Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதி தேர்தல் 2005
#1
ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவின் " மக்கள் நிகழ்ச்சி நிரல்' என்ற தேர்தல் விஞ்ஞாபனமும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் " மஹிந்தவின் சிந்தனை' என்ற தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியாகி விட்டன.
இரண்டிலுமே மோசமான ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை தொக்கி நிற்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
பெரும்பான்மையினரின் விருப்பம்தான் நீதியும், நியாயமும் என்ற தோரணையில் அந்தத் தவறான கொள்கையை அடிப்படையாக வைத்தே இந்த விஞ்ஞாபனங்கள் இரண்டும் கட்டப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம்.
அதனால்தான், இந்த இரண்டு தலைவர்களாலுமே தங்களுக்கு நீதி செய்யப்படமாட்டாது என்ற முடிவுக்கு வர வேண்டியவர்களாகத் தமிழர்கள் இருக்கின்றார்கள்.
இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுமே தாங் கள் தேர்தலில் வென்று அதிகாரத்துக்கு வந்தால் இரண்டு சர்வஜன வாக்கெடுப்புகளைத் தாங்கள் நடத்துவார்கள் என்று கூறுகின்றார்கள்.
விடுதலைப் புலிகளுடன் பேசி, இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் கண்ட பின்னர், அது குறித்து மக்களின் அனு மதி பெற ஒரு சர்வஜன வாக்கெடுப்பையும்
அதைப் பெற்ற பின்னர், அந்தத் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு மற்றொரு சர்வஜன வாக்கெடுப்பையும்.
தாம் நடத்துவார் என்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க.
ஆனால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ, தாம் புலிகளுடன் பேச முன்னரே தேசிய கருத்தொருமைப்பாடு ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவார் என்றும், பின்னர் புலிகளுடன் பேசி இணக்கத் தீர்வு ஒன்று எட்டப்பட்டதும் அதனை நடைமுறைப் படுத்தும் புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு மக் களின் அனுமதியைப் பெறுவதற்காக அடுத்த சர்வஜன வாக் கெடுப்பைத் தாம் நடத்துவார் என்றும் கூறுகிறார்.
அது மட்டுமல்ல, "" பெரும்பான்மையினரின் கொள்கை யுடன் நான் உடன்படுகிறேன். எனது தனியான கருத்துக் குப் பதிலாகப் பெரும்பான்மையினரின் கருத்தை நான் ஏற் கிறேன்.'' என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் பிர தமர் மஹிந்த.
அதாவது, எந்தத் தீர்வும் சகலருக்கும் நீதி, நியாயமாக இருப்பதை விட, பெரும்பான்மையினரின் அதாவது, தென் னிலங்கைச் சிங்களவரின் விருப்பத்தை நிறைவு செய் வதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்ற கருத்தியலில்தான் இரண்டு பிரதான கட்சிகளினதும் வேட் பாளர்கள் உறுதியாக நிற்கிறார்கள். அந்தக் கொள்கை நிலைப்பாட்டைத்தான் அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். அதிலிருந்து வெளியே வரப்போகின்றவர்களாக அவர்களின் கருத்து நிலைப்பாடோ, போக்கோ இல்லை.
பெரும்பான்மையினரின் தீர்மானத்தைச் சிறுபான்மை யினர் மீது திணிக்கும் அடாத்துச் செயலே காலங்காலமாக அரங்கேறியது. அதன் மூலமே சிறுபான்மையினர் இலங் கைத் தீவில் அடக்கி, ஒடுக்கி உரிமைகள் பறிக்கப்பட்டனர். அதுவே இனப்பிரச்சினையாக இந்த நாட்டில் பேயுருக் கொண் டது.
நாட்டின் இன்றைய தேசியப்பிரச்சினைக்கு அடிப் படையே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தைச் சிறுபான்மை யினர் மீது வலிந்து புகுத்தியது ஆகும். மீண்டும் அதே வழி யில் தீர்வு காண்பார்கள் என்று தென்னிலங்கைத் தலைவர் கூறுவது சாத்தியப்படப் போவதில்லை.
இலங்கையில் பெரும்பான்மையினர் என்ற வாக்குப் பலத்தை வைத்துக் கொண்டு, சிறுபான்மையினர் மீது அவர் களை அடக்கி, ஒடுக்கும் சட்டங்களைத் திணித்த சிங்களத் தலைமைக்கு அந்த வாக்குப்பலம் மூலம் சரியான பதிலைத் தர முடியாத நிலைமை காரணமாகத்தானே ஆயுதங்களைத் தூக்கும் நிலைமை தமிழர்களுக்கு ஏற்பட்டது?
பெரும்பான்மையினரான சிங்கள மக்களை பௌத்த சிங்கள பேரினவாத சகதிக்குள் தூண்டி விழுத்திவிட்டு, அதில் இன்று வரை வெளிவராமல் தொடர்ந்து புதைந்து, அழுந்திப் போய்க் கிடக்கும் சிங்கள சமூகத்தின் இணக்கத் துடன் கிடைக்கும் தீர்வுதான் உங்களுக்குத் தரப்படும் எனத் தமிழர்களைப் பார்த்துக் கூறினால் அதை அப்படியே ஏற் பதற்குத் தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லர்.
பெரும்பான்மையினரின் கருத்து என்பது ஜனநாயகத் துக்கும், தேர்தலுக்கும் பொருத்தமான தீர்வாக இருக்கலாம். ஆனால், நீதி செய்யும் விடயத்தில் பெரும்பான்மையினரின் கருத்து அல்ல, நீதி நியாயத்துக்கே முன்னுரிமையும், தனி யுரிமையும் அளிக்கப்பட வேண்டும். அதுதான் ஒழுங்கு முறையாக இருக்கும்.
தங்களது நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய் யும்படியே உரிமையுடன் கேட்கிறார்கள் தமிழர்கள். பெரும் பான்மைச் சிங்களவரின் விருப்புக்குரிய "பிச்சையை' அல்ல அவர்கள் எதிர்பார்ப்பது.
எனவே, இன்று இலங்கையில் ஜனாதிபதிப் பதவிக்கு வரு வதற்கு பொருத்தமானவர் பெரும்பான்மையினரின் விருப்பத் தீர்வை நடைமுறைப்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுப்பவர் அல்லர். சகல சமூகங்களுக்கும் தமிழர்கள், முஸ் லிம்கள், மலையகத் தமிழர்கள் உட்பட அனைத்து இனங் களுக்கும் நீதியான, நியாயமான தீர்வை எந்த எதிர்ப்பு வந் தாலும் நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்ற உறுதியும், திடமும் கொண்ட தலைவர்தான் இன்று தேவைப்படு கின்றார்.பெரும்பான்மைக்கு "சலாம்' வைத்து, "சல்யூட்' அடிக்கும் தலைவரால் நியாயம், நீதி நிலைநாட்டப்படுவது சாத்தியமானதல்ல.
இன்று ஜனாதிபதித் தேர்லில் நிற்கும் பெரும்பான்மை யினரின் இரண்டு பிரதான கட்சிகளினதும் இரு வேட்பாளர் களுமே இந்த நேர்மைத் திறத்துக்குள் தேறுபவர்கள் போல நமக்குத் தோற்றவில்லை.

