Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எமது பலவீனம்
#41
மதராசி, நீங்களும் என்னை மாதிரி ஆட்டுக்கை மாட்டைவிட்டு விடயத்தலப்பை திசை திருப்புறீங்கள்.... இருந்தாலும் நீங்கள் "கள விரக்தியில" "கள தனிமையில" இருந்து தப்பிக்க சில வழிகள், நீங்கள் ஏற்கனவே கவனிக்க தவறியிருந்தால்...

-1- சிரமம் பாக்காமல் எல்லா இடங்களிலும் குறைந்தபட்சம் முகபாவனையாவது போடுங்கோ. இதுவே உங்கள் கருத்துகளின் எண்ணிக்கையை நுறு ஆயிரம் எண்டு ஏத்திக் கொள்ளும வெகுவிரைவில்.

-2- உங்கள் கருத்துக்கள் றவுண்ட் நம்பர்களை தாண்டும் போது றவுண்டு கட்டி வாழ்த ஒரு தனித் தலைப்பே ஆரம்பிக்கப்படும். இதை நீங்கள் அரசியல்வாதிகள் மாதிரி சரியாக பயன்படுத்திற சாணக்கியம் இருக்க வேணும்.

-3- மிச்சத்துக் உங்களுக்கு ஜங்க் ஈமெயில் இல வாற நகச்சுவை படங்கள் எல்லாத்தையும் தவறாமல் கொண்டுவந்து போடுங்கோ

-4- கவிதை எண்டு எதாவது எழுத முயற்சியுங்கோ. ஏனெண்டால் தமிழரின் பண்பாடு கலாச்சாரத்தை பாத்தீங்கள் எண்டால் அவை கவிதையாலை சாதித்தது கொஞ்சனஞ்சமல்ல. மேலும் எங்கடை சமுதாயத்திற்கு இனத்திற்கு தேசியத்திற்கு மிகவும் அவசியமா இன்று தேவைப்படுறது கவிதைகளும் கவிகளும் பாருங்கோ.

-5- திரை நடிகர் நடிகை பற்றி வீணீர் சொட்ட எழுதுங்கோ. ஏலும் எண்டால் அவையின்ரை படங்களை போட்டு நாலு வரி ஓவ்வெண்டுக்கும் எழுதி உங்கடை கற்பனை வளத்தைக் காட்டுங்கோ. விசில் சத்தம் காதைக் கிழிக்கும். இங்கை இருக்கிற அரச குடும்பத்தினர் உங்களுக்கு சிறந்த படைப்பாளி எண்டு பாராட்டுவிழா நடத்துவினம்.

-6- நகச்சுவை ஜொள்ளு, லௌ;ளு என்று ஜனரஞ்சகமாக கூடிய மாதிரி கவரந்து எழுதுங்கோ. ஏன் எண்டால் இஞ்ச வாறவை செரியான பிசி லைப் நடத்திறவை. யாழ்களத்தில அவை செலவிடிற நேரம் தான் அவர்கள் அந்தநாளில் கொஞ்சம் இளைப்பாற முயற்சிக்கிற நேரம். மிச்ச நேரம் எல்லாம் கைலி புறெடக்ரிவாக ஏபிசன்ராக செலவிடுறவை.

பிறகு பாருங்கோ நீங்கள் வேறை பமிலியில மெம்பர்சிப் தேடத் தேவையில்லை. உங்களுக்கு எண்டு தனித்துவமான டினஸ்டியே உருவாக்கலாம். அப்படி உருவாக்கி நல்லா இருக்கேக்கை என்னை மறந்திடாதேங்கோ.
Reply
#42
kuruvikal Wrote:ஒரு கதைக்கு... இத்தனை மார்ச்சியம்...சோசலிசம்...முதலாளித்துவம்..அரசியல் விஞ்ஞானம்.. தீவிர இலக்கியம்... எல்லாம் அறிஞ்சவை இவ்வளவு காலமும் சாதித்தது என்ன..???! தங்கடை பெயரில் பட்டத்தை வைச்சிட்டு பொம்பிளை தேடினதும் வெளிநாடு போனதும்.. தான்...! இவற்றை அறியாத ஒரு பிரபாகரன் தான் மக்கள் புரட்சிக்கு வழிவகுத்திருக்கிறான்..! இப்ப களத்தில எதுக்கு அவை...???! புலத்தில சோசலித தனிநாடு கோரவா...???! இல்ல தாயகத்தில சோசலிச புரட்சி நடத்தவா...???! இல்லை...புலத்தில் மோர்கேஜ் கிரடிட் காட் சலுகைகள் கடன்களைத் தகர்த்து சம உடமைக்குள் மக்களை வாழ வைச்சிடவா...??! ஏன் வெறுவாய் மெல்ல நேரத்தை செலவிடனும்...??! அப்படிப் படிச்ச மனிசரில் எத்தினை பேர் கொள்கை வகுப்பில ஈடுப்பட்டிருக்கிறியள்...??! எங்காவது அரசாங்கங்களில் மிளிந்திருக்கிறியள்...செய்ததெல்லாம்..துரோகத்தனமே தவிர வேறில்லை...!

