Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிளிநொச்சி மீட்பு எவ்வாறு நிகழ்ந்தது பாகம் 6
#1
கிளிநொச்சி மீட்பு எவ்வாறு நிகழ்ந்தது பாகம் 6

ஓயாத அலைகள் இரண்டின் வெற்றிக்குப் பின்னணியில் பல மாவீரர்களின் தியாகங்களும், போராளிகளின் தீவிர முயற்சியும் மனவுறுதியும் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ள விடுதலை வேட்கையுமே அமைந்துள்ளன. இவற்றோடு உலகின் எந்தவொரு இராணுவ விற்பன்னர்களாலும் உணரப்பட முடியாத அளவு போரியல் தந்திரோபாயங்களைக் கொண்ட தமிழீழ தேசியத் தலைவரின் திட்டமிட்ட தாக்குதல் வியுூகங்களும். அவரின் மிக நேர்த்தியான படை நகர்த்தல் தந்திரோபாயங்களுமே இவ் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன.

சிறிலங்கா இராணுவத்தால் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்கான மிகப் பெரும் படை நடவடிக்கையான ஜெயசிக்குறு களத்தினை எதிர்கொண்டு வந்த சமகாலத்தில் பல இராணுவ ஆய்வாளர்களாலும் உலகின் பிரசித்திபெற்ற இராணுவத் தளபதிகளாலும் அசைக்க முடியாத அதியுயர் பாதுகாப்பு நிலையிலுள்ள படைத்தளம் இதுவென வர்ணிக்கப்பட்ட இத் தளத்தினை, அவர்கள் குறிப்பிட்டதைப் போன்றே பாதுகாப்பு அரண்கள், நிலைகள் விநியோகங்கள் படை எண்ணிக்கை எறிகணைச்சூட்டு ஆதரவுகள் என்பனவற்றோடு, நிலையெடுத்திருப்பவர்களுக்கு மிகமிக சாதகமான நிலவமைப்பும் கொண்ட இத்தளத்தினை ஒரு சில நாட்களுக்குள் துடைத்தழித்ததன் மூலம் உலகின் இராணுவ வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கினார் தமிழீழ தேசியத்தலைவா.;

எண்ணிக்கையில் மிகக்குறைந்த போராளிகளை மட்டும் வைத்துக் கொண்டு ஜெயசிக்குறு பெரும் சமர் நடந்த சம நேரத்தில் இந்தப் பெரும் வலிந்த தாக்குதலை நடத்தி வெற்றிகொண்ட சந்தர்ப்பத்தில் இரு களங்களையும் சாதகமான நிலையில் வைத்திருந்த தந்திரோபாயம் பின்னய காலங்களில் எதிரிக்கு மட்டுமன்றி இராணுவ வல்லுனர்களுக்குமே பெரும் அதிர்ச்சியையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு வெற்றி கொள்ளப்பட்ட தளத்தின் தாக்குதலுக்கு இடப்பட்ட இரண்டு திட்டங்களில் ஒன்று ஆனையிறவிலிருந்து வரும் விநியோகத்தை தடை செய்யும் ஊடறுப்பு சமரும் அடுத்து படைத் தளத்தை தாக்கியழிக்கும் திட்டமும் என வகுக்கப்பட்டிருந்தது. இதன்படி படைமுகாமின் முன்னரங்க காவலரண்களும், இராணுவ வேலிகள் உயர்பாதுகாப்பு நிலைகள் என்பவற்றோடு நான்கு பற்றாலியன் துருப்புக்களின் கடும் எதிர்ப்பையும் விமானத்தாக்குதல், ஆனையிறவு தளத்திலிருந்து ஏவப்பட்ட எறிகணை சூட்டா தரவுகள், டாங்கிகளின் தீவிர தாக்குதல் என்பவற்றை வெற்றிகரமாக முறியடித்து முகாமைத் தாக்கியழிக்கும் திட்டத்திற்கு தலைமை வகித்தவரும் தற்போதைய வடபோர் முனைக் கட்டளைத் தளபதியுமாகிய கேணல் தீபன் அன்றைய கள நிலவரங்களையும் தமது தாக்குதல் வியுூகங்களையும் மாவீரர்களின் தியாகங்களையும் போராளிகளின் தீரமிகு தாக்குதல் வெற்றிக்கான அவர்களின் கடும் உழைப்பு என்பவற்றை இன்று இவ்வாறு நினைவுபடுத்துகிறார்.

