Posts: 123
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
தியாகம்!!! நீங்கள் சொல்வதுபோல மொழி என்பது ஒருவரது கருத்துக்களை இன்னொருவருக்கு தெரியப்படுத்தும் ஊடகமே. ஆனால் அது அத்தகைய ஒரு தொழிற்பாட்டுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அதற்கப்பாலும் பலமைல் தூரம் செல்கின்றது. மொழி என்பது எமது அடையாளம்இ தனித்துவம்இ வரலாறு இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். அதற்காக சங்ககாலத்தில் எப்படி மொழியைப் பாவித்தோமோ அப்படியேதான் இப்போதும் பாவிக்க வேண்டும் என்று விவாதிப்பது பொருத்தமற்றது. மொழி என்பது காலவோட்டத்திற்கேற்ப மாற்றங்கள் விரிவாக்கங்களுக்குட்பட்டு செல்வது தவிர்க்க முடியாததே. சிலவேளைகளில் வேற்று மொழியில் உள்ளவற்றை எமது மொழிக்கு பெயர்த்தலில் ஈடுபடும்போது அதேகருத்தை அப்படியே தருவதென்பது கடினமானதுதான். ஆனால் முற்றிலும் முடியாது என்று விவாதிப்பது பொருத்தமற்றதாயிருக்கும் என்று எண்ணுகின்றேன். எமது மொழியில் ஏலவேயுள்ளவற்றை அடியொட்டியதாக மாற்றங்களை ஏற்படுத்தல் சிறப்பாயிருக்குமல்லவா. அப்படி மயக்கமான சந்தர்ப்பங்களில் வேற்று மொழியை அடைப்புக்குறிக்குள் இடுவது கருத்தை தெளியப்படுத் உதவும்.
கடினமாயிருக்கின்றது என்பதற்காக வேற்று மொழியில் உள்ளவற்றை அப்படியே எமது மொழியில் தரவிறக்கி பயன்படுத்தினால் எமது மொழியின் தற்போதைய நிலையை ஒருமுறை கற்பனை பண்ணிப்பாருங்கள்.
முடிந்தவரை முயல்வோம்.......
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
துருப்புக்காவி என்பது பெயர்ச்சொல். அது பயன்பாட்டுக்கு வந்து நீண்டகாலமாகிவிட்டது. (நானறிய தொன்னூறின் தொடக்கத்தில் இது பயன்படுத்தப்பட்டது)
இதே போல் நிறைய போர்த்தளபாடச் சொற்கள் தமிழில் வந்துவிட்டன. அனைத்தும் ஈழப்போராட்டத்தினால் வந்தவை. உலங்குவானூர்தியெனும் சொல் பி.பி.சி தமிழோசை சங்கர் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை எந்தக்கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டனர்.
முன்பு இப்படித்தான் தமிழில் அணிநடை முயற்சிகள் செய்யப்பட்டபோத யாழ்ப்பாணத்தில் மேதாவிகள் சிலர் பழித்தனர். சில கிராமப்புறப் பாடசாலைகள் இவற்றைச் செய்தபோது எல்லாரும் கிண்டலடித்தார்கள். இன்று வன்னயில் புலிகளின் அணிகள் மட்டுமன்றி எல்லோருமே தனியே தமிழில் மட்டுமே கட்டளைகள் வழங்கி அணிநடை செய்கின்றனர். அதே மேதாவிகள் வந்து பார்த்து மரியாதையை ஏற்றுக்கொண்டு செல்கின்றனர். தமிழ்க்கட்டளைகளில் மிடுக்குக் குறைந்துவிட்டதா?
புதுச்சொல் பயன்பாட்டுக்கு வரும்போது முதல் இரண்டொரு தடவை அடைப்புக்குறிக்குள் அதன் விளக்கத்தைப்போடலாம். பின் வழமைக்குத் திரும்பிவிட வேண்டும்.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வணக்கம் கள உறவுகளே!
களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு.
