பண்பாடு உண்டு. ஒரு கருத்தை யார் கூற வேண்டும் என்பதற்கு தகுதி இருக்கிறது. தமிழ்ப்பண்பாடு பற்றி திரைத் துறையினர் தங்கள் மூக்கை நுழைக்கக் கூடாது.

ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிநிதி என்று சுகாசினி அம்மையார் கூறக் கூடாது. ஏனெனில் தமிழர்கள் மான உணர்ச்சி உடையவர்கள்ƒ அதோடு நாண உணர்ச்சியும் உடையவர்கள். இது இரண்டும் உடையவர்கள் எப்போதும் கொள்கையில் தடுமாற மாட்டார்கள். அவற்றை இழந்தவர்கள்தான் உளருவார்கள்.

வக்கீல் அருள்மொழி„ - நடிகை குஷ்பு தனது பேட்டியில் என்னதான் சொன்னார்கள் என்று முழுமையாக தொpயவில்லை. ஆனாலும் அவர் தொpவித்திருந்த கருத்துக்கள் ஒரு சமூக அக்கறையோ. சிந்தனையோ இல்லாமல் மேம்போக்காக சொல்லப்பட்ட ஒரு அவசரமான கருத்தாக தோன்றுகிறது. ஆனால் அவர் மறுபடியும் தான் பேசியது தவறே இல்லை என்று கூறியுள்ளார். அது தவறhகவே இருந்தாலும் அந்த கருத்தை வெளியிடும் உhpமை குஷ்பு என்கிற தனி மனிதருக்கு உண்டு. ஆனால் திடீரென்று குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டிருக்கும் சுகாசினி ஒட்டு மொத்த தமிழர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டாம். ஏனென்றhல் சுகாசினி போன்றேhர்கள் பெரும்பாலும் தங்களை தமிழராக அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை. அது மட்டும் இல்லாமல் தமிழன் என்ற அடையாளத்தின் எhpச்சலையும் சேர்த்து அவர் இப்போது வெளிப்படுத்தி விட்டதாக தோன்றுகிறது.

பேராசிhpயர் பழனியப்பன்„- எம் தமிழ்ப்பெண்கள் பணத்திற்காக பகட்டு வாழ்க்கை வாழவில்லை. ஆள் மாற்றி கலவிக்காகவும் வாழ வில்லை. எம் தமிழ் மக்கள் ஐந்துக்கும், பத்துக்கும் குருதி சிந்தி உழைத்து வாழ்கிறhர்கள். எங்களுக்கு கலவியை விட உடல் பொpது. உடலை விட உயிர் பொpது. உயிரை விட மானம் பொpது. மானமும், தமிழும் வேறு வேறு அல்ல. உங்களுக்கு இது பற்றி தொpந்திருந்தால் இப்படி உளறி இருக்க மாட்டீர்கள். காரணம் நீங்கள் வந்த வழி அப்படி.

லலிதா சுபாஷ் (பா.ஜ.க.)„- காமாலைக் கண்ணுக்கு பார்த்தது எல்லாம் மஞ்சள் போல தோன்றும். குஷ்புவும், சுகாசினியும் தங்களுடைய சொந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களும் அப்படித்தான் என்று பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அhpதாரத்தை மாற்றுவதற்கு முன்பு ஆட்களையே மாற்றும் இவர்கள், கற்பு பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. நமது பண்பாடு, கலாச்சாரம் பழமையானது . அதனை இடித்துக் காட்டுவது மூலம் தங்களை புதுமையானவர்கள் என்று இவர்கள் காட்டிக்கொள்கிறhர்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட நடு வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் ஜனநாயக மாதர் சங்க அமைப்புகள், இந்த பிரச்சினையில் மவுனமாக இருப்பது ஏன்?