எது காலத்துக்கு தேவையோ அதைத் தேடுங்கோ..! தேடல் என்று பழசைக் கிளறி...அதுக்குள்ள நீங்கள் புதிசா வேறுபடுறியள் என்று காட்டி பெருமை பேசாதேங்கோ...எதை சமூகம் எதிர்பார்க்குதோ..அதைத் தேடுங்கோ கொடுங்கோ...பிரயோசனமா இருக்கும்...!

தென்னிந்திய சினிமா வேண்டாம் என்றா...உங்களால ஒரு வலுவான.. தென்னிந்திய சினிமாத் தன்மைகளில் இருந்து மாறுபட்ட ஒரு சினிமாவை நிலைநாட்ட முடியுமா...முடிஞ்சா அதைச் செய்யுங்கோ...சும்மா வெறுமனவே... சினிமா அவசியமா என்று கேட்டு நாலு பக்கத்துக்கு புரட்சி சீர்திருத்தம் பேசி பயன் எதுவுமில்லை..! மக்களுக்கு பொழுதுபோக்க எது இலகுவா மலிவா கிடைக்குதோ அதைத்தான் அவர்கள் நாடுவர்கள்...! நீங்க அறிவாளிகள் புரட்சிவாதிகள் என்றால் செய்துகாட்டுங்கோ...சொல்லில முழங்க வேண்டாம்..! செய்யமுடியல்லையோ... கம்முண்ணு இருங்கோ..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
அன்ரன் பாலசிங்கம் பிரபாகரனுக்கு என்ன அறிவுரை கொடுக்கின்றார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் மார்க்கசியத்தை நன்றாகக் கற்றுத் தேர்ந்தவர் என்பது மட்டும் புரியும். ஒருவனுடைய சிந்தனை முறையை மார்க்கசியமோ, வேறெதுவோ மாற்றி அது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றால் அதனைத் தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை.

சினிமா தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கின்றது. தமிழ் நாட்டில் பலர் சினிமா மோகம் கொண்டபடியால்தான், கொள்கைகள் எதுவுமற்ற நடிகர்கள் அரசியலில் முன்னுக்கு வரமுடிந்தது. புலத்தில் வாழும் தமிழரும், தாயகத் தமிழரும் இந்த மாயைக்குள் கொஞ்ஞ்சமாக விழுந்து கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தில் எங்கே போவார்கள் என்பதை தமிழ்நாட்டைப் பார்த்தும் புரியாத முட்டாள்களாக நாங்கள் இருக்கிவேண்டுமென்றால் கம்முனு இருந்திட்டுப் போகின்றோம்.
<b> . .</b>
Reply
#43
அன்ரன் என்ன கொடுக்கிறாரோ தெரியாது என்பதிலும்...அன்ரன் மார்க்கிச்சியமே என்று கொண்டு திரியல்ல...சர்வதேச அரசியல் சூழலுக்கு ஏற்ப அவர்களும் கொள்கை மாற்றங்கள் தளர்வுகளைச் செய்யினம்..அது அவசியம்...! அதுதான் இங்கும் தேவை...! அதைத்தான் மோகன் அண்ணாவும் களத்தில் செய்திருக்கிறார்..! முந்திக் களம் இறுக்கமா இருந்தது..இப்ப தளர்ந்திருக்கு...பலரையும் உள்வாங்க..! தளர்த்திட்டு மட்டுறுத்தினர்களை வலுவாக்கி கண்காணிக்க வைச்சிருக்கிறார்..! யாழினி தன்ர கடமையை செய்யுறா...! சட்டத்துக்கு முன் சகலரும் சமன்..! அதையேன் எதிர்க்கினம் எண்டதுதான் புரியல்ல...!

