Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Quote:சிந்தனைக்களம்: இந்தப் பிரிவினை அனைவரும் பார்வையிட முடியும். ஆனால் இடைநிலை அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்களே இதற்குள் புதிய தலைப்பினைத் தொடங்கவும், பதில் கருத்தினை எழுதவும் முடியும். இடைநிலை அங்கத்துவம் என்பது களத்தில் 50 கருத்துக்களை எழுதியபின்னர், அவர்களின் கருத்துக்கள் கண்காணிக்கப்பட்டு பொறுப்பாளரால் வழங்கப்படும்.
இப்பிரிவில் விவாதத்திற்கும், ஆரோக்கியமான கருத்துப் பகிர்விற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே அரட்டைகள், தனிநபர் வசைபாடல்கள்/தாக்குதல்கள் அனைத்தும் நீக்கப்படும் என்பதை முன்னரே தெளிவுபடுத்திக்கொள்கிறோம். அனைத்துக் கருத்துக்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். மற்றும் இப்பிரிவில் "Kick out" என்கிற ஒரு செயற்பாட்டை நிர்வாகத்தினர் (குறிப்பாக இப்பிரிவின் மட்டுறுத்துனர்கள்) கையாள்வர்கள். ஒரு தலைப்பில் விவாதம்/கருத்துப்பகிர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது யாராவது தனிநபர் வசைபாடல்களையோ/தாக்குதல்களையோ அல்லது பண்பற்ற முறையிலான கருத்தாடலையோ மேற்கொண்டால் அவர் அத்தலைப்பில் தொடர்ந்து எழுதமுடியாதவாறு வெளியேற்றப்படுவார். எனவே ஆரோக்கியமான உங்கள் கருத்துப்பகிர்வை இப்பிரிவுகளில் மேற்கொள்ளுங்கள். ஒருவர் தன் தரம்தாழ்த்தி கருத்தெழுகிறார் எனின் பதிலுக்கு நீங்களும் உங்களைத் தரம் தாழ்த்திக் கருத்தெழுதாதீர்கள் (நிர்வாகத்திற்கு தனிமடலில் அறியத் தாருங்கள்). மாறாக அக்கருத்தைக் கணக்கெடுக்காது உங்கள் கருத்தைத் தொடருங்கள். இல்லை, நானும் அப்படித் தான் எழுதுவேன் என்று நீங்களும் எழுதினால், நீங்களும் சேர்ந்து அத்தலைப்பில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
கால்பந்தாட்டத்தில்...மைதான நடுவர் "கிக் அவுட்" கொடுப்பதற்கு முதல் ஜெளோ ரெட் காட் காட்டுவார்... நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள்.. கிக் அவுட் பண்ணிட்டு காட்டுவிங்களோ...இல்லை முதலே செய்வீங்களோ..! பாரபட்சம் இருக்காதே..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏதோ.. காட்டையே காட்டாம காலால உதையாட்டிச் சரி..! அதாலதான் விளையாட்டு வினையாகிறது <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
ஒருவரே ஓன்றுக்கு மேற்பட்ட பெயரில் கால்பந்தாட்டத்தில் விளையாட முடியாது. இந்தப்பிரச்சனை எப்படி யாழ் களத்தில் கய்யாள படும் என்று நிர்வாகம் அறியத்தர முடியுமா?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மத்தியஸ்தர் நேர்மையாமவர் என்றால்.. வீரனும் நேர்மையாளனாக இருப்பான்..! இல்லை அவனும் புகுந்து விளையாடத்தான் செய்வான்..! இது யார் குற்றம்...அதைக் களைந்தால் போதும்..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
வணக்கம்,
எழுதப்படும் கருத்தின்(தனிநபர் வசைபாடல்/தாக்குதல், பண்பற்ற கருத்து) அடிப்படையில் ஒரிரு எச்சரிக்கை வழங்கப்பட்டு பின்னர் வெளியேற்றம்(கிக்கவுட்) செய்யப்படலாம். எச்சரிக்கை வழங்கப்படாமலும் உடனே வெளியேற்றம்(கிக்கவுட்) செய்யபடலாம். வெளியேற்றம்(கிக்கவுட்) செய்யப்பட்டவருக்கு அவர் வெளியேற்றம்(கிக்கவுட்) செய்யப்பட்டிருக்கிறார் என்று அறிவிக்கப்பட மாட்டாது. அத்தலைப்பில் அவர் எழுதமுற்படும்போது மட்டும் அவர் வெளியேற்றம்(கிக்கவுட்) செய்யப்பட்டிருக்கிறார் என்று காண்பிக்கும்.
