Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதி தேர்தல் 2005
#21
ஏன் இந்த இரட்டை நிலை ஓரு பக்கம் அநாமதேயச் சுவரொட்டிகள். மறுபக்கம் நேரடியான ஆயர்களின் வேண்டுகோள்கள். இன்று ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவேண்டாம் எனத் தடுப்பவர்கள் நாளை ஜெயித்துவரும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இருக்கப் போகின்றார்களா?? அல்லது தமது நேர்மையான வேண்டுகோள்களை விடுத்த ஆயர்களையும் துரோகிகள் ஆக்கப் போகின்றார்களா?? மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கட்டும் என்பது?????????
Reply
#22
<b>தமிழர் தாயக வாக்காளரின் மனநிலை புரியாது சிறிலங்கா அரசும், புலனாய்வுப் பிரிவும் திணறல்</b>

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களின் மன ஓட்டத்தினை நாடிபிடித்தறிய முடியாத நிலையில், விடுதலைப்புலிகள் எதிர்வரும் சிறிலங்கா சனாதிபதிக்கான தேர்தல் குறித்து அலட்டிக்கொள்ளாதிருப்பது சிறிலங்கா அரசையும் அதனது புலனாய்வாளர்களையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

நேற்றையதினம் அரச மற்றும் படை உயர் அதிகாரிகள் மட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவியதாகத் தெரியவருகிறது.

சிறிலங்கா புலனாய்வுப் பரிவினரின் ஒருபகுதி 'தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலைப் புறக்கணிப்பார்கள்' எனச் சொல்லிவர, இல்லை இல்லை 'இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகள் மக்களை ஏதோ ஒரு வாக்காளரைச் சுட்டிக்காட்டி அவருக்கு வாக்களிக்குமாறு சொல்லப்போகிறார்கள்' என்று மற்றொரு பகுதியும் தெரிவித்து வருகிறதாம்.

அதேவேளை, இதுபற்றி ஒரே வாரஇதழில் பல்வேறு தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளமையானது எவ்வளவு து}ரத்திற்கு சிங்கள தேசமானது, தமிழர் தேசத்தின் அரசியல் நகர்வுகள் குறித்துக் குழம்பிப்போயிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது.

<b>நன்றி:</b> த சண்டே ரைம்ஸ்
<b>தொகுப்பு:</b> திருமகள் (ரஷ்யா)
Reply
#23
வசம்பு ஆயர்கள் சுயமாக சிந்திக்கவில்லையோ?

பேச்சுவார்த்தைகளும் போராட்டத்தின் அங்கங்களாக இருந்ததை இதுவரை கவனிக்கவில்லையா இல்லை கவனித்தாக ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லையா?

நீங்கள் சொல்லுவதை பார்த்தால் ஆயர்கள் முதல் மக்கள் வரை எல்லோரும் ஒன்றைத்தான் சொல்கிறார்கள் என்ற செயற்கையான பிரமிப்பை ஏற்படுத்த வேணுமா?

இது சிங்கள தேசம் அதன் ஜநாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல். தமிழர்களுக்குரிய ஜநாதிபதியை அல்ல. தமிழர்கள் ஏமாற்றுப்படமால் இருக்க வேடம் போட்டு பிரச்சாரம் நடத்துவோர் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது, இன்னாருக்குத்தான் வாக்களியுங்கள் என்று நிர்ப்பந்திக்கப்படவில்லை. மக்களை ஏமாத்தி பிரச்சாரம் செய்வதுக்கு பெயர் ஜநனாயகம் இல்லை. வேட்பாளர்கள் பொய்பிரச்சாரம் நடத்துகிறார்கள் என்றதை சாட்டாக வைத்து இதைத்தான் செய்யுங்கள் என்று சர்வாதிகாரமும் நடத்தவில்லை.
Reply
#24
ஆகா பேஷ் பேஷ் குறுக்ஸ்