பாமரன்„- <b>சுகாசினிக்கு தாய் மொழியோ, தந்தை மொழியோ எல்லாமே சமஸ்கிருதம்தான். அவர் பரமக்குடியில் இருந்து வந்தாரோ, கைபர்-போலன் கணவாய் வழியாக வந்தாரோ? எங்கிருந்து வந்தாலும் புகலிடம் கொடுத்த தமிழகத்தை, தமிழர்களை பழிதூற்றி பேசியது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணும் செயல். ஒட்டு மொத்த தமிழர்களின் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்க இவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இவர் தமிழ் சமுதாயத்தின் பிரதிநிதியா? </b>
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்

http://www.dinakaran.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#10
நான் யாரென்று தெரியாது என்மீது நடவடிக்கை எடுத்தால் நடப்பதே வேறு என நடிகர் சங்கத்தினை மிரட்டியுள்ளார் சுகாசினி.

http://thatstamil.indiainfo.com/news/2005/...3/suhasini.html
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#11
குஸ்புக்கு பிடிவாரண்டு

http://www.koodal.com/news/tamilnews.asp?n...3&section=tamil
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
Mathuran Wrote:நான் யாரென்று தெரியாது என்மீது நடவடிக்கை எடுத்தால் நடப்பதே வேறு என நடிகர் சங்கத்தினை மிரட்டியுள்ளார் சுகாசினி.
http://thatstamil.indiainfo.com/news/200...asini.html

அவங்க யாரு..?? அற்றஸ்ஸே இல்லாமல் போப்போறாங்க போல கிடக்கு. :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்க இவர் யார்?

இவர் என்ன ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அத்தாட்சியா? என கேட்பவர் நானில்லையுங்கோ. நம்மட நகைச்சுவை நடிகர் வடிவேலுதானுங்கோ.....

http://thatstamil.indiainfo.com/specials/c...sathyaraj7.html
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#14
இதைத்தான் <b>சீப் பப்ளிசிட்டி </b>என்று சொல்வார்கள். பாவம் நடிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காததால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் அவர் தான் இன்னும் இருக்கின்றேன் என்பதை இலகுவாக மக்களுக்கு பரபரப்பாக தெரியப் படுத்தியிருக்கின்றார். ஓசியிலே வாதாட அப்பா சாருகாசனிருக்கின்றார் மற்றைய செலவுகளுக்கு பணம் அழ ஆத்துக்காரர் மணிரத்தினம் இருக்கின்றார். வேண்டிய வரை அறிக்கைகளை விட்டுவிடடு கொஞ்ச நாள் பொறுத்து ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுவிட்டால் மன்னிச்சுடுவாங்களே. அதுவரை புகுந்து விளையாடுங்க
Reply
#15
tamilini Wrote:[quote=தூயா]மொத்தத்தில் ஒரு நடிகை கூறும் கருத்தை கேட்கும் நிலையில் தானா இவர்கள் இருக்கிறார்கள்?? ஆச்சர்யம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



புதுமைப் பெண் சுகாசினியாச்சே(படத்தில் மட்டும்தான்). மனதில் உறுதி வேண்டும் வார்த்தையில் தெளிவும் வேண்டும் என்பதை இவர் மறந்து விட்டார்.
Reply
#16
குஷ்பு 'எஸ்கேப்': தலைமறைவானார்!
நவம்பர் 14, 2005

சென்னை:



நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததையடுத்து நடிகை குஷ்பு தலைமறைவாகிவிட்டார்.