http://www.uthayan.com/editor.html
" "
Reply
#2
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதன் மூலமே சந்திரிகாவின் சிறிலங்கா சுதந்திர கட்சியை காப்பாற்ற முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.


கேகாலையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கபீர் காசிம் பேசியதாவது:

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியானது என்று தெரிந்த நிலையில்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகார மையத்தைக் காப்பாற்ற ஜே.வி.பி திட்டமிட்டு வருகிறது.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே கடந்த தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்தது ஜே.வி.பி. சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ச தனது ஆதரவாளரான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி மூலம் ஜே.வி.பி. விரித்த வலையில் விழுந்துள்ளார். வன்முறைப் பாதை மூலம் தாங்கள் சாதிக்க நினைத்ததை இப்போது வேறு வழிகளில் சாதிக்க ஜே.வி.பி. முனைகிறது.

இதன் விளைவாக பண்டாரநாயக்க, திருமதி பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரால் பாதுகாக்கப்பட்ட சுதந்திரக் கட்சி நீர்த்துப் போய்விடக் கூடும். சுதந்திரக் கட்சியுடன் ஜே.வி.பி. கூட்டணி அமைத்த குற்றச்செயலை செய்துவிட்டதாக ஏற்கனவே அனுரா பண்டாரநாயக்க அதிருப்தியில் உள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகாலத் தலைவர்கள், ஜே.வி.பி-சுதந்திரக் கட்சி கூட்டணியால் வருத்தமடைந்துள்ளனர்.

சுதந்திரக் கட்சியை ஜே.வி.பி.யிடமிருந்து காப்பாற்ற ஒரே வழி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற வைப்பதுதான் என்றார் கபீர் காசிம்.
Reply
#3
பதவியிலுள்ள போதே அகற்றப்படும் ஜனாதிபதியின் புகைப்படங்கள்
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியிலிருக்கும் போதே அரச ஸ்தாபனங்களில் வைக்கப்பட்டிருக்கும் அவரது புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சரொருவரின் அழுத்தத்தின் பேரிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் குறிப்பாக அரசிற்கு சொந்தமான விடுதிகள் என்பவற்றில் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் சந்திரிகா குமாரதுங்கவின் புகைப்படங்களே இவ்வாறு கழற்றி அகற்றப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திலேயே ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#4
ஆட்டம் போட்ட கூட்டங்கள் அடங்கும் போது, இது சாதாரனமாக நடக்காக்கூடியதுதான். ஆனால் தினம் தினம் ராஜ்பக்சா முகத்தில் விழிப்பதுதான் கஸ்ரமாக இருக்கும். இருந்தகாலத்தில் ஏதாவது நல்லது செய்திருக்கலாம். சிங்களம் சந்திரிக்காவை மறந்தாலும் தமிழர்கள் மறக்கவும் மாட்டார்கள்,மன்னிக்கவும் மாட்டார்கள். ஏன் தமிழீழத்தில் பிறக்கப்போகும் குழந்தைகளை ஆட்டம்போடவைக்கும் ஒரு துள்ளிசைப்பாடலில் பதிவாகி இருக்கிறார். காலம் உள்ளவரை அவர்நிலத்திருப்பார் "முன்னேறி பாய்வதேன் அம்மா? பின்னாலே ஓடுவதேன் சும்மா?" என்ற பாடல்மூலமாக. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#5
பிருந்தன் இந்த பாடலை எங்காணும் தரைவிறக்கம் செய்யாலாமோ???

