07-18-2005, 02:52 PM
தேவகுரு உங்களின் குறுக்கு வழிகள் தொடர் மிக்க பயன்மிக்கதாயுள்ளது. உங்களுக்கு எனது மிக்க நன்றிகள்.
|
குறுக்கு வழிகள்
|
|
07-18-2005, 02:52 PM
தேவகுரு உங்களின் குறுக்கு வழிகள் தொடர் மிக்க பயன்மிக்கதாயுள்ளது. உங்களுக்கு எனது மிக்க நன்றிகள்.
07-22-2005, 04:48 PM
<b>குறுக்குவழிகள் - 95</b>
$NtUninstallKB8909537$ என பெயர்கொண்ட போல்டர்களின் முக்கியத்துவம் என்ன? விண்டோஸ் XP யில் Hotfixes, Updates ஒவ்வொரு தடவையும் நிறுவப்படும்போது அவை ஏதாவது குழறுபடி செய்தால் அல்லது தேவையில்லை என பின்னொருபொழுதில் நீங்கள் கருதினால் அழித்துவிடுவதற்கு வசதியாக மேற்கூறப்பட்ட போல்டர்கள் Windows,Winnt போல்டரினுள் நிறுவப்படுகின்றன. Windows அல்லது Winnt போல்டரை திறந்து பார்த்தால் இவை அவலஷணமாக ஒன்றன்கீழ் ஒன்றாக ஒரேமாதிரியாக நிறைய காணப்படும். இவை என்ன? அழித்துவிடலாமா? என நாம் யோசிப்போம். Hotfixes, Updates நிறுவப்பட்டு பல நாட்களின்பின் குழறுபடிகள் ஏதும் இல்லையாயின் கண்டிப்பாக இந்த போல்டர்களை அழித்துவிடலாம். குழறுபடிகள் இல்லையாயின் யாரும் எக்காலமும் இந்த உபயோகமான Hotfixes ஐ அழிக்கப்போவதுமில்லை. மேற்கூறப்பட்ட Uninstall போல்டர்களை பாவிக்கப்போவதுமில்லை. இந்த இலக்கங்களை கொண்ட போல்டரின் பெயரின் மத்தியில் Q என்ற எழுத்து காணப்படின் அது Hotfix ஐயும் KB என்ற எழுத்து காணப்படின் Updates ஐயும் குறிக்கும். இந்த போல்டரினுள் ஏற்கனவே நிறுவப்பட்ட Hotfixes ஓ அன்றி Updates ஓ கிடையாது. இவைகளை அழிப்பதற்கான் வழி மாத்திரம் உள்ளன. Add/Remove புறோகிறாமில் இந்த Hotfixes, Updates ஐ அழிப்பதற்கான கட்டளைச்சொல் இருந்து அதை நாம் பயன்படுத்தும்போது அதற்கு வேண்டிய வழிமுறைகள் இந்த போல்டர்களின் உள்ளிருந்துதான் வருகின்றன. இந்த போல்டர்களை நீங்கள் Select பண்ணி Delete பண்ணலாம். Windows மற்றும் Winnt யில் இந்த போல்டரை அழித்தபின் ஆனால் இதற்குரிய அல்லது இதனோடு சம்பந்தப்பட்ட குறிப்பு Add/Remove புறோகிறாமில் இருந்தால் அதை அழிப்பதற்கு Registry திறந்து சில அழிவுகளை செய்யவேண்டிவரும். இந்த போல்டர்களை ஒரேயடியாக அழித்துவிடாதீர்கள். Recycle Bin ல் சிலகாலத்திற்கு போட்டு வைத்து Restore பண்ணவேண்டி நிச்சயம் வராது என கண்டபின் அங்கிருந்து அகற்றிவிடுங்கள். உங்கள் Hard disk ல் நிறைய இடமிருந்தால் அழிக்காமல் விட்டுவைத்தாலும் பரவாயில்லை.