மக்களைச் சுயமாக சிந்திக்கவிட்டால் இந்த சுவரொட்டிகள் ஏன்?? இந்தச் சுவரொட்டிகள் சர்வாதிகாரமில்லையா?? <b>மக்களை சுயமாக சிந்திக்க விடாமலிருப்பதற்கும் பெயர் ஜனநாயகமில்லை.</b> ஜனாதிபதித் தேர்தல் சிங்கள மக்களுக்குரியதென்றால் பாராளுமன்றத் தேர்தல் மட்டும் தமிழ் மக்களுக்கும் உரியதோ?? பின்பு ஏன் எமக்கு எம்.பி மார்???
Reply
#25
வசம்பு
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். அப்போதைய நிலை வேறு. இப்போது நிலைவேறு. அப்போது சர்வதேச சமூகத்துக்கு மக்கள் பலத்தை காட்டவேண்டியிருந்தது. எம் மக்களுக்காக கதைப்பதற்காக ஆட்கள் வேண்டியிருந்தது.

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் என்பது அப்படியில்லை. இரண்டு பேர் மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர். அதுவும் சிங்களப் பெரும்பான்மையினர். இப்போது நாம் காட்டவேண்டியது என்னவென்றால் சிங்களப் பேரினவாதத்துக்கான எதிர்ப்பு. இது தான் இப்போது செய்யப்பட வேண்டியவை. எனவே காலம் மாறுகின்றபோது கருத்துக்களும் மாறும். ஆனால் அது நல்ல தீர்விற்கான காய் நகர்த்தலாகவே இருக்கும்
[size=14] ' '
Reply
#26
தூயவன்

தற்போது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப் போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே. தமிழ் மக்களின் வாக்குகள் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களை வித்தியாசப்படுத்த மட்டுமே உதவும். ஆனாலும் ஆயர்கள் சொல்வது போல் தமிழ் மக்கள் இத்தேர்தலை பகிஷ்கரித்தால் அது தேவையில்லாத விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். <b>அதனால் நிச்சயமாகத் தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.</b>
Reply
#27
Vasampu Wrote:தூயவன்

தற்போது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப் போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே. தமிழ் மக்களின் வாக்குகள் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களை வித்தியாசப்படுத்த மட்டுமே உதவும். ஆனாலும் ஆயர்கள் சொல்வது போல் தமிழ் மக்கள் இத்தேர்தலை பகிஷ்கரித்தால் அது தேவையில்லாத விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். <b>அதனால் நிச்சயமாகத் தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.</b>
என்ன வசம்பூ நீங்களுமா?

சிறீலங்காவில் சனநாயகமா? சின்னபுள்ளத்தனம அல்ல இருக்கு உங்க பேச்சு. இராணுவத்தை தமிழர் தாயகத்தில் இருத்தி ஆயுத முனையில் சிங்கள அரசும் அதன் கூலிகளும் தமிழர்களின் வாக்குக்களை பறிப்பதற்கு பெயர் சனநாயகம் என்றால். உங்கள் அறியாமையை என்னவென்பது. கொஞ்சமாவது மனசாட்சியோடு சிந்திக்கவேண்டாமோ?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#28
<b>Mathuran wrote:
என்ன வசம்பூ நீங்களுமா? </b>
மதுரன்
மொத்த இலங்கையிலும் இன்று ஜனநாயகமில்லை. அப்புறம் எங்கு நான் ஜனநாயகம் இருக்கு என்று எழுதியுள்ளேன். நீங்கள் நீங்களுமா என என்னைப் பார்த்துக் கேட்பது ஆயர்களையும் கேட்பது போலவேயுள்ளது. இவ்விடயத்தில் தெளிவாக தம் கருத்தைச் சொன்ன ஆயர்கள் பாராட்டுக்குரியவர்கள். உண்மையில் நான் எதனைச் சொல்கின்றேன் என்பதை நன்றாக வாசித்து விளங்குங்கள். இதுவரை நடைபெற்ற தேர்தல்களை மனதில் வைத்தே எனது கருத்தை எழுதினேன். எனது கருத்தை எழுதுவதற்கு எனக்கும் உரிமை உண்டுதானே மதுரன். நான் எவரையும் கட்டாயப் படுத்தவில்லையே!!
Reply
#29
வணக்கம் வசம்பு.அப்படி சுகமா?உங்கள் கருத்து மிகவும் நன்றாக உள்ளது
Reply
#30
வசம்பு சுவரொட்டிகள் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் அல்லவா இருக்கிறது. ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு என்று தானே அவை உள்ளன. சுவரெட்டிகள் சொல்லும் செய்தி என்ன என்பதை உணரவில்லையா?