Reply
#6
அது சரி மேற்குறிப்பிட்ட செய்தி அந்த இணையத்தளத்தின் மற்றைய மொழிகளில் இல்லையே?? ஏனுங்க???

:roll: :?: Idea Arrow
Reply
#7
நான் ஜனாதிபதியானால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பால் கரக்கும் பசு அன்பளிப்பு ... அதுவும் சாதாரண மாடு இல்லீங்க .... ஒருநாளைக்கு 10ல் இருந்து 16 லீட்டர் வரைக்கும் பால் கரக்கும் கேரளா பசுவுங்க .... நீங்க flats இல் வாழ்பவராக இருந்தாலும் உங்களுக்கு பசு நிச்சயமா கிடைக்குங்க ....
இந்த 16 லிட்டர் பால வச்சு என்ன பண்றதுன்னு யோசிக்காதேங்க ... அதற்கும் அவரே விளக்கம் கொடுத்திருக்கிறாரு ... பாலை cheese ஆக்கலாமாம்,butter ஆக்கலாமாம், அதுமட்டுங்களா export கூட பண்ணலாமாம் ... ஆஹா அபாரமான ஐடியா ....
சரி எதற்கும் அந்த ஆளுக்கு ஓட்ட போட்டு ஜனாதிபதி ஆக்கிடுங்க

(மாட்டுக்காவது ஒட்டு விழுகுதான்னு பார்ப்போம்)


<b>Sri Lankan presidential candidate promises a cow in every home</b>

Friday, November 4, 2005 Posted at 3:07 AM EST

Associated Press

Colombo, Sri Lanka " A wealthy Sri Lankan presidential candidate said he will use his personal fortune to buy a cow for every home if he is elected".

"Every Sri Lankan home will be gifted with a high milk-yielding cow from [the Indian state of] Kerala which could be expected to yield 10 litres to 16 litres of milk every day," Victor Hettigoda was quoted as saying by The Island newspaper on Friday.

"Even families who live in flats, who could make suitable arrangements to look after a cow, will receive a gift of cow," he was quoted as saying.

Anusha Vitanapathirana, a spokesman for Mr. Hettigoda, confirmed the report.


Mr. Hettigoda is one of 13 candidates vying for the tropical island's top executive post in the Nov. 17 presidential election.

The leading candidates are Prime Minister Mahinda Rajapakse and former prime minister Ranil Wickremesinghe.

Mr. Hettigoda said his plan was a sure way to fight malnutrition and make people prosper, and suggested that excess milk could be converted into cheese and butter or even exported.

Sri Lanka's indigenous cattle are poor dairy animals. They are small, with an average adult weight of 160 kilograms and low milk yields.

Mr. Hettigoda owns an herbal medicine empire, the Siddalepa Group of Companies, with 3,500 employees.


http://www.theglobeandmail.com/servlet/sto.../International/
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
<img src='http://img473.imageshack.us/img473/827/ranil3110by.jpg' border='0' alt='user posted image'>தேர்தல் காலத்தில் தினமும் பல்வேறு விதங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. கொழும்பு நகரெங்கும் கடைசியாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையே இங்கு காண்கிறீர்கள். புலிகளின் மிக நெருங்கிய சகாவாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவைச் சித்திரிக்கும் சுவரொட்டியே இதுவாகும்.
நன்றி தினக்குரல்
Reply
#9
<img src='http://www.uthayan.com/images/news/05110402.gif' border='0' alt='user posted image'>[img][Image: 05110403.gif]

இராணுவத்தை வெளியேறவும், தேர்தலை
பகிஷ்கரிக்கவும் கோருகிறது மக்கள் படை!
நள்ளிரவில் பரவலாக எச்சரிக்கை சுவரொட்டி