07-23-2005, 09:36 PM
நன்றி அண்ணா... உங்கள் தகவல்கள் பயன் உள்ளதாக உள்ளது
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
08-03-2005, 11:44 AM
<b>குறுக்குவழிகள் - 96</b>
டிஜிட்டல் கமெறா ஒன்று கிடைக்கப்பெற்றதனால் அதனால் எடுக்கப்படும் படங்களை கம்பியூட்டரில் இறக்கி பார்க்கையில் தெரியும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவேண்டி ஏற்பட்டது. அதற்கு துணைபுரியும் வகையில் கைவசம் Photoshop 6 ம் கிடந்தது. படங்களை சீர்செய்ய வேண்டிய தேவை போட்டோஷொப்பை கற்கும் ஆர்வத்தை தூண்டியதனால் கடந்த மூன்று வாரங்களாக எனது பொழுதை அதில் கழித்துக்கொண்டுள்ளதனால் குறுக்குவழிகளில் கவனம் செலுத்தமுடியவில்லை. உருவங்களை வெட்டி அழகான பின்னணியுடன் ஒட்டி Under Exposure ஆல் ஏற்படும் குறைபாடுகளை நீக்கி இன்னொரு படத்தை புதிதாக உருவாக்கும்போது நிறையவே திருப்தி ஏற்படுகிறது. அத்தோடு மலர்கொத்துக்களையும் சிறிய பிராணிகளையும் சேர்த்துவிட்டால் கூடிய மகிழ்சி ஏற்படுகிறது போட்டோஷொப்பை கற்க நிறைய தளங்கள் இணையத்தில் உள்ளன. கீழ்காணுபவைகள் எனக்கு உதவின http://www.sketchpad.net/photoshp.htm http://graphicssoft.about.com http://www.elated.com/tutorials/graphics/photoshop/
10-11-2005, 11:19 AM
<b>குறுக்குவழிகள் - 97</b>
தனிப்பட்ட கோப்புகளுக்கு Win XP யில் நுழைவுச்சொல் (Password) முக்கியமான விடயங்கள், ரகசிய சங்கதிகள் அல்லது யாரும் பார்க்கக்கூடாது எனப்படும் சங்கதிகள் கொண்ட ஒரு கோப்பை உண்டாக்கிவிட்டீகள். இதை யாரும்பார்க்காமல் நுழைவுச்சொல் கொடுத்து பாதுகாக்க விரும்பினால் இப்படி செய்யவும். கோப்பை திறந்து வைத்துக்கொண்டு File --> Save as ஐ கிளிக்பண்ண வரும் பெட்டியின் வலது பக்க மேல் மூலையில் Tools எனக் காணப்படும் மெனுவைக்கிளிக் பண்ணவரும் உபமெனுவில் Security Options என்பதை கிளிக்பண்ணவும். Security என்ற பெட்டி தோன்றும். அங்கே Password to open, Password to modify, Read only என பல தேர்வுகள் காணப்படும். Password to open என்பதன் எதிரில் விரும்பிய password ஐ கொடுத்து OK பண்ணிவிட்டால் சரி.. Password தெரிந்தவர்களால் மாத்திரம் இனிமேல் இந்த கோப்பை திறக்கமுடியும்
10-30-2005, 11:49 PM
[b]குறுக்குவழிகள் - 98
Doc கோப்பை Jpeg formet க்கு மாற்றுவதெப்படி? இரண்டு வருடங்களின் முன் அழகான ஒரு Scenary படத்தை நண்பர் ஒருவருக்கு email அனுப்பும்போது அந்தப்படத்தையும் அதில் பதித்து (paste) அனுப்பிவிட்டேன். இப்போது email லின் பிரதியில் உள்ள .doc format ல் உள்ள அந்த படத்தை Adobe Photoshop ல் திறந்து இன்னொரு படத்துடன் சேர்க்கவேண்டி (combine) ஏற்பட்டது. Doc extension ஐ Jpg என மாற்றினாலும் திறக்க முடியவில்லை. வேறு எந்த Grafic software இலும் இந்த word படம் திறக்கமாட்டேன் என்கிறது. வலது கிளிக்பண்ணி கொப்பிபண்ணி Adobe Photoshop இலோ அல்லது Ms Paint இலோ Paste பண்ண முற்பட்டபோது quality