இதே சினிமாவும் இதே தமிழ்நாடும் அதே அரசியலும் பக்கத்தில் இருக்கும் போதுதான்..ஏன் அதற்குள் இருந்துதான் எத்தனையோ இளைஞர்களும் யுவதிகளும் ஈழத்தில் புரட்சிக்குப் புறப்பட்டனர்...! நீங்கள் இப்போ சினிமாவுக்காக கவலைப்படுவதிலும்...சினிமாவைப் பிரதியீடு செய்ய உங்களால முயன்ற படைப்புகளால் ஏதாவது செய்யுங்கோ...இல்ல கம்முண்ணு இருக்கிறதே நல்லம்...! தொந்தரவில்ல...மக்களுக்கு..! மக்களில் பெரும்பாலானோர் உங்களிலும் தெளிவா இருக்கினம்..! பார்க்கினம் பொழுதுபோக்கோட விட்டிருக்கினம்...! அதைக் காவிற அளவில ஈழத்தமிழர்கள் இல்லை..! ஒரு சில குழுக்களைத் தவிர...! அவையும் காலப் போக்கில திருந்திடுவினம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
kuruvikal Wrote:ஐரோப்பா வந்து கற்றனியள்..ஏன் அங்க <b>இலவசமா</b> சிங்களம் படிக்க மாட்டன் என்று ஒத்தக்காலில நிண்டனியள்..! ஏன்னா சிங்களவன் இழிச்ச வாயன் வாயால பேய்க்காட்டாலமாம் என்று தெரியும்..! ஐரோப்பாவில அது நடக்காது..! மொழி தெரியாட்டி ஊமைப் பாசைல எத்தின காலத்துக்கு காலம் தள்ளுவியள்...அதுதான் படிச்சியள்...இல்ல நீங்களாவது படிக்கிறதாவது புதிய மொழிகள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

முட்டாள்தனமாக எழுதுவதற்கு குருவிகளை விட்டால் யாருமில்லை என்று எல்லோருக்குமே நன்றாகப் புரியும்.

சிறிலங்காவில் மூன்று மொழிகள் பாவனையிலிருந்தால், மூன்று மொழிகளுக்கும் சம அந்தஸ்த்து இருந்திருக்கவேண்டும். சிங்களத்திற்கு முன்னுரிமை கொடுத்தபோது, தமிழர்கள் படிக்க மாட்டோம் என்றது, தமது மொழியுரிமையைப் பாதுகாக்கவே அன்றி சிங்களம் படிப்பது கடினம் என்பதால் அல்ல. ஐரோப்பாவில் புலம் பெயர்ந்து வந்தபின் இங்கும் எமது மொழிக்கு சமயுரிமை வேண்டும் என்பது முட்டாள்தனமாக இருந்திருக்கும். பிற நாட்டில் பிற மொழியையும் சொந்த நாட்டில் தாய் மொழியையும் நாங்கள் பாவிக்க வேண்டும். சொந்த நாட்டில் அந்நிய மொழியைப் பாவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால்தான் போராட்டம் வெடித்தது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. பாலபாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கின்றேன்.
<b> . .</b>
Reply
#45
kurukaalapoovan Wrote:கிருபன் நீர் ஏன் புளொக்ஸ் இல தனிக்குடித்தனத்துக் போனனீர் எண்டு எழுதும். வாசிக்க ஆவலாக உள்ளேன்.