குடாநாட்டை விட்டு படையினரை உடனடியாக வெளியேறுமாறு கோரியும்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ் கரிக்குமாறு கண்டிப்பான கட்டளை மூலம் கேட்டும்
நேற்று நள்ளிரவு யாழ். நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டி ருந்தன.
மேற்படி சுவரொட்டிகளின் அடியில் ""மக்கள் படை யாழ். மாவட்டம்'' என்று காணப்பட்டது.
படையினரை வெளியேறுமாறு கோரும் சுவரொட்டி கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருந்தன. இவற்றில் ""சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளே...! எம் தாயக மண்ணை விட்டு உடனே வெளியேறுங்கள்... இல்லையேல்... உங்கள் ஆயுதங்களே எமக் குப் போதும் உங்களை வெளியேற்ற...'' என் றும்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோரும் சுவரொட்டிகளில்
""அன்புக்குரிய யாழ். மக்களே! ஜனாதி பதித் தேர்தலைப் பகிஷ்கரிப்போம். தமிழ் மக்களாகிய எமக்கு ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் செய்த அராஜகங்களும், துரோகங்களும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். கடந்த கால அனுபவங்கள் எமக் குப்போதும். எனவே, எந்த ஜனாதிபதி வேட் பாளருக்கும் தமிழர் தாயகத்தில் இடமில்லை என்பதை உணர்த்துவோம்.
இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வைத்தல், தேர்தல் பிரசாரக் சுவ ரொட்டிகள்.

நன்றி / உதயன்

http://www.uthayan.com/pages/news/today/02.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
நாட்டில நல்ல விசயங்கள் நடக்கப்போகுது என்றியள். எனதருமை சிங்கள சகோதர சகோதரிகளே உந்தச் சுவரொட்டியப்பாத்துட்டு கடுமையா யோசிக்காமல் உங்கள் வோட்டுகளை போடுங்கோ இலங்கைத்தீவிற்கு அமைதி விரைவில் கிடைக்கும்.
Reply
#11
யாருக்கு வோட் போடச்சோல்லுறீங்க குறுக்ஸ் அங்கிள்
. .
.
Reply
#12
நேற்று 03 - 11 - 2005 இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்துக்கு தற்போதைய சனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றார். யாழ்குடாநாட்டில் ஆக்கிரமித்திருக்கும் 40000 படைவீரர்களின் தபால்மூலமான வாக்குகளை உறுதிப்படுத்துவதே இப்பயணத்தின் நோக்கமாகும்.
அவர் படைவீரர்களை மட்டுமே சந்தித்தார். பொதுமக்கள் எவரையுயும் சந்திக்கவில்லை. ஆனால் இவரது பயணம் பற்றி ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட தலைப்பு: Wickremesinghe campaigns in Sri Lanka's rebel heartland

இது சிந்திக்க வேண்டிய விடயம். :roll: :roll: :roll:
.

.
Reply
#13
<b>யுத்தத்துக்கான முன்னெடுப்புகளா?: சு.ப.தமிழ்ச்செல்வன் பதில்
[வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2005, 16:28 ஈழம்] [ம.சேரமான்]
யுத்தத்துக்கான முன்னெடுப்புகளை நோக்கி நாம் நகருகிறோமா என்று எம்மால் கூறமுடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


"சிறிலங்கா தேர்தலில் பட்டும் படாமலும் விலகி நிற்கும் போராளிகள்- சமிக்ஞைக்குக் காத்திருக்கும் வாக்காளர்கள்" என்ற தலைப்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக் கட்டுரையை எழுதிய ஊடகவியலாளர் பீற்றர் ஆப்ஸ்க்கு கிளிநொச்சியில் அளித்த நேர்காணலில் சு.ப. தமிழ்ச்செல்வன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் கட்டுரை:

இலங்கைத் தீவில் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் நாள் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக விடுதலைப் புலி போராளிகள் முழுமையாக ஆர்வம் கொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் அவர்களது பிரதேசங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் இது தொடர்பிலான போராளிகளது நகர்வுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

போராளிகளின் முழு கட்டுப்பாட்டுப் பகுதியான வடபகுதியில் உள்ள கிளிநொச்சியில் உள்ள சில வாக்காளர்கள், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை எதிர்க்கும் சிங்களத் தேசியவாதிகளின் தெரிவான பிரதமர் மகிந்த ராஜபக்சவை விட 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கிய ரணிலையே தேர்வு செய்கின்றனர்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை தலைநகரமாக உள்ள கிளிநொச்சியில் உள்ளவர்களும் அதைச் சுற்றி வசிப்பவர்களும் வாக்குப் பதிவு வீதமானது போராளிகளின் எண்ண ஓட்டத்துக்கமையவே இருக்கும் என்கின்றனர்.

"தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குச் சொல்கிறார்களோ அதையே நாம் செய்வோம்" என்று சுப்பையா ரவி என்கிற கடைக்காரர் தெரிவித்தார். "அவர்கள் எங்களை வாக்களிக்கக் கூறினால் வாக்களிப்போம், வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னால் வாக்களிக்க மாட்டோம்" என்றார் அவர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள வாக்காளர்களில் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களே அதிகம். அவர்கள் அனைவரும் வாக்களிப்பு நாளன்று அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் சூனியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு பேரூந்துகளில் அழைத்துவரப் பட உள்ளனர். இது விடயத்தில் போராளிகள் தலையிடக் கூடுமோ என்று தேர்தல் அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதும் அரச தலைவர் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குண்டுத் தாக்குதல்களையும் தொடர்ச்சியான கொலைகளையும் புலிகள் மேற்கொள்வதாகவும் தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்கச் செய்வதற்காக அவர்கள் அதை மேற்கொள்வதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவலை தெரிவிகின்றனர்.

இனப்பிரச்சனை தொடர்பான இரு தசாப்த கால யுத்தத்தில் 64 ஆயிரம் பேர் இருதரப்பிலும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த ரணில் விக்கிரமசிங்கவால்தான் நிரந்தர அமைதியை உருவாக்க முடியும் என்று பலரும் கருதுவாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ரொய்ட்டர்சிடம் கூறுகையில்,

எந்த ஒரு வேட்பாளரது உறுதிமொழிகளும் உள்ளத்திலிருந்து வெளிவருவது அல்ல. இருவருமே தமிழர் மற்றும் சிங்களவர் வாக்குகளைப் பெறுவதற்காக "அமைதி" என்பதை ஏலம்விட்டுக் கொண்டுள்ளனர் என்கிறார்.

மேலும், "தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் மறந்துவிடுவார்கள். நாம் முழுமையாகவே இந்தத் தேர்தல் குறித்து எதுவித அக்கறையும் கொள்ளவில்லை. நாம் பொறுப்பான ஒரு அரசியல் இயக்கம். எமது மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு" என்றும் கூறினார்.

ஆபத்தான சூழ்நிலை

கடந்த 3 ஆண்டுகால யுத்த நிறுத்த ஒப்பந்தமானது முன்னெப்போதையும் விட தற்போது பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். கிழக்குப் பிராந்தியத்தில் அவர்களது இயக்கத்தை விட்டுப் ஓடிப் போன துரோகிகளை எதிர்கொண்டு நிற்கிறார்கள். அவர்களை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைப் படையினர் என்று புலிகள் அழைக்கின்றனர். ஆனால் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இதை மறுத்துள்ளது.

"யுத்தத்துக்கான முன்னெடுப்புகளை நோக்கி நாம் நகருகிறோமா என்று எம்மால் கூறமுடியாது; ஆனால் மிகவும் அபாயகரமான நிலையை நோக்கி நாம் நகர்த்தப்படுகிறோம்" என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் தமிழ்ச்செல்வன் எம்மிடம் தெரிவித்தார்.

வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ காவலரண்கள் கைக் குண்டுத்தாக்குதல்களுக்கி வருவது அதிகரித்துள்ளது. வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்துவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளால் தன்னாட்சி அதிகாரத்துக்காக போராடுவதாக கூறுகிற விடுதலைப் புலிகள், இத்தகைய தாக்குதல்களையும் மூத்த புலனாய்வுத்துறை அதிகாரி மற்றும் ஓகஸ்ட் மாதம் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கொல்லப்பட்டதையும் மறுத்துள்ளனர்.

இருப்பினும் வெளிவிவகார அமைச்சர் படுகொலையையடுத்தே தமிழீழ விடுதலைப் புலிகளை தமது உறுப்பு நாடுகளில் வரவேற்கப் போவதில்லை என்றும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைக்கப் போவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்ததாக சிலர் கருதுகின்றனர்.

"சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இருந்தால் நாம் கண்டிப்பாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி, அதன் பின்னர் யுத்தத்தைத் தொடங்குவோம். இந்த மறைவான நடவடிக்கைகளைக் காட்டிலும் அதுதான் சரியானதாக இருக்கும்" என்றார் தமிழ்ச்செல்வன்.

கிளிநொச்சியின் 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள குண்டுத்தாக்குதல்களுக்குள்ளான பனைமரங்கள் உள்ள சூனியப் பிரதேசம் இரு பகுதியினரையும் பிரிக்கிறது. தங்களுக்கு வாக்களிக்க விருப்பம் இருந்தபோதும் ஆபத்தானதாக அது இருப்பதாக வாக்காளர்கள் எண்ணுகின்றனர்.

"மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றால் நாம் யுத்தத்தை முன்னெடுப்போம்" என்கிறார் வர்த்தகரான நடேசன் தணிகாசலம்.

"தாங்கள் சொல்வதைத்தான் நாம் செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரை எம்மை அறிவுறுத்தியதில்லை. விடுதலைப் புலிகள்தான் மக்கள். மக்களாகிய நாங்கள்தான் விடுதலைப் புலிகள்" என்றார் நடேசன் தணிகாசலம்.