ஓயாத அலைகள் - 01 இன் மூலம் முல்லைத்தீவு படைத்தளம் எம்மால் அழிக்கப்பட்டபின் அதன் வீழ்ச்சியை சிங்கள மக்களிடம் மறைப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் மிகப் பெரும் நகர்வொன்றைச் செய்ய வேண்டிய அவசியமேற்பட்டது.

இதன்படி ஆனையிறவுத்தளத்திலிருந்து கிளிநொச்சியை கைப்பற்றுவதற்குரிய நகர்வை சிறிலங்கா இராணுவம் செய்யத் தொடங்கியது அதிலே சத்ஜெய 1,2,3 என்ற நடவடிக்கையை செய்து 1996 ஆம் ஆண்டு யுூலை மாதத்தில் கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்து நிலைகொண்டார்கள்.

இந்தப் பிரதேசத்தை பொறுத்த வரையில் எதிரியினுடைய பாதுகாப்பிற்கு சாதகமான புவியியல் அமைப்பை கொண்டதாகத்தான் இந்த கிளிநொச்சி பிரதேசம் உள்ளது. ஏனெனில் வயல் சார்ந்த ஒரு பிரதேசமாக இருப்பதாலும் பெரும் வெளியான பிரதேசமாகவும் சிறிய, சிறிய பற்றைகளைக் கொண்ட பகுதியாகவும் இருப்பதனால் இது ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றி பாதுகாக்கக் கூடிய புவியியல் அமைப்பைக் கொண்டதாக இருப்பதனால் எதிரி நிலை கொள்வதற்கு சாதகமாக அமைந்திருந்தது.

இந்தப் பகுதியைப் பிடித்தபின் பலாலியிலிருந்து விநியோக மையத்தைக் கொண்ட நீண்ட ஒரு விநியோக மார்க்கத்தையும், ஆதரவுகளையும் கொண்ட பலம் வாய்ந்த தளமாக கிளிநொச்சியை மாற்றியதோடு ஆனையிறவின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய வகையில்தான் இந்த கிளிநொச்சித் தளம் அமைந்திருந்தது. இத்தளத்தினுடைய அமைவு எவ்வாறிருந்ததெனில் மிகவும் இறுக்கமானதொரு பாதுகாப்பு முன்னரண்களைக் கொண்ட ஒரு பெரிய படைத்;தளமாகத்தான் இத்தளம் இருந்தது. அவர்கள் நிலை கொண்ட 1996 ஆம் ஆண்டு தொடக்கம் பலப்படுத்தி இத்தளத்தை விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ள முடியாதென்ற அளவுக்கு சர்வதேச இராணுவ ஆலோசகர்களின் ஆலோசனைகளோடும் இராணுவ நிபுணர்களின் வழிகாட்;டலோடும்தான் ஆனையிறவு கிளிநொச்சி ஆகிய தளங்களைப் பலப்படுத்தி வைத்திருந்தார்கள் இத்தளத்தினுள் ஒரு பிரிகேட் துருப்புக்கள் நிலை கொண்டிருந்தன. அதாவது 54-3 பிரிகேட் இத்தளத்தினிலிருந்தது. அதற்கு ஒரு பிரிகேடியர் பொறுப்பாக இருந்தார். இவருக்குக் கீழ் கிட்டத்தட்ட நான்கு பற்றாலியன்களைக் கொண்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புக்கள் நிலை கொண்டிருந்தார்கள்.

இத்தளத்தில் இராணுவத்தினர் நிலை கொண்ட ஆரம்பகால கட்டத்தில் ஜெயசிக்குறு படையெடுப்பும் இடம்பெற்றிருந்ததனால், எமது பாதுகாப்பு வலயங்கள் பெரிய அளவில் இங்கு இருக்கவில்லை. கண்காணிப்பு நடவடிக்கைகளும் வேவு hPதியான நடவடிக்கைக்குரிய அணிகள் மட்டுமே இங்கு இருந்தார்கள். இதனால் இந்தத் தளத்திலிருந்த இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டு எல்லைக்குரிய அரண்கள் தவிர்ந்த ஏனைய குறிப்பிட்ட பிரதேசத்திலும் தமது நடமாட்டத்தைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த வேளைதான் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் மக்கள் தமது உடமைகளை எடுப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் சென்றவேளை சிறுவர்கள் உள்ளிட்ட நு}ற்றுக்கும் மேற்பட்டோரை இராணுவத்தினர் கொலை செய்திருந்தார்கள்.

