Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://img355.imageshack.us/img355/6342/heroesday10px.jpg' border='0' alt='user posted image'>
<b>கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது
கண்ணீர் அரும்பிட
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் மனதில் பெருகிட...
மரணம் மண்டியிட
மண்ணில் வீழ்ந்தோம்
அன்னை மடிமீது
அந்நிய ஆதிக்கம்...
உயிர் மூச்சு நெருப்பாக்கி
உற்ற கடமை செய்தோம்..!
உறவுகள் எமக்கு
உலகெங்கும்
உணர்வுகள் எமக்குள்ளும்
உயிர் வாழ...
உங்கள் உரிமைக்காய்
உயிர் கொடுத்தோம்...!
உறங்கும் நாள் குறித்தோம்
எங்கள் வாழ்வுக்காய் அல்ல...
உங்கள் பிஞ்சுகள்
உரிமை கொண்டாட
தமிழன் நான்
தனித்துவமானவன்
எண்ணங்கள் காத்திடுங்கள்...!
இன்னும்...
உற்ற அன்னை
உள்ளுக்குள் அழுகிறாள்
உருவில்லை என்றாலும்
எங்கள் மூச்சுகள் உணருது
உங்கள் மூச்சொடு
இறுதி இலட்சியம் வென்றிடுங்கள்
வீணடிக்காது விரைந்து
வீர வரலாறு
இறுதி அத்தியாயம் எழுதிடுங்கள்...!
மாவீரனை வணங்குதல்
"இலட்சியம் காத்தல்"
அர்த்தப்படுத்தி
உயிர் விதைகள்
ஊன்றிய இடத்தில்
சத்தியம் செய்யுங்கள்..!
உரிமைகள் வென்று
விடுதலை வாங்கி
உதாரணமாகி நில்லுங்கள்..!
எமக்காய்..
கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது...
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் சுமக்கின்றார்
வீழ்ந்தும் வாழ்கிறோம்
நினைவுகளாய்
விதை நிலங்களில்..!
என்றும் வீரராய் வாழ்வோம்
சுதந்திர தேசத்தில்...!</b>
(படம் - தமிழ்நாதம்)
http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 219
Threads: 48
Joined: May 2005
Reputation:
0
குருவிகல் எழுதியது;
உறங்கும் நாள் குறித்தோம்
எங்கள் வாழ்வுக்காய் அல்ல...
உங்கள் பிஞ்சுகள்
உரிமை கொண்டாட
இதயத்தை தொட்டுவிட்டீங்க. கவிதக்கு நன்றி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Quote:<b>உறவுகள் எமக்கு
உலகெங்கும்
உணர்வுகள் எமக்குள்ளும்
உயிர் வாழ...
உங்கள் உரிமைக்காய்
உயிர் கொடுத்தோம்...!
உறங்கும் நாள் குறித்தோம்
எங்கள் வாழ்வுக்காய் அல்ல...
உங்கள் பிஞ்சுகள்
உரிமை கொண்டாட</b>
எம் மாவீரர்சிந்தனையையும் அவர் வழியில் அணிவகுத்திருக்கும் எம் புலிமறவர் உணர்வினையும் தன் சிலவரியில் விளக்கிட்ட குருவியண்ணாக்கு நன்றிகள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மாவீரர்களை மதித்து நிற்கும் உங்கள் கவிதைகளையும் முன்வையுங்கள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
மாவீரர் நினைவு சுமந்து குருவிகள் தந்த கவிக்கு நன்றிகள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
மண்ணின்ர மைந்தர்களுக்கு என்ர வீரவணக்கங்கள்.........
குருவியக்கா நீங்கள் எழுதியிருக்கிறதில நிறைய பிழையள் இருக்கு......ஒருக்கா கவனியுங்கோ....
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
வீரவணக்கங்கள் அஞ்சலிகள் என களத்தில் கவிதை கிரபிக்ஸ் செய்து தான் உங்கள் உணர்வை வெளிக்காட்ட வேண்டுமா நன்றி செலுத்த வேணுமா எண்டு யோசியுங்கள். குறிப்பாக புலத்திலுள்ளவர்கள் உங்கள் பொருளாதார நிலையை கணக்கிலெடுத்து இப்படிப்பட்ட நினைவுதினங்களில் மேலதிக பங்களிப்புகளைச் செய்யவது பற்றி சிந்தியுங்கள்.
பூனைக்குட்டி கார்த்திகை மாதத்திலாவது எங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளை புறம் தள்ளி ஓற்றுமையா களத்திலிருக்க முனைவோம்.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
யாழ்கவி குருவிகளின்
உணர்வுகள் உன்னதம்.
உருக்கமாய் சில வரி
உண்மையை பேசின.