-என்று ரொய்ட்டர்ஸ் செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#14
தேர்தலை பகிஷ்கரிக்குமாறு மக்கள் படை வேண்டுகோள்

ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு மக்கள் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பான சுவரொட்டிகள் யாழ்.குடாநாடெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அன்புக்குரிய யாழ்.மக்களே, ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்போம், தமிழ் மக்களாகிய எமக்கு ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் செய்த அராஜகங்களும், துரோகங்களும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். கடந்த கால அனுபவங்கள் எமக்குப் போதும். எனவே, `எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமிழர் தாயகத்தில் இடமில்லை' என்பதை உணர்த்துவோம்.

இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தல், தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுதல், அது தொடர்பான ஏனைய செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதை மீறுபவர்கள் மிக விரைவாக தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இது எச்சரிக்கையல்ல கண்டிப்பான கட்டளை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reply
#15
வாழ் க.....................மக்கள்............படை..........வெல்க........உனது..........பணி...........
...........
Reply
#16
அதேபோல்...............மக்கள்...........படையே....தமிழ்..தேசியரணுவம் என்ற........தேசதுரோக கும்பலையும்.....ஒரு கைபார்பாயாக.................
...........
Reply
#17
யாழ்ப்பாணத்தில் தேர்தலை புறக்கணிக்கக் கோரும் சுவரொட்டிகள் மற்றும் அழைப்புகள்

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக, வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரும் சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் படை என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகளில் கடந்த கால ஜனாதிபதிகள் செய்த அராஜகங்களும் துரோகங்களும் மன்னிக்கமுடியாதவை என்றும், அனுபவங்கள் எமக்குப் போதும், எனவே எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமிழர் தாயகத்தில் இடமில்லை எனவும் அந்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் படை- யாழ் மாவட்டம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இன்னுமொரு சுவரொட்டியில் தமது தாய் மண்ணில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தச் சுவரொட்டி ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, வலிகாமம் பொது அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்தத் தேர்தலில் பங்குபற்றுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவித பயனும் ஏற்படப் போவதில்லை எனச் சுட்டிக்காட்டி, இதனைப் புறக்கணிப்பதன் மூலம், சிங்களத் தலைமைகள் மீது, தமிழ் மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையை சர்வதேச சமூகத்திற்குத் வெளிப்படுத்த வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பதின்மூன்று வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஆளும் கட்சியாகிய பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் நாட்டின் பிரதமராகிய மகிந்த ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்கவும் முக்கிய வேட்பாளர்களாக இருக்கின்றனர்.

இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது.

இந்த இரண்டு வேட்பாளர்களுமே சிங்களப் பேரினவாதச் சிந்தனை கொண்டவர்களாகவே தமது தேர்தல் அறிக்கைகளிலும், சிந்தனைகளிலும் வெளிக்காட்டியிருப்பதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஒரு தெளிவான தீர்வை அவர்கள் முன்வைக்கவில்லை எனவும் வலிகாமம் பொது அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#18
'ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்ற வேண்டும்'- வடக்கு கிழக்கு ஆயர்கள்

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/02/20050220141115bishopmannarw203.gif' border='0' alt='user posted image'>
<b>மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு</b>

இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் மூவரும் இணைந்து கோரியுள்ளனர்.

இந்த தேர்தலில் ஆர்வம் குன்றிய நிலையில் காணப்படும் தமிழ் மக்கள், அதனைப் புறக்கணிக்கும் பட்சத்தில், அவர்களது வாக்குகள் தவறான வழியில் துஸ்பிரயோகம் செய்யப்படும் நிலையும் காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தமது கூட்டு அறிக்கை பற்றி தகவல் தந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள், இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கும் பட்சத்தில், தமிழருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் நிலை உருவாகும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்துள்ளார்.

ஆகவே தமது வாக்குகளை நேரகாலத்துக்குள் சென்று தமிழ் மக்கள் அளிக்க வேண்டும் என்றும், தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புரிந்து செயற்படும் ஒருவரை மற்றும் நீதியுடனான சமாதானத்தை நாட்டுக்கு வழங்கக் கூடிய ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் மன்னார் ஆயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#19
மக்களின் ஏகபிரதிநிதிகள் வாயை திறக்கும் வரைக்கும் இப்படி தான் அவரவர் தாங்கள் நினைத்தபடி அறிக்கைகளை விடுவதற்கு நல்லதொரு சந்தர்;ப்பம் பாருங்கோ...........
<b> </b>
Reply
#20
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பேசி வருவதன் பின்னணியில் பாரிய அரசியல் சதித் திட்டம் உள்ளது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"புலிகளின் குரல்" வானொலியின் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியில் க.வே.பாலகுமாரன் கூறியுள்ளதாவது:

எங்கள் மக்களது அரசியல் எழுச்சி என்பது முன்பு எப்போதையும் விட உச்ச நிலையில் இருக்கிறது. இந்தச் சூழலில் சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

திருவாளர் மகிந்த ராஜபக்சவினது வாக்குறுதிகள் இதுவரை வரலாற்றின் உச்ச சாதனையை எட்டிவிட்டன. எவரும் வழங்காத வாக்குறுதிகளை வழங்கிவிட்டார். இனிமேல் வாக்குறுதிகள் அளிக்கப் போகிறவர்களுக்கு பெரும் துன்பம்தான். ரணில் கூட என்ன சொல்வது என்று தெரியாத நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து வாக்குறுதிகளையும் மகிந்த ராஜபக்சவே வழங்கிவிட்டார்.

