Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கல்விக்கும் உண்டோ வயது..??!
#1
<img src='http://img485.imageshack.us/img485/4630/bernardtutor5nl.jpg' border='0' alt='user posted image'>

இங்கிலாந்தில் உள்ள கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் (University of East London) 96 அகவை நிரம்பிய ஒரு மாணவன் (Bernard Herzberg) தனது முதலாவது முதுகலைமானிப் பட்டத்துக்காக (MA) கல்வியை முடித்து இரண்டாவது முதுமானிப்பட்டத்துக்காக கல்வி கற்க ஆரம்பித்துள்ளார்..!

ஏற்கனவே தனது ஓய்வின்பின் 83 வயதில் இளமானிப் பட்டத்துக்கான படிப்புடன் இக் கல்விப் பயணத்தை ஆரம்பித்த பேர்னாட் தற்போது இந்த இரண்டாவது முதுமானிப்பட்டத்துக்காக தன்னை மீண்டும் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தினூடு பதிவு செய்து கல்வி கற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்..!

ஏதோ ஒரு இயலாமைக்குள் வாழும் தனிமனிதர்கள் அல்லது தனிமனிதக் கூட்டம் படைக்கும் சமுதாய இறுக்கங்கள் பழிப்புகள் என்பனவற்றை ஒருவன் தனக்குள் அநாவசியமாக உள்வாங்குவதால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையே பல அநாவசிய கட்டுப்பாடுகளுக்கு காரணம்..! அதேவேளை மனிதனுக்கு என்று அமைந்த சிறப்பான வாழ்வியலுக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்..! ஆனால் அநாவசியங்களை இனங்கண்டு தகர்ப்பதற்கு தனி மனிதன் தன் சிந்தனைக்களுக்கு தானே செயல்வடிவம் கொடுப்பவனாக தன்னையே உதாரணமாக்கி காட்ட வேண்டும்..! அந்த வகையில் 96 வயதில் வீட்டுக்குள் முடங்கிவிடும் கோடிக்கணக்கான முதியவர்கள் மத்தியில் ஜேர்மனியப் பின்னணி உள்ள இந்த பேர்னாட் கல்விகாக தன்னை அற்பணித்ததன் மூலம் தன்னை ஒரு புரட்சியாளனாக சாதனையாளனாக கூட இனங்காட்டி உள்ளார்..! சமூக இறுக்கங்கள் கல்வியல் இறுக்கங்கள் என்று பலவற்றைத் தகர்த்திருக்கிறார் இந்த பேர்னாட்..!

தமிழர் சமூகத்தில் கல்வியும் பட்டங்களும் தனி மனித அளவுகோல்களாகவே பயன்படுத்தப்படுகின்றன..!

ஒரு பரதநாட்டிய மேடையில் கூட அல்லது ஒரு கலாசார மேடையில் கூட இவர் இன்னது படித்தார் என்று பேசிப் புகழும் அநாவசிய சமூக சிந்தனைகளே எம்மவர் மத்தியில் வளர்ந்து வருகிறது...! சிந்தனைக்கான அறிவுக்காக அதன் ஊற்றாக பெறப்படும் கல்வி கருதப்படுவதில்லை..! கல்வி என்பதற்கும் இன்னும் பல வாழ்வியல் அம்சங்களுக்கும் வயதைக் காட்டி மனதை இறுக்குபவர்கள் எங்கள் சமூகத்தில் பலர்...ஏன் மேற்குலகில் கூட இந்தப் பிரச்சனை இருக்கிறது...! இருந்தாலும் அவர்கள் பல இடங்களில் இவற்றை நாகரிகமுறையில் தகர்ப்பதை இந்த உதாரணம் மூலமும் கண்டு கொள்ளலாம்..!

<b>England's oldest learner honoured at University of East London</b>

Bernard Herzberg, a 96-year-old man from East Finchley, has been awarded the title of England's Oldest Learner at a ceremony held at the University of East London's (UEL) Docklands campus.

The ceremony took place on Tuesday 18th October and marked the culmination of a major nationwide search by the National Institute of Adult Continuing Education (NIACE), in which Bernard emerged as the eldest of around 50 nominees.

Bernard recently completed his Masters degree (MA) in Refugee Studies at the University of East London (UEL) and has now begun another MA in African Economics and Literature at the School of Oriental and African Studies (SOAS).

source - UEL web

http://www.uel.ac.uk/news/latest_news/stories/96.htm
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
கற்கட்டும் கற்கட்டும். இனிதே நிறைவு செயயட்டும் அவரது கல்வியை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
வாழ்த்துக்கள் அந்த முதியவருக்கு... இ வருங்கால முதுகாலைப் பட்டதாரிக்கு.....

Reply
#4
கண் காது எல்லாம் ஒழுங்காய் வேலை செய்யுதா? வாழ்த்துக்கள் அந்த மாணவனுக்கு.
Reply
#5
நல்லதொரு உதாரணம். வாழ்த்துக்கள் குருவி.
Reply
#6
வாழ்த்துக்கள் அந்த மாணவனுக்கு(Bernard Herzberg) எனது பல்கலைக்கழகத்திலும் ஒரு முதியவர் படிக்கிறார் பட் அவரின் வயது என்ன என்பது எனக்கு தெரியாது.
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)