தமிழக பெண்களின் கற்பு குறித்து கேவலமாகப் பேசிய குஷ்புவுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் மேட்டூர் நீதிமன்றம் குஷ்புவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்த வாரண்ட்டை நிறைவேற்றுமாறு போலீசாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து குஷ்பு கைது செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

ஆனால், அதற்குள் அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். அபிராமபுரம் போட் கிளப் பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு ரகசியமாக வெளியேறிவிட்ட குஷ்பு அவரது தோழி ஒருவரின் வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தனக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரியும் குஷ்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த மனு மீது தீர்ப்பு வரும் வரை குஷ்புவின் தலைமறைவு தொடரும் என்று தெரிகிறது. தனக்கு எதிரான தீர்ப்பு வந்தால் குஷ்பு தானாகவே நீதிமன்றத்தில் சரணடைவார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே குஷ்புவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
'எஸ்எம்எஸ்' சுகாசினிக்கு நடிகர் சங்கத்தில் 'கல்தா'

சென்னை:



தனக்கு எஸ்எம்எஸ் மூலம் மிரட்டல் விடுத்த மாஜி நடிகை சுகாசினிக்கு நடிகர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செக்ஸ் பேச்சு புகழ் குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்பதாகக் கூறி தமிழர்களை அசிங்கப்படுத்தினா சுகாசினி.

இந் நிலையில் சுகாசினியின் செயலுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. அதன் பொதுச் செயலாளர் சரத்குமார் சுகாசினியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து நான் யார் தெரியுமா? என் மீது நடவடிக்கை எடுத்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி சரத்குமாருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினார் சுகாசினி.

இது குறித்து சரத்குமார் கூறுகையில்,

குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியதற்காக சுகாசினிக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. தமிழக மக்களுக்கு கொம்பு முளைத்திருக்கிறதா என்று கேட்டு பொது மக்கள் மீது அநாவசியமாகப் பாய்ந்ததால் தான் சுகாசினிக்கு நோட்டீஸ் அனுப்பினோம்.

சுகாசினி உள்பட எல்லோருக்குமே கருத்துச் சுதந்திரம் உண்டு. ஆனால், அது மக்கள் மனதைப் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். மக்களைக் கோபப்படுத்தி போராட்டத்தைத் தூண்டிவிடும் வகையில் பேச்சு அமையக் கூடாது.

தமிழர்கள் சார்பாக மன்னிப்பு கேட்க இவர் என்ன தமிழர்களின் பிரதிநிதியா?. எங்கள் சங்கத்தின் உறுப்பினர் இவ்வாறு பேசியது தவறு என்பதால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸை ஒழுங்காக படித்துக் கூட பார்க்காமல் எனக்கு எம்எம்எஸ் அனுப்பியிருக்கிறார் சுகாசினி.

சுகாசினியின் இந்தச் செயலைக் கண்டு சங்க நிர்வாகிகள் யாரும் அதிர்ச்சியடையவில்லை. அவரது அதிகப்பிரசங்கித்தனத்தையும் அறியாமையையும் அவசர புத்தியையும் நினைத்து வியந்தோம்.

நடிகர் சங்கத்தால் அதன் உறுப்பினர்கள் யாரையும் கட்டுப்படுத்த முடியாது என சுகாசினி நினைப்பதாகத் தெரிகிறது. நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பினால் கோர்ட்டுக்குப் போவேன் என்கிறார். இது ஜனநாயக நாடு. யாரும் கோர்ட்டுக்குப் போவதை யாரும் தடுக்க முடியாது.

வரும் 30ம் தேதி சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. அப்போது சுகாசினியை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தப் போகிறேன் என்றார் சரத்குமார்.

சரத்குமாருக்கு எஸ்எம்எஸ் மிரட்டல் விடுத்தது மாதிரி குஷ்புவுக்கும் அமெரிக்காவில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் தான் சுகாசினி பாராட்டு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
சுகாசினி மணிரத்னம் திரைப்படங்களை வெளிநாடுகளில் புறக்கணிக்க முடிவு!!
[திங்கட்கிழமை, 14 நவம்பர் 2005, 04:39 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]
தமிழர் பண்பாட்டிற்கும், தமிழர்களுக்கும் எதிராக கருத்துகளைக் கூறி வரும் நடிகை சுகாசினி மணிரத்தினம், நடிகை குஸ்பு ஆகியோரது திரைப்படங்களை வெளிநாடுகளில் புறக்கணிக்க வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தமிழ்த் திரைப்பட விநியோகத்தர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் முடிவு செய்துள்ளனர்.


