Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
India builds first (stealth) warship
#1
India builds first warship
-----------------------

Sunday, October 30, 2005 (Mumbai):


Taking first strides towards complete indigenisation of India's defence armoury, the Garden Reach Shipbuilders and Engineers (GRSE) Kolkata have begun building country's first completely indigenous warship.

"On August 12 Defence Secretary Shekhar Dutt cut the steel, thus paving way for the construction of the country's first indigenously built anti-submarine warship with stealth technology," GRSE Chairman and Managing Director Rear Admiral (retd) T S Ganeshan said.

It is a 25,000 tonne corvette armed with stealth-mounted guns, the latest electronic warfare suite which, together with other key operational equipment, is shielded using stealth technology incorporated into the design of the bulwarks.

More orders likely

Other signature management control features are built in to combat the ship's infrared, radar-cross signature, noise and magnetic outputs.

Electricity is supplied via four diesel generators; two independent interconnected switchboards optimise redundancy and reliability.

The cost has not yet been ascertained but GRSE aims to deliver the corvette to Navy by first half of 2009.

It is also expecting more orders from the Navy, "which would materialise in a month's time," he said.

Analysing queries

GRSE is executing orders valuing Rs 5000 crore. Last week, it presented a dividend of 40 per cent to the Defence Minister, he said.

Now the foreign navies are approaching the yard with their orders. Enquiries for frigates and Fast Attack Craft are coming from Sri Lanka, ASEAN members and few African countries.

"We are analysing their queries regarding how to meet the orders. We want to work on it. After completing our analysis, we have to bid for it in the global market and get the order," Ganeshan said.

According to Admiral Superintendent Naval Dockyard Rear Admiral B K Kaul, this is the first step towards the Navy's goal of attaining complete indigenisation within next 15 years.
(PTI)

http://www.ndtv.com/morenews/showmorestory...arship&id=80706
Reply
#2
<span style='font-size:30pt;line-height:100%'>வாழ்க பாரத மாதா</span>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
பாரத மாதா எப்ப ஆயுதம் தூக்கினாவோ...அப்பவே பாரதம் அதிரத்தொடங்கிட்டு...! அதன் தொடர்ச்சிதான் டெல்லி அதிர்வுகள்..!

அப்பாவி மக்களை காப்பாற்றத் தெரியாத பாரத மாதா எதுக்கு..அவாக்கு ஏன் வாழ்த்துக் கோசம்..கண்ணீரோடு வாழும் மக்களுக்கு பாரத மாதா செய்ததென்ன...???!

டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் கண்ணீ அஞ்சலிகள்..! அணு குண்டுகளையும் அடுக்கி அடுக்கி ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு... இன்னும் காந்திய முகமூடி எதுக்கு...காஷ்மீர் ஆக்கிரமிப்பில் இருந்து பாரத மாதா வெளியேற வேண்டும்..காஷ்மீரிய மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்..அதுவரை ஆயுதப் பெருக்கங்களுக்கும் இப்படியான கோரச் சம்பவங்களுக்கு பாரத மாதாவே பொறுப்பு..! :evil: Idea

இந்து சமுத்திர பிராந்தியத்தின் மூன்றாவது வலுவான கடற்படை தமிழர் படை...கடற்புலிகள்...! - பேராசிரியர் சூரிய நாராயணன் - பாரத இராணுவ கொள்கை வகுப்பாளர்..! :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
தகவலுக்கு நன்றி

Reply
#5
[quote="kuruvikal"]...காஷ்மீர் ஆக்கிரமிப்பில் இருந்து பாரத மாதா வெளியேற வேண்டும்..காஷ்மீரிய மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்..அதுவரை ஆயுதப் பெருக்கங்களுக்கும் இப்படியான கோரச் சம்பவங்களுக்கு பாரத மாதாவே பொறுப்பு..! :evil: Idea

quote]

பள்ளியில் படிக்கும் பொழுது இந்திய வரைபடம் மிக அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் தலைப்பகுதி தான் என்று நினைப்பேன். மிக அழகாக நெளிந்து செல்லும் அந்த வரைபடத்தில் இருக்கும் அழகான காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால் அந்த அழகிய தலைப்பகுதியில் பெரும் பகுதி உண்மையில் நம்மிடம் இல்லை, வரைபடத்தில் மட்டும் அந்த பகுதியை சேர்த்து கொண்டு உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்த பொழுது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