களவாயில் பகுதில் புதிதாக இணைத்த கிளைப்பகுதிகள் வரவேற்கப்படவேண்டியவை. அத்தோடு உங்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். தொடர்வது----> களவாயிலில் உள்ள கிளைப்பகுதிகளில் ஆங்கிலத்தில் தற்போது இருக்கின்ற சொற்களை (சினிமா, வீடியோ) தமிழில் எழுதுவதில் ஏதும் சிரமம் இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின் அறியத்தரவும்.
பலசிரமங்களுக்கு மத்தியிலும் தமிழ்ச்சேவை புரியும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத்தெரிவித்து, யாழோடு மீண்டும் இணையும் வரை.
மதுரன்
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Quote:துருப்புக்காவி என்பது பெயர்ச்சொல். அது பயன்பாட்டுக்கு வந்து நீண்டகாலமாகிவிட்டது. (நானறிய தொன்னூறின் தொடக்கத்தில் இது பயன்படுத்தப்பட்டது)
இதில் துருப்பு என்பது தமிழல்ல.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
அதிகமான சொற்களுக்கு தமிழ் கருத்துடன் கூடீய சொற்கள் வசனங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்ளுமளவிற்க்கு எம்மவரிடம் பொறுமையும் இல்லை அக்கறையும் இல்லை. தவறு என்று ஒருவன் சுட்டிக்காட்டும் வரை யாரும் தமது தவறுகளை தெரிந்தும் திருத்துவதில்லை (சிலர் சொல்லியும் திருந்தார்) அது போல தான் இந்த சொற்களும் சொற்கள் இல்லை என்றும் புலம்புவோர் அது இருக்கிறது ஆனால் அதை தேடிப்பெறவேண்டும் என்று அக்கறைப்படுவதில்லை...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
Quote:மதுரன் எழுதியது:
களவாயிலில் உள்ள கிளைப்பகுதிகளில் ஆங்கிலத்தில் தற்போது இருக்கின்ற சொற்களை (சினிமா, வீடியோ) தமிழில் எழுதுவதில் ஏதும் சிரமம் இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின் அறியத்தரவும்
வணக்கம் மதுரன் நீண்ட நாட்களுக்கு பின்னா்...
நீங்கள் கேட்டதுக்கு வலைஞனிடம் பதிலிருக்கும்..அவர் சொல்லுவதை நானே சொல்லிவிடுகின்றேன்...
சினிமா என்பது தமிழில் தானே இருக்கு Cinema என்று எழுதினால் தான் ஆங்கிலம்.. அதை எப்பிடி நீங்கள் தமிழ் இல்லை என்று சொல்லுவீர்கள்...? "திரை" என்று தமிழில் சினிமாவையா சொல்வார்கள்...?
:?: அதே போல தான் வீடியோ அதுவும் தமிழில் தான் இருக்கு Video என்று எழுதினால் தான் அது ஆங்கிலம்...
ஆனால் "ஒளிப்படம்" என்றால்..என்ன...அதுதான் வீடியோவிற்க்கும் தமிழாம்..... :roll:
என்ன வலைஞன் நான் சொன்னதில் ஏதாவது தவறு இருக்கா?... :?: :?:
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
மாலை வணக்கம் வலைஞ்ஞன் அவர்களே,
தங்களின் பதிலுக்கு நன்றி.தமிழ் சொற்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமான வேலைதான். இருந்தாலும் முயல்வதில் தவறில்லைத்தானே.
<b>சினிம --- திரை, திரை உலகம்.</b>
நீங்கள் களவாவாயிலில் உள்ள கிளைப்பகுதியில் இணைப்பதாயின். திரை உலகம் என்னும் சொல்லினை இணைக்கலாம்.
<b>விடியோ--- காட்சிப்பதிவாக்கி</b>.
ஒலி ஒளி பதிவாக்கி என்றும் வைத்துகொள்ளலாம். எவ்வாறாயினும் தமிழில் ஏதாவது ஒரு சொல்லினை எழுதுங்கள். தவறாக இருப்பின் விவாதிக்கலாம். ஆங்கிலத்தில் எழுத வேண்டாமே.
ஆனால் இதற்கு வேறு சொல் இருப்பின் கள உறவுகளே அவற்றையும் தூயதமிழ் சொற்கள் என்னும் பகுதியில் இணைத்து விடுங்கள்.
நன்றி