நன்றி
--> கிக்கவுட் என்ற சொல் தமிழில் மாற்றப்பட்டுள்ளது.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்படியே... <b>தனிநபர் தாக்குதல்</b>... <b>வசைபாடல்</b>... <b>பண்பற்ற கருத்து</b>.. இவற்றையும் இயலுமானவரை ஒரு பருமட்டாக வரையறுத்தால் கள உறவுகளுக்கு இலகுவாக இருக்கும் கருத்தெழுத..!
உதாரணமாக.. களம் அடிக்கடி சந்திப்பது...ஒருவர் ஒரு கருத்தாளனை கருத்தை வைத்து முட்டாள் தனம் மேதாவி...காழ்புணர்ச்சி...என்பதும் ஊகத்தின் அடிப்படையில் முகமூடி..அது இது என்று கருத்தைப் பார்காமல் கருத்தாளனைப் பார்ப்பதும்...அதன் பின்னர்...கருத்தோட்டமே மாறிப்போவதும்...அதன் விளைவால் தணிக்கை.. தனிநபர் தாக்குதல்.. வசைபாடல் பண்பற்ற கருத்து என்று பலதும் ஆகிறது..! அதேபோல்.. தூசணம் என்பதிலும் அங்கத்தால் தூசித்தால் அது தூசணம் இல்லை எனும் போது தலையை தூசிக்க அது தனிநபர் தாக்குதல் ஆகிறது...உண்மையில் அது புரிதலுக்கு சமர்ப்பிக்கப்பட உதாரணம்..! இருந்தாலும்..இவை அனைத்துமே எல்லா வடிவத்திலும் தவிர்க்கப்படுதல் சிறப்பு...! இன்னும் சில சந்தர்ப்பங்களில் புதிய விதிமுறைகள் திடீர் என்றும் அமுலாகின்றன..! அவை அமுலாவதுக்கு முதல் கள உறவுகளுக்கு சுட்டிக்காட்டப்படுதல் சிறந்தது...! அதுபோல் சில இடங்களில் விதிவிலக்கான நடைமுறைகள் வரும் போது... குறிப்பாக ஆங்கிலத்தில் அல்லது பிறமொழிகளில் ஆக்கங்கள் இடும்போது..அதற்கான அங்கீகாரத்தை கள நிர்வாகம் கருத்தோடு வழங்குதல் மிக நன்று..! எனி அந்தப் பிரச்சனை வராது என்று எண்ணுகின்றோம்...!
சில பதங்கள் குறிப்பாக "உங்கள்" "எங்கள்" இப்படியான பதங்கள் கூட தவறாக உணரப்படுகின்றன..! ஒரு கருத்தை விளிக்கும் போது "உங்கள் கருத்தின் படி" "உங்கள் பார்வையின் படி" என்று விளிப்பது சிறந்தது...! அப்படிப் பாவிப்பின் அவை தனிநபர் தாக்குதலாக கருதப்படுமா...??!