நம் இந்திய வரைபடத்தின் தலைப்பகுதியில் ஒரு பகுதி பாக்கிஸ்தானிடமும், மற்றொரு பகுதி சீனாவிடமும் இருக்க எஞ்சிய காஷ்மீர் சர்சைக்குரிய பகுதியாக இந்தியாவிடம் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் நடக்கும் சண்டையில் அந்தப் பகுதி ரத்த பூமியாக மாறி அடக்குமுறை, விசாரணைகள், மனித உரிமை மீறல்கள் இவற்றுக்கிடையே காஷ்மீர் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவும், பாக்கிஸ்தானும் கிரிக்கெட் விளையாடி தங்கள் நல்லுறவை மேம்படுத்த நினைக்க இந்த இரு நாடுகளின் உறவில் பகடை காய்களாக இருப்பது காஷ்மீர் மக்கள் தான். அவர்களின் கோரிக்கை தான் என்ன ? அவர்கள் இந்தியாவுடன் இருக்க நினைக்கிறார்களா, பாக்கிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா அல்லது சுதந்திர காஷ்மீர் வேண்டும் என்று நினைக்கிறார்களா ?

இது பற்றி யாருக்கும் கவலையில்லை. தில்லியில் இருந்து கொண்டு நாம் காஷ்மீர் எங்களுடையது என்றும், லாகூரில் இருந்து அவர்கள் காஷ்மீர் அவர்களுடையது என்றும் கூறிக் கொண்டிருக்கிறோம். நாம் காஷ்மீர் இந்தியாவை விட்டு பிரிவதை விரும்பவில்லை. பாக்கிஸ்தானும் காஷ்மீர் சுதந்திரம் அடைவதை விரும்பவில்லை. தன் நாட்டின் ஒரு பகுதியாகத் தான் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.

நம்மிடம் உள்ள காஷ்மீரே சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்க பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் எங்களுடையது தான் அதனை கைப்பற்றியே தீருவோம் என்ற வீரவசனத்தை சங்பரிவார் கும்பல் வீரதுறவிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையில் சாத்தியம் இல்லாதது.

உண்மையில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது தானா ? இது பற்றி படிக்க தொடங்கிய பொழுது காஷ்மீர் பிரச்சனையை இந்தியா கையாண்ட விதம், ஒரு இந்தியனான என்னாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. சுருக்கமாக கூறினால் காஷ்மீர் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவின் பிடியில் சிக்கிக் கொண்டது என்பது தான் உண்மை. இந்தப் பிரச்சனையின் உண்மை நிலையை இந்தியா அரசு இயந்திரமும், ஊடகங்களும் மூடி மறைக்கவே நினைக்கின்றன. பொய்ச் செய்திகளும் திட்டமிட்டு பரப்ப படுகின்றன.

1947ல் இந்தியா விடுதலையான பொழுது இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளுடன் சேராமல் காஷ்மீர் தனி நாடாக இருந்தது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஹிந்து. ஆனால் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம். அதனால் தனி நாடாக இருப்பது அவருக்கு வசதியாக இருந்தது. பிரச்சனையும் இல்லை. காஷ்மீர் மற்றும் பாக்கிஸ்தான் இடையேயான சாலைகள், வர்த்தகம் போன்றவற்றை இருக்கும் நிலையில் அப்படியே பராமரிக்க பாக்கிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார் (standstill agreement ). ஆனால் இந்தியாவுடன் அவர் இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வில்லை.

இந்தியா காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள நினைத்தது. அதனால் இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாக்கிஸ்தானின் பஸ்தூன் பழங்குடிகள் காஷ்மீர் மீது படையெடுத்த பொழுது, ஸ்ரீநகரில் இருந்து தப்பி ஜம்மு வந்து இந்தியாவின் உதவியை நாடிய ஹிரி சிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒரு ஒப்பந்தத்தை 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி செய்து கொண்டார் (Instrument of Accession). இந்த இணைப்பு ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தாலும், பாதுகாப்பு, வெளியுறவு, போன்ற துறைகள் மட்டும் தான் மைய அரசிடம் இருக்கும். எஞ்சிய துறைகள் காஷ்மீர் அரசின் வசம் இருக்கும்.