என்னுடைய சொந்த அனுபவங்களை எழுதத்தான் தனிக்குடில் தொடங்கினேன். இன்னும் சரியாக ஆரம்பிக்கவில்லை. எனது உளறல்களை விரைவில் வெளியிடுகின்றேன். ஒரேயொரு ஆறுதல், யாராவது பிடிக்காதமாதிரி பின்னூட்டம் விட்டால் வெட்டிவிட என்னிடம் அதிகாரம் உள்ளது. :wink:
<b> . .</b>
Reply
#46
kirubans Wrote:
kuruvikal Wrote:ஐரோப்பா வந்து கற்றனியள்..ஏன் அங்க <b>இலவசமா</b> சிங்களம் படிக்க மாட்டன் என்று ஒத்தக்காலில நிண்டனியள்..! ஏன்னா சிங்களவன் இழிச்ச வாயன் வாயால பேய்க்காட்டாலமாம் என்று தெரியும்..! ஐரோப்பாவில அது நடக்காது..! மொழி தெரியாட்டி ஊமைப் பாசைல எத்தின காலத்துக்கு காலம் தள்ளுவியள்...அதுதான் படிச்சியள்...இல்ல நீங்களாவது படிக்கிறதாவது புதிய மொழிகள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

முட்டாள்தனமாக எழுதுவதற்கு குருவிகளை விட்டால் யாருமில்லை என்று எல்லோருக்குமே நன்றாகப் புரியும்.

சிறிலங்காவில் மூன்று மொழிகள் பாவனையிலிருந்தால், மூன்று மொழிகளுக்கும் சம அந்தஸ்த்து இருந்திருக்கவேண்டும். சிங்களத்திற்கு முன்னுரிமை கொடுத்தபோது, தமிழர்கள் படிக்க மாட்டோம் என்றது, தமது மொழியுரிமையைப் பாதுகாக்கவே அன்றி சிங்களம் படிப்பது கடினம் என்பதால் அல்ல. ஐரோப்பாவில் புலம் பெயர்ந்து வந்தபின் இங்கும் எமது மொழிக்கு சமயுரிமை வேண்டும் என்பது முட்டாள்தனமாக இருந்திருக்கும். பிற நாட்டில் பிற மொழியையும் சொந்த நாட்டில் தாய் மொழியையும் நாங்கள் பாவிக்க வேண்டும். சொந்த நாட்டில் அந்நிய மொழியைப் பாவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால்தான் போராட்டம் வெடித்தது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. பாலபாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கின்றேன்.

நீங்கள் சொல்லுறதெல்லாம் ரெம்ப வேடிக்கையா இருக்கு... தனிச்சிங்களச் சட்டம் வரமுதல் சிங்களத்தை தமிழரும் சிங்களவர் தமிழும் படிக்கிறது நல்லம்...உத்தியோகத்துக்கு உதவும் என்றுதான் இருந்தது..! இப்ப நீங்கள் ஐரோப்பாவில பிரஞ்சு பேசிற இடத்தில இருக்க பிரஞ்சு படிக்கிறாப் போல..உங்கட தமிழீழத்துக்கு வெளியில வேலை செய்ய சிங்களம் படிக்கச் சொன்னது...அதுக்கு உங்களுக்கு ரோசம் வந்திட்டு...இப்ப அகதியானதும் அந்த ரோசம் எங்கையோ ஓடிட்டு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
பிடிக்கவில்லை என்று இன்னெருவர் பின்னூட்டம் தருவது வரவேற்கவேண்டிய விடயம். அது சார்ந்த கருத்துப்பரிமாற்றம் எமது தவறை உணரவைக்க சந்தர்ப்பம் தருகிறது. திருந்திப்பயனடையப்போவது நாம் அல்லவோ?

இங்கு கிடைத்த அனுபவம் உங்களை தனிக்குடிலுக்கு தூண்டவில்லையா?
Reply
#48
தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற திரைப்படங்களால் புலத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதகமும் உண்டு சாதகமும் உண்டு என்பதனை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் புலத்துத் தமிழன் தனக்கான படைப்புக்களை உருவாக்கி அவை எளிதில் புலத்து தமிழனிடம் சென்றடய செய்வதில்த்தான் அவன் தனது எதிர் காலத்தினை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதாவது அந்தந்த சூழலை புரிந்தவாரால்த்தான் அந்தந்த சூழலில் வாழும் மக்களின் உணர்வுகளை புரிந்து படைப்புக்களை கொடுக்க முடியும். எனவே நாம் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில்..

இருவிழி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#49
தனிச் சிங்களச் சட்டம் வரமுதல் தமிழர் சிங்களம் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை.