உறுமும் கவியே
கார்த்திகையின் பெறுமதி
உணர்த்திஇ
உன் இனிய மொழி தந்தாய்
நீரும் உமது கவியும் வாழியவே.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மாவீரர் நாளை நினைவூட்டிய கவிதைக்கு நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
முடிவில்லா போருக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முயன்று முற்றுப்பெறும்முன்
முகங்கள் இல்லா
முகவரி ஆகி
முதன்மையானீரே!
சில்லறை நாடும் உலகில்
கல்லறை நாடி
மகிழ்வாய் பயணித்து,
இளமை நாடும் மாந்தரில்
புதுமை தேடி
புயலாய் சென்றீரே!
ஊரறிய உலகறிய
உன்னத இலட்சியத்தை
உரிமையுடன் நிலை நாட்ட
தலைவனுக்கு உண்மையாய்
மக்களுக்கு ஊமையாய்
உறங்கிவிட்டீரே!
உங்கள் உறக்கம்
உரமாய் எம்விடிவுக்கு
உரமிட உணர்வுடன் நிமிர்கிறோம்.
Posts: 218
Threads: 13
Joined: Oct 2005
Reputation:
0
தாம் நேசித்த தாய் மண்
அந்நியரால் ஆக்கிரமிக்கப்படுவதைக்
கண்டு வெகுண்டு எழுந்து தங்கத் தமிழீழத்தை
மீட்டெடுத்த எம் மறவரை உயிர் உள்ளவரை
நாம் மறவோம் .
நன்றி குருவி உங்கள் கவிக்கு.
----- -----
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
கார்த்திகை வந்தாலே எங்களை அறியாத ஏதோ ஒரு சக்தி எம்மை தூண்டும். மாவீரர் நாள் எப்ப வரும் எப்ப வரும் எண்டு இப்பவே எண்ணத்தொடங்கிட்டம். குரிவிகளின் கவிதைகளும் கள உறவுகளின் பாடல்களிம் அதனையே சொல்லிச்செல்கின்றன.
தமிழீழம் அமையட்டும் மாவீரரின் கனவும் மெய்படட்டும்.
அனைவரின் மாவீரர்பற்றிய கவிதைகளுக்கும் நன்றிகள்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
மாவீரர் நாளை நினைவூட்டிய கவிதைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்
<b> .. .. !!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
மாவீரர் நாளை நினைவூட்டிய கவிதைக்கு நன்றி
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
அனித்தா உங்கள் கவிதையும் நன்றாக உள்ளது. மாவீரர் நினைவுகளை மீட்க்கும் கவிதைகளை இணைத்தமைக்கு நன்றிகள்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
இணைப்பிற்கு நன்றிகள் மதுரன். இவற்றினை பிறமொழிகளின் ஆக்கங்கள் பகுதியிலும் போட்டிருக்கல்லாமே.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
காலங்கள் தானாய் கனிவதில்லை
காயங்கள் இல்லா காவியங்கள் உண்டோ?
காரிருள் அகற்றி உயிரொளி கொடுக்க
அஞ்சி.
அடுத்தவனிடம் கெஞ்சி அடிமையாய்
தினமும் வாழ்வதில் அவமானம் உனகில்லையா?
ஒடுங்கி தினமும் நடுங்கி வாழ்ந்த வாழ்க்கையை
இன்றே நீ பிடுங்கி எறி.
உன் வீட்டு முற்றத்தில் நீ தவழ்ந்த சுற்றத்தில்
யாரோ ஒரு ஆக்கிரமிப்பாளன் அசிங்கப்படுத்துகின்றான்.
ஆடு மாடாக நாம் அடிபட்டு கிடந்தாலும்
யாரும் கேட்க மாட்டார்கள்.
அடுத்த வேளை சோற்றுக்கு வளியற்றுப் போனாலும்
அடுத்தவரை நம்பி பயனில்லை தம்பி.
ஈழம் காக்க புறப்பட்டு தமிழர் மானம் காத்து விதையான
மாவீரர் மேல் ஆணை.
நீ வெளிவீதி வந்து புலியோடு சேர்ந்து போராடாது
நீ ஆழ்து தூங்குவாயாகின்,
விடியாது உன் இல்லம் முடியாது உன் துயரம்.
மாவீரர் வாரமிதில் உறுதி ஒன்று எடுத்துக்கொள்.
உன் ஊரிலுள்ள சிங்கள கூலிகளை சிறீலங்காவிற்கு
அனுப்புவதாய்.
அன் நாளே மாவீர் கனவுகளும் நினைவாகும் பொன்நாளாம்.
எம் தலைமுறையின் விடிவிற்காய் விதையாகிய தன்னலமற்ற
புனிதர்களாம் மாவீரர்களை வணங்குகின்றோம்.
கார்திகை ஒளிரட்டும். மாவீரர்கனவுகள் பலிக்கட்டும்.