1947, அக்டோபர் 27ம் தேதி இந்திய படைகள் ஸ்ரீநகரில் நுழைந்தன. காஷ்மீர் இந்தியா வசம் வந்தது. காஷ்மீரின் நிலப்பரப்பில் 3ல் 2 பங்கு இந்தியாவிடமும், பாக்கிஸ்தான் கைப்பற்றிய 1 பங்கு ஆஸாத் காஷ்மீர் என்று பாக்கிஸ்தானிடமும் உள்ளது.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை பாக்கிஸ்தானும், காஷ்மீரின் பெருவாரியான முஸ்லீம் மக்களும் ஏற்கவில்லை. தன்னிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மன்னர் ஹரி சிங்கிற்கு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று பாக்கிஸ்தான் வாதிட்டது. மேலும் பெருவாரியான காஷ்மீர் முஸ்லீம்கள் பாக்கிஸ்தானுடன் இணையவே விரும்பியதும், பாக்கிஸ்தானின் வாதத்திற்கு வலுசேர்த்தது.

அப்பொழுது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் இந்த இணைப்பு தற்காலிகமானது தான் என்றும், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ அவர்கள் இணைந்து கொள்ள ஒரு ஓட்டெடுப்பு நடத்தி காஷ்மீரின் மக்களின் விருப்பத்திற்கேற்ப சுயநிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனை காந்தி, நேரு போன்ற தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

1948ம் ஆண்டு இந்தியா இந்தப் பிரச்சனையை ஐ.நா. சபையிடம் முறையிட்டது. காஷ்மீரில் ஒட்டெடுப்பு நடத்தப்பட்டு அம் மக்களின் விருப்பத்திற்கேற்ப காஷ்மீர் இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை இந்தியாவும், பாக்கிஸ்தானும் ஒப்புக் கொண்டனர். இன்று வரை அந்த ஓட்டெடுப்பு - Plebiscite நடத்தப்படவே இல்லை.

இடைக்கால ஏற்பாடாக மார்ச் 5, 1948ம் ஆண்டு, சேஷக் அப்துல்லா காஷ்மீரின் "பிரதமராக" நியமிக்கப்பட்டார். ஆம்...ஆரம்ப காலங்களில் காஷ்மீரின் முதல்வரை பிரதமர் என்று அழைப்பது தான் வழக்கம். இந்தியாவிற்கு தனி அரசியல் சாசனம், காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் என்பதும் வழக்கில் இருந்தது. அதாவது இந்தியாவின் பாதுகாப்பில் காஷ்மீர் "தனி நாடாக" சுயாட்சியுடன் இருந்தது. மற்ற மாநிலங்கள் போல இல்லாமல் காஷ்மீருக்கு என்று தனி அரசியல் சாசனம் இருக்க வாய்ப்பளிக்கும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் 370ம் சட்டப்பிரிவும் உருவாக்கப்பட்டது.

1951ம் ஆண்டு காஷ்மீரின் முதல் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை தான் இந்தியா, ஒட்டெடுப்புக்கு இணையாக கூறிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் இந்தியாவின் ஆதரவு பெற்ற சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 75 இடங்களிலும் சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். இதில் 73 இடங்களில் சேஷக் அப்துல்லாவின் ஆதரவாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சிய இரு தொகுதிகளிலும் அப்துல்லாவின் எதிர் போட்டியாளர்கள் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்கள். அதனால் மொத்தமுள்ள அனைத்து தொகுதிகளிலும் சேஷக் அப்துல்லா வாகை சூடிக் கொண்டார்.

ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் இந்த தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. தேர்தலை புறக்கணித்தனர். அது மட்டுமில்லாமல் தேர்தலும் முறையாக நடக்க வில்லை. மைய அரசின் உதவியுடன் சேஷக் அப்துல்லாவின் எதிர்ப்பாளர்களாக கருதப்பட்டவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தத்தில் சேஷக் அப்துல்லாவின் வெற்றிக்கு காஷ்மீர் மக்களின் ஆதரவை விட மைய அரசின் அதரவு தான் முக்கிய பங்கு வகித்தது. இதற்கு முழு காரணம் அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர் லால் நேரு.

காஷ்மீரின் பிரதமராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்பு, இந்தியாவுடனான இணைப்பிற்கு எதிராகவும் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்றும் சேஷக் அப்துல்லா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அது குறித்தும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை காஷ்மீரின் சட்டசபையில் நிறைவேற்ற மறுத்தார். இதனால் 1953ம் ஆண்டு சேஷக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த அப்துல்லா, நேருவாலேயே கைது செய்யப்பட்டார்.