ஆங்கில மொழி அரசகரும மொழியாக இருந்ததாலும், அதில் தமிழர் தேர்ச்சி பெற்றிருந்ததாலும் தமிழர் நடுச் சிங்கள ஊருக்குள் அதிகாரம் செலுத்தும் உத்தியோகத்தர்களாகத்தான் இருந்தார்கள். எந்த ஒரு சிங்கள ஊரிலும் ஒரு தமிழனாவது அதிகாரம் உள்ள பதவியில் இருந்தான். சிங்களம் படித்தது சிங்களவருடன் உரையாடவும், அவர்களின் தேவையை அறிந்து கொள்ளவும் உதவியதொழிய சிங்களத்தில் எழுத அல்ல.

இது பொறுக்கமுடியாமல்தான் பண்டாரநாயக்கா சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
<b> . .</b>
Reply
#50
kirubans Wrote:தனிச் சிங்களச் சட்டம் வரமுதல் தமிழர் சிங்களம் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை.

ஆங்கில மொழி அரசகரும மொழியாக இருந்ததாலும், அதில் தமிழர் தேர்ச்சி பெற்றிருந்ததாலும் தமிழர் நடுச் சிங்கள ஊருக்குள் அதிகாரம் செலுத்தும் உத்தியோகத்தர்களாகத்தான் இருந்தார்கள். எந்த ஒரு சிங்கள ஊரிலும் ஒரு தமிழனாவது அதிகாரம் உள்ள பதவியில் இருந்தான். சிங்களம் படித்தது சிங்களவருடன் உரையாடவும், அவர்களின் தேவையை அறிந்து கொள்ளவும் உதவியதொழிய சிங்களத்தில் எழுத அல்ல.

இது பொறுக்கமுடியாமல்தான் பண்டாரநாயக்கா சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
ம்ம்ம் தெரியாத பல விடயங்கள் வெளியில்வருகின்றன.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#51
kurukaalapoovan Wrote:பிடிக்கவில்லை என்று இன்னெருவர் பின்னூட்டம் தருவது வரவேற்கவேண்டிய விடயம். அது சார்ந்த கருத்துப்பரிமாற்றம் எமது தவறை உணரவைக்க சந்தர்ப்பம் தருகிறது. திருந்திப்பயனடையப்போவது நாம் அல்லவோ?

இங்கு கிடைத்த அனுபவம் உங்களை தனிக்குடிலுக்கு தூண்டவில்லையா?

ப்ளொக் என்பது என்னைப் பொறுத்தவரை எனது டயறி மாதிரி. எனது எண்ணங்களையும், சிந்தனைகளையும் மற்றவர்கள் பார்வைக்கு வைக்கின்றேன். கருத்துக்கள் வந்தால் அவற்றை உள்வாங்குவதும் புறக்கணிப்பதும் என்னையே சார்ந்திருக்கும்.

யாழ் களத்தில் பல விதிகள் உள்ளன, அவற்றிற்கு கட்டுப்பட்டே எழுத வேண்டியுள்ளது. இத்தகைய பிரச்சினை எனது சொந்தப் புளக்கில் வராது.
<b> . .</b>
Reply
#52
உங்க.. புளொக் அட்ரஸ் என்னங்க?
Reply
#53
http://kirubans.blogspot.com/
புதிதாக எதுவும் எழுதவில்லை. இரண்டு கட்டுரைகளை தயார் செய்து கொண்டிருக்கின்றேன். எப்படியும் இவ்வருட முடிவுக்குள் சிலவற்றையாவது பதித்துவிடுகின்றேன்.
<b> . .</b>
Reply
#54
Forum களுக்குள் சற்றுத் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தவர்களுக்கான அடுத்த பாய்ச்சல் அல்லது படி தான் புளொக்குகள் என்கிறார்கள். சரிதான் போலிருக்கிறது. உங்கள் புளொக் பார்த்தேன்.. தமிழ் மணத்தில் இணைத்தாயிற்றா.. பட்டியல் இடும் வசதியையும் சேர்த்து விடுங்கள்..
Reply
#55
kirubans Wrote:தனிச் சிங்களச் சட்டம் வரமுதல் தமிழர் சிங்களம் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை.