பராளமன்ற தேர்தலில் தமிழர்கள் தாயக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கும் சிறீலங்கா ஜநாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

தெரிவுசெய்யப்பட்ட காலத்திலிருந்து கூட்டமைப்பு பா.உ எவ்வாறனை பங்குகளை வகித்துள்ளார்கள் என்பதை கவனிக்கவில்லையா. இறமையுள்ள நாட்டின் உரிமைகள் விசேட சலுகைகள் என்ற அரசாங்கத்தின் அடக்கு முறைகள் மத்தியில் அந்தப் பணிகளை வேறு எவரால் செய்திருக்க முடியும்?
Reply
#31
தேர்தலில் வாக்களிக்குமாறு கோரும் துண்டுப் பிரசுரம் எம்மால் வெளியிடப்படவில்லை : யாழ். அரசியல்துறை விளக்கம்
[ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2005, 22:03 ஈழம்] [யாழ். நிருபர்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் வாக்களிக்குமாறு கோரும் துண்டுப் பிரசுரம் எம்மால் வெளியிடப்படவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறை விளக்கம் அளித்துள்ளது.


யாழ். மாவட்ட அரசியல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் யாழ். மாவட்ட அரசியல்துறை வெளியிட்டதாக தெரிவித்து, சிறிலங்கா அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிக்காமல் அதில் பங்குபற்றி வாக்களிக்குமாறு பொது மக்களை கோரும் பிரசுரங்கள் யாழ். மாவட்ட அரசியல்துறையினரால் வெளியிடப்பட்டவை அல்ல.

சில தீய சக்திகள் தங்களது கபட நோக்கங்களுக்காக எமது பெயரைப் பயன்படுத்தி பிரசுரங்களை அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றன.

இத்தகைய பிரசுரங்கள் குறித்து யாழ். மாவட்ட மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறையினராகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி> புதினம்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
kurukaalapoovan Wrote:இது சிங்கள தேசம் அதன் ஜநாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல். தமிழர்களுக்குரிய ஜநாதிபதியை அல்ல. தமிழர்கள் ஏமாற்றுப்படமால் இருக்க வேடம் போட்டு பிரச்சாரம் நடத்துவோர் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது, இன்னாருக்குத்தான் வாக்களியுங்கள் என்று நிர்ப்பந்திக்கப்படவில்லை. மக்களை ஏமாத்தி பிரச்சாரம் செய்வதுக்கு பெயர் ஜநனாயகம் இல்லை. வேட்பாளர்கள் பொய்பிரச்சாரம் நடத்துகிறார்கள் என்றதை சாட்டாக வைத்து இதைத்தான் செய்யுங்கள் என்று சர்வாதிகாரமும் நடத்தவில்லை.

