Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பித்தலாட்டத்தை அம்பலமாக்கியது தமிழ் நாளிதழ்!
#1
<b>புலிகள் ஆட்களைப் பிடித்துவந்து கூட்டம் நடத்துவதாகப் பிதற்றித்திரியும்; கூட்டத்தின் பித்தலாட்டத்தை அம்பலமாக்கியது தமிழ் நாளிதழ்!</b>


'வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம்' என்று தமிழிலே ஒரு பழமொழி உண்டு. அதுபோலப் புலிகள் எதைச் செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதற்கென்றே ஒரு கும்பல் செயற்படுகிறது.

அக் கும்பலுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் கிடைப்பதே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களது தயவினால்தான்.

என்ன வியப்பாக உள்ளதா?

ஆனால் உண்மை அதுதான். இந்தக் கும்பல் உயிர்வாழ்வதே 'புலி எதிர்ப்பு' என்ற ஒரே ஒரு கொள்கையால்தான். அவர்களுக்கு வேறெந்த இலட்சியமும் இல்லை. இலக்கும் இல்லை. கொள்கை கோட்பாடு எதுவுமே கிடையாது. இருந்து பாருங்கள். தப்பித்தவறி ரணில் சனாதிபதியானால் ஏதாவது ஒரு சாக்கிட்டுக்கொண்டு ரணிலின் வாலைப் பிடிக்க வந்துவிடுவார்கள்.

இவர்களது 'புலி எதிர்ப்புத்' திறமைக்காக மாறிமாறி வரும் சிறிலங்கா அரசாங்கங்கள் உண்ண உணவும், கைச்செலவுக்குப் பணமும் இவர்களை வளர்த்து வருகின்றன.

அதாவது 'நஞ்சு மாலை' தரித்த புலிகள் அமைப்பின் இருப்புத்தான் இவர்கள் 'செல்லிடப்பேசி(cellular phone) மாலை'யுடன் வளைய வரவும் காரணமாகிறது. புலிகள் அமைப்பு இல்லையேல் இவர்களுக்குப் பிழைப்பேது?

எனவே இப்போது சொல்லுங்கள். பிரபாகரன் அவர்களது தயவில்தானே இவர்கள் உயிர்வாழ்கிறார்கள்!

சரி, இனி விடயத்திற்கு வருவோம். மேற்படி கும்பல் எங்கு புலிகள் அமைப்போ அல்லது வெகுசன அமைப்புகளோ கூட்டங்கள் பேரணிகள் நடத்தினாலும் சொல்லிவைத்ததுபோல 'புலிகள் ஆட்களை வாகனங்களில் ஏமாற்றி அழைத்துவந்து கூட்டம் நடத்தினார்கள்" என்று சொல்லிவிடுவார்கள்.

இந்தக் கும்பல் -தாமே சனநாயகத்தின் காவலர்கள் என்றும் புலிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் திக்கெட்டும் கூச்சலிடும் கூலிக் கும்பல்- எப்படிச் சலுகைகளைக் காட்டித் தமிழ் மக்களின் முதுகில் சவாரி விடுகிறார்கள் என்பதை இன்றைய தினம் சிறிலங்காவில் வெளிவந்த தமிழ் நாளிதழ் ஒன்று அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

அந்தச் செய்தியை அந்த நாளிதழில் உள்ளது உள்ளபடியே கீழே தருகிறேன்.

<b>'' பிரதமருடனான சந்திப்புக்கு நடேஸ்வரா கல்லு}ரிக்கு கூட்டிச் செல்லப்பட்ட மக்கள்</b>

வேலைவாய்ப்பு மற்றும் ஆலய புனர்நிர்மாணத்துக்கான நிதியுதவிகளைப் பெறுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை காலை யாழ் நகரிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஸ்ரீதர் திரையரங்கு அலுவலகத்திற்குச் சென்றவர்களுக்கு புதுவித அனுபவமொன்று கிடைத்துள்ளது.

சமுர்த்தி வேலை வாய்ப்பு, தொண்டர் ஆசிரியர் நியமனம், கோயில்களுக்கான காசோலைகள், நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் யாழ் நகரில் ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் வழங்கப்படுமெனவும் அதனை நேரில் பெற்றுக் கொள்ள வருமாறும் கடிதம் மூலம் ஈ.பி.டி.பி. யினர் அழைத்திருந்தனர்.

இதற்கமைய நேற்றுக் காலை சுமார் 9.30 மணியளவில் ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் சுமார் ஆயிரம் பேர் கூடினர். பலத்த பாதுகாப்புச் சோதனையின் பின்னர் கிடைக்கப் போகும் நியமனக் கடிதங்களுக்காகவும் காசோலைகளுக்காகவும் எல்லோரும் காத்திருந்தனர்.

