11-13-2003, 02:07 PM
திரை மொழி__________________________________அஜீவன்
[highlight=red:551cd0cc65]திரை.1[/highlight:551cd0cc65]
எந்த ஒரு மொழிக்கும் ஓர் இலக்கண முறை உண்டு.இலக்கணம் தவறி எழுதும்,அல்லது பேசும் ஒருவரது கருத்துகளை மற்றொருவரால் ஒழுங்காக கிரகித்துக் கொள்ள முடியாது.பேச்சு வழக்கில் (அனைத்து மொழிகளிலும்) எல்லோருமே பேசினாலும் அதை அந்த வரையறைக்குள் இருப்பவர்களால் மாத்திரமே முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரே மொழி பேசும் மக்களிடையே வேறுபட்ட ஒயில்களில் (சிலாங்)பேசும் போது,அவர் என்ன சொல்கிறார் என்று புரியவேயில்லை என்று நாமே
ஒருவரது கருத்தை வித்தியாசமாக புரிந்து கொண்ட நேரங்கள் ஏற்படாமலில்லை.
நாம் , நமக்குப் புரிகிறதே என்று எதையாவது தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருப்போம். அது ஒரு சிலருக்கு அல்லது சம்பந்தப்பட்டவருக்கு மாத்திரம் புரியலாம். எல்லோருக்கும் புரிய வாய்ப்பில்லை.எல்லோருக்கும் புரிய வேண்டும் என்றால்,அடுத்தவர் நிலையில் நாம் இருந்து பார்த்தால்தான் புரியும்.
குடும்பங்களில் கூட நாம், "நான் சொல்றது இந்த மர மண்டைக்கு புரியுதேயில்லை" என்று யாராவது ஒருவரை வீடுகளில் வசைபாடுகிறோம்.
ஒரே குடும்பத்தில் இப்படியிருக்கும் போது ,எந்த மொழிக்காரராக இருந்தாலும்,எந்த நாட்டவராக இருந்தாலும் புரியக் கூடிய விதத்தில் உருவாக்கும் ஒரு கலையே சினிமா............அதை புரிய வைப்பதற்கு அதிகூடிய அவதானமும்,கரிசனையும் தேவை.
அந்த சினிமா மொழிக்கென்று ஒரு இலக்கணம் உண்டு.
ஒரு திரைப்படத்தை அல்லது ஒரு குறும்படத்தை உருவாக்க ஒருவர் முயலும் போது அந்த சினிமாவின் இலக்கணம் அவருக்கு சரிவரத் தெரியாது போனால் அவரால் ஒரு முழுமையான படைப்பைத் தருவது சிரமம்.
சினிமா பற்றிய இலக்கணத்தில் தேர்ச்சி பெற்ற, பல கலைகளை ஆட்சி செய்யும் தலைவனே இயக்குனர்.
இயக்குனரைத்
தவிர்த்து
திரைக்கதை எழுதுபவர்
ஒளிப்பதிவாளர்
தொகுப்பாளர்
ஆகியோருக்கும் நிச்சயம் இவ் இலக்கணம் பற்றிய பரந்த அறிவும் , ஆற்றலும் , கலைநயமும் அவசியம்.
சினிமாவில் உள்ள ஏனையோருக்கும் தேவைதான். அது பற்றிய முழு அறிவு மேலே குறிப்பிட்டவர்களுக்கு இல்லாவிடில் அவர்கள் செய்யும் படைப்பு முழு வெற்றியை தராது.
எனவே இது பற்றி தெரிந்து கொள்ள
Shots (ஷாட்ஸ்) [பகுதி]
எனும் பகுதியை முதலில் பார்க்கலாம்.
ஒரு திரைப்படத்தின் பல shots கள் சேர்ந்தோ,சில காட்சிகள் சேர்ந்தோ பல் வேறு பகுதிகளில் ஒளிப்பதிவு செய்யப்படும் ஒன்றை ஒரு sequuence ( சீக்வன்ஸ்) [நிகழ்வு] என்று கூறுகிறோம்.
அதாவது
பல (shots)ஷாட்ஸ்களின் கோர்வையை (scene) சீன் என்றும்,
சில அல்லது பல (scene)சீன்களின் கோர்வையை (sequuence)சீக்குவென்ஸ் என்றும்,
சில அல்லது பல(sequuence) சீக்குவென்ஸ்களின் கோர்வையை (film or movie or cinema)திரைப்படம் என்றும் சொல்கிறோம்.
[u]Shots (ஷாட்ஸ்) [பகுதி]