அதற்குப் பிற்பாடுதான் ஜெயசிக்குறு சமர் நடந்து கொண்டிருந்தபோதும் தேசியத் தலைவர் ஒரு திட்டத்தை வகுத்தார். அதாவது ஜெயசிக்குறு நடவடிக்கை நடைபெற்று மாங்குளம் கரிப்பட்டமுறிப்புப் பகுதியை அண்மித்துக் கொண்டிருக்கையில் நாங்கள் கிளிநொச்சிக்குப் பாதுகாப்பு வலயமொன்றை அமைத்து இத்தளத்தினையும் ஒரு முற்றுகைக்குள் முதற்கட்டமாக கொண்டு வந்தோம். இதன் மூலம் வெளிப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய படையினரின் நடவடிக்கைகளை உள்ளே நகர்த்திக் கொண்டு சென்றபின் கிளிநொச்சி முகாமைத் தாக்குவதற்கான திட்டத்தை வகுத்து 1998 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் முதலாம் திகதியளவில் தளத்தைக் கைப்பற்றுவதற்கான முதலாவது தாக்குதலை செய்தோம். அந்த தாக்குதலை செய்த போதும் திட்டத்தை முழுமையாக வெற்றிகொள்ள முடியவில்லை ஏனெனில் எமது திட்டத்தின்படி தளத்தின் மையப்பகுதியில் கரும்புலித் தாக்குதலை நடத்துவதற்காக வெடிமருந்தை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் தடம்புரண்டு வெடிக்காது போனதால் திட்டம் முழுமையாக வெற்றியளிக்கவில்லை ஆனால் குறிப்பிட்ட பகுதியை நாங்கள் கைப்பற்றினோம். அதன் பின்னர் கைப்பற்றிய பகுதியில் எமது பாதுகாப்பு அரண்களை போட்டு ஒரு இறுக்கமான முற்றுகைக்குள் கொண்டு வந்தோம். இதன் பின்னர் நாங்கள் கைப்பற்றிய பகுதியை மீள ஆக்கிரமிக்கும் நோக்கில் 1998 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 4 ஆம் திகதியும்ஃ1998 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 8 ஆம் திகதியும் பெருமெடுப்பிலான இரு நகர்வை இராணுவத்தினர் மேற்கொண்டார்கள். இதனை நாங்கள் முறியடித்தோம். இதில் 500 வரையான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 1,000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயுதங்களையும் கைப்பற்றினோம்.

இதற்குப் பிறகு கிளிநொச்சித் தளத்தின் நகர்வுகள் எல்லாம் கடுமையாக முடக்கப்பட்டு விட, பின்னர் அவர்கள் நகர்வை மேற்கொள்ளாமல் தாம் ஆக்கிரமித்திருக்கும் பிரதேசத்தை பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தக் கட்டத்தில்தான் அடுத்த கட்ட தாக்குதலுக்கான தயார்ப்படுத்தல்களை தலைவர் மேற்கொண்டார். அதன்படி நாங்கள் படிப்படியாக வேவு நடவடிக்கைகளை செய்யத் தொடங்கினோம். அதில் உள்வேவினையும் முக்கியப்படுத்தியிருந்தோம்.

இதேவேளை தலைவர் ஒரு திட்டத்தை தந்திருந்தார். அதாவது கிளிநொச்சித் தளத்தை தாக்குகின்ற சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி தளத்தையும் பரந்தன் தளத்தையும் இடையில் துண்டாடி இத்தளத்தை தனிமைப்படுத்தித் தாக்குதலை மேற்கொள்வது தான் அடிப்படையான திட்டம். அதற்கேற்றவாறு வேவு அணிகளை நகர்த்தி உள்வேவுகளை பார்த்தோம். இதற்கு முதல் பரந்தன், ஆனையிறவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகள் வேவு பார்க்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன. அவற்றை உறுதிப்படுத்துவதற்காகவும் வேவு அணிகளை அனுப்பினோம். அத்தோடு முகாமை துண்டாடுவதற்கான இடத்தையும் வேவின் மூலம் தெரிவு செய்தோம் இதன்படி தலைவர் திட்டத்தினை வகுத்தார். அதில் ஆனையிறவையும் கிளிநொச்சியையும் பிரிக்கின்ற திட்டத்தையும்; பின்னர் கிளிநொச்சி தளத்தை தாக்கியழிப்பதற்கான திட்டத்தையும் வகுத்தார்.

அதிலே ஆனையிறவையும் கிளிநொச்சியையும் துண்டிப்பதற்கான திட்டத்தை தளபதி கேணல் பால்ராஜிடம் கொடுத்தார். அடுத்து முகாமை தாக்கியழிப்பதற்கான திட்டத்தை என்னிடம் தந்தார்.