இது தொடர்பாக ஐரோப்பிய வட-அமெரிக்க தமிழ்த் திரை ரசிகர்கள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்ப் பெண்களின் கற்புப் பற்றி தவறாக கருத்துக் கூறிய நடிகை குஸ்புவிற்கு எதிராக தமிழ்நாட்டில் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குஸ்புவிற்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நீதிமன்றிற்குச் சமூகமளிக்கத் தவறியதற்காக நீதிமன்றங்கள் குஸ்புவிற்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் குஸ்பு தெரிவித்த கருத்துத் தவறானது என தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழர்கள் பற்றிய இழிவான கருத்தொன்றை தமிழரல்லாத சுகாசினி மணிரத்தினம் வெளியிட்டுள்ளார்.

தமிழ்ப் பெண்கள் திருமணம் செய்வதற்கு முன்பே கற்பிழந்து போகிறார்கள் என்று குஸ்பு சொன்ன கருத்தைப் பற்றி எதுவுமே தெரிவிக்காத சுகாசினி, குஸ்புவைக் கண்டிப்பதற்குத் தமிழர்களுக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறாதா? என்று தமிழர்களை மிகவும் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.

குஸ்புவைக் கண்டித்ததற்காக தமிழர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் என்றும் தன்னிடம் தமிழர்கள் இப்படிக் கேட்டிருந்தால் அவர்களைத் தான் கிழித்திருப்பேன் என்றும் சுகாசினி கூறியுள்ளார்.

இதற்கான கண்டனங்கள் சுகாசினியை நோக்கி தமிழகமெங்கும் எழும்ப ஆரம்பித்துள்ளது. சுகாசினி உறுப்பினராக உள்ள தென்னிந்திய நடிகர் சங்கமும் இதனைக் கண்டித்துள்ளது. தன் மீது நடவடிக்கை எடுக்க நினைத்தால் நடப்பதே வேறு என தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தை சுகாசினி மிரட்டியுள்ளார்.

தமிழர்களை அடிமைகளாக நினைக்கும் மனப்பாண்மையில் காட்டுமிராண்டித் தனத்தோடு நடந்து கொண்டிருக்கும் சுகாசினி மணிரத்தினத்திற்கு எதிராக தமிழறிஞர்கள் மற்றும் தமிழக ஊடக உலகம் என்பனவும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

திரை உலகிலும் சுகாசினிக்கு எதிரான கண்டனங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மூத்த நடிகையான மனோராமா,

"முதல்வர் ஜெயலலிதாவே கண்டனம் தெரிவித்த ஒருவிடயத்தில் சுகாசினி இவ்வாறு நடந்து கொண்டது தவறு" எனத் தெரிவித்துள்ளார். வேறு பல நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் இதனை முற்றாகக் கண்டித்துள்ளனர்.

ஆறரைக் கோடி தமிழகத் தமிழர்களையும் அவமதிக்கும் விதமாக தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என கேள்வியெழுப்பியுள்ள சுகாசினிக்கு எதிராகத் தமிழகத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா வாழ் தமிழர்களும் ஆதரவுக் கரம் கொடுக்கிறோம்.

முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் கண்டித்த குஸ்புவின் கருத்துப் பரிமாற்றத்தை நியாயப்படுத்துவதற்காக, தமிழர்களிற்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என தமிழரல்லாத மனப்பான்மையுடன் பேசியுள்ள சுகாசினி, தமிழகத் தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு அமைய, அனைத்துத் தமிழர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும்,

இல்லாவிட்டால் இனிவரும் காலங்களில் மணிரத்தினத்தினதோ அல்லது சுகாசினியினதோ, திரைப்படங்கள் ஐரோப்பாக் கண்டம், அவுஸ்திரேலியாக் கண்டம், அமெரிக்கக் கண்டம், மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் திரையிட முடியாதபடி போராடுவோம்.