"இது சிங்கள தேசம்" ஒத்துக்கிறன். "அதன் ஜநாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல்" ஒத்துக்கிறன். "தமிழர்களுக்குரிய ஜநாதிபதியை அல்ல." ஒத்துக்கிறன். "தமிழர்கள் ஏமாற்றுப்படமால் இருக்க வேடம் போட்டு பிரச்சாரம் நடத்துவோர் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது," ஒத்துக்கிறன். "இன்னாருக்குத்தான் வாக்களியுங்கள் என்று நிர்ப்பந்திக்கப்படவில்லை." இத தான் ஒத்துக்கமுடியல .... ஏன்னா எவருக்குமே வாக்களிக்கவேண்டாம்னு மிரட்டி இருக்காங்களே .... இதற்கு உங்க ஊர்மொழியில ஜனநாயகம்னு சொல்வாங்களா.....
இத மத்த இடங்களில "Rowdism" ன்னு சொல்லுவாங்கப்பா ...
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
அப்ப 2 ருபா வேட்டி,கள்ளச்சாராயம் கொடுத்து வாக்கு வாங்கிறது,கள்ள வாக்குப் போடுறது.பேச்சுரிமை கருத்துரிமை எல்லாத்தையும் தடாவுக்குள்ள போடுறது,அசிட் வீசிறது எல்லாம் ஜனனாயகம் .அப்புறம் மருத்துவமனைகுள்ள புகுந்து வைத்தியர் முதல் நோயாளிகள் வரை சுட்டுத் தள்ளுறது ,கற்பளிக்கிறது எல்லாம் ஜன நாயகமா வானம்பாடி. நீங்க இங்க வந்து இப்படி கேள்வி கேக்க உங்களுக்கு உருமை இருக்குப் பாருங்க அது ஜன நாயகம். நாங்க இப்ப தமிழ் நாட்டு கருத்தாடல் களங்களுக்க வந்து இப்படி கேக்க ஏலாம இருகிறது ஜன நாயகமுங்க. நீங்க எங்கள கொன்னுட்டு,கற்பழிச்சிட்டு ஜேய் கின்ட் எண்டு இங்க சொல்ல இட மிருக்கு பாருங்க அது ஜன நாயகமுங்கோ.

சரி யாருப்பா அது மக்கள் படை யாரோ அடிச்சு விட்டிருக்கான் அதுக்கெலாம் கேள்வி கேட்டுக்கிட்டு.சென்னயில தான் சுவர் முழுக்க எழுதி இருக்கே தேர்தல் என்பது திருடர் பாதை எண்டு, கீழ எழுதி இருக்குமே படியுங்க புதிய ஜன நாயகம்,புதிய கலாச்சாரம் எண்டு, அதே தானுங்க.இப்ப எங்களுக்கு வேண்டியது சுய நிர்ணய உரிமய அங்கீகரிக்கிற தேர்தல் தானுங்கோ அதை வையுங்க .அது ஜன நாயகமுங்கோ.
Reply
#34
நீங்கள் உரிமைகளுக்கா போராடிற ஜநனாக அமைப்பு என்று ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் இப்ப அந்த எதிர்பர்பை பாழடிக்கிறமாதிரி றவுடிஸ்ம் பண்ணுறாங்கள் அண்ணா, என்ன செய்யிறது. பாலூட்டி வழத்தவுங்களுக்கே ஆப்புவச்சவங்கெல்லா.

மாற்றுக்கருத்துக்காறருக்கு கொஞ்ச சனமாவது வோட்டு போட போக வேணும் அப்பாத்தான் அதை பல கோணங்களில படம் படிச்சு நாலுகைகூலிகளை பிடிச்சு பேட்டி கண்டு போட்டுட்டு வாக்குப் பெட்டிகளை கள்ள வோட்டுக்களாலை நிரப்பலாம்.
ஒட்டு மொத்தமா சனம் பகீஸ்கரிச்சா கள்ள வோட்டுக்களுக்கு என்னெண்டு காரணம் காட்டிறது.
Reply
#35
<b>குறுக்ஸ் :</b>
பராளமன்ற தேர்தல் தமிழர்கள் தாயக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு பயன் படுத்தப் படுகின்றது என்கிறீர்கள். சரி அப்படித் தெரிவு செய்தவர்கள் என்ன சாதனை செய்துள்ளனர் என்பதை விளக்க முடியுமா??

