Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முகத்தார் வீடு
MUGATHTHAR Wrote:கள உறவுகளுக்கு நன்றி
எனக்கு யார் மேலும் கோவமில்லை நாரதர் கூட நல்ல நண்பர்;; களத்தில் அவர்கள் கூறும் தவறுகள் திருத்தப்பட வேண்டும்தான் அதுக்காக முகத்தார் வீட்டில் குறுக்ஸ் எழுதியதுதான் கவலையாக போய் விட்டது இங்கு இருக்கும் நகைச்சுவைக்கு சிரிக்கலாமே தவிர என்ன கருத்துதான் எழுதக்கிடக்கு உங்கள் உற்சாகம் புது தெம்பைக்குடுக்கிறது இதற்;கொரு விளம்பரம் குடுத்தாக நினைத்துக் கொள்ளுகிறேன். அடேய் அப்ப இவ்வளவு நாளும் சும்மா சிரிச்சிட்டு போன உறவுகலேல்லாம் பந்தி பந்தியாக எழுதியதை பார்க்க சந்தோஷமாக் கிடக்கு இனி மற்றவர்கள் என்ன சொன்னாலும் பயமில்லை மீண்டும் முகத்தார் வீடு வரும் சரியா................................முகத்தார்
(தயவுசெய்து எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சின்னஞ்சிறுசுகளின் ஆவலுக்கு தடையாக இருக்காதைங்கோ இந்த பக்கத்தை மட்டும் எங்களுக்காக விட்டுவிடுங்கோ...............)


நன்றி அங்கிள். விரைவாக அடுத்த பாகத்தை எதிர்பார்க்கின்றோம்

Reply
என்ன தாத்தா இப்படி சொல்லிடிங்க Confusedhock: ????
தெளிவு படுத்தியற்கு நன்றி குறுக்ஸ் .

நன்றி தாத்தா மீண்டும் உங்கள் ஆக்கங்களை தொடர்வதற்கு. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->





இப்படிக்கு
முகத்தார் இரசிகர் மன்றம்


----- -----
Reply
முகத்தார் விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கின்றேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Quote:இப்படிக்கு
முகத்தார் இரசிகர் மன்றம்
அப்படியும் ஒன்றிருக்கா பொன்னம்ஸ் பாடு பெரியபாடு தான். :wink: வாசகர் மன்றம் என்று பாட்டா நல்லா இருக்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன் தாத்தா. சீக்கிரம் எழுதுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
[size=18]<b>முகத்தார் வீடு - அங்கம் 7 </b>

பொண்ணம்மா : இஞ்சை பாரப்பா குறுக்காலை போவார் படலையைத் திறந்து விட்டுட்டுப் போட்டினம் உந்த டண்ணின்ரை நாய் வந்து செய்யிற வேலையை. .

முகத்தார் : பொறு. . .பொறு . கலைச்சுப் போடாதை குடுக்கிறன் பார் இண்டைக்கு

பொண்ணம்மா: என்ன இப்ப செய்யப் போறீயள்?

முகத்தார் : கல்லைக் கண்டா நாயைக் காணேம் நாயைக் கண்டா கல்லைக் காணேம் இண்டைக்கு ரண்டும் கிடைச்சிருக்கு அடிக்காம விடமாட்டன்

பொண்ணம்மா: உன்னானை கல்லை கீழை போடுங்கோ போண மாசம் நடந்ததை மறந்து போட்டியளே. . .

முகத்தார் : என்ன போண மாசம்?

பொண்ணம்மா: அதுதான் குலத்தாற்ரை கோழியைக் கலைக்கவெண்டு கல்லெடுத்து எறிஞ்சு அது அவையின்ரை கேற்றிலை பட்டு பெரிய பிரச்சனை வர பாத்துச்சே. . .

முகத்தார் : அதடியப்பா கோழி நான் எறிய அது பறந்திட்டுது இது நாய் எப்பிடி பறக்கும்

பொண்ணம்மா: உங்கடை மூளையைக் கொண்டை கட்டேலை வைக்க சமையல் வேலை முடிஞ்சிட்டா வெளியிலை எங்கையன் போட்டு வாங்கோவன்

முகத்தார் : என்னை என்னதுக்கு இப்ப கலைக்கப் பாக்கிறீர்?