குறைந்து நிறங்கள் மாறுகிறது. இரு மணித்தியால தேடலின் பின் வழிகண்டுகொண்டேன். குறிப்பிட்டபடத்தை word ல் திறந்து வைத்துக்கொண்டு Print Screen பட்டனை அழுத்த படம் கொப்பிபண்ணப்படுகிறது. பின் Adobe Photoshop ஐ(அல்லது Ms Paint) திறந்து paste பண்ணிவிட்டு, Crop Tool உதவியோடு படத்தை தவிர மற்றெல்லாவற்றை கத்தரித்து அகற்றிவிட்டு Jpg format ல் சேமித்துக்கொண்டு வேண்டியதை செய்யமுடிந்தது
11-02-2005, 10:26 PM
ஆம் நீங்கள் கூறியது போலத்தான் நேரடியாக கொப்பி செய்தால் படத்தின் நிறங்களில் நிறைய மாற்றங்கள் வருகின்றன.
11-03-2005, 12:02 AM
GIF கோப்பாக இருக்கும் சில படங்களை கொப்பி செய்து
போட்டாலும் இப்படித்தான் வந்தது எனக்கு... நல்ல யோசனை.. நன்றி தேவகுரு.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
11-24-2005, 05:30 PM
<b>குறுக்குவழிகள் - 99</b>
Cache என்பது என்ன? ஓர் உலாவி தான் செல்லும் வெப்தளங்களின் தகவல்களை சேமிப்பதற்கும் பின் தேவைப்படும்போது அணுகுவதற்கும் ஆன ஹாட் டிஸ்க்கில் உள்ள இடம்தான் Cache என்பது. நீங்கள் ஓர் வெப்தளத்திற்கு முதன்முதலில் செல்லும்போது உங்கள் உலாவி அத்தளத்தின் பிம்பத்தை Cache ல் பதிந்துவிடுகிறது. மீள இன்னொருதரம் அத்தளத்திற்கு செல்லும்போது உலாவி அத்தளப்பக்கங்களை Cache ல் தேடி, கிடைத்தால் முழுவதையுமோ அல்லது பகுதியையோ அத்தளப்பக்கங்களை திரையில் காட்டுவதற்கு பயன்படுத்தும். இதனால் வேலை பாதியளவு குறைவதோடு செயற்திறனும் அதிகரிக்கும். இந்த Cache ஐ அடிக்கடி சுத்தம் செய்வது உலாவியை தளங்களிலிருந்து புதிய தகவல்களை இறக்கம்செய்ய நிர்ப்பந்திக்கும். அத்தோடு தேவையற்ற தகவல்கள் தேங்கிக்கிடப்பதையும் தவிர்க்கலாம். உலாவிகளை Cache ஐ தேடாமல் ஒவ்வொருமுறையும் புதிதாக தகவல்களை இறக்கம் செய்யும்படியும் அமைத்துக்கொள்ளலாம். அதற்கு அதன் Help மெனுவை பார்த்து செட் பண்ணிக்கொள்ளவேண்டும். Cache ஐ இப்படி சுத்தம் செய்துகொள்ளவும். IE--> Tool--> Internet Options--> General Tab--> Delete Files. Delete Cookies என்று ஒரு பட்டன் காணப்படும். அதை பாவிக்கத்தேவையில்லை. Files ஐ அழிக்கும்போது Cookies ம் தானாக அழிந்துவிடும். Internet Temporary Files யும் History யும் அழிப்பதுதான் Cache ஐ சுத்தப்படுத்துவதாகும். உங்கள் ஹாட் டிஸ்க்கில் Cache க்காக ஒதுக்கப்பட்டுள்ள அளவை நீங்கள் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம் IE--> Tools--> Internet Options--> General Tab--> Settings செட்டிங்ஸ் டயலக் பொக்ஸ் இல் ஒரு Slider காணப்படும் அதை இழுத்து கொள்ளளவை மாற்றிகொள்ளலாம். (XP யில் இப்படி). இதே பெட்டியில் ஒவ்வொருமுறையும் புதிதாக தகவல்களை இறக்கம் செய்யும்படியும் அமைத்துக்கொள்ளக்கூடிய Settings ம் உண்டு. Check for newer versions of stored pages என்ற வாக்கியத்தின் கீழ் பல Options கள் காணப்படுகின்றன. பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்கவும்.