<b>எனக்குத் தெரிந்தவை:
1)சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல் பாராளுமன்றத்தில் ஒப்பிப்பது.
2)எழுதிக் கொடுத்த அறிக்கைகளை அவ்வப்போது படிப்பது.
3)அரசாங்கத்திடமிருந்து அனைத்து அலவன்ஸையும் பெறறுக் கொள்வது.
4)அரசாங்கக் கோட்டாவில் சொகுசு வாகனங்களைப் பெற்று வெளியில் நல்ல விலைக்கு விற்றுப் பணம் பார்ப்பது.
இன்னும் பல பல. இதுதான் பிரதிநிதித்துவப்படுத்தல் என்றால் ஆளை விடுங்கள் சாமி..</b>

<b>நாரதர்:</b>
காலம் காலமாக தமிழ்நாட்டு மக்களைக் கிண்டலடித்தே பழக்கப்பட்டுப் போன நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம். அதைவிடத் தாழ்ந்து போய் விட்டோம். ஆனாலும் வாய்ச்சவடால்களுக்குப் பஞ்சமில்லை. நாம் சாக்கடைகளை வைத்துக் கொண்டு அவர்களின் கூவத்தைச் சுட்டிக் காட்டுவதில் என்ன பலன். இது பொதுவான களம் யாருக்கும் கேள்வி கேட்கும் உரிமையுண்டு. முடிந்தால் சரியான பதிலைச் சொல்லுங்கள். அதைவிடுத்து தனிநபர் தாக்குதலாக்க வேண்டாம்.
Reply
#36
நான் எழுதுதத் தேவையில்லை வசம்பு. நீங்களே அழகாக பட்டியல் இட்டிருக்கிறீங்கள். அந்த இன்னும் பல பல வையும் நேரம் கிடைக்கும் போது பெரிய மனது பண்ணி எழுதினீங்கள் எண்டால் அறிஞ்சு கொள்ள உதவியா இருக்கும்.

நன்றி
Reply
#37
[quote=Vasampu]

<b>நாரதர்:</b>
காலம் காலமாக தமிழ்நாட்டு மக்களைக் கிண்டலடித்தே பழக்கப்பட்டுப் போன நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம். அதைவிடத் தாழ்ந்து போய் விட்டோம். ஆனாலும் வாய்ச்சவடால்களுக்குப் பஞ்சமில்லை. நாம் சாக்கடைகளை வைத்துக் கொண்டு அவர்களின் கூவத்தைச் சுட்டிக் காட்டுவதில் என்ன பலன். இது பொதுவான களம் யாருக்கும் கேள்வி கேட்கும் உரிமையுண்டு. முடிந்தால் சரியான பதிலைச் சொல்லுங்கள். அதைவிடுத்து தனிநபர் தாக்குதலாக்க வேண்டாம்.

இப்ப எது எங்கட சாக்கடை எண்டுறீங்க வசம்பு கொன்ச்சம் விளக்கமாச் சொல்லுங்க அப்ப தான் பதில் அழிக்கலாம். நான் கேட்டது எது ஜன நாயகம் எண்டு இப்ப சென்னயில கூடத் தான் தேர்தலப் பகீஸ்கரிகக் சொல்லி சுவரொட்டி ஒட்டியிருக்கும் அதுக்காக நான் அவரைக் கேக்கலாமா இதுவா ஜன நாயகம் எண்டு.ஒட்டினவரிட்ட அல்லோ கேக்க வேணும் அதை .இங்க வந்து எதோ நாங்கள் ஒட்டின மாதிரி கேட்டா.பத்திரிகையில செய்தி போட்டிருக்கு அத இங்க போட்டிருக்கு யாரோ சுவத்தில எழுதி ஒட்டினதாம் எண்டு.

