Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுட்டியின் சுட்டித்தனம்
#1
ஏன் இந்த சலனம் என்னுள்?
சஞ்சலமின்றி சந்தோச வானில் சிறகடித்துப் பறந்து திரிந்த -
என் மனதில் ஏன் இந்த தயக்கம்?
இது ஏற்படுவதற்கு காரணமானவன் - அவன் யார்?

அவனுக்கும் எனக்கும் என்ன உறவு?
எத்தனையோ ஆண்களுடன் பழகிய எனக்கு
ஏன் இவனில் மட்டும் ஒரு மயக்கம்?
இவன் என் மனதை மயக்க வந்த மந்திரவாதியா?
இவன் குரலில் அப்படி என்ன மயக்கம் எனக்கு?

ஆம் தொலைபேசியில் கணீர் என ஒலித்தது அவனது இனிமையான குரல்
அதை நான் கேட்டதுண்டு, ரசித்ததுண்டு ஏன் அவன் அன்பில் மூழ்கியதுண்டு- ஆனால் என் வாழ்வில் இவ்வாறு பலபேரை சந்தித்த போது ஏற்படாத சலனம்- ஏன்
இப்போது இவனில் மட்டும் ஏற்பட்டது?

அவனை நான் நேரில் பார்த்ததில்லை -
அவனுடன் தொலைபேசியில் கூட அதிகம் பேசியதில்லை
அப்படி இருக்க ஏன் என் தூக்கத்தை கலைத்தான்?
அவன் யார்? அவன் தானா என் உயிர்மூச்சு? - அல்லது இதற்குப் பெயர் தானா காதல்?

[size=10]எழுத்து பிழைகளை திருத்தியுள்ளேன் - மதன்
<<<<<..... .....>>>>>
Reply
#2
இது தான் என் முதல் ஆக்கம் அதனால் பிழைகள் ஏதாலது இருந்தால் மன்னிக்கவும்
<<<<<..... .....>>>>>
Reply
#3
கன்னிக் கவி என்றாலும் உள்ளத்து எண்ணங்களை கொட்டிய அழகு இருக்கிறது..! கவி நடையைக் கொஞ்சம் கவனித்து தொடர்ந்தும் எழுதுங்கோ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Quote:அவனை நான் நேரில் பார்த்ததில்லை -
அவனுடன் தொலைபேசியில் கூட அதிகம் பேசியதில்லை
அப்படி இருக்க ஏன் என் தூக்கத்தை கலைத்தான்?
அவன் யார்? அவன் தானா என் உயிர்மூச்சு? - அல்லது இதற்குப் பெயர் தானா காதல்?
_________________

சுட்டிகேர்ள் உங்கள் முதல் ஆக்கம் அட்டகாசமாய் ஆரம்பம். அதுவும் புரியாத உணர்வுக்காய் தேடிப்பிடிங்க என்னாச்சு உங்களுக்கு என்று. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
ஆகா சிட்டிகேள் நான் மனதில் நினைத்தை அப்படியே எழுதி இருக்கிறீங்கள் எப்படி? சரி உங்கள் கன்னிக்கவி நன்றாக உள்ளது. மேலும் உங்கள் கவி எழிலுற கவிநடையுடன் எழுதுங்கள். வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
Reply
#6
நன்றி அண்ணா இனி வரும் காலங்களில் நிச்சயமாக
<<<<<..... .....>>>>>
Reply
#7
Quote:
Quote:அவனை நான் நேரில் பார்த்ததில்லை -
அவனுடன் தொலைபேசியில் கூட அதிகம் பேசியதில்லை
அப்படி இருக்க ஏன் என் தூக்கத்தை கலைத்தான்?
அவன் யார்? அவன் தானா என் உயிர்மூச்சு? - அல்லது இதற்குப் பெயர் தானா காதல்?

சுட்டிகேர்ள் உங்கள் முதல் ஆக்கம் அட்டகாசமாய் ஆரம்பம். அதுவும் புரியாத உணர்வுக்காய் தேடிப்பிடிங்க என்னாச்சு உங்களுக்கு என்று.



ஐயோ அக்கா இது கற்பனை மட்டும் தான் வேறு எதுவும் இல்லை
நன்றி அக்கா

மேற்கோள்கள் சரி செய்யப்பட்டுள்ளது
கவிதன்
<<<<<..... .....>>>>>
Reply
#8
Quote:ஆகா சிட்டிகேள் நான் மனதில் நினைத்தை அப்படியே எழுதி இருக்கிறீங்கள் எப்படி? சரி உங்கள் கன்னிக்கவி நன்றாக உள்ளது. மேலும் உங்கள் கவி எழிலுற கவிநடையுடன் எழுதுங்கள். வாழ்த்துக்கள்


என்னா அக்கா இப்படி சொல்கின்றீன்கள் நீங்க தானே சொன்னீங்கள் எழுதச்சொல்லி இது உங்கள் அனுபவம் தானே!!!!!!!!!!!!!!!!!