இதிலே முகாமை தாக்கியழிப்பதற்கான திட்டத்தின் படி ஒன்பது பாதைகளால் முகாமுக்குள் இறங்கினோம். இதைவிட ஊடறுப்பதற்கான திட்டத்தின் படி நான்கு பாதைகளால் இறங்கும் திட்டம் ஒரு தனி நடவடிக்கையாக நடைபெற்றது. இதன்படி 1998-09-26 அதிகாலை 1.20 இற்கு சண்டை ஆரம்பிக்கப்பட்டது. சண்டைக்கான நகர்வுத் திட்டங்களில் எந்தவித சிக்கல்களும் ஏற்படவில்லை எமது திட்டத்தின் படி குறித்த நேரத்தில் சண்டையை ஆரம்பித்தோம். அதன்படி எல்லா முன்அரண்களும் கைப்பற்றப்பட்டன.

அதன் பின் அன்று காலையில் எம்மால் கைப்பற்றப்பட்ட நான்கு பகுதியாலும் இராணுவத்தினர் முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இந்தப்பகுதிகள் எல்லாம் வெளியான பகுதியாக இருந்தன. இராணுவத்தை பொறுத்தவரையில் டாங்கிகள், விமானப்படையின் ஆதரவுகள், ஆட்லறி சூட்டாதரவுகள் எனப் பல ஆதரவுகளோடு நாங்கள் கைப்பற்றி நுளைந்த பகுதிகள் எல்லாவற்றையும் முறியடித்து எமது அணிகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை காலை 5.30 தொடக்கம் மிகத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கினர்;. அந்தத் தீவிர நடவடிக்கையால் நாங்கள் பிடித்த கணிசமான நகர்வுப் பாதைகள் எங்களிடமிருந்து விடுபட்டுப் போய் விட்டன.

அத்தோடு எதிரி விமானப்படை ஆட்லறிகளாலும் தொடர்ந்து எங்கள் மீது தாக்குதலை நடத்தி நெருக்கடியை ஏற்படுத்தத் தொடங்கினான். இந்த வேளையில் கிளிநொச்சித் தளத்தை மீட்டே தீரவேண்டுமென்ற நோக்கத்தோடு எமது அணிகளும் மூர்க்கமாக சண்டையில் ஈடுபட்டன. அதேநேரம் எதிரியும் மூர்க்கமாகத் தான் சண்டையிட்டான். 27 ஆம் திகதி பகல் முழுவதும் நடைபெற்ற சண்டை நாங்கள் பிடித்த பகுதியை எதிரி கைப்பற்றுவதும் எதிரி பிடித்த பகுதியை நாங்கள் கைப்பற்றுவதுமாகத்தான் அன்று முழுவதும் நாங்கள் நுழைந்த பகுதிக்குள் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் 27 ஆம் திகதி எதிரியின் முகாம் பகுதிக்குள் முழுமையாக நுழையவில்லை. முன்னரங்க நிலைகளை உடைத்துத்தான் சண்டையிட்டுக் கொண்டிருந்தோமே தவிர மையப்பகுதியை நோக்கிய நகர்வை எதிரி முடக்கியிருந்தான்.

இதேவேளை கிளிநொச்சிக்குளத்துப் பகுதியால் இறங்கி ஒரு இரகசிய நகர்வை மேற்கொண்ட அணியின் தொடர்பு 27 ஆம் திகதி 12 மணியோடு அற்றுப் போனது. அதேநேரத்தில் கேணல் விதுசாவின் அணிகள் இறங்கிய பாதைகளில் ஒரு சில பாதைகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டன. அதே போன்று தளபதி ராமின் பகுதியால் இறங்கிய பாதைகளில் ஓடுபாதை தான் தக்கவைக்கப்பட்டிருந்தது. அவ்வளவு கடும் இறுக்கமாக உக்கிர சண்டை நடந்தது. 27 ஆம் திகதி சண்டை முழுவதும் நாங்கள் உள்நுழைந்த பாதைகளை தக்க வைப்பதற்காகத்தான் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம் இதிலே நாங்கள் விழவிழ அந்த இடத்தை பிடிப்பதும் தக்க வைப்பதுமாக வர்ணிக்கக்கூட முடியாத அளவு இறுக்கமான சண்டை நடந்தது.