பொண்ணம்மா: இந்தா டிவிலை நாடகம் வேறை தொடங்கப் போகுது கத்தாம போங்கோ பாப்பம்

(அந்த நேரம் சாத்திரியார் இன்னுமொருவரைக் கூட்டிக் கொண்டு வாறார்)

பொண்ணம்மா: உங்களை அனுப்புவம் எண்டு பாத்தா உங்களைத் தேடி ஆளே வருகினம் இனி டிவி பாத்த மாதிரித்தான்

முகத்தார் : சாத்திரி வா. . வா. . அங்காலிப்பக்கம் வர இருந்தன் அதக்குள்ளை நீயே வந்திட்டாய் என்ன விசயம்?

சாத்திரி : நானும் உன்னை பாக்கத்தான் வந்தனான் இவர் கொக்குவில் ஆள் மகன்ரை குறிப்பைப் பாக்க என்னட்டை வந்தவர் குறிப்பிலை வெளிநாட்டுப் பலன் காட்டுது அதுதான் உன்னட்டை கூட்டியிட்டு வந்தனான்

முகத்தார் : எனக்கு தெரிஞ்ச ஏஜென்சி ஒண்டும் இல்லேயேடா அனுப்பிறதுக்கு. . .

சாத்திரி : ஜயோ. .அப்பிடியில்லை முகத்தான் பெடிக்கு கலியாணப்பலன் வேறை இருக்கு அதுதான் உன்னட்டை விட்டா எதாவது கோத்துவிடுவாய் எண்டுதான். . .

முகத்தார் : அட. . .அட.. . அப்பிடி வாறியே. . .சரி. . .சரி. . .இருங்கோ உங்கடை பேர் என்ன?

சாத்திரி : இவற்ரை பேர் பழணியாண்டி பெடியின்ரை பேர் மாதவன்

முகத்தார் : என்ன பெயர் ரொம்ப பழசா கிடக்கு

பழணியாண்டி : மகனும் கூட்டாளிமார் இப்பிடி சொல்லுனம் எண்டு போட்டு தன்ரை பேரை மாதேஷ் எண்டு மாத்த வெளிக்கிட்டவன்

முகத்தார் : ஜயா நான் சொன்னது உங்கடை பெயரை. . .சரி அதை விடுங்கோ நீங்க என்ன மாதிரி பெண்ணு பாக்கிறீங்கள்?

பழணியாண்டி : எனக்கு சின்னனிலையிருந்து லண்டன் கனடா போக வேணுமெண்டு ஆசை

முகத்தார் : சாத்திரி இப்ப பெண்ணு இவருக்கோ இல்லை பெடியனுக்கோ?

பழணியாண்டி : என்னைச் சொல்ல விடுங்கோவன் பெடியனை இப்பிடியான இடத்திலை கட்டிக் குடுத்தா பிறகு நாங்களும் போகலாமெல்லோ

முகத்தார் : ஜயா நீங்க போறது உங்கடை கையிலையோ இல்லை பெடியன்ரை கையிலையோ இல்லை வரப்போற பெடிச்சின்ரை கையிலைதான் இருக்கு ஆனபடியாலை இப்பவே பறக்காம விசயத்துக்கு வாங்கோ ஏன் வெளிநாட்டிலை கட்டிக் குடுக்க நிக்கிறீயள்?

பழணியாண்டி : வெளிநாட்டிலை கட்டிக்குடுத்தா தான் ஊருக்கை கொஞ்சம் டிமான்ட் காட்டித் திரியலாம்

முகத்தார் : ரொம்ப நல்ல விசயம் இப்ப மகன் என்ன செய்யிறார்?

பழணியாண்டி :சும்மாதான் இருக்கிறார் அவற்ரை படிப்புக்கேத்த வேலை கிடைக்குதில்லை

முகத்தார் : அப்பிடியா. . . .என்ன படிச்சிருக்கிறார்?