இங்கே ஒரு இக்கட்டான நிலையில் அங்கே சிங்கள தேசத்தில் தேர்தல் நடைபெறுகிறது. சிங்கள மக்களை ஏய்த்து ஏய்த்து சொல்லிச் சொல்லி இவ்வளவு ஏமாற்றியதற்குப் பின்னால் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாகச் சொல்லுகிற அளவுக்கு சிங்கள தேசத்து அரசியல் தரம் தாழ்ந்து கிடக்கிறது.

சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்கும் தமிழ் மக்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. இரண்டு வேட்பாளர்களுமே சிங்கள மக்களை மையமாக வைத்துதான் சிந்திக்கிறார்கள். தம்முடைய வாக்கு வங்கி சிக்கலாக இருப்பதால்தான் ரணிலும் வேறு வழியின்றி தமிழ் மக்கள் பற்றி பேசுகிறார். இருவருமே சமமான நிலையில் உள்ளவர்கள்தான். எவருடைய வாக்கு வங்கியை மற்றவர் அபகரிக்கிறாரோ அதன் அடிப்படையிலேயே வெற்றி தீர்மானிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது.

இனவாதஇ பேரினவாதக் கருத்துகள் நிரம்பிய நிலையில் சிங்கள மக்களிடத்திலே மகிந்தரின் வாக்கு வங்கி அமைந்திருக்கிறது. அதனால் ரணிலுக்கு வேறு வழி இல்லை. அதனால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் பல்வேறு வேடங்களைப் போட்டுவருவது எங்கள் மக்களுக்கு நன்கு தெரியும்.

தமிழ் மக்களது பிரச்சனைகள் குறித்து இம்மியளவும் இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கருத்தில் எடுக்கவில்லை என்பதுதாம் எம் கருத்து. சிங்கள மக்களது பிரச்சனை வேறுஇ தமிழ் மக்களது பிரச்சனைகள் வேறு.

சிங்கள மக்களது பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு நிச்சயமாக சிங்களத் தலைவர்களுக்கு உண்டு. ஜே.வி.பி.க்கு நிறைவேறாத ஆசைகள் நிறைய உண்டு. அவர்களது எண்ணங்கள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கின்றன. அதனால் தவியாய் தவித்து துடியாய் துடித்து என்ன செய்தேனும் பதவியைக் கைப்பற்றி தங்களுடைய ஆட்சியை திடப்படுத்தி தங்களுடைய மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக என்ன என்ன வழிகளால் பயணிக்க முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் அவர்கள் பயணிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலின் நடப்பும், நடைமுறைகளும் தமிழ் மக்களுக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. இந்தத் தேர்தல் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு செய்தியை சொல்லுகிறது. தமிழீழ மக்களுக்கும் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற செய்தியைத்தான் இந்தத் தேர்தல் சொல்கிறது. சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் பற்றி அமெரிக்காவினது ரிச்சர்ட் ஆர்மிடேஜிடம் கேள்வி கேட்டால்இ விடுதலைப் புலிகள் கூட்டாட்சி அமைப்புக்குத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்கும் தமிழ் மக்களும் எதுவித தொடர்பும் இல்லை என்பதைத்தான் ஆர்மிடேஜ் போன்றவர்களின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.

இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமானதாக அமையப் போகிறது. இந்தத் தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தெரிவிக்கப் போகிற முடிவு என்பது உலகத்துக்கு உடனடியாகத் தெரியப் போகிறது. இதை உலகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே எங்களுடைய மக்கள் இரண்டு வேட்பாளர்களது வரலாற்றைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தங்களது செயற்பாட்டை மேற்கொண்டு தமது முடிவை சர்வதேச சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். எம் மக்கள் என்ன மாதிரியான பதிலளிப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எம் மக்களுடைய அரசியல் முதிர்ச்சி இந்தத் தேர்தலில் வெளிப்படும் என்று நாம் நம்புகிறோம்.

நீண்டகாலமாக அறிமுகமான இரு கட்சிகளது பழைய முகங்களுக்கு ஊடாக மகிந்தர் என்ற புதிய முகம் அறிமுகமாகி இருக்கிறது. இந்த புதிய முகத்தின் பயங்கரமான- அலங்கோலமான தோற்றம் எம்மக்களை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தென்னிலங்கையின் சாதாரண மக்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக் கொள்ள, 75 வீதம் கிராமங்களில் வாழும் சிங்களவர்களின் பிரதிநிதியாக காட்டிக் கொள்ள மகிந்தர் முயற்சிக்கிறார். இதற்காக கொழும்பு மேட்டிமைத்தன்மையோடு தொடர்பில்லாத கிராமப்புற சிங்களவர்களுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இது ஒன்றும் புதிது அல்ல.