11-24-2005, 06:06 PM
தகவலுக்கு நன்றி தேவகுரு.
தொடர்ந்து எழுதுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
11-24-2005, 11:07 PM
இன்றுதான் உங்கள் எல்லா குருக்குவழிகளையும் வாசித்தேன் மிகவும் பயனுள்ள தகவல்கள்:.. நன்றி தேவகுரு மேலும் தொடர்ந்து எழுதுங்கள்
<b> .. .. !!</b>
11-24-2005, 11:24 PM
எம் எஸ் என் இல் தமிழ் எழுத்துக்களில் சாட் செய்வது எப்படி இலகுவான வழி சொல்லுங்களேன் தமிங்கிலத்தால் நிறைய சண்டைதான் வருகிறது யாரவது உதவி செய்யுங்கள்
inthirajith
11-25-2005, 04:00 PM
inthirajith Wrote:எம் எஸ் என் இல் தமிழ் எழுத்துக்களில் சாட் செய்வது எப்படி இலகுவான வழி சொல்லுங்களேன் தமிங்கிலத்தால் நிறைய சண்டைதான் வருகிறது யாரவது உதவி செய்யுங்கள் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்தால் அதனைப் பாவிக்கலாம், அல்லது கீழே உள்ளதை நிறுவினீர்கள் என்றால் யுனிகோட்டில் ரைப்பண்ணலாம். http://www.suratha.com/vanni.zip
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
11-26-2005, 03:14 PM
<b>குறுக்குவழிகள் - 100</b>
யுனிகோட் தமிழிலில் தட்டச்சு செய்வது எப்படி? எம்மில் பலரைப்போல் ஆங்கிலத்தில் மாத்திரம் தட்டச்சு பயிற்சி பெற்றவன் நான். இப்போது "குறுக்குவழிகள்" ஐ தமிழில் எழுத வேண்டி ஏற்பட்டதால் ஆங்கில விசைப்பலகை மூலம் யூனிக்கோட் தமிழை விண்டோஸ் செயலிகளான word, Excel, IE மற்றும் yahoo ஆகியவற்றில் உள்ளீடு செய்கின்றேன். Msn ஐ நான் பாவிப்பதில்லை. ஆனால் இம்முறை அதற்கும் கண்டிப்பாக பொருந்தும். எழில்நிலா தளத்தில் மென்பொருள் என்ற பக்கத்தில் எ-கலப்பை (Keyman.exe) என்றொரு மென்பொருளை இறக்கி உங்கள் கம்பியூட்டரில் பொருத்திக்கொள்ளுங்கள்.(ttp://www.ezilnila.com/software.htm) TSCu Paranar. aAvaragal, TheniUni என்ற மூன்று எழுத்துருக்களைல்யும் இது கூடவே கொண்டுவந்து உங்கள் Font பைலில் போடும். இதுமட்டும்தான் நீங்கள் செய்யவேண்டிய ஆயத்தவேலை. நீங்கள் தமிழில் தட்டும்போது இடையில் ஒரு ஆங்கில சொல்லை போடவேண்டுமெனில் அதற்குவேண்டிய வசதியும் இதில் உண்டு. இப்போது செயற்பாட்டை பார்ப்போம். Word ஐ லோட்பண்ணுங்கள். அடுத்து start--> Programs--> keyman.exe கிளிக்பண்ணியவுடன் இவ்மென்பொருள் இயங்கி Task Bar ன் வலது மூலையில் K என்ற எழுத்துக்கொண்ட ஐக்கொன் ஐ காண்பிக்கும். ALT+3 கீக்களை தட்டியவுடன் K என்ற எழுத்து அ என்று மாற்றம்பெறும். அடுத்து மேலே Formating Tool Bar ல் TSCu Paranar என்ற எழுத்துருவை கிளிக்பண்ணி காட்சிக்கு விடவும். இப்போது ஆங்கிலத்தில் தட்டத்தட்ட