பழணியாண்டி : 10ம் வகுப்பு தமிழ் பெயில் எண்டபடியாலை மேலை படிக்கேலாமல் போட்டுது

முகத்தார் : இந்த படிப்புகேத்த வேலை கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் அப்ப நீங்க வேறை துறையிலை ஆளைச் சேர்த்துவிட்டிருக்கலாமே

பழணியாண்டி : இப்ப கொஞ்ச நாளாத்தான் டிவிலை ஒரு படத்தைப் பாத்திட்டு மெக்கானிக் வேலை செய்யப் போற எண்டுட்டு வீட்டிலை கிடந்த சைக்கிலை எல்லாத்தையும் கழட்டிப் புூட்டினான்

முகத்தார் : பாத்தியளோ அவனுக்குள்ளை ஒரு திறமை ஒளிச்சிருந்திருக்கு

பழணியாண்டி : ஆனா புூட்டி முடிஞ்சாப்பிறகு பாத்தா நிறையச் சாமான் மிஞ்சிக்கிடந்திச்சு

முகத்தார் : அதுவும் நல்லதுதானே அப்பிடியே பக்கத்திலை பாட்ஸ் கடை யொண்டையும் போட்டுட்டாப் போச்சு. . . .

பழணியாண்டி : எல்லாத்துக்கும் காசு வேணுமே. . . .

முகத்தார் : இப்ப பேருக்கு ஏத்தமாதிரி தட்டுமட்டும் தான் வைச்சிருக்கிறீயள் சரி பெடியன்ரை குணநடைகள் எப்பிடி?

பழணியாண்டி :அதை கேக்கத் தேவையில்லை காலேலை கோயிலுக்கு போட்டுத்தான் மறு வேலை பாப்பான்

சாத்திரி : இந்த காலத்திலை இப்பிடி ஒரு பையனா?

முகத்தார் : சாத்திரி கோயிலுக்கு போறவையெல்லாம் கும்பிடத்தான் போறவை எண்டு எப்பிடிச் சொல்லுறது

பழணியாண்டி : அப்ப என்ரை பெடியனை பெம்பிளையளை பாக்கப் போற தெண்டு சொல்லறீயளோ?

முகத்தார் : சா.. . .சா. . அப்பிடி நான் சொல்லேவை சிதறு தேங்காய் கோயிலிலைதானே உடைக்கிறது அதுதான் சரி விசயத்துக்க வருவம் பொண்ணுவீட்டு பகுதியாலை எப்பிடி எதிர் பாக்கிறீயள்?

பழணியாண்டி : பெரிசா என்னத்தைக் கேக்கிறது பெடியனை எடுத்தாக் காணும் அதோடை பெடியனை படிப்பிச்சதெண்டு ஒரு 20 லட்;சம் தந்தா நல்லம்;

முகத்தார் : என்ன 10ம் வகுப்பு மட்டும் படிப்பிக்க 20 சிலவழிச்சியளோ?

பழணியாண்டி : இப்பிடிச் சொல்லிதானே எங்கடை ஆட்கள் வாங்கிறது வழக்கம் அதுதான். . . . .

முகத்தார் : அதுக்காண்டி 10 வகுப்பு பெயிலுக்கு இது கொஞ்சம் ஓவராத் தெரியலை

பழணியாண்டி : 5ம் வகுப்பு படிச்சவைக்கே இப்பிடி குடுத்திருக்கினம் உங்களுக்கு வேணுமெண்டா ஆட்களை சொல்லட்டே என்ன சாத்திரியார் இவர் சும்மா எல்லாம் கேள்வி கேக்கிறார் விசயத்தை முடிக்க மாட்டார் போலகிடக்கு

சாத்திரி : முகத்தான் உதுகளை விட்டுட்டு இப்ப எதாவது கை வசம் இருக்கோ பார்

முகத்தார் : லண்டன் குறிப்பொண்டு கையிலை இருக்கு நல்ல பகுதி இஞ்சை பக்கத்தி ஊர்தான் பிள்ளை சமையலிலையும் வலு கெட்டிக்காரி மாங்காய் சட்னி ஒண்டு போடுவாள் சும்மா. . . . .சொல்லி வேலையில்லை