அது சரி அக்கா அது யார்?

அக்கா நன்றி தங்களுடைய வாழ்த்துக்கு
<<<<<..... .....>>>>>
Reply
#9
கன்னிக்கவிதை அருமையாக இருக்கின்றது.<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மேலும் தொடருங்கள்.
வாழ்த்துக்கள்...
Reply
#10
suddykgirl Wrote:என்னா அக்கா இப்படி சொல்கின்றீன்கள் நீங்க தானே சொன்னீங்கள் எழுதச்சொல்லி இது உங்கள் அனுபவம் தானே!!!!!!!!!!!!!!!!!

அது சரி அக்கா அது யார்?

அக்கா நன்றி தங்களுடைய வாழ்த்துக்கு

அடப்பாவிகளா நானா சொன்னன். நான் சொன்னது நான் நினைச்சமாதிரி கவிதை வந்திருக்கு என்று :oops:
<b> .. .. !!</b>
Reply
#11
சுட்டி! எழுத்து பிழை இருப்பினும் உங்கள் எண்ணமும் மொழி நடையும் நன்றாக இருக்கு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#12
சண்முகி அக்கா
ம்ம் என்னால் முடியும் மட்டும் கட்டாயமாக தொடருவேன் நன்றி அக்கா

ரசிகை அக்கா

அக்கா சரி சரி அழாதைங்கோ நீங்கள் நினைச்ச மாதிரி என்றால் அக்கா? (சும்மா)

கீத் அண்ணா
நன்றி இனி எழுதும் போது சரி செய்து கொள்கின்றேன் அதைவிட நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் யாழ் களத்தில் தான் மீண்டும் தமிழ் எழுதுகின்றேன்.
<<<<<..... .....>>>>>
Reply
#13
முயற்சி திருவினை ஆக்கும் கவிதை மட்டும் அல்ல அதில் யாருக்கோ ஒரு செய்தியும் இருப்பது போல்??ம்ம் கவிதை நன்று
inthirajith
Reply
#14
கவிதை நன்றாக இருக்கு சுட்டிகேள் இந்திரஜித் சொன்ன போல செய்தியும் இருக்கு போல.. ம்ம் நடக்கட்டும் வாழ்த்துகள் :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#15
ஆம் தொலைபேசியில் கணீர் என ஒளித்தது அவனது இனிமையான குரல்
அதை நான் கேட்டதுண்டுஇ ரசித்ததுண்டு ஏன் அவன் அன்பில் மூழ்கியதுண்டு- ஆனால் என் வாழ்வில் இவ்வாறு பலபேரை சந்தித்த போது ஏற்படாத சலனம்- ஏன்
இப்போது இவனில் மட்டும் ஏற்பட்டது?

தொலைபேசியில் குரல் ஒளிக்காது, ஒலிக்கும் சுட்டி!
கன்னி முயற்சிக்கு எனது பாரட்டுக்கள். புதுக்கவிதை வடிவில் எழுதியிருக்கும் ஒவ்வொரு வசனங்களையும் ஒவ்வொரு வரிகளில் எழுதவும். மற்றையவர்கள் கூறியதுபோல் கவி வரிகளைக் கவனித்து எழுதவும். கவிதைக்கு ஒவ்வொரு எழுத்தும் முக்கியம்.
கவிப்பயணம் தொடரட்டும்.

Reply
#16
ம்ம்ம்ம்ம் நடத்துங்கோ நடத்துங்கோ.....எல்லாரும் தொலைபேசியிலையே நடத்துறாங்கோ...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்னா இருக்கு சட்டி சாறி சுட்டி... :oops:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#17
சுட்டி கவிதை நல்லாயிருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்....

Reply
#18
சுட்டி..கவி நன்று..தொடர்ந்து எழுதுங்கள்..

அதுசரி கன்னிக்கவி என்றால் என்ன? :roll: :roll:

Rasikai Wrote:ஆகா சிட்டிகேள் நான் மனதில் நினைத்தை அப்படியே எழுதி இருக்கிறீங்கள் எப்படி?

அப்படி என்றால்?? :roll: :roll:
..
....
..!
Reply
#19
சுட்டிகேர்ள் கவிதை சூப்பர். மேலும் தொடர்ந்தெழுத வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#20
கவிதை அருமை தொடருங்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)