தமிழ் திரையில் தெருயும். இடையில் ஆங்கிலத்தில் சொற்கள் வரவேண்டுமெனில் AIL+1 கீக்களை தட்டிவிட்டு தொடருங்கள் ஆங்கில வார்த்தை திரையில் தெருயும். இம்முறையில் Word ல் தட்டிய text ஐ கொப்பிபண்ணி Yarl.com தளத்தின் கருத்துக்களதில் "உங்கள் பதில்" பட்டனை கிளிக்பண்ண வரும் மேல்பெட்டியில் பிரதி பண்ணி posting செய்யலாம். எந்த ஆங்கில கீயை தட்ட எந்த தமிழ் சொல் திரையில் தெரியும் என்பதை இந்த லிங்கிற்கு போய் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். (http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm) யாஹூவிலும் இதேபோன்றுதான். ஆனால் சின்னொரு மாற்றம். IE--> Yahoo-->Compose. கம்போஸ் பெட்டி வந்தவுடன், Start --> Programs -->keyman.exe, ALT+3, இப்போது அ என்ற எழுதுகொண்ட ஐக்கொன் டாஸ்க் பாரின் வலது பக்க மூலையில் தெரியும். அடுத்து View-->Encoding--> Unicode (UTF-8) என்பவற்றை கிளிக்பண்ணிவிட்டு ரைப்பிங் செய்தால் தமிழ் வரும். இன்ரர்நெட் ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும் யாஹூ, எம்.எஸ்.என், மெசெஞ்ஞர் எல்லாவற்றிலும் இதே முறையை பின்பற்றி தமிழில் தட்டலாம்
12-03-2005, 12:40 AM
<b>குறுக்குவழிகள் - 101</b>
Prefetch போல்டரை இடைக்கிடை சுத்தம் செய்ய வேண்டுமா? Xp யில் Windows போல்டரினுள் உள்ள Prefetch போல்டரை Disk clean-up செய்கையில் சுத்தம் செய்யவேண்டும் என்றுதான் இதுவரை எண்ணியிருந்தேன். ஆனால் தகுந்த ஆதாரங்களுடன் ஒரு கட்டுரை படித்தபின் ஒருகாலும் சுத்தம் செய்யவே கூடாது என எண்ணத்தை மாற்றிக்கொண்டுள்ளேன். (அக்கட்டுரையை எழுதியவர் Microsoft க்காக வேலை செய்யும் ஒருவர்தான்.) அப்படி சுத்தம் செய்தாலும் Windows மீண்டும் அவைகளை உண்டாக்கிக்கொள்ளும். அத்தோடு ஒப்பீட்டளவிலும் தேவைக்கு அதிகமாக ஹாட்டிஸ்க்கில் அதிக இடத்தை பிடித்துக்கொள்ளாது. கம்பியூட்டரின் செயற்திறனை அதிகரிக்கவேண்டிய நோக்கோடு மெமறியில் ஏற்றம் பெற கோப்புக்களை அதிக பட்சம் 128 எண்ணிக்கையை மாத்திரம் Prefetch தன்னகத்தே அடக்கிகொள்ளும். இந்த 128 ல் புதியன வரவர பாவிக்கப்படாத பழையன கழிந்து போகிறது. இந்த பையில் களில் காணப்படுவது பக்கங்களின் (Index) பட்டியல் தவிர பக்கங்களின் பிரதிகளல்ல என கூறப்படுகிறது.புதிதாக வரவுள்ள அடுத்த Windows பதிப்பில் Super Prefetch என மாற்றம்பெறுவதுடன் திறனும் அதிகரித்து காணப்படுமாம். 1. மீண்டும் உண்டாக்கப்படுகிறது. 2. ஹாட்டிஸ்க்கின் அதிக இடத்தை பிடிக்கவில்லை. 3. பழையனவற்றை கழிக்கிறது. 