அன்று நாங்கள் குறிப்பிட்ட பாதைகளை தக்க வைத்துக் கொண்டு 27 ஆம் திகதி அதிகாலையில் நாங்கள் ஒரு அதிரடியான முன்னேற்ற முயற்சியையும் மேற்கொண்டவாறு கிழக்குப் பகுதியில் கனரக ஆயுதங்களையும் பாவித்துக் கொண்டு தெற்குப் பகுதியில் கட்டடங்கள் ஓரளவு அமைந்திருந்ததனால் நகர்விற்கு ஓரளவு சாதகமாக இருந்தது. அந்தப் பகுதியால் நகர்வு மேற்கொண்டோம். அந்தப் பகுதியாலும் நான்கு பாதைகளை எடுத்திருந்தோம். அதிலும் இரண்டு பாதைகள் முடக்கப்பட்;டதோடு ஒருபாதை கடும் எதிர்ப்பு வருகின்ற பாதையாக இருந்தது. ஆதனால் இடையில் உள்ள ஒரு பாதையால் திடீர்த் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கினோம். அந்தப்பகுதி ஓரளவு சாகமாக அமைந்தது. அதனு}டாக முன்னேறி கனகபுரம் ஊடாக ஏழாம் வாய்க்கால் பதைக்கு ஓர் அணிசென்றுவிட்டது.

இந்த அணி தொடர்ந்து கரடிப்போக்குப் பாதையால் நகர்வை மேற்கொள்ளும்போது எமது அணிகள் மையப்பகுதியை நோக்கி நகரத்தொடங்கின. இதனால் எல்லாப் பகுதியிலும் எதிரியின் பாதுகாப்பு அரண்கள் கைப்பற்றப்பட்டன. இதேவேளை விநியோகமும் முழுமையாக முடக்கப்பட்டதோடு விநியோகத்திற்கு வந்த ரி-55 ரக துருப்புக்காவி ஒன்றும் ஊடறுப்பு அணிகளால் தகர்க்கப்பட்டதோடு அவர்கள் பின்வாங்க கிளிநொச்சித்தளத்தினுள் படுகாயமடைந்தவர்கள் இறந்த உடல்கள் என்பன தேங்கத்தொடங்கின. அத்தோடு இராணுவக் கட்டமைப்புக்களும் சீர்குலைந்து போனது இதனால் தலைமை வகித்திருந்த பிரிகேடியர் உபாலி எதிரிசிங்க உடனடி முடிவெடுத்து காயப்பட்டவர்கள் ஆயுதங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு இருந்த படைகளைத்திரட்டிக் கொண்டு 28 ஆம் திகதி மாலையளவில் ஓடத்தொடங்கினர். ஓடும்போது அங்குநின்ற எமது மறிப்பு அணிகள் மேற்கொண்ட தீவிர தாக்குதலில் பெருமளவு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இந்தச்சமரின் வெற்றியென்பது ஒவ்வொரு போராளியும் ஒருமனிதனால் செய்யக்கூடிய செயற்பாட்டை விட அதிகமாக தம்மை அர்ப்பணித்து செய்த கடும் உழைப்பும் சண்டையில் தம்மைமாய்த்துக் கொண்ட ஒவ்வொரு மாவீரனின் தியாகத்தின் விளைவாகவும் தான் பெறப்பட்டது. அத்தோடு தேசியத்தலைவரின் சரியான திட்டமிடலும் திடமான வழிகாட்டலும் முக்கிய பங்கினை வகித்தன எனக் கூறினார்.

சுட்டது புதினத்திலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
கட்டுரையின் பெரும்பகுதி இரண்டுதரம் பதியப்பட்டுள்ளது. மட்டுறுத்தினர் கவனிக்கவும்.
Reply
#3
சுட்ட இடத்திலும் இப்படித்தான் இருக்கிறது.......?
<b> </b>
Reply
#4
சுட்டுப்போட்டவர் தான் முதலில் வாசிக்கவில்லையா? Confusedhock:
Reply
#5
nallavan Wrote:கட்டுரையின் பெரும்பகுதி இரண்டுதரம் பதியப்பட்டுள்ளது. மட்டுறுத்தினர் கவனிக்கவும்.

வியாசனின் பதிவை திருத்தம் செய்துள்ளேன். வேறு ஏதும் தவறுகள் இருந்தால் அறியத்தாருங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
நானறிந்தவரை இரு தகவற்பிழைகள். ஆனால் இது மூலக்கட்டுரையாளரின் தவறுகளே.

முதலாவது கிளிநொச்சி அரசபடைகளாற் கைப்பற்றப்பட்ட காலம். -செப்ரெம்பர் இறுதியில்தான் கைப்பற்றப்பட்டது.
அடுத்தது ஓயாத அலைகள்2 தொடங்கிய நாள். 27 ஆம் திகதி அதிகாலை.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)