இது குறித்து மேற்குலக நாடுகளில் திரைப்பட விநியோகங்களில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவைத் திரட்டும் முதற்கட்ட நடவடிக்கையை இப்போது மேற்கொண்டு வருகிறோம். இதற்கு தாங்களும் பரிபூரண ஆதரவு தருவதாக இதுவரை நாம் தொடர்பு கொண்ட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத் திரை அரங்கங்களில் திரைப்படங்கள் காண்பிக்கப்படுவதால் மட்டுமே தமிழ்த் திரை உலகத்தில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கொட்டிவிடுவதில்லை. வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களின் ஆதரவினால்தான் தமிழகத் திரை உலகம் கோடிகளில் புரள்கிறது என்ற உண்மையை தமிழ்த் திரையுலகினர் நன்கறிந்தவர்கள்.

ஏனவே, தமிழ்த் திரை உலகை நம்பிப் பிழைப்பவர்கள் தொடர்ந்தும் தமிழர்களது பண்பாட்டிற்கு எதிராகவும், தமிழர்களை அவமதிக்கும் வகையிலும் கருத்துகளைத் தெரிவிப்பது உண்ட வீட்டுக்கு இண்டகம் செய்கிற பச்சைத் துரோகமாகும். இது தொடர இனியும் அனுமதிக்க முடியாது.

இதுவரை காலம் இந்தத் துரோகச் செயல்களை சகித்துக் கொண்ட தாய்த் தமிழகத் தமிழர்கள் இப்போது வீதிகளில் துடைப்பங்களோடும், செருப்புகளோடும், தீப்பந்தங்களோடும் இறங்கி வந்துள்ளனர். தமிழர்களின் தன்மான உணர்ச்சியை நாம் வரவேற்கிறோம்.

இப் பிரச்சினையின் தார்ப்பரியத்தை உணர்ந்து மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காதவரை, இத்தகைய கருத்துக் கூறுவோர், தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயரிட மறுப்போர் வெளிநாடுகளில் படப்பிடிப்புக்கு வந்தாலோ, தமிழகத்தின் எதிர்ப்பையொத்த எதிர்ப்புக்கு இங்கேயும் முகம் கொடுக்க நேரிடும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#19
சரிதான் ஈழத்தமிழரை தாக்கி படங்கள் எடுக்கபட்டபோது எல்லாம் சும்மாயிருந்தவர்கள் இப்போது துள்ளிக்குதிக்கின்றார்கள்.ச
அதுசரி இப்போது குஷபு சுஹாசினி படங்கள் வருவதில்லைத்தானே. அவர்களுடைய வியாபாரம் பாதிக்காதுதானே?
எல்லாம் சுத்துமாத்துவியாபாரம்தான்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#20
தமிழர்களைக் கொச்சைப்படுத்தி தமிழின விடுதலையையே தனது வியாபாரமாக்கிய வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் மணிரத்தனத்தின் வியாபாரத்துக்கு இதுவரை காலமும் துணைபோன உலகத்தமிழருக்கு யாரோ ஒரு நடிகையின் கருத்தை து}க்கி வைத்து துதிபாடி போராட்டம் என்று துடைப்பங்கள் து}க்கித்திரிவதுதான் விதியாய் போச்சுதோ ?
முடியுமெண்டா எங்களுடை தொலைக்காட்சிகள் மணிரத்தினத்தின் படங்களை ஒளிபரப்புவதை நிறுத்தட்டும் முதலில் அதுவே தமிழினத்துக்கு செய்யும் மிகப்பெரும் பங்களிப்பாகும்.

திருமாவளவன் சொன்னா துடைப்பம் து}க்கும் தமிழகத்தை இன்னொரு பெரியார் வந்தும் திருத்த முடியாது.
:::: . ( - )::::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)