சாத்திரி : (ரகசியமாக) ஏண்டா முகத்தான் லண்டனிலை இருக்கிற பிள்ளை சட்னி போட்டதை சாப்பிட்ட மாதிரிச் சொல்லுறாய்

முகத்தார் : உன்ரை தொழிலுக்கை நான் தலை இடுறனானே பிறகெதுக்கு இதுக்கை மூக்கை நீட்டுறாய் நாங்க இப்பிடித்தான் அள்ளி விடுவம் இதையெல்லாம் கண்டுக்கபிடாது

பழணியாண்டி : மனுசிக்காரி சொல்லிறா குத்துவிளக்காட்டம் மருமகள் வரவேணும் எண்டு

முகத்தார் : ஏன் அப்பதான் திரி இழுத்து பத்த வைக்க லேசோ. . .

பழணியாண்டி : ஆனா மகன் சொல்லுறான் (ஓரு படத்தை நீட்டி ) இதிலை இருக்கிற பெண்ணு மாதிரிதான் வேணுமெண்டு

முகத்தார் : சாத்திரி இதென்னடா திரிஷான்ரை போட்டோவைக் காட்டுறார். . . . ஜயா இதிலை இருக்கிற மாதிரிதான் வேணுமா? கொஞ்சம் முன்னுக்கு பின்னை இருந்தா பரவாயில்லையா?

பழணியாண்டி: அப்பிடி உங்களிட்டை இல்லாட்டி சொல்லுங்கோ நான் வேறை புரோக்கரைப் பாக்கிறன்

முகத்தார் : சாத்திரி இது சரி வராத கேஸ் நான் சூடாகிறத்துக்கிடையிலை ஆளைக் கூட்டிக் கொண்டு போயிடு

சாத்திரி : என்ராப்பா டென்ஷன் ஆகிறாய்?

முகத்தார் : பின்னை என்னடாப்பா பெடிப்பிள்ளேண்ரை படிப்பு வள்ளலிலை லண்டன் 20 லட்சம் இதிலை திரிஷா மாதிரி என்ன விளையாடுறாங்களா. .

(சாத்திரியார் மெல்ல பழணியாண்டியை கூட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகிறார்)

முகத்தார் : (மனசுக்குள் இப்பிடி பொய்யளை சொல்லி கட்டிவைச்சுத்தான் இப்ப நாயாக் கிடக்கிறன் இனியாவது ஒழுங்கா இருப்பம் எண்டு பாத்தா சும்மா வந்து சூடாக்கிறாங்கள்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
முகத்தார் அங்கிள் சூப்பரோ சூப்பர்....அப்பிடியே நாளைக்கு நானும் kareena kapoor ஒட போட்டவ அனுப்பி வைக்கிறன்;..அத மாதிரி ஏதாச்சும் வந்தா சொல்லுங்க....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
முகத்தார் அங்கிள் சூப்பர் நான் விது எனக்கும் நல்லாய் நண்டுக்கறி வைக்ககூடிய பெட்டயாய் பாருங்கோவன் நானும் பெரிய படிப்புத்தான் எங்கட ஊரிலையே 8ம் வகுப்புவரை படிச்சது நான்தானாக்கும் எனக்கு திரிசா மாதியெல்லாம் வேண்டாம் உவள் சிவகாசிப்பெட்டையபோல்லிருந்தால் காணும்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
நல்லா இருக்கு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