ஆங்கில மொழி அரசகரும மொழியாக இருந்ததாலும், அதில் தமிழர் தேர்ச்சி பெற்றிருந்ததாலும் தமிழர் நடுச் சிங்கள ஊருக்குள் அதிகாரம் செலுத்தும் உத்தியோகத்தர்களாகத்தான் இருந்தார்கள். எந்த ஒரு சிங்கள ஊரிலும் ஒரு தமிழனாவது அதிகாரம் உள்ள பதவியில் இருந்தான். சிங்களம் படித்தது சிங்களவருடன் உரையாடவும், அவர்களின் தேவையை அறிந்து கொள்ளவும் உதவியதொழிய சிங்களத்தில் எழுத அல்ல.

இது பொறுக்கமுடியாமல்தான் பண்டாரநாயக்கா சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

கட்டாயம் என்று சொல்லவில்லையே... தொழில்சார் தேவைக்கு படிக்கச் சொன்னது...நல்லம் என்று..! ஏன் சிங்களவர்களும் உயர் பதவிகளில் வடக்கு கிழக்கில் இருந்தவை தானே..! யாழ்ப்பாணத்து அரசாங்க அதிபராக கூட சிங்களவர்கள் இருந்திருக்கினம்...! அப்ப...பண்டாரநாயகாவுக்கு அதுகளும் எரிச்சலா...??! பழைய காலத்தில சிங்களவர்கள் தமிழர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்தனர்...என்றும் சொல்கிறார்கள்..! தமிழர்களின் வியாபாரம் கொடிகட்ட சிங்களவர்களே உதவிதாகவும் அறிஞ்சிருக்கிறம்..! வெள்ளைக்காரையும் தமிழரையும் விட ஒற்றுமையா..சிங்களவர்கள் இருந்திருக்கினம்..! அப்ப ஏன் சிங்களம் படிக்கன் எண்டியள்..! சிங்களவர்களும் தமிழ் படிச்சவைதானே..! சந்திரிக்கா காலத்து முன்னாள் சபாநாயகர் ஒருவர் ஹாட்லிக் கல்லூரியில் படிச்சது என்று பேட்டியில் சொல்லக் கேட்டது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
கிருபன்.. ஒன்று சொன்னால் தப்பா நினைக்க கூடாது. உங்களுக்கு வேறு உருப்படியான வேலைகள் இருந்தால் பார்க்கலாமே.. சில விதண்டா வாதங்களுடன் நேரத்தை இழக்காதீர்கள். எதிர்த்தே தீருவது என்ற முன் முடிவுடன் வருபவர்கள் முட்டாள்கள் அல்ல. அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் தான் முழு முட்டாள்கள் என நான் நினைக்கின்றேன்..
Reply
#57
இவோன் Wrote:கிருபன்.. ஒன்று சொன்னால் தப்பா நினைக்க கூடாது. உங்களுக்கு வேறு உருப்படியான வேலைகள் இருந்தால் பார்க்கலாமே.. சில விதண்டா வாதங்களுடன் நேரத்தை இழக்காதீர்கள். எதிர்த்தே தீருவது என்ற முன் முடிவுடன் வருபவர்கள் முட்டாள்கள் அல்ல. அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் தான் முழு முட்டாள்கள் என நான் நினைக்கின்றேன்..

விளங்குதில்லா...எனியாவது...கண்டதையும் எதிர்க்கும் போக்கை கடைப்பிடிக்காமல்... ஆக்கபூர்வமாக சிநேகிதபூர்வமாக மட்டுறுத்தினர்கள் மட்டுமன்றி அனைவருடனும் கொழுவித் த்ரியாமல்...உருப்படியா களத்தில எழுதி நில்லுங்கோ..! எதிர்க்க நினனச்சா எதிர்த்துக் கொண்டே போகலாம்...! அது பெரிய விசயமில்லை...! ஆனா உருப்படியா ஏதாச்சும் வரணும்...அதுதான் தேவை...! மற்றவர்களின் ரசனைக்குள் திணிக்க நில்லாதேங்கோ..அவரவர் தங்கள் பாதையில் தங்கள் விருப்பத்தில் பயணிக்க விடுங்கோ...! அதுகளைத் தடுக்காதேங்கோ..அதே நேரம் உங்கள் கருத்துக்களையும் குழப்பம் இல்லாமல் முன்வையுங்கோ...அதுதான் எதிர்பார்க்கப்படுவது...! கள உறுப்பினர்களை சாடுவது அவசியமற்றது...! களத்தைச் சாடுவது அவசியமற்றது...! உங்களில் உள்ள தவறுகளை உணர முனையுங்கோ...திருத்த முனையுங்கோ..சமூகமும் திருத்தி திருந்திக் கொள்ளும்..!