1956 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியை உருவாக்கிய பண்டாரநாயக்க கையாண்ட அதே முறையில்தான் இன்று மகிந்தவும் செயற்பட்டு வருகிறார். அதைப்பற்றி எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. மகிந்தர் தெளிவாகச் சொல்லிவிட்டர்- எனக்கும் தமிழ் மக்களுக்கும் சம்பந்தமில்லை என்று. எனவே அவரைப் பற்றி எங்களுக்குச் சிக்கலே இல்லை.

ஆனால் ரணில் பெரிய வேடமிட்டுக் கொண்டிருக்கிறார். இதுபற்றி எமது மக்கள் தெளிவாக இருத்தல் வேண்டும்.

ரணில் அண்மைக்காலமாகப் பேசிவருவதன் பின்னால் உள்ள நச்சுக் கருத்தை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களை போரில் வெல்ல முடியாது என்பது ரணிலுக்குத் தெரியும்.

அதனால் தந்திரத்தால் வெல்ல நினைக்கிறார்.

தாம் அரச தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு

புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து

ஒரு அரைகுறையான தீர்வை பல்வேறு வடிவங்களில் சமர்ப்பித்து

மிக நீண்டகாலத்துக்கு இந்தப் போராட்ட முதிர்ச்சியிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் புலிகளை பின் தள்ள வைத்து-

புலிகளின் நாட்டுப்பற்று தொடர்பிலான இலக்கை விலக்கச் செய்கிற

முழு தந்திரோபாய முயற்சியில் ரணில் ஈடுபட்டுள்ளார்.

இதுதான் அண்மைக்காலமாக ரணில் கதைத்து வரும் பேச்சுகளின் பின்னணி.

இது சாதாரண மக்களுக்குப் புரிவது கடினமாக இருக்கலாம். உற்றுநோக்கிப் பார்த்தால் மகிந்த ராஜபக்ச சொல்வதைத்தான் ரணில் சொல்லுகிறார். மகிந்தர் வெளிப்படையாகச் சொல்லுகிறார். ஆனால் ரணில் மறைமுகமாக பூடகமாகச் சொல்கிறார். இருவரும் சொல்வதில் எந்த வேறுபாடும் இல்லை.

இரு கட்சிகளுமே ஒரு கட்சியின் இரண்டு கிளைகள்தான். இதை தமிழ் மக்கள் புரிய வேண்டும்.

1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தை முன்வைத்து சிங்கள வாக்குகளை நம்பி புத்த பிக்குகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் இறங்கி பதவியைக் கைப்பற்றினார் பண்டாரநாயக்க.

இன்று அதே கட்சியின் பிரதிநிதியாக மகிந்த ராஜபக்சஇ ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுஇ போர் நிறுத்தம் மீளாய்வு என்று கூறி இன்னொரு வகையான பேரினவாதத்தைக் கிளப்பி பிக்குகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருகிறார். இருவருக்கும் வேறுபாடு இல்லை.

அன்று பண்டாரநாயக்கவின் செயற்பாடு எமது விடுதலை இயக்கத்தின் பிறப்புக்குக் காரணமாக இருந்தது. இன்று மகிந்தவின் செயற்பாடு எமது போராட்டத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும்.

அன்று பண்டா ஒரு கட்சியை அமைத்து தனது குடும்ப ஆட்சியை உருவாக்கினார். இன்று அவரது பாணியிலேயே செயற்பட்டு பண்டா குடும்ப ஆட்சியை முறியடித்து இன்னொரு குடும்ப ஆட்சியைக் கொண்டுவர மகிந்தர் முயற்சிக்கிறார். இந்த நிலையில்தான் ரணிலின் நிலைப்பாடு இரண்டும் கெட்டானாக இருக்கிறது.

எவ்வாறு 1956-க்குப் பிறகு இந்தத் தீவு இரத்தத்திலே குளிப்பதற்குச் செய்யப்பட்டதோஇ

அதுபோலவே மகிந்தரின் செயற்பாடும்

இந்தத் தீவில் சிங்களத் தீவானது இரத்தத்தில் குளிப்பதற்கும்

தமிழ்த் தீவு விடுதலை பெறுவதற்குமான வழியைக் கொடுக்கும் என்றுதான் எண்ணுகிறோம்.

தமிழ் மக்களை முற்று முழுதாகப் புறந்தள்ளி அவர்களை திசைதிருப்பச் செய்வதற்கானவே ஒரு அரசியல் யுத்திதான் இந்தத் தேர்தல் என்பது எமது நிலைப்பாடு என்றார் க.வே.பாலகுமாரன்.

http://www.eelampage.com/?cn=21450
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)