அரை மணிநேரத்தின் பின்னர் அறிவிப்பொன்று வந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தக் கடிதங்களும் காசோலைகளும் தெல்லிப்பளையில் வைத்தே வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டு, காலை 11 மணியளவில் நான்கைந்து பஸ்களில் அனைவரும் நெருக்கி ஏற்றப்பட்டு இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் காங்கேசன்துறை வீதியுூடாக தெல்லிப் பளைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கும் பலத்த சோதனை நடைபெற்ற பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லு}ரிக்கு அனைவரும் கூட்டிச் செல்லப்பட்டனர்.

கல்லு}ரியின் கீழ் மாடியிலேயே நிகழ்வு நடைபெறுமென முதலில் கூறப்பட்டு அனைவரும் அங்கு கூடியிருக்க, நிகழ்வு மேல் மாடியிலேயே நடைபெறுமென அறிவிக்கப்பட அனைவரும் அங்கு சென்றனர்.

எனினும், நிகழ்வு கீழ் மாடியில், மேல்மாடியில் என மாறி மாறிக் கூறப்பட்டு நான்கு தடவை அனைவரும் கீழ் மாடிக்கும் மேல் மாடிக்கும் ஏற்றி இறக்கப்பட்டு, கடைசியில் கீழ் மாடியில் நிகழ்வு நடைபெற்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இவ்வாறு நடந்ததாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் 1.15 மணியளவில் அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலத்த பாதுகாப்புடன் வந்தார். பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அனைவரையும் சந்திப்பாரென கூறிய அமைச்சர் தேவானந்தா, இது ஒரு அறிமுகச் சந்தர்ப்பமெனவும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் முழு உதவியும் கிடைக்குமெனவும் கூறினார்.

பிரதமரும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் நாட்டுப் பிரச்சினை பற்றியும் உரையாற்றியதுடன் இந்தத் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சுமார் 2 மணியளவில் நிகழ்வு முடிவடைந்தது. மீண்டும் காங்கேசன்துறை வீதியுூடாகச் சென்றால் பஸ்களைத் தாக்க வீதிகளில் பொது மக்கள் பலர் கூடியிருப்பதாகக் கூறி சேந்தான் குளம், மாதகல், திருவடி நிலை (சுழிபுரம்) ஊடாக கூட்டி வந்து பின்னர் மானிப்பாய் ஊடாக யாழ் நகருக்கு மாலை 4.30 மணியளவில் கூட்டிச் சென்றனர். "

<b>நன்றி:</b> தினக்குரல் (05-10-2005)

இனி, இதேவிடயம் தொடர்பாக மேற்படி கும்பல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் 'இந்த மக்களின் வருகை' குறித்த பகுதிகளை வாசியுங்கள்

'அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு கொட்டும் மழையிலும் திரண்டு வந்த மக்கள் மத்தியில் பிரதமர் மகிந்த... செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உரை! யாழ் நடேஸ்வராக்கல்லூரி மண்டபத்தில் தீடீர் ஏற்பாடு!"

'பாதுகாப்பு காரணங்களுக்காக பகிரங்க அறிவிப்பு எதுவும் செய்யப்படாத நிலையில் ஈ.பி.டி.பி விடுத்த தனிப்பட்ட அழைப்பின் பேரில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்."

'கொட்டும் மழை என்றும் பாராமல் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு திரண்டு வந்த மக்கள் மத்தியில் மகிந்த ராஐபக்ச அவர்கள் உரையாற்றுகையில்..."

'...செயலாளர் நாயகம் அவர்கள் தனது உரையின் இறுதியில் தெரிவிக்கும்போது கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ,இங்கு நீங்கள் திரண்டு வந்திருப்பதை விடவும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நீங்கள் வந்திருப்பதுதான் வரவேற்கத்தக்க விடயமாகும். உங்கள் மீது விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை எதிர் கொண்டு ,இங்கு நீங்கள் திரண்டிருப்பது எனது நம்பிக்கையினை மேலும் பலப்படுத்தியுள்ளது! .."

செயலாளர் நாயகத்தையும் பிரதமரையும் காண்பதற்கென வந்திருந்த மக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த நேரம் தவறியதால் வாகனங்களை விட்டு ,இறங்காமலேயே திரும்பிச்சென்றுள்ளனர்.


இப்பொழுது சொல்லுங்கள். 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...'


<b>தொகுப்பு: </b>திருமகள் (ரஷ்யா)
Reply
#2
<img src='http://img201.imageshack.us/img201/2435/mf9hq.jpg' border='0' alt='user posted image'>


[size=18]'நஞ்சு மாலை' தரித்த புலிகள் அமைப்பின் இருப்புத்தான் இவர்கள் 'செல்லிடப்பேசி(cellular phone) மாலை'யுடன் வளைய வரவும் காரணமாகிறது.
Reply
#3
எமகாதப்பயல்கள்தான், எமனுக்கே இடியப்பம் நூல் நூலா தீத்தக்கூடிய ஆட்கள், இவங்க கையில ஆட்சி போனா எல்லாருக்கும் இடியப்பம்தான், அதுவும் ஒரேஒரு இடியப்பம்தான். :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted:
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)