நன்றியுங்கோ..! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
narathar Wrote:தமிழினி,

<b>நான் உங்களை வெளியேற்றவோ அல்லது பல உறுபினர்களை வெளியேற்றவோ எங்கே சொன்னேன்.</b> நீங்கள் பெண் என்பதால் இப்படி எழுதுகிறேன் என்றும் ,பொய்யுரைகளைக் கூறி அனுதாபம் தேட முயல வேண்டாம்.

நீங்கள் உங்களுக்கு இருக்கும் மட்டுறுத்தினருக்கான அதிகாரங்களை நடு நிலை அற்று தேர்ந்தெடுத்து பாவிக்கிறீர்கள் என்பதுவும்,<b>இக் கட்டான தருணங்களில் சாதாரண உறுபினராக வந்து பிறரை உங்கள் கருத்துக்கு ஆதரவாக எழுதவும் சொல்லி உள்ளீர்கள்</b>.இதை நிராகரித்தும் மற்றவற்றையும் நான் சும்மா விளயாட்டகக் கூறினேன் என்றும் நீங்கள் வாதிடலாம். ஆனால் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் காட்டிய மேற்கோள்களுக்கு நீங்கள் அழித்த விளக்கம் நேர்மயானது என்பதையும் , நீங்கள் யாழினி அல்ல என்பதையும் ஏற்றுக் கொண்டு, மேலும் உங்கள் நடு நிலமை,கருத்தாடல் நேர்மை ஆகிய வற்றை மெச்சி ,இதனை மேலும் வளர்க்க விரும்பாமல் முடித்துக் கொள்கிறேன். நன்றி.

நாரதர் இன்னொரு தலைப்பில் உறுப்பினர் வெளியேற்றம்பற்றிப்பேசியிருந்தோம். தேவையில்லாத கருத்தில் நான் பேசியதை நீங்கள் இணைத்ததைக்கொண்டு வேறை எதை நான் எண்ண முடியும்..?? இதில் அனுதாபம் தேட என்ன இருக்கிறது. இனி பெண் பெயரில் வரும் மட்டுறுத்தினர்களுக்கு தகவல் கொடுத்தேன். அதுவும் சமகால நடவடிக்கைகளில் இருந்து என் எண்ணத்தின் வெளிப்பாடு தான் அது.