[quote]close-up shot (அண்மைப்பகுதி)

![[Image: leo-closeup.jpg]](http://images.google.ch/images?q=tbn:bKlTiwAWQ2kC:www.dicaprio.com/photos_and_movies/young/images/leo-closeup.jpg)
ஒரு கதாபாத்திரத்தின் அல்லது ஒரு பொருளின் அவதானத்தை உருவாக்க CU (closeup) எனும் ஷாட் பயன்படுத்தப்படுகிறது.
![[Image: self-closeup.jpg]](http://images.google.ch/images?q=tbn:2u4avzwf8gwC:windigo.org/self-closeup.jpg)
![[Image: cornish-closeup.gif]](http://images.google.ch/images?q=tbn:wLegqBjm13oC:ase.tufts.edu/cae/conference/cornish-closeup.gif)
உதாரணமாக ஒருவர் நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் போது,அவர் எமது பேச்சை கேட்காமல் எங்கோ அவதானத்தை செலவிடுகிறார் என்றோ, அல்லது அவரது எண்ணம், நிலையை அறிய முடிவதாகவோ (புரிவதாக) எண்ணுங்கள்.
அப்போது அதை அவரது கண்கள் அல்லது அவரது பதட்டம் அல்லது அவரது செய்கை நமக்குக் காட்டிக் கொடுக்கிறது.
அப்போது அந்தப் பகுதிக்கு நம்மை நமது புலன் நம்மை அறியாமலேயே இட்டுச் சென்று அவதானிக்க வைத்து விடுகிறது. அது சாதாரணமாக நமக்கு புரிவதில்லை.காரணம் நாம் அதற்கு பழக்கப்பட்டு விட்டோம்.
ஆனால் ஒரு சினிமாவில், பார்வையாளனுக்கு அப்படியான ஒரு நிகழ்வை உணர்த்துவதற்கு அந்த கதாபாத்திரத்தின் அண்மைப்பகுதியை காட்டினால்தான் புரியும்.

அதுபோலவே ஒரு மேசையில் அழகிய உணவுத் தட்டொன்று இருக்கிறதென்று நினையுங்கள்.அப்போதும் இதே CU (closeup) எனும் ஷாட் பயன்படுத்தப்படுகிறது.
![[Image: closeup.jpg]](http://images.google.ch/images?q=tbn:tqILc_gY4hUC:mcasco.com/images/closeup.jpg)
![[Image: doglip%252001%2520closeup.jpg]](http://images.google.ch/images?q=tbn:dZq_-eG1xtEC:www.mtwthailand.org/Thailand%2520Info/Photos/Animals/doglip%252001%2520closeup.jpg)
ஒரு மனிதருக்காக மட்டுமல்ல , எந்தவொரு அண்மைக் காட்சியில் எதாவது ஒன்றை பார்வையாளனுக்கு உணர்த்துவதற்கு CU (closeup) எனும் ஷாட் பயன்படுத்தப்படுகிறது.
இனி உங்கள் கற்பனையில் எதையெல்லாம் கனவு கண்டு செய்யலாம் என்று பாருங்கள்....................
கனவு தொழிற்சாலை பயணம் தொடரும்............அஜீவன்
(உங்களுக்கு புரியாத கேள்விளைத் தொடுக்கலாம்.எனக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வேன்.)

[size=12]திரைக்கலையை உலகுக்களித்த மேதைகளுக்கும்,என் திரை ஆசான்களுக்கும்,நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.
AJeevan
www.ajeevan.com