[quote=Mathan]<span style='font-size:20pt;line-height:100%'>வணக்கம் குறுக்ஸ்,
நான் உங்களுடைய பெரும்பாலான கருத்துக்களை அவதானித்திருக்கின்றேன். நீங்கள் பல நல்ல உபயோகமான விடயங்களை சொல்ல வருவதும் அவற்றிற்கு கள உறுப்பினரிடையே ஆதரவோ அல்லது பதில் கருத்துக்ளோ கிடைக்காத போது சோர்வடைவதும் தெரிந்தது. ஆனால் அந்த சோர்வினால் நீங்கள் ஆட்களை கவரவேண்டும் என்பதற்காக பொருத்தமற்ற அல்லது அநாகரிகமான தலைப்புகளை தெரிவு செய்வதும் நல்லதல்ல. நீங்கள் அப்படி தெரிவு செய்த பல தலைப்புகளை நான் மாற்றிவிட்டிருக்கின்றேன். அதுவும் கடைசியாக நீங்கள்
<b>RSS Feed கருத்துக்கு</b> இட்ட தலைப்பு எனக்கு மிக மிக வருத்தத்தை தந்தது. அதனால் அந்த தலைப்பை மாற்றி உங்களுடைய போக்கை மாற்றி தொடர்ந்து நல்ல கருத்துகளை தருமாறு
அந்த தலைப்பிலேயே அன்புடன் கேட்டிருந்தேன்,
அதன் பின்பு
<b>வடமெரிக்காவில் Dish Net தொலைக்காட்சி</b> தலைப்பில் நீங்கள் எழுதிய கருத்துக்கள் உங்கள் போக்கில் மாற்றம் ஏதும் இல்லை என்பதையும் உங்களுடைய கருத்துக்கள் தொடர்ந்து மட்டுறுத்தினர்களால் கவனிக்கப்படவேண்டியவை என்பதையும் உணர்த்தியது. உண்மையில் அந்த தலைப்பில் நீங்கள் சொல்ல விரும்புவதை அனைவருக்கும் புரியகூடியதாக இலகுவாக சில வரிகளில் சொல்லியிருக்கலாம். ஆனால் அதில் நீங்கள் பதிலளித்த விதம் கள உறுப்பினர்களுக்கு ஒரு தெரியாத விடயத்தை விளக்குவது போல அல்லாமல் அவர்களை மட்டுதட்டுவது போலவும் அறியவிரும்பும் ஆர்வத்தை கூட நசுக்குவது போலவும் இருந்தது. அனைவரும் அனைத்துவிடயங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை தானே. உங்களுக்கு தெரிந்தவற்றை கடிந்து கொள்ளாமல் இலகு தமிழில் சொல்லலாம் தான்? அதில் உங்களுக்கு பின்பு தியாகம் பதில் எழுதியிருக்கிறார் பாருங்கள்.
இப்போது இந்த
<b>திரிஷா பட விடயத்தை</b> எடுத்து கொண்டால் அவை நாரதர் குறிப்பிட்டது போல் வேணுமென்றே கிண்டலுக்காக (வம்பு லொள்ளு எதுவாகவும் இருக்கட்டும்) இணைக்கப்பட்டது என்றும் அவை உங்களுடைய வருத்தமூட்டும் கருத்துக்களின் தொடர்ச்சி என்றும் தெளிவாக தெரிந்தது. அதனால் அவற்றில் இரண்டு படங்கள் நீக்கப்பட்டன, ஏறத்தாள ஒரே நேரத்தில் என்னாலும் யாழினியாலும் படங்கள் நீக்கப்பட்டதால் 2 படங்கள் நீக்கப்பட்டது என்பது சரிவர தெரிவிக்கப்படவில்லை.
படங்கள் நீக்கப்பட்டதற்கு ஏன் மற்றய கருத்துக்களுடன் இணைத்து விளக்கம் தரப்படுகின்றது என நீங்கள் எண்ணலாம். உங்களுடைய கருத்துகளை தொடர்சியாக அவதானித்தலில் அவை என்ன நோக்கத்தற்காக இணைக்கப்பட்டுள்ளன என அறிந்தமையாலேயே அவை அவசியமற்றவை என தெரிந்து நீக்கப்பட்டன. அதனால் முழு விளக்கத்தையும் எழுதியுள்ளேன். உங்களுடைய கருத்துகள் தொடர்பாக நான் உங்களுக்கு தனிமடல் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் பகிரங்கமாக காரணம் கேட்டதால் இங்கே எழுதவேண்டியதாயிற்று.
உங்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து இவ்வாறான ஒரு சில பொருத்தமற்ற படங்கள், கருத்துக்கள் தலைப்புக்கள் மூலம் உங்களுடைய நல்ல கருத்துகளின் மதிப்பை பாழடித்து விடாதீர்கள், இவற்றை ஒதுக்கி பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தாருங்கள், ஒரு விடயத்தை வாசகர்களை சென்றடைய கூடியதாக இலகுவாக சொல்வதில் தான் கருத்தாளனின் வெற்றி தங்கியிருக்கின்றது, அதை விடுத்து இவர்கள் இதையெல்லாம் அறிந்துகொள்ள லாயக்கில்லாதவர்கள் என்றோ அல்லது வேறுவிதங்களிலோ கடிந்து கொள்ளாதீர்கள்.
நன்றி.
நட்புடன்
மதன்
குறிப்பு: கருத்துக்கள் மட்டுறுத்தினர்களால் தணிக்கை செய்யப்பட்டால் அவை எந்த சமயத்திலும் மீள இணைக்கப்பட கூடாது, தணிக்கை நியாயமற்றது என உங்களுக்கு தோன்றினால் அதை தனிமடல் மூலமோ உங்கள் கருத்து பகுதியில் எழுதியோ அல்லது மோகன் அண்ணாவை நேரடியாகவோ விளக்கம் கேட்கலாம். தணிக்கை தவறு என மோகன் அண்ணா கருதினால் அவற்றை மீள இணைத்து விடுவார். அவருடைய தீர்மானமே இறுதியானது. அதனை விடுத்து
மட்டுறுத்தினர்களின் தணிக்கை நீக்கப்பட்டு கருத்துக்கள் மீள மீள இணைக்கப்பட்டால் முன் எச்சரிக்கை ஏதுமின்றி உறுப்பினர் தடைசெய்யப்படுவார். ஒரு கருத்தாளன் மட்டுறுத்தினர்களின் நடவடிக்கையை மதித்து நடப்பது அவசியம், அவை
பொருத்தமற்றவை நியாமில்லாதவை என கருதும் சமயத்தில் அவற்றை உரிமையுடன் சுட்டிகாட்டலாமே தவிர உதாசீனப்படுத்த கூடாது, அவ்வாறான நிலைமையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நிர்வாகம் தள்ளப்படுகின்றது.</span>
மதன் பந்தி பந்தியா புலம்பிறதை விட்டுட்டு, நேரமிருந்தால் யாழ்களத்தில போடற படங்களுக்குரிய நாகரீகத்துக்கான வரைவிலக்கணத்தை எழுதும். மேலும் என்ன பயன்பாடுகள் நேக்கங்களுக்கா படங்கள் இணைக்கப்படலாம் எண்டும் எழுதுவீராக இருந்தால் சிறப்பாக இருக்கும்.