உங்களுக்கு முக்கியவிடயம்?? மற்றப்பெயர்களில் இருக்கும் மட்டுறுத்தினர்கள் யார் என்று அறிவதா?? ஏன் கள உறுப்பினர் பெயர்களை மட்டுறுத்தினர்களுடன் இணைத்துப்பேசுகிறீர்கள். நான் கருத்து வைத்தால் என் கருத்து பற்றி கருத்து வைத்தால் போதும் என்று நினைக்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில் யாரை எழுதச்சொன்னேன் ஆதரவாக குழப்பமாய் உள்ளது. கருத்தாடல்களின் போது எனது கருத்தை மட்டும் வைத்தேன். ஆதரவாக எழுதச்சொல்லி யாரையும் கேக்கவில்லை அதற்குரிய தேவை எனக்கில்லை நாரதர். மற்றவர்களது ஆதரவை எதிர்பார்த்து கருத்து நான் வைப்பதில்லை. வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு என்னோடு நட்புடன் கருத்தாடும் அனேகர் இப்படிப்பட்ட கருத்தாடல்களில் கலந்து கொள்வது கிடையாது. எனது கருத்தில் நான் சரியாய் உறுதியாய் இருந்தால் எதற்கு ஆதரவு?? . நாரதர் எனது தனிப்பட்ட நான் வைத்த கருத்துக்களை வேண்டும் என்றால் உங்களால் முடிந்தால் திரும்பி பாருங்கள் நான் வைத்த கருத்துக்களில் நூற்றுக்கு 90 வீதமானவை நகைச்சுவை சம்பந்தமானவையே. ஒரு வேளை நான் வைக்கும் நகைச்சுவை தொடர்பான கருத்துக்களை நகைச்சுவையாக உங்களுக்கு தெரியாமல் விட்டிருக்கலாம். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் இங்கு கருத்தாட ஆரம்பித்ததில் இருந்து கள உறுப்பினர்களுடன் நட்புடனான நகைச்சுவையோடு கருத்துக்கள் வைப்பது வழமை. முந்தி நீண்ட நேரங்கள் களத்தில் நிக்க கூடியதாய் கிடந்தது. ஒவ்வொரு தனி தலைப்பிற்கும் பதில் எழுதியிருப்பேன். அதில் அநேகம் நகைச்சுவையே. பலதடவை எங்கள் கருத்துக்கள் அரட்டைக்கு நகர்த்தி அரட்டையைக்குறைக்க்சொல்லி கூறியும் இருக்கிறார்கள். நீங்கள் அந்தக்கருத்துக்களை மிரட்டல் வெருட்டல் என்று எடுத்தால் நான் என்ன செய்ய முடியும். நீங்கள் சுட்டிக்காட்டிய எனது கருத்தை நகைச்சுவைக்கு சொன்னேன் என்று சும்மா சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கண்டிப்பாக அதை நகைச்சுவையாகவே வைத்தேன். மேலதிகமாய் தெரியவேண்டுமானால் அந்த தலைப்பின் கீழ் நடந்த உரையாடல்களையும் நான் வைத்த கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பாருங்கள். அந்த தலைப்பு தெரிந்து தானே வெட்டி ஒட்டினீர்கள். சுட்டிக்காட்டத்தேவையில்லை என்று நினைக்கிறேன். யாருடனும் தேவையற்று வாக்குவாதப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை என்னைக்குறிப்பிட்டு எழுதியதால் தான் இந்தனை பதிலும் தனிப்பட தந்தேன். எனது கருத்துக்களுக்கு நீங்களாக ஏதாவது அர்த்தம் கண்டு பிடித்து இப்படி கருத்துக்கள் வருதவற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அப்படி எனது கருத்தில் பிழை கண்டால் உடனே சுட்டிக்காட்டுங்கள். அதை விட்டிட்டு தேவையற்ற இடங்களில் எனது கருத்தை வைத்து கதைப்பதில் அர்த்தம் என்ன . Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#59
Quote:அவரவர் தங்கள் பாதையில் தங்கள் விருப்பத்தில் பயணிக்க விடுங்கோ...! அதுகளைத் தடுக்காதேங்கோ..

ஆனால்.. அப்பிடி பயணிக்கும் போது.. இது தமிழ்க்கலாசாரத்துக்கு ஏற்றதா..? பெண் நண்பிகளுக்கு ஏற்றதா..? தங்கச்சிக்கு ஏற்றதா என்றெல்லாம் பார்க்க தானே வேணும்..
Reply
#60
இவோன் Wrote:
Quote:அவரவர் தங்கள் பாதையில் தங்கள் விருப்பத்தில் பயணிக்க விடுங்கோ...! அதுகளைத் தடுக்காதேங்கோ..

ஆனால்.. அப்பிடி பயணிக்கும் போது.. இது தமிழ்க்கலாசாரத்துக்கு ஏற்றதா..? பெண் நண்பிகளுக்கு ஏற்றதா..? தங்கச்சிக்கு ஏற்றதா என்றெல்லாம் பார்க்க தானே வேணும்..

உங்களுக்கும் அப்படி கலாசாரம்... பெண் நண்பிகள்.. ஆண் நண்பர்கள்..அக்காகள் தங்கசிகள் அண்ணாக்கள் தம்பிகள் இருந்தால் பார்க்கலாம்..அதில் தவறில்லை..! இல்லாட்டி ஒரு ஒதுக்குப்புறம் இருக்கெல்லா..தீவிரமான ஆக்களுக்கு...அங்க ஒதுங்கி எழுதிக்கிறது...தான் நல்லது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)