முகம்ஸ் அப்படியே 40வயது அளகான சா அழகான தாடி வைச்ச பையனுக்கு ஒரு 18,19இல யூரோப்பில இருக்கிற ஜீன்ஸ் போட்ட பெண்ணா பாருங்கப்பா,, சீதனம் கனக்க வேண்டாம், யூரோப்பில கார் ஓடுவதற்கு (நான்) லைசன்சும் அப்படியே லைசன்ஸ் எடுத்ததுக்கப்புறம் ஒரு சின்ன கார் (பெரிசா வேண்டாம் ஒரு பென்ஸ், பெராறீ) எடுத்து தந்து அதுக்கு பெற்றோல் அடிக்க சில்லாறை காசு கொஞ்சம் (ஒரு 10ஆயிரம் யூரோ) இவ்வளவும் போதும்,, Idea :wink: :? 8)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
நகைச்சுவை உணர்வுகள் தங்களிடம் நிறையவே இருக்கின்றது. வெகு லாவகமாக... எழுதி, எழுத்துத்துறையில் மிகவும் அனுபவப் பட்டவர் போல்... எழுத்தின் நடை அமைந்திருக்கின்றது. தங்களிடம் நிறையவே திறமை இருக்கின்றது. அதனை வெளிப்படுத்துங்கள்.

மேலும் மேலும் இது போன்ற ஆக்கங்கள் வெளிவர மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply
shanmuhi Wrote:நகைச்சுவை உணர்வுகள் தங்களிடம் நிறையவே இருக்கின்றது. வெகு லாவகமாக... எழுதி, எழுத்துத்துறையில் மிகவும் அனுபவப் பட்டவர் போல்... எழுத்தின் நடை அமைந்திருக்கின்றது. தங்களிடம் நிறையவே திறமை இருக்கின்றது. அதனை வெளிப்படுத்துங்கள்.

மேலும் மேலும் இது போன்ற ஆக்கங்கள் வெளிவர மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கா சொல்லுறீங்க சன்முகி?? அட அத்தனை வரிகளை எழுதிய முகத்தாரை புகழாமல் இரண்டே இரண்டு வரி எழுதினதுக்கு போய் இப்படி புகழலாமா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
உங்களைப்போய் இப்படி எல்லாம் பாராட்டமுடியுமா என்ன...?
இதை எல்லாம் மிஞ்சிப் போய் விட்ட ஆசாமி நீங்க. உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
ம்... தேடிக் கொண்டு இருக்கிறன்.
Reply
முகத்தார் வீடு 7 இல் நகைச்சுவை விருந்துண்டு களித்தோம் நன்றிகள்...! தளராமல் தொடருங்கள்.. நகைச்சுவை விருந்துகள் படையுங்கள்..! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நல்ல நகை சுவை, காசு கொடுத்தாலும் வராது இதைப்போய் நிறுத்தப்பார்த்தீர்க்ளே, நல்லா இருக்கு தொடர வாழ்த்துக்கள்.
அட டன்னின்ர நாய் தப்பீட்டுதா?
.

.
Reply
முகம்ஸ் அசத்தீட்டீங்க. 10 ஆம் வகுப்பு பெயிலுக்கு 20 லட்சம் ம் ம். நல்ல காலம் இதுக்கு மேல ஏதும் கேக்கல என்று மகிழலாம். அது சரி.. 10 ஆம் வகுப்பு படிச்சவை இப்படிச்சீதனம் கேட்டால். இங்கின வந்து கொஞ்சம் படிச்ச பொண்ணுகள் எப்படிக்கேக்கணும் இவையிட்ட சீதனம். முகம்ஸ' இனி ஆணுகள் சீதனம் கொடுக்கிறமாதிரிச்செய்யிறது உங்கட கையில தான் சொல்லிப்போட்ட்டன் இல்லாட்டா ஆயுள் தண்டனை சமையல் அறை தான். பொன்னம்மாக்கா நம்ம தோஸ்த்தாக்கும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அசத்துறீங்க தாத்தா வாழ்த்துகள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நன்றி தொடந்து சளையாமல் உங்கள் ஆக்கங்களைத் தாங்க.