4. நாமாக Prefetch ஐ சுத்தம் செய்தவுடன் வேகம் தற்காலிகமாக குறைகிறது. எனவே நாம் ஏன் அதை சுத்தம் செய்யவேண்டும்?. முக்கியமான போல்டர் இன்றேல் அதை ஏன் உண்டாக்கியிருக்கவேண்டும். முக்கியமான Windows போல்டரினுள் கொண்டுவந்து வைக்கவேண்டும். வெட்டவேட்ட தழைக்கும்படி ஏன் செய்தார் Bill Gates? சுத்தம்செய்து சில தினங்கள் வரை வேகம் குறைந்து, பின் அந்த போல்டரினுள் மீண்டும் பைல்கள் உண்டாக்கப்பட்டவுடன் வேகம் இயல்பு நிலையை அடைகின்றன. எனவே சுத்தம் செய்வது எதிர் விளைவையே உண்டாக்குகிறது. மேலதிக தகவல்களுக்கு இந்த லிங்ஐ கிளிக்பண்ணி அந்த ஆங்கில கட்டுரையை படிக்கவும். http://www.edbott.com/weblog/?p=743#comments
12-17-2005, 04:37 PM
<b>குறுக்குவழிகள் -102</b>
Proxy Server என்றால் என்ன? இணையத்தில் தட்டுப்படும் சொல் இது. ஈ-மெயில், உலாவி, இவைகளில் ஏதாவது settings செய்யும்போது உங்கள் proxy sever ன் விலாசம் என்ன என்று கேட்கப்படலாம். Proxy Server என்பது உலாவிக்கும் வெப்தளங்களை காட்சிக்கு வைத்திருக்கும் Web Server க்கும் நடுவிலுள்ள இடைமுகப்பாகும். அல்லது இடையில் நின்று உங்களுக்கு உதவும் சேவையாகும்.அல்லது ஒரு தரகர் என்று கூட சொல்லலாம். இந்த Proxy server உங்கள் கம்பியூட்டர் அமைந்துள்ள Local Nerwork இனுள் காணப்படும். உலாவி இணையத்தில் ஒரு பக்கத்தை தேடும்போது Proxy server தலையிட்டு உதவமுன்வரும்: தனது சேமிப்பு கிடங்கில் அந்த பக்கம் கிடக்கா என பார்க்கும், கிடந்தால் அங்கிருந்து எடுத்து அனுப்பும். இன்றேல் இணையத்தில் தேடி உரிய Web Server இலிருந்து எடுத்து அனுப்பிவைக்கும். X,Y என்ற இரு இந்திய நபர்களுக்கு கனடாவிலுள்ள Web Server ரில் உள்ள ஒரே வெப்பக்கம் தேவைப்படுகிறது. முதலில் X தனது உலாவி மூலம் தேடுகிறார். Proxy Server தலையிட்டு தன்னிடம் தேடி இல்லையென கண்டவுடன் கனடாவிலுள்ள வெப்சர்வரிடமிருந்து பெற்று உலாவி உள்ள கம்பியூட்டருக்கு அனுப்பி வைக்கிறது. அப்போது பிரதி ஒன்றை தன்னிடம் வைத்துக்கொள்கிறது. பின் Y என்பவர் அதே பக்கத்தை தேடும்போது Proxy Server தன்னிடமுள்ள பிரதியில் இன்னொரு கொப்பியை Y என்பவரின் கணணிக்கு அனுப்பிவைக்கிறது. Proxy Serverகள் இணையத்தின் போக்குவரத்து நெருக்கடிகளை தளர்த்தி திறனையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகிறது. வேண்டப்படாத போக்குவரத்துகளை தடுக்கிறது. இணைய சேவை வழங்குனர்க்கு ஒரு Switch Board போலவும் இயங்குகிறது, உங்களுக்கு தேவை ஏற்படும்போது இதன் விலாசத்தை இணைய சேவை வழங்குனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இது பெரும்பாலும் இன்னொரு IP Address ஆக இருக்கும். .