உண்மையில் வலைஞனின் இந்த கருத்தாளர்களுடனான கலந்தாலோசிக்கும் மாற்றம் வரவேற்கத்தக்கது..! மேலும் கள உறவுகளுக்கிடையே புரிந்துணர்வைக் கூட்ட இது வழிவகுக்கட்டும்..! காரணம்.. நிர்வாகத்தில் இருப்பவர்கள் கருத்தாளனை பிரதியீடு பண்ணமுடியாது..! (நிர்வாகத்தில் உள்ளவர்கள் வேறு பெயரில் கருத்து எழுதினும்...கருத்தின் தாக்கம் அவர்களை தவறாக வழிநடத்தலாம்..!) கருத்தாளனின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவும் அவை உள்வாங்கப்படவும் பாகுபாடற்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்..! கருத்துக்களத்தின் வளம் கருத்தாளர்களே..! அவர்கள் இல்லையேல் நிர்வாகம் எதற்கு..???! களம் எதற்கு...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>இங்கு நான் ஒரு கருத்தை சொல்லலாம் எண்டு நினைக்கிறன் அதாவது மட்டிறுத்தினர்கள் ஏதோ விசேட தாக்குதல் படையணிபோல வந்தமா வெட்டினமா விழக்கம் குடுத்மா(அதுவும் சில வேளை)போனமா எண்டில்லாமல் நீங்கள் வேறு பெயரில் யாழில் கருத்தாடினாலும் மட்டிறுத்தினரின் புனை பெயரிலும் கள உறவுகளுடன் கருத்தாடல்களை செய்து ஒரு சுமுகமான உறவை வழர்த்து வைத்திருந்தாலே பல பிரச்னைகளிற்கு இலகுவாக தீர்வு கண்டு விடலாம். உதாரணத்திற்கு பழைய மட்டிறுத்தினர்: பரணி பின்னர் கவிதன் இப்போ மதன் போன்றவர்கள் போல கள உறுப்பினர்களிடம்கருத்தாடி ஒரு சுமுகமான உறவை உறுப்பினர்களிடம் வளர்த்து வைத்திருந்தாலே பிரச்சனைகளை எழhது தவிர்த்திருக்:கிறார்கள்என்பது எனது கருத்து இதனை முன்னரும் ஒரு முறை கூறியிருந்தேன் இதனை ஏற்பதும் ஏற்காததும் உங்களை பொறுத்தது நன்றி(அதுசரி வலைஞன் கிக்கவுட் என்றால் என்ன??)</span>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
வலைஞன் Wrote:வணக்கம்,
எழுதப்படும் கருத்தின்(தனிநபர் வசைபாடல்/தாக்குதல், பண்பற்ற கருத்து) அடிப்படையில் ஒரிரு எச்சரிக்கை வழங்கப்பட்டு பின்னர் கிக்கவுட் செய்யப்படலாம். எச்சரிக்கை வழங்கப்படாமலும் உடனே கிக்கவுட் செய்யபடலாம். கிக்கவுட் செய்யப்பட்டவருக்கு அவர் கிக்கவுட் செய்யப்பட்டிருக்கிறார் என்று அறிவிக்கப்பட மாட்டாது. அத்தலைப்பில் அவர் எழுதமுற்படும்போது மட்டும் அவர் கிக்கவுட் செய்யப்பட்டிருக்கிறார் என்று காண்பிக்கும்.
நன்றி
எல்லாம் சரி தவறான தண்டனை கொடுக்கின்ற மட்டுறுத்துனர்களை கிக்அவுட் செய்ய உறுப்பினர்களுக்கும் ஒரு விசேட சலுகை கொடுக்கலாம்தானே?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அண்ணா இது நக்கல்;தானே.
Quote:எல்லாம் சரி தவறான தண்டனை கொடுக்கின்ற மட்டுறுத்துனர்களை கிக்அவுட் செய்ய உறுப்பினர்களுக்கும் ஒரு விசேட சலுகை கொடுக்கலாம்தானே?
:wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
குருவிகாள்
நீங்கள் எனது கருத்தை விதண்டாவாதம் என்கிறீர்கள்.நான் உங்கள் கருத்தை முட்டாள் தனம் என்கிறேன் இதில் கருத்து வந்ததா கருத்தாளன் வந்தானா.