சேஷக் அப்துல்லாவிற்கு பிறகு காஷ்மீரின் பிரதமராக பக்ஷி குலாம் முகம்மது என்பவர் இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். காஷ்மீரின் சட்டசபையும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் பிறகு சாதிக் என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் பிரதமராக இருந்த பொழுது காஷ்மீரின் பிரதமர், ஜனாதிபதி என்று அழைக்கும் வழக்கம் மாறி முதலமைச்சர், கவர்னர் என்று அழைக்கும் முறை அமலுக்கு வந்தது. இவ்வாறு காஷ்மீர் படிப்படியாக இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் ஜவகர்லால் நேரு தான்.

ஆரம்ப காலங்களில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயம், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப தங்களை இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்த ஜவகர்லால் நேரு, பிறகு அதனை மாற்றிக் கொண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய நேரு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கெதிராக அவர்களின் நாட்டை எதனால் இந்தியாவுடன் இணைக்க ஆர்வம் காட்டினார் ?

இதற்கு முக்கிய காரணம் காஷ்மீரை சார்ந்த அவருடைய பாரம்பரியம். காஷ்மீரி பண்டிட்களின் பூர்வீகமான காஷ்மீரை பாக்கிஸ்தானுக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. தன்னுடைய பூர்வீக பூமியை தன்னுடன் வைத்துக் கொள்ள பெரும்பான்மையான காஷ்மீர் முஸ்லிம்களின் விருப்பத்தை துச்சமாக நினைத்தார். இதற்காக அவர் தேர்தல் முறைகேடு போன்றவற்றையும் கையாண்டார். 1951 தேர்தல் தொடங்கி இன்று வரை காஷ்மீர் மக்களின் உண்மையான ஆதரவு பெற்ற தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை. இந்திய அரசின் ஆதரவு பெற்ற தலைவர்கள் தான் காஷ்மீரில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு ஆரம்பித்த காஷ்மீர் பிரச்சனை தான் இன்று காஷ்மீர் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வழிவகுத்துள்ளது. பாக்கிஸ்தானின் தூண்டுகோள் இருக்கிறது என்றாலும் அவர்களின் போராட்டம் நியாயமற்றது அல்ல.

காஷ்மீர் பிரச்சனைக்கு காரணம் நேருவின் பொறுப்பற்ற, சுயவிருப்பத்தால் எழுந்த தவறு தான். வரலாற்றின் முன் இந்த பிரச்சனையின் குற்றவாளி ஜவகர்லால் நேரு தான். அவர் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் தான் இன்றைக்கு இது ஒரு மிகப் பெரிய தீவிரவாத பிரச்சனையாக உருவாக காரணம்.

இந்த பிரச்சனையின் காரணமாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் நடந்த 4 போர்கள், அதில் மடிந்த உயிர்கள், தினமும் மடியும் மனித உயிர்கள், காஷ்மீர் மக்களின் இன்னல், இந்திய இராணுவத்திற்கு இந்த பிரச்சனையின் காரணமாக செலவிடப்படும் பெரும் தொகை என்று இன்றைக்கும் இந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் இன்று இது தேசத்தின் கொளரவ பிரச்சனையாகி தீர்வு காண முடியாத சிக்கலான விடையமாகி விட்டது. 1948ல் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சனை 2005 வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களின் நிலை தான் பரிதாபமானது. அவர்களுக்கு வேண்டியது நிம்மதியான வாழ்க்கை. காஷ்மீர் இரண்டாக துண்டிக்கப்பட்டதால் பக்கத்து ஊர்களில் கால்நடையாக சென்று தங்கள் உறவினர்களை பார்த்து விடக் கூடிய தூரத்தில் இருந்த காஷ்மீர் மக்கள் தூண்டிக்கப்பட்டு விட்டனர். தங்கள் உறவினர்களை இன்று பாஸ்போர்ட், விசா போன்றவற்றை பெற்று தான் பார்க்க வேண்டிய நிலை. அதை பெறுவதற்கு தேவைப்படும் பணம். பெறுவதில் உள்ள சிக்கல். குறைந்தபட்சம் தங்கள் சொந்தங்களை சுலபமாக பார்க்க கூடிய சலுகையையாவது எதிர்பார்க்கின்றனர்.

பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் இந்த பிரச்சனையை மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் பொழுதே தீர்த்து விட வேண்டும் என்று கூறுகிறார். இந்தப் பிரச்சனை தீர்க்க கூடிய பிரச்சனை தானா ? என்ன தீர்வு உள்ளது இந்தப் பிரச்சனைக்கு ?
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் வானம்பாடி, எனக்கு காஷ்மீர் பிரச்சனை குறிந்து இந்த அளவிற்கு தெரியாது. இந்த பிரச்சனை குறித்து மேலும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது வேறுவிதமான பார்வையை கொண்டவர்கள் அவற்றை அறிய தாருங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
மிக்க நன்றிகள் திரு வாணம்பாடி.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:உண்மையில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது தானா ? இது பற்றி படிக்க தொடங்கிய பொழுது <b>காஷ்மீர் பிரச்சனையை இந்தியா கையாண்ட விதம், ஒரு இந்தியனான என்னாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை</b>. சுருக்கமாக கூறினால் காஷ்மீர் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவின் பிடியில் சிக்கிக் கொண்டது என்பது தான் உண்மை. இந்தப் பிரச்சனையின் உண்மை நிலையை இந்தியா அரசு இயந்திரமும், ஊடகங்களும் மூடி மறைக்கவே நினைக்கின்றன. பொய்ச் செய்திகளும் திட்டமிட்டு பரப்ப படுகின்றன.

1947ல் இந்தியா விடுதலையான பொழுது இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளுடன் சேராமல் காஷ்மீர் தனி நாடாக இருந்தது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஹிந்து. ஆனால் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம். அதனால் தனி நாடாக இருப்பது அவருக்கு வசதியாக இருந்தது. பிரச்சனையும் இல்லை. காஷ்மீர் மற்றும் பாக்கிஸ்தான் இடையேயான சாலைகள், வர்த்தகம் போன்றவற்றை இருக்கும் நிலையில் அப்படியே பராமரிக்க பாக்கிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார் (standstill agreement ). ஆனால் இந்தியாவுடன் அவர் இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வில்லை.

நன்றி வானம்பாடி,
அன்று எடுத்த தவறான முடிவுபோல் பின்பும் ஒருமுறை இந்தியா எடுத்ததனால் இன்று தன் உறவுகள் தன்னை ஒரு எதிரிபோல் பார்க்கும் நிலைக்கு தள்ளிவிட்டது.

எமது வரலாற்றையும் படித்துப்பாருங்கள் எமது மக்களின் இன்றைய நிலைப்பாட்டிற்கான காரணம் புரியும்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#9
வானம்பாடி இந்தியராக இருக்க முடியாது....
Reply
#10
Luckylook Wrote:வானம்பாடி இந்தியராக இருக்க முடியாது....

இதோடா அப்ப இந்தியர் எல்லோரும் உங்களப்போல இருக்கணுமாங்க. :? :roll:

கொஞ்சமாவது சிந்திக்கப்பழகுங்க.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#11
உண்ட நாட்டுக்கு இரண்டகம் செய்ய நினைப்பவன் நான் இல்லை....
Reply
#12
Luckylook Wrote:உண்ட நாட்டுக்கு இரண்டகம் செய்ய நினைப்பவன் நான் இல்லை....

அப்ப அயல் நாடுகளுக்கு மட்டுமா செய்வீர்கள்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#13
<b>வரலாற்றில் இடம்பெறும் தவறுகளை நேர்மையான முறையில் சுட்டிக் காட்டுவது வரவேற்கத் தக்கதே. தவறைத் தவறென ஏற்றுக் கொள்ளும் போதுதான் அங்கு சரியானதொரு தீர்விற்கு வழி கோலுகின்றோம். ஒருவர் தனது நடுநிலைமையான கருத்தை இங்கு வைக்கும் போது அவரைத் துரோகி என்றோ அல்லது தாய் நாட்டையே காட்டிக் கொடுப்பவன் என்றோ சொல்வது தவறு. அவரது கருத்தில் தவறுகள் இருந்தால் அதைக் கௌரவமாகச் சுட்டிக் காட்டலாம். இங்கு வானம்பாடியினால் தரப்பட்டவை ஏற்கனவே வேறு இடங்களிலும் என்னால் வாசிக்கப் பட்டிருக்கின்றன. உண்மையில் வேண்டாத உயிரிழப்புகளை இந்தியா தடுக்க வேண்டுமாயின் ஐ.நாவுடன் இணைந்து காஷ்மீர் மக்களிடம் ஒரு நியாயமான வாக்கெடுப்பை நடாத்தி அவர்கள் இந்தியாவுடனா அல்லது பாகிஸ்தானுடனா இணைய விரும்புகின்றார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்க விடுவதே புத்திசாலித்தனம். இந்தியாவின் ஒரு நலன் விரும்பியாகவே எனது இந்தக் கருத்தை இங்கே முன்வைக்கின்றேனே தவிர இந்தியாவின் உள்விடயங்களில் கருத்துக் கூறுபவனாக அல்ல.</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)