12-17-2005, 04:39 PM
<b>குறுக்குவழிகள் -102</b>
Proxy Server என்றால் என்ன? இணையத்தில் தட்டுப்படும் சொல் இது. ஈ-மெயில், உலாவி, இவைகளில் ஏதாவது settings செய்யும்போது உங்கள் proxy sever ன் விலாசம் என்ன என்று கேட்கப்படலாம். Proxy Server என்பது உலாவிக்கும் வெப்தளங்களை காட்சிக்கு வைத்திருக்கும் Web Server க்கும் நடுவிலுள்ள இடைமுகப்பாகும். அல்லது இடையில் நின்று உங்களுக்கு உதவும் சேவையாகும்.அல்லது ஒரு தரகர் என்று கூட சொல்லலாம். இந்த Proxy server உங்கள் கம்பியூட்டர் அமைந்துள்ள Local Nerwork இனுள் காணப்படும். உலாவி இணையத்தில் ஒரு பக்கத்தை தேடும்போது Proxy server தலையிட்டு உதவமுன்வரும்: தனது சேமிப்பு கிடங்கில் அந்த பக்கம் கிடக்கா என பார்க்கும், கிடந்தால் அங்கிருந்து எடுத்து அனுப்பும். இன்றேல் இணையத்தில் தேடி உரிய Web Server இலிருந்து எடுத்து அனுப்பிவைக்கும். X,Y என்ற இரு இந்திய நபர்களுக்கு கனடாவிலுள்ள Web Server ரில் உள்ள ஒரே வெப்பக்கம் தேவைப்படுகிறது. முதலில் X தனது உலாவி மூலம் தேடுகிறார். Proxy Server தலையிட்டு தன்னிடம் தேடி இல்லையென கண்டவுடன் கனடாவிலுள்ள வெப்சர்வரிடமிருந்து பெற்று உலாவி உள்ள கம்பியூட்டருக்கு அனுப்பி வைக்கிறது. அப்போது பிரதி ஒன்றை தன்னிடம் வைத்துக்கொள்கிறது. பின் Y என்பவர் அதே பக்கத்தை தேடும்போது Proxy Server தன்னிடமுள்ள பிரதியில் இன்னொரு கொப்பியை Y என்பவரின் கணணிக்கு அனுப்பிவைக்கிறது. Proxy Serverகள் இணையத்தின் போக்குவரத்து நெருக்கடிகளை தளர்த்தி திறனையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகிறது. வேண்டப்படாத போக்குவரத்துகளை தடுக்கிறது. இணைய சேவை வழங்குனர்க்கு ஒரு Switch Board போலவும் இயங்குகிறது, உங்களுக்கு தேவை ஏற்படும்போது இதன் விலாசத்தை இணைய சேவை வழங்குனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இது பெரும்பாலும் இன்னொரு IP Address ஆக இருக்கும். .