ஈழவன் முட்டாள் என்று நீங்கள் சொன்னால் அது தனிநபர் தாக்குதல் ஈழவனின் கருத்து முட்டாள்தனமானது என்று சொன்னால் அது கருத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனம்.அதேமாதிரித்தான் மேதாவிலாசம் என்பதும்
இந்த வித்தியாசத்தை மட்டுறுத்துனர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.சரி முட்டாள்தனம் என்று நான் சொன்னது குருவிகளுக்குத் தனிநபர் தாக்குதலாகத் தெரிந்தால் அதனை அறிவுபூர்வமற்றது என்று நாகரீகமாக மாற்றுகிறேன்
இதையெல்லாம் தனிநபர் தாக்குதல் என்பது சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறது(இதுவும் தனிநபர் தாக்குதலா அல்லது சமூகத் தாக்குதலா?)
\" \"
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
நன்றி யூட்,
உங்கள் கருத்தை ஆக்கபூர்வமானதாக எடுத்து சொற்களைத் தமிழில் மாற்றியுள்ளேன். "Kick Out" என்கிற செயற்பாடு புதிதாக இணைக்கப்பட்டதாலும், அந்த செயற்பாட்டுக்கு உரிய படத்தை களத்தில் இன்னும் தமிழில் மாற்றவில்லையென்பதாலும் விளக்கம் கருதியே அப்படி எழுதியிருந்தேன்.
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
வலைஞன்,
இது "சன் டீவி" என்று எழுதிவிட்டு தமிழில்தானே பெயர் வைத்திருக்கிறோம் என்று சொன்னமாதிரிக்கிடக்கே. இருந்தாலும் தமிழெழுத்துக்களைப் பயன்படுத்தியது கொஞ்சம் பரவாயில்லை.
வெளியேற்றம் உகந்த சொல்தானே?
இன்னும் சொல்லப்போனால் 'துரத்துதல்' என்பது இந்த நடவடிக்கைக்குப் பொருத்தமான சொல். இன்னும் ஏதாவது இருந்தால் யாராவது சொல்லலாம். ஆனால் தமிழில் மாற்றிவிட்டேன் என்று பந்தாவாகச் சொல்லிவிட்டு இன்னும் 'கிக் அவுட்' என்று இருப்பது, தமிழைத் 'துரத்தி"விட்டமாதிரிப் படுகிறது.
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
மொழி என்பது ஒருவருடைய எண்ண கருத்துக்களை மற்றவருக்கு தெரியப்படுத்தும் ஒரு ஊடகம். எல்லா எண்ணக்கருத்துக்களுக்கும் எல்லா மொழியிலும் சொல் கிடைப்பதில்லை. அப்படி குறிப்பிட்ட மொழியில் நாம் சொல்ல வந்ததை சொல்லமுடியாமல் போகும் போது அது "சொல் இறத்தல்" ஆகிறது. ஆங்கிலத்தில் ஒவ்வொரு வருடமும் புதிதுபுதிதாக சொற்கள் சேர்க்கப்படுகிறது. ஆனால் திமிழில் அப்படி இல்லையே அப்படி சேர்த்தலும் அது ஏதோ குளுவுக்குறி போல் ஆகி விடுகிறது. சில ஆண்டுகளுக்கு(1998) முன்னர் பாரிசில் இருந்து வெளியாகும் ஈழநாதத்தின் சந்தாதாரன் நான். அதிலே செய்திகளில் "துருப்புக்காவி'' என்று ஒரு சொல் அடிக்கடி வரும். எனக்கு அது விளங்கவில்லை. எத்தனையோ மாதங்களின் பின்னர் தான் அதன் அர்த்தம் என்னவென்று புரிந்துகொண்டேன்.
நான் எல்லாவற்றையும் தமிழில் தான் எழுதுவேன் என்று இறுமாப்பு கொண்டு இல்லாத சொற்களுக்கு புதிதுபுதிதாக சொற்களை உருவாக்கி நீங்கள் சொல்லவந்தை அர்த்தம் புரியாத சொற்களை கொண்டு எழுதாதீர்கள்.