உங்களுக்கு பக்கபலமாய் நாங்கள் இருக்கிறேம்(முகத்தார் இரசிகர் மன்றம்)


உங்கள் அடுத்த ஆக்கத்தை மிக விரைவில் எதிர்பாக்கிறேன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


----- -----
Reply
முகத்தார்க்கு மட்டுமா ரசிகப் மன்றம்;..முகத்தார் இப்பிடி இரக்கிறதே பொண்மக்காவாலதானே..சோ அவாவுக்கும் ஒரு ரசிகர் மன்றம் தொடங்கி நம்ம தூயாவ தலைவியா போட்டாச்சு....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
முகத்தார் பாராட்ட எனக்கு வார்த்தை கிடைக்கேல்லை

!
Reply
Eswar Wrote:முகத்தார் பாராட்ட எனக்கு வார்த்தை கிடைக்கேல்லை
வடிவாத் தேடிப்பாருங்கோ... எங்கையும் சந்துபொந்துக்குள்ள கிடக்கும்.. :wink:
[size=14] ' '
Reply
முகத்தார் உங்கள் ஆக்கம் திறமையாக இருக்கிறது..! வாழ்த்துக்கள்..! உங்கள் ஆக்கத்தில் எங்களுக்கு பட்ட ஆதங்கம் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.. தயவுகூர்ந்து.. குறையாக எடுக்காமல் ஒரு விமர்சனமாகப் பாருங்கோ..!

10ம் வகுப்புப் படித்தவரையும்...அவர் சைக்கிள் திருத்து தொழிலைச் செய்ய முனைவதையும்...அதில் தவறு விடுவதையும்..சொல்லி இருக்கிறீர்கள்..! அதை வைத்து ஆக்கம் சில கட்டங்கள் நகர்த்தப்பட்டிருக்கு..! எங்கள் பார்வையில் அது சிலரில் எதிர்மறை மனோவியல் விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது..! குறிப்பாக... 10ம் வகுப்பில் பெயில் விட்டாலும் புலத்தில் நீங்கள் மேலும் படிக்க வாய்ப்புக்கள் இருக்கு...! பெயில் விட்ட பாடத்துக்கு எத்தனை தடவையும் தோற்றி பரீட்சை எழுதலாம்..! அப்படி எழுதி பெரிய பட்டதாரிகளானவர்களும் உண்டு..! ஆனால் இலங்கையில் அப்படியல்ல..! ஒரு பாடத்துக்கு தோற்ற முடியாது தோற்றினால் எல்லாப் பாடத்துக்கும் தோற்ற வேண்டும்..! அதுவும் இரண்டு தடவை மட்டும் தான்...! எனவே 10 வகுப்பு பெயில் என்பது இலங்கை கல்வி நடைமுறைகளின் படி பழிப்புக்குரிய ஒன்றல்ல என்றே கருதுகின்றோம்..! அதை வைத்து ஒரு நபரின் கல்வியல் திறமையை முழுமையாக அளவிடுவது சரியல்ல...அது அவர்களை மனோவியல் ரீதியில் தாழ்த்தவே வகை செய்யும்..!

இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும்... ஏல் படித்து 4 ஏ அல்லது 3 ஏ எடுத்தவர்கள் பல்கலைக்கழகங்களில் சிரமங்களை எதிர்நோக்கியும் இருக்கின்றனர்..! எனவே கல்விவை வைத்து தனிநபர்களை முழுமையாக எடை போடும் எமது சமூக வழக்கை அப்படியே பிரதி பண்ணாமல் நம்பிக்கை ஊட்டத் தக்க வகையில் இப்படியான சந்தர்ப்பங்களை கையாண்டால் சிறப்பா இருக்கும்..!

இப்போ இலங்கையில் டாக்டர் இஞ்சினியர் பட்டதாரிகள் என்று ஆகி கோடி கோடியாக வாங்கி புலத்துப் பெண்களுக்கு கணவனாக பலர் காத்திட்டு இருக்கிறார்கள்..! அவர்களை முகத்தில் அடியுங்கள்..வரவேற்கலாம்..! முழுக்க முழுக்க இலவசக் கல்வியையும் பெற்றுவிட்டு... கோடி கேட்குது அவைக்கு...! அவர்களை அடியுங்கோ...அவர்கள் தான் உண்மையில் சமூகத்தையும் கல்வித்திட்டத்தையும் நாட்டையும் ஏமாற்றுபவர்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)