இதில எங்க இருக்கு தனி நபர் தாக்குதல் யாரு யாரத் தாக்குகினம் என்ன அவர் கேள்வி கேக்கலாம் எது ஜன நாயகம் எண்டு நாங்க கேள்வி கேக்கக் கூடாதா.உங்க பதில்கள் எல்லாமே விசமத்தனாமாக் கிடக்குது.
Reply
#38
<b>நன்றி நாரதர்</b>
மக்கள் படையின் எச்சரிக்கையை நீங்களே விளக்கமாகவும் இங்கு கொண்டு வந்து இணைத்துள்ளீர்கள். யாரோ ஒட்டினார்கள். அதை இங்கே கொண்டு வந்து போட்டிருக்கு என்றால் யாழ்க் களம் என்ன குப்பைக் கூடையா?? இணைத்தவரிடம் கேள்வி கேட்பதில் என்ன தப்பு உண்டு. ஆனால் வானம்பாடி உங்களிடம் கேட்கவில்லை குறுக்ஸிடம்தான் கேட்டார். நீங்கள் முந்திக் கொண்டு பதிலளித்தீர்கள். நீங்கள் எப்போதும் வானம்பாடியை இந்தியன் என்பதை சுட்டிக்காட்டியே பதிலளித்தவருகின்றீர்கள். இதுதான் விஷமத்தனம். வானம்பாடி தனது வதிவிடம் தமிழ்நாடு என்பதைக் குறிப்பிட்டபடியால்த்தானே இப்படி எழுதுகின்றீர்கள். பலர் போல் அவர் அதைக் குறிப்பிடாது விட்டிருந்தால் உங்களால் இப்படிப் பதிலளிக்க முடியுமா???
உங்கள் கேள்விகள் பலமுறை கேலிகளாகவே வந்திருக்கின்றன. உங்களால் தமிழ்நாட்டில் விடப்பட்ட பிரசுங்களில் ஏதாவதொன்றில் மீறினால் தண்டனை(மரணம்) வழங்கப்படும் என்று வந்த பிரசுரம் பற்றி அறியத் தர முடியுமா??
Reply
#39
<span style='font-size:25pt;line-height:100%'>இன்று நாட்டில் நடப்பவையெல்லாம் ஜனநாயகம் என்றால் உலகத்திலேயே சிறந்த ஜனநாயகவாதி ஹிட்லர் தான்</span>
Reply
#40
கிழக்கிலங்கையிலும் தேர்தல் பகிஸ்காரம் கோரும் பிரசுரம்

இலங்கையில் நடை பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கக் கோரும் துண்டுப் பிரசுரமொன்று இன்று கிழக்கு மாகாணத்தில் வெளியாகியுள்ளது.

"தமிழ் தேசிய ஒற்றுமை ஒன்றியம் மட்டக்களப்பு - அம்பாறை" என்ற அமைப்பின் பெயர் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த பிரசுரத்தில் மஹிந்த ராஜபக்சவோ, ரணில் விக்கிரமசிங்கவோ இருவரில் ஒருவர் பதவிக்கு வரலாம் என்றும், ஆனால் இவர்கள் எவரும் தமிழ் மக்களின் உரிமைகளை தந்து விடப் போவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகியன கொண்டு வரப்பட்டமை, சுனாமி நிவாரண பொதுக் கட்டமைப்பு மற்றும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வழங்கப்படாமல் தடுத்தமை, போன்ற விடயங்களும் சுட்டிக்க காட்டப்பட்டுள்ள அந்த பிரசுரத்தில் ஏற்கனவே பதவி வகித்த மற்றும் பதவியிலுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் தொடர்பாகவும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் தினமாகிய நவம்பர் 17 ம் திகதியை துக்க நினைத்து தமிழ் மக்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற வேண்டு கோளும் அந்த பிரசுரத்தில் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ் குடாநாட்டில் இது போன்ற பிரசுரங்களும் அறிக்கைகளும் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது.

BBC Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)