01-02-2006, 04:05 PM
<b>குறுக்குவழிகள் -103</b>
iso file என்றால் என்ன? International organisation for standards என்னும் தர கட்டுப்பாட்டு சபையால் CD அல்லது DVD யில் எப்படி பையில்களை பதிவது என்பது பற்றி நிர்ணயிக்கப்பட்ட தரமுறையாகும் இந்த "ISO 9660 Disk image". ஒபரேட்டிங் சிஸ்டம்களான Windows, Mac, Unix ஆகியவைகளினால் ஏற்று செயற்படக்கூடியவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ISO file கள் என்பது, சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு CD யின் digital photo என கூறலாம். ஏதாவது ஒரு CD யை நாம் இரண்டு வழிகளில் விலைக்கு வாங்கலாம். கடையில் அல்லது பார்சலில் முழு சீடி ஆக பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவது: credit card மூலம் பணம் செலுத்தி விற்பனையாளரிடமிருந்து தரவிறக்கம் செய்து சீடி இல் burn செய்து கொள்வது. அவர் எமக்கு நாம் விலைக்கு வாங்கிய அந்த மென்பொருளை ISO ஆகவே அனுப்பிவைப்பார். Windows 98 startup disk பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைக்கொண்டு ஒரு கம்பியூட்டரை boot செய்யலாம். ஆனால் அதில் உள்ள 24 files களையும் ஹாட் டிஸ்க்கில் கொப்பிபண்ணிவிட்டு மீண்டும் அந்த 24 ஐயும் ஒரு புதிய floppy யில் கொப்பி பண்ணி அந்த புதிய floppy யைக்கொண்டு கம்பியூட்டரை boot பண்ணமுடியாது. காரணம நாம் ஹாட்டிஸ்க்கிற்கு கொப்பி பண்ணும்போது floppy யில் உள்ள Master Boot Record மற்றும் Partition Table கொப்பிபண்ணப்படாமல் data file ஆகவே கொப்பிபண்ணப்படுகிறது. ஆனால copy disk கட்டளை கொண்டு (My computer-->R.Click A:--> Coy Disk) ஒரு புதிய floppy யில் கொப்பி பண்ணினால், அந்த புதிய floppy bootable ஆகிறது. காரணம் அதில் MBR, Partion table, Datas உட்பட முழு floppy யும் பிரதி பண்ணப்படுகிறது. Data files களை நாங்கள் ISO மாற்றலாம். WinIso, UltraIso, IsoBuster, Nero ஆகிய மென்பொருள்களைக்கொண்டு இவற்றைச்செய்யலாம். இந்த மென்பொருட்களை நாம் பணம் கொடுத்து வாங்கவேண்டும். IsoBuster Basic இலவசமாக கிடைக்கிறது. Nero Express இலும் ஓரளவு செய்யலாம். nLite என்ற மென்பொருளின் Demo Version ஐ இறக்கம் செய்தும் பாவிக்கலாம். nLite Sipstreaming செய்வதற்கும் உகந்தது. Winsows 98 startup disk இல் உள்ள 24 files களையும் 25 ஆவதாக Norton Ghost ஐயும் சேர்த்து Nero Express மூலம் நான் ஒரு Bootable CD burn பண்ணியுள்ளேன். Nero Burning Rom அல்லது Express, ISO filem களை உருவாக்கும்போது ISO என்ற extension ஐ கொடுக்காமல் nrg என்று கொடுக்கும். ஒரிரு மென்பொருட்கள் img என்ற extension ஐ கொடுக்கும். IsoBuster பற்றி அறியவும் டவுண்லோட் பண்ணவும் கீழ் காணும் லிங்கை கிளிக்பண்ணவும் http://www.smart-projects.net/isobuster/ http://www.magiciso.com/tutorials/miso-whatiso.htm
01-02-2006, 06:55 PM
உங்களின் குறுக்கு வழிகள் தொடர் மிக பயன்மிக்கதாயுள்ளது. உங்களுக்கு எனது நன்றிகள்.
<b> .. .. !!</b>
|
|